பசும்பால் உள்பித்தத்தைப் போக்கும் .

மேனி சிகப்பாக உள்ள பசுவின்பால் உடம்பிலுள்ள வாதங்கள் எல்லாம் அகற்றும் , மிக்க இதமாக இருக்கும் .

காராம்பசுவின் பால் காசநோயை நீக்கும் .

கபிலைப் பசுவின்பால் திரிதோஷங் களை நீக்கும் .

எருமை மோர் பெருஞ்சோகை , காமாலை , சலக்கழிச்சல் , தாகம் , பாண்டு , கிராணி இவை நீக்கும் .

உலகோர்க்கு மூவர் மருந்து என்று அறிஞருரைப்பர்.

பெண்களின் முலைப்பால் கண்ணுக்கு ஆகும் .

சிகப்புப் பெண் முலைப்பால் காய்ச்சல் , திரிதோஷம் , சன்னி முதலானவைகளுக்கு ஆகும் .

கலைமானின்பால் திரிதோஷம் போக்கும் .

இளநீரும் , தேங்காய் நீரும் தாகங்களையும் பித்தத்தையும் தீர்க்கும் .

ஆற்று நீர் , கடுப்பு மேகம் இவைகளைத் தாக்காது , அதிகமாக்கும்.

இஞ்சியின் சாறு , வாதம் , இருமல் , ஈளை , வயிற்றுவலி, சோபம் ஆகியவற்றைத் தீர்க்கும் .

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *