புறநானூறு : மூலமும் உரையும்

புறநானூற்றுப்‌ பொன்மொழிகள்‌

நிலம்‌ பெயரினும்‌ நின்சொற்‌ பெயரல்‌.

– இரும்பிடரத்தலையார்‌ – அருளும்‌ அன்பும்‌ நீக்கி, நீங்கா நிரயம்‌ கொள்பவரோடு ஒன்றாது, காவல்‌ குழவி கொள்பவரின்‌, ஓம்புமதி. ப ப – தரிவெருஉத்தலையார்‌ உண்டி கொடுத்தோர்‌ உயிர்கொடுத்‌ தோரே. – குடபுலவியனாா இகழுநர்‌ இசையொடு மாயப்‌ புகழொடு விளங்கிப்‌ பூக்கநின்‌ வேலே. ப – ஐயூர்‌ மூலங்கிழார்‌ வல்லுநர்‌ வாழ்ந்தோர்‌ என்ப. – மாங்குடி கிழார்‌ வல்லார்‌ ஆயினும்‌ வல்லுநர்‌ ஆயினும்‌

வருந்தி வந்தோர்‌ மருங்கு நோக்கி அருள வல்லை ஆகுமதி.

– உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌ சிறப்புடை மரபிற்‌ பொருளும்‌ இன்பமும்‌

அறத்து வழிப்படூஉம்‌. – கோவூர்‌ கிழார்‌ நிலம்புடை பெயர்வ தாயினும்‌, ஒருவன்‌ செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்‌. ப ப – ஆலத்தார்‌ கிழார்‌ வருபடை தாங்கிப்‌ பெயர்புறத்‌ தகர்த்துப்‌ பொருபடை தரூ௨ங்‌ கொற்றமும்‌ உழுபடை ஊன்றுசால்‌ மருங்கின்‌ ரகக்‌ பயனே! – வெள்ளைக்குடி நாகனார்‌ என்றும்‌, இன்சொல்‌ எண்பதத்தை ஆகுமதி! ப – ஆவூர்‌ மூலங்கிழார்‌

நீர்‌ மிகின்‌ சிறையும்‌ இல்லை; தீ மிகின்‌, மன்னுயிர்‌ நிழற்றும்‌ நிழலும்‌ இல்லை; வளி மிகின்‌ வலியும்‌ இல்லை! – ஐயூர்‌ முடவனார்‌

டு

அறநெறி முதற்றே அரசின்‌ கொற்றம்‌.

– மருதன்‌ இளநாகனார்‌ புலிசேர்ந்து போகிய. கல்லளை போல ப ஈன்ற வயிறோ இதுவே, ப தோன்றுவன்‌ மாதோ, போர்க்களத்‌ தானே! – காவற்பெண்டு ‘

– தந்தையர்க்கு அருள்வந்‌ தனவால்‌ புதலவர்தம்‌ மழலை! ,

ப ப – தளவையார்‌ புல்லிலை எருக்கம்‌ ஆயினும்‌, உடையவை கடவுள்‌ பேணேம்‌ என்னா. ப

ப – கபிலா இம்மைச்‌ செய்தது மறுமைக்கு ஆம்‌ எனும்‌ அறவிலை வாணிகன்‌ ஆய்‌ அலன்‌!

ப – முடிமோசியார்‌ வாழ்தல்‌ வேண்டிப்‌ ‘பொய்கூறேன்‌; மெய்‌ கூறுவல்‌! ப – : மருதன்‌ இளநாகனார்‌ எத்துணை ஆயினும்‌ ஈதல்‌ நன்று. ப – பரணர்‌ செய்யா கூறிக்‌ கிளத்தல்‌ ப எய்யா தாகின்று எம்சிறு செந்நாவே!

– வன்பரணா .

உண்டால்‌ அம்ம, இவ்வுலகம்‌; இந்திரர்‌ அமிழ்தம்‌ இயைவ தாயினும்‌, இனிதெனத்‌ தமியர்‌ உண்டலும்‌ இலரே; முனிவிலர்‌, துஞ்சலும்‌ இலர்‌; பிறர்‌ அஞ்சுவ தஞ்சிப்‌ புகழெனின்‌ உயிருங்‌ கொடுக்குவர்‌; பழியெனின்‌ உலகுடன்‌ பெறினும்‌ கொள்ளலர்‌; அயர்விலர்‌ அன்ன மாட்‌.சி அனைய ராகித்‌ தமக்கென முயலா தோன்தாள்‌ பிறர்க்கென முயலுநர்‌ உண்மை யானே! – கடலுள்‌ மாய்ந்த இளம்பெரு வழுதி

உற்றுழி உதவியும்‌ உறுபொருள்‌ கொடுத்தும்‌ பிற்றைநிலை முனியாது கற்றல்‌ நன்றே!

– ஆரியப்படை கடந்த நெடுஞ்‌ சன்‌

4]

நெல்லும்‌ உயிரன்றே; நீரும்‌ உயிரன்றே; மன்னன்‌ உயிர்த்தே மலர்தலை உலகம்‌!

ப – மோசி கீரனார்‌ “எவ்வழி நல்லவர்‌ ஆடவர்‌; அவ்வழி நல்லை வாழிய நிலனே! ப – ஓளவையார்‌ மயக்குறு மக்களை இல்லோர்க்குப்‌ பயக்குறை இல்லைத்தாம்‌ வாழும்‌ நாளே! | ப – அறிவுடை நம்பி உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும்‌ எல்லாம்‌“ஓரொக்‌ கும்மே! ப ப – நக்கீரர்‌ சலிமுயன்‌ றனைய ராகி உள்ளதம்‌. வளன்வலி யுறுக்கும்‌ உளம்‌இலாள ரோடு இயைந்த கேண்மை இல்லா கியரோ! – நல்லுருத்திரன்‌ யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌ : தீதும்‌ நன்றும்‌ பிறர்தர வாரா! பெரியோரை வியத்தலும்‌ இலமே சிறியோரை இகழ்தல்‌ அதனினும்‌ இலமே! – கணியன்‌ பூங்குன்றனார்‌ நல்லது செய்தல்‌ ஆற்றீர்‌ ஆயினும்‌ அல்லது செய்தல்‌ ஓம்பு மின்‌! | -. நரிவெருஉத்‌ தலையார்‌ என்றும்‌ சான்றோர்‌ சான்றோர்‌ பாலர்‌ ஆப; சாலார்‌ சாலார்‌ பாலர்‌ ஆகுபவே! – கண்ணகனார்‌ ஞாங்கர்‌ மாய்ந்தனள்‌ மடந்தை … இன்னும்‌ வாழ்வல்‌ என்‌ இதன்‌ பண்பே! ப ப – சேரமான்‌ மாக்கோதை .

.்‌ பெருந்தோள்‌ கணவன்‌ மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ்‌ அவிழ்ந்த தாமரை நள்ளிரும்‌ பொய்கையும்‌ தீயும்‌ ஓரற்றே!

– பெருங்கோப்‌ பெண்டு

1. இலதலவவில்‌ ்ப்ஷ்ஹ்‌

இது கடவுள்‌ வாழ்த்து. இதனைப்‌ பாடியவர்‌ பெருந்‌ தேவனார்‌. இவர்‌, பாரதக்‌ கதையைத்‌ தமிழில்‌ முதன்முதற்‌ பாடியவர்‌. அதனால்‌, “பாரதம்‌ பாடிய பெருந்தேவனார்‌’ என. வழங்கப்பெறுவர்‌. இறைவன்‌ பேராற்றலும்‌ அளவில்‌ தூய்மையும்‌ உடையவன்‌, . அவனை “அருந்தவத்தோன்‌’ என இதன்கண்‌ பாடுகின்றனர்‌. சங்கத்‌ தொகை நூல்கள்‌ பிறவற்றிலும்‌, இவர்‌ பாடிய கடவுள்‌ வாழ்த்துக்களைக்‌ காணலாம்‌.

கண்ணி கார்நறுங்‌ கொன்றை; காமர்‌

வண்ண மார்பின்‌ தாருங்‌ கொன்றை;

ஊர்தி வால்வெள்‌ ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும்‌ அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும்‌ அணிந்தன்று; அக்கறை; 5 . மறைநவில்‌ அந்தணர்‌ நுவலவும்‌ படுமே; பெண்ணுரு ஒரு திறன்‌ ஆகின்று: அவ்வுருத்‌

தன்னுள்‌ அடக்கிக்‌ கரக்கினும்‌ கரக்கும்‌;

பிறை நுதல்‌ வண்ணம்‌ ஆகின்று; அப்பிறை பதினெண்‌ கணனும்‌ ஏத்தவும்‌ படுமே; ப 10 எல்லா உயிர்க்கும்‌ ஏமம்‌ ஆகிய,

நீரறவு அறியாக்‌ கரகத்துத்‌,

தாழ்சடைப்‌ பொலிந்த அருந்தவத்‌ தோற்கே.

தவமுதிர்ச்சியின்‌ சான்றாவது அவனது தாழ்சடை. – அனைத்து உயிர்க்கும்‌ காவலாகும்‌ அருளுடைமையைக்‌ காட்ட, நீர்‌ வற்றுதல்‌ இல்லாத கமண்டலமும்‌ அவன்‌ கையிலே உள்ளது. மேலும்‌, அவன்‌ தலையிலும்‌ மார்பிலும்‌ கொன்றைப்பூவினை அணிபவன்‌. வாகனமாகவும்‌, கொடியாகவும்‌, தூய ஆனேற்றைக்‌ கொண்டிருப்பவன்‌. அவன்‌ கழுத்தை நச்சுக்கறை அழகு செய்கிறது. மறைகளை ஓதுபவரான அந்தணரால்‌ அது புகழவும்‌ படுகிறது. பெண்‌ உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும்‌, தன்னுள்‌ அதனை அடக்கி ஓளித்துத்‌ தானாகத்‌ தனித்தும்‌ அவன்‌ விளங்குகின்றான்‌. அவனது நெற்றிக்கு வனப்புத்‌ தரும்‌ பிறை பதினெண்‌ தேவரால்‌ போற்றவும்‌ படுகிறது. (இப்‌ பேரிறைவனைப்‌ பணிபவர்‌ தாமும்‌ தம்‌ துயர்‌ தீர்வர்‌” என்பது இது.)

2 _ புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ ._. சொற்பொருள்‌: 1. கண்ணி – தலையில்‌ சூடப்படுவது. கார்‌ காலத்தில்‌ மலர்வதால்‌ “கார்‌ நறும்‌ கொன்றை என்றார்‌. 2. தார்‌ –

மார்பில்‌ அணியப்படுவது. காமர்‌ – அழகு. 11. ஏமம்‌ – பை காவல்‌. 12. கரகம்‌ – கமண்டலம்‌.

மேற்கோள்‌: 1. அசிரியப்‌ பாவிலே ஈற்றயலடி முச்சருடைய தாய்‌ வந்ததற்கு இச்‌ செய்யுளைப்‌ பேராசிரியர்‌ காட்டுவர்‌. (தொல்‌.செய்‌.சூ.68). “அணியலும்‌ அணிந்தன்று’ என்பது ஒருபொருட்‌ பன்மொழி எனவும்‌ (நன்‌.சூ.397), வேற்றுமைக்‌ கண்‌ நகரம்‌ மிகாமைக்குக்‌ “கறைமிடறு அணியலும்‌ அணிந்தன்று” என்பதனைக்‌ காட்டியும்‌ (நன்‌. சூ. 182) உரைப்பர்‌, மயிலைநாதர்‌.

“கறை மிடறு அணியலும்‌ அணிந்தன்று’ என்புழிக்‌ “கறை மிடற்றை அழகு செய்தலையும்‌ செய்தது” என, “முழுதும்‌ காரிய வாசகமாகியே நின்றவாறு காண்க” என்பர்‌ நச்சினார்க்கினியர்‌, (தொல்‌. வேற்றுமை மயங்கியல்‌. சூ. 29)

சிறப்பு: இதன்கண்‌ உரைக்கப்பெறுகின்ற சிவமாகிய முழுமுதலின்‌ தன்மை மிகமிகச்‌ செவ்விது ஆகும்‌. சிவனுடைய கண்ணியும்‌, தாரும்‌, ஊர்தியும்‌, கொடியும்‌ கூறி, அவனுடைய பெருங்‌ கருணையையும்‌ வியந்து, பெண்ணும்‌ ஆணும்‌ தானேயாகித்‌ திகழும்‌ அந்த அதித்‌ தனிமுதலான தன்மையையும்‌ போற்றி, அவனைச்‌ சார்ந்த தேய்ந்த பிறையும்‌ பதினெண்‌ கணத்தவரால்‌ போற்றப்‌ பெறும்‌ பெருநிலை எய்திற்று எனக்காட்டி, அவனை நாமும்‌ அடைந்தால்‌ அதனால்‌ நமக்கும்‌ அத்தகு மேம்பாடு வந்தடையும்‌ எனச்‌ சொல்லாமற்‌ சொல்லி, இத்துணை மேதகு நிலையினனேனும்‌ அவன்‌ தவத்தோனாக விளங்குகின்றான்‌ எனத்‌ தன்னையுணர்ந்து தனித்து அடங்கும்‌ செவ்வியையும்‌ அறிவுறுத்துகின்றது இச்‌ செய்யுள்‌.

இறைவனாற்‌ காக்கப்‌ பெற்றுப்‌ பெருநிலை அடைந்த பிறையினைத்‌ தமக்கும்‌ ஓர்‌ இலக்காக கொண்டு, இறைவனோடு அதனையும்‌ போற்றித்‌ தொழுவது பண்டைய மரபாகும்‌. “தொழுது காண்‌ பிறையின்‌ தோன்றி: எனச்‌ குறுந்தொகைப்‌ பாட்டினும்‌ (17/2), “ஒள்ளிழை மகளிர்‌ உயர்பிறை தொழூஉம்‌” என அகப்‌ பாட்டினும்‌ (239) இம்‌ மரபினைப்‌ பிற சான்றோரும்‌ காட்டுதல்‌ காண்க.

2. போரும்‌ சேர்றும்‌!

பாடியவர்‌: முரஞ்சியூர்‌ முடி நாகராயர்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ பெருஞ்சோற்று உதியன்‌ சேரலாதன்‌. திணை: பாடாண்‌. துறை: ரகக்‌ உ) எப ஆம்‌.

(புலியூர்க்‌ கேசிகன்‌ ட்ட

[“பாஅல்‌ புளிப்பினும்‌, பகல்‌ இருளினும்‌, நால்வேத நெறி திரியினும்‌, திரியாச்‌ சுற்றமொடு முழுதுசேண்‌ விளங்கி நடுக்கின்றி நிலீயரோ” என்றதனாற்‌ செவியறிவுறூஉ ஆயிற்று. “இமயமும்‌ பொதியமும்‌ போன்று நடுக்கின்றி நிலீிஇயரோ’ என்றதனால்‌, வாழ்த்தியல்‌ ஆயிற்று: :

“பகை நிலத்து அரசர்க்குப்‌ பயந்தவாறு கூறிப்‌, ி்னாத்‌ திரியாச்‌ சுற்றமொடு விளங்கி, நடுக்கின்றி நிற்பாய்‌ என – அச்சந்தோன்றக்‌ கூறி ஓம்படுத்தலின்‌, “ஓம்படை வாழ்த்து” ஆயிற்று என்பர்‌ நச்சினார்க்கினியர்‌ (தொல்‌. புறம்‌.சூ.36 உரை)]

மண்‌ திணிந்த நிலனும்‌,

நிலம்‌ ஏந்திய விசும்பும்‌,

விசும்பு தைவரு வளியும்‌,

வளித்‌ தலைஇய தீயும்‌, ப

தீ முரணிய நீரும்‌, என்றாங்கு 5

ஐம்பெரும்‌ பூதத்து இயற்கை போலப்‌

போற்றார்ப்‌ பொறுத்தலும்‌, சூழ்ச்சியது அகலமும்‌

வலியும்‌, தெறலும்‌, அளியும்‌ உடையோய்‌!

நின்கடற்‌ பிறந்த ஞாயிறு பெயர்த்தும்‌ நின்‌

வெண்தலைப்‌ புணரிக்‌ குடகடல்‌ குளிக்கும்‌ 10 யாணர்‌ வைப்பின்‌, நன்னாட்டுப்‌ பொருந!

வான வரம்பனை! நீயோ, பெரும! ்‌

அலங்குளைப்‌ புரவி ஐவரொடு சினைஇ

நிலந்தலைக்‌ கொண்ட பொலம்பூந்‌ தும்பை ,

ஈரைம்‌ பதின்மரும்‌ பொருது, களத்து ஒழியப்‌ _- 15

பெருஞ்சோற்று மிகுபதம்‌ வரையாது கொடுத்தோய்‌;

பாஅல்‌ புளிப்பினும்‌, பகல்‌ இருளினும்‌,

நாஅல்‌ வேத நெறி திரியினும்‌ _-

திரியாச்‌ சுற்றமொடு முழுதுசேண்‌ விளங்கி, ன சூ

நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்‌, 20

சிறுதலை நவ்விப்‌ பெருங்கண்‌ மாப்பிணை,

அந்தி அந்தணர்‌ அருங்கடன்‌ இறுக்கும்‌

முத்தீ விளக்கிற்‌ றுஞ்சும்‌

பொற்கோட்டு இமயமும்‌, பொதியமும்‌ டபான்றே!

பாரதப்‌ பெரும்போர்‌ நடந்த நாளிலே, உதியஞ்‌ சேரலாதன்‌ இந்‌ நாவலந்தீவின்‌ பேரரசன்‌ ஆவான்‌. கதிரவன்‌ தோன்றும்‌ – தழ்க்கடலும்‌, மறையும்‌ மேற்கடலும்‌, இடைப்பட்ட புதுவருவாய்‌

குன்றாத பெருநிலப்பரப்பும்‌ அவனுக்கே உரியன. பொறுமை,

4 ப £ – மூலமும்‌ உரையும்‌ அராய்ச்சி விரிவு, ஆற்றல்‌, ஆட்சித்‌ திறன்‌, அருள்‌ ஆகியவற்றிலே ஐம்பெரும்‌ பூதங்களான நிலனையும்‌ வானையும்‌ காற்றையும்‌ நெருப்பையும்‌ நீரையும்‌ முறையே ஒப்பவன்‌ அவன்‌. பால்‌ புளித்தாலும்‌, ஞாயிறு இருண்டாலும்‌, மறைநெறி திரிவுற்றுப்‌ பிறழ்ந்தாலும்‌, கடமையினின்றும்‌ சற்றும்‌ பிறழாதவர்‌ அவன்‌. மந்திரச்‌ சுற்றத்தினர்‌. அவனைப்‌, “பொருந! வான வரம்ப! பெரும!’ ‘ என விளித்து, “உயர்வால்‌ இமயமும்‌, புகழால்‌ தமிழ்‌ வளர்த்த பொதியமும்‌ போன்று நீ நெடிது வாழ்வாயாக! என வாழ்த்துகின்றார்‌ புலவர்‌.

சொற்பொருள்‌: 1. திணிந்த – செறிந்த. 2. ஏந்திய – தாங்கிய. 4. தலைஇய – தலைப்பட்ட. 7. போற்றார்‌ – பகைவர்‌. சூழ்ச்சி – ஆராய்ச்சி. அகலம்‌ – விரிவு. 9. தெறல்‌ – செருக்கு அடக்கல்‌. அளி – அருள்‌. 11. யாணர்‌ வைப்பின்‌ – புது வருவாய்‌ பொருந்திய ஊர்களை உடைய. 13. அலங்கு உளை – அசையும்‌ பிடரி மயிரை உடைய. 14. தலைக்கொண்ட – தம்பாற்‌ கொண்ட. பொலம்‌ – பொன்‌. 16. மிகு பதம்‌ – மிக்க உணவு. 19. சுற்றம்‌ – மந்திரச்‌ சுற்றம்‌; அமைச்சர்‌, படைத்தலைவர்‌ ஆகியோர்‌. 10. அடுக்கத்து – மலைச்சரிவின்‌ கண்‌. 21. நவ்வி – மான்‌ கன்று. பிணை – பெண்மான்‌. 24. கோடு – மலை உச்சி.

துஞ்சம்‌ – உறங்கும்‌. 3. வன்மையும்‌ வண்மையும்‌!

பாடியவர்‌: இரும்பிடர்த்‌ தலையார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ கருங்கை ஒள்வாள்‌ பெரும்பெயர்‌ வழுதி. திணை: பாடாண்‌. துறை: செவியறிவுறூ௨; வாழ்த்தியலும்‌ ஆம்‌. சிறப்பு: இரும்பிடர்த்‌ தலையாரைப்‌ பற்றிய செய்தி.

(“மக்களுள்‌ பெண்பாலைப்‌ பாடுதல்‌ கிறப்பன்று,; சிறுபான்மை அண்மக்களோடு படுத்துப்‌ பாடுவர்‌ சான்றோர்‌. “செயிர்தீர்‌ கற்பின்‌ சேயிழை கணவ’ என வருதல்‌ அதற்குச்‌ சான்று.

“நிலம்‌ பெயரினும்‌ நின்‌ சொற்‌ பெயரல்‌’ என்றதனால்‌, செவியறிவுறூஉ ஆயிற்று. “நினது அணையாகிய சொல்‌ பிறழாது ஓழியல்‌ வேண்டும்‌” எனப்‌ பொருள்‌ கொண்டால்‌, இதுவே வாழ்த்தியலாக அமையும்‌. “பெருங்கை யானை இரும்பிடர்த்‌ ்‌. தலையிருந்து’ எனப்‌ பாடியோர்‌ பெயரும்‌, “கருங்கை ஒள்வாட்‌ : “ பெரும்பெயர்‌. வழுதி” எனப்‌ பாடப்‌ பட்டோன்‌ பெயரும்‌ செய்யுளுள்‌ வந்தமை காண்க.) ,

உவவுமதி உருவின்‌ ஓங்கல்‌ வெண்‌ குடை

நிலவுக்கடல்‌ வரைப்பின்‌ மண்ணகம்‌ நிழற்ற

ஏம முரசம்‌ இழுமென முழங்க,

புலியூர்க்‌ கேசிகன்‌ ம நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்‌, – தவிரா ஈகைக்‌, கவுரியர்‌ மருக! 5

செயிர்தீர்‌ கற்பின்‌ சேயிழை கணவ!

‘ பொன்‌ னோடைப்‌ புகர்‌ அணிநுதல்‌

துன்னருந்‌ திறல்‌ கமழ்கடா அத்து

எயிறு படையாக, எயிற்கதவு இடாஅக்‌

கயிறுபிணிக்‌ கொண்ட கவிழ்மணி மருங்கில்‌ 1௦

பெருங்கை யானை இரும்பிடர்த்‌ தலையிருந்து

மருந்தில்‌ கூற்றத்து அருந்தொழில்‌ சாயாக்‌

கருங்கை ஒள்வாள்‌ பெரும்பெயர்‌ வழுதி!

நிலம்‌ பெயரினும்‌, நின்சொற்‌ பெயரல்‌;

பொலங்‌ கழற்காற்‌, புலர்‌ சாந்தின்‌ 15 விலங்‌ ககன்ற வியன்‌ மார்ப!

ஊர்‌ இல்ல, உயவு அரிய.

நீர்‌ இல்ல, நீள்‌ இடைய,

பார்வல்‌ இருக்கைக்‌, கவிகண்‌ நோக்கிற்‌,

செந்தொடை பிழையா வன்கண்‌ ஆடவர்‌ 20. அம்புவிட, வீழ்ந்தோர்‌ வம்பப்‌ பதுக்கைத்‌

திருந்துசிறை வளைவாய்ப்‌ பருந்திருந்து உயவும்‌

உன்ன மரத்த துன்னருங்‌ கவலை,

நின்நசை வேட்கையின்‌ இரவலர்‌ வருவர்‌! அது

முன்னம்‌ முகத்தின்‌ உணர்ந்து,. அவர்‌ 25 இன்மை தீர்த்தல்‌ வன்மை யானே.

காவல்‌ முரசம்‌ “இழும்‌’ என முழங்க, அருளொடு ஆட்சிச்‌

சக்கரத்தை நடத்தி வந்த பாண்டியர்‌ மரபினன்‌; குற்றமற்ற கற்புச்‌ .

செல்வியின்‌ கணவன்‌; கொல்‌ யானைப்‌ பெரும்பிடரின்மீது அமர்ந்து, ஒளிவீசும்‌ வாளினைக்‌ கையிற்‌ கொண்டு, களைப்பிலாது வன்மையுடன்‌ போர்செய்யும்‌ ஆற்றல்‌ உடையவன்‌; உலகமே நிலை பிறழ்ந்தாலும்‌ தன்‌ சொல்‌ பிறழாது போற்றுபவன்‌; வீரக்கழல்‌ முழங்கும்‌ கால்களும்‌, பரந்த, விரிந்த மார்பும்‌ உடையவன்‌ என்று பாண்டியனைப்‌ போற்றி உரைக்கிறார்‌ கவிஞர்‌.

ஊரும்‌ இடைவழியில்‌ இல்லை. கானலோ பொரறுத்தற்கு அரி து. நீரோ காண்பதற்கு அரிது. வழியின்‌ தொலைவோ மிகமிக நீண்டது. இப்படிப்பட்ட வழியினைக்‌ கடந்தும்‌ நின்னைத்‌ தேடி இரவலர்‌ வருவர்‌. அவர்‌ வரும்‌ வழியில்‌ வம்பலரை ஒழிக்கத்‌ தொலைவிலே எதிர்பார்த்திருக்கும்‌ மறவர்‌, அவர்‌ கண்மேற்‌ கைகுவித்துப்‌ பார்க்கும்‌ கொடிய பார்வை, செவ்விய குறி

6 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ பிழையாத அவர்‌ தறுகண்மை – இவற்றையுங்‌ காண்பர்‌. அதனை அடுத்து, அம்புபட்டு வீழ்ந்தவர்‌ உடலினைக்‌ கற்குவியல்கள்‌ . மூடியிருக்க, அதனருகே உன்னமரத்தின்‌ மீது கழுகுகள்‌ அமர்ந்து உணவினை இழந்ததற்கு வருந்தியிருக்கும்‌ காட்சியையும்‌ காண்பர்‌. எவரும்‌ வருவதற்கு எண்ணாத அவ்‌ வழியினூடு நின்னைக்‌ காணும்‌ விருப்பினாலேயே இரவலர்‌ வருகின்றனர்‌!

அவர்‌ மனக்‌ குறிப்பை முகத்‌ தோற்றத்தாலேயே கண்டு உணர்ந்து, அவரது வறுமையைத்‌ தீர்க்கும்‌ நின்‌ வள்ளன்மை யால்தான்‌, இவ்வாறு அவர்‌ நின்னைத்‌ தேடி வருகின்றனர்‌! (அச்சந்தரும்‌ ஆற்றல்‌ உடையவன்பால்‌, அச்சந்தரும்‌ வழியையும்‌ பொருளாக்காது இரவலர்‌ கடந்து வருவர்‌ என்றது, வழுதியின்‌ வள்ளன்மைச்‌ சிறப்பையும்‌ தகுதியையும்‌ காட்டுவதற்காகும்‌.)

சொற்பொருள்‌: 1. உவவுமதி – முழு நிலவு. ஓங்கல்‌ வெண்குடை – உயர்ந்த வெண்கொற்றக்‌ குடை. 2. நிலவுக்‌ கடல்‌ வரைப்பின்‌ என்றது, கடல்‌ எல்லையாகிய தென்னெல்லையின்‌ வேந்தர்‌ பாண்டியர்‌ என்பதற்கு..4. நேமி – ஆட்சிச்‌ சக்கரம்‌. நேஎ நெஞ்சு – ஈரமுள்ள நெஞ்சு. 6. செயிர்தீர்‌ – குற்றமற்ற. 27. புகர்‌ – புள்ளி. 8. கடா அம்‌- மணமுள்ளது; மதநீர்‌. 12. மருந்தில்‌ கூற்றம்‌ – தடுத்து உயிர்வாழ இயலாது கொல்லும்‌ கூற்றம்‌. 13. கருங்கை – வன்மை உடைய கை. 15. பொலங்கழல்‌ – பொற்கழல்‌. 17. விலங்ககன்ற வியன்‌ மார்பு – ஊடாக அகன்றும்‌, முன்னாகப்‌ பரந்தும்‌ விளங்கும்‌ மார்பு. 19. பார்வல்‌ – பார்த்தல்‌. 20. பதுக்கை – கற்குவியல்‌. 21. உன்னம்‌ – வன்மையான ஒருவகை மரம்‌. 24. துன்னருங்‌ கவலை அணுகுதற்கரிய கவறுபட்ட பாதை. 25. நசை – விருப்பம்‌.

4. தாயற்ற குழந்தை! பாடியவர்‌: பரணர்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ உருவப்‌ பஃறேர்‌ இளஞ்சேட்‌ சென்னி. திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை. சிறப்பு: சோழரது படைப்‌ பெருக்கமும்‌, இச்‌ சோழனது வென்றி மேம்பாடும்‌.

…. (‘செஞ்ஞாயிற்றுக்‌ கவினை’ என்பதுவரை : சோழனின்‌. புகழைக்‌ கூறி, “ஓயாது கூவும்‌ நின்‌ உடற்றியோர்‌ நாடு’ எனப்‌ பகைவரது நாடழிபு இரங்கலும்‌ சொல்லினர்‌. இதனால்‌ இது “கொற்ற வள்ளை” ஆயிற்று. “தாயில்‌ தூவாக்‌ குழவிபோல ஓயாது கூஉம்‌ நின்‌ உடற்றியோர்‌ நாடு (19 – 20)’ என்னும்‌ உவமை செறிவுடையது. “ஈன்றோர்‌ நீத்த குழவிபோல’ (புறம்‌ 230) : “தாயில்‌ துவாக்‌ குழவிபோல’ (புறம்‌ 379) தாயொழி குழவிபோலக்‌ கூஉம்‌ (மணி 13, 17; 95; 1.0)” எனப்‌ பிறரும்‌ இதனை எடுத்தாளுவர்‌.)

புலியூர்க்‌ கேசிகன்‌ ப ர ர உ வாள்‌, வலந்தர, மறுப்‌ பட்டன ப ப ்‌ செவ்‌ வானத்து வனப்புப்‌ போன்றன! தாள்‌, களங்கொளக்‌, கழல்‌ பறைந்தன; கொல்‌ ஏற்றின்‌ மருப்புப்‌ போன்றன; | க்‌ தோல்‌, துவைத்து அம்பின்‌ துளைதோன்றுவ, 2” நிலைக்கு ஓராஅ இலக்கம்‌ போன்றன; மாவே, எறிபதத்தான்‌ இடங்‌ காட்டக்‌, கறுழ்பொருத செவ்வாயான்‌, எருத்து வவ்விய புலி போன்றன்‌; ப களிறே, கதவு எறியாச்‌, சிவந்து உராஅய்‌, 1௦ ‘நுதிமழுங்கிய வெண்கோட்டான்‌, உயிர்உண்ணும்‌ கூற்றுப்போன்றன; நீயே, அலங்குஉளைப்‌ பரீஇ இவுளிப்‌ பொலந்‌ தேர்மிசைப்‌ பொலிவு தோன்றி, மாக்கடல்‌ நிவந்தெழுதரும்‌ ப 15

‘செஞ்ஞாயிற்றுக்‌ கவினைமாதோ!

– அனையை ஆகன்‌ மாறே, ப தாயில்‌ தூவாக்‌ குழவி போல, ஓவாது கூஉம்‌, நின்‌ உடற்றியோர்‌ நாடே.

வாள்‌ குருதிக்கறை படிந்து படிந்து செவ்வான்‌ நிறமாயிற்‌ று. “கால்‌ வரிசையிட்டுப்‌ போர்புரிவதால்‌ களங்கொள்ள, வீரக்கழலின்‌

அரும்பு வேலைப்பாடுகள்‌ மறைந்து, அவை கொல்லேற்றுக்‌ கொம்பு போல்வதாயின. அம்பு தைத்த கேடகத்தின்‌ துளைகள்‌ நிலையில்‌ தப்பாத இலக்கம்‌ போன்றன. இடசாரி, வலசாரி திருப்பக்‌ கட்டிய முகக்கருவி உராய்ந்து உதிரம்‌ சிந்திச்‌ சிவந்த குதிரை வாய்‌, உதிரங்குடித்த புலிவாயை ஒத்தது. மதிற்கதவுகளைக்‌ குத்தி . உடைத்து மழுங்கிய தந்தங்களோடு வரும்‌ யானைக்ளோ கூற்றை – ஓத்தன. நீ குதிரை பூட்டிய தேரில்‌ அழகுடன்‌ வருவாய்‌; அது செஞ்ஞாயிற்றின்‌ உதயம்‌ போன்றுள்ளது. அவ்வளவும்‌ கண்டும்‌ நின்னைப்‌ பகைப்பார்‌ யார்‌? அவ்வாறு பகைத்தவர்‌ நாடு தாயில்லாக்‌ குழந்தை பசியால்‌ ஓயாது ஒழியாது கூப்பிடுவது போன்று, துயரமுற்றுப்‌ புலம்பும்‌ நாடாகும்‌. (சென்னியின்‌ படைப்பகுதிகளை வருணித்து, அவனது பேராற்றலைக்‌ – கூறவந்தவர்‌, அவனை எதிர்த்தவர்‌ நாட்டில்‌ எழும்‌ புலம்பலைக்‌ கூறுகின்றார்‌.) ப

விளக்கம்‌: கடல்‌ அலைகள்‌ ரஞ்தனகளின்‌ தலையாட்டத்‌

திற்கும்‌, செஞ்ஞாயிறு சோழனது வெற்றியின்‌ விளக்கத்திற்கும்‌ எழுச்சிக்கும்‌ உவமைகள்‌. இனிப்‌ போருக்குச்‌. செல்வோர்‌

8 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

செந்நிறமுள்ள. ஆடையாபரணங்களை அணிந்து செல்லுதல்‌ – மரபாதலின்‌, செஞ்ஞாயிற்றை உவமை கூறினார்‌ எனினும்‌ அமையும்‌.

சொற்பொருள்‌ : 1. வலந்தர – வெற்றியைத்‌ தருதலால்‌. 2. களம்‌

– போர்‌ செய்யுமிடம்‌. 3. மருப்பு – கொம்பு; இரத்தம்‌ தோய்ந்து

சிவந்திருத்தலால்‌ அவ்வாறு சிவந்துள்ள கொல்லேற்றின்‌ மருப்பை

உவமை கூறினார்‌. 5. தோல்‌ – பரிசை; கேடயம்‌ எனப்படும்‌. 6. ஒராஅ

தப்பாத. இலக்கம்‌ – குறி.8. கறுழ்‌ – முகக்‌ கருவி. 10. கதவு – பகைவரின்‌

கோட்டை வாயிற்கதவு. 13. அலங்குஉளை – அசைகின்ற தலையாட்டம்‌. உளை – பிடரி மயிர்‌ என்றுங்‌ கூறுவர்‌.

5. அருளும்‌ அருமையும்‌! பாடியவர்‌: நரிவெரூஉத்‌ தலையார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ கருவூரேறிய ஒள்வாட்‌ கோப்பெருஞ்‌ சேரல்‌. திணை: பாடாண்‌. துறை: செவியறிவுறூ௨; பொருண்‌ மொழிக்‌ காஞ்சியும்‌ ஆம்‌. சிறப்பு: பார்வையானே நோய்‌ போக்கும்‌ கண்ணின்‌

சக்திபற்றிய செய்தி,

[சேரமானைக்‌ கண்டு நல்லுடம்பு பெற்ற காலையிற்‌ பாடிய செய்யுள்‌ இது என்பர்‌. “காவல்‌ குழவி கொள்பவரின்‌ ஓம்புமதி” என்பதனால்‌, செவியறிவுறூஉ ஆயிற்று. அருளும்‌ அன்பும்‌ நீங்கி நீங்கா நிரயம்‌ கொள்பவரோடு ஒன்றாது” என்றமையால்‌, ‘பொருண்‌ மொழிக்‌ காஞ்சி” ஆயிற்று. நிரயங்‌ கொள்பவரோடு ஒன்றாது காவலை ஓம்பு என, வேம்பும்‌ கடுவும்போல்‌ வெய்தாகக்‌ கூறி, அவற்கு உறுதி பயத்தலின்‌, வாயுறை வாழ்த்தும்‌ ஆயிற்று

(தொல்‌. புறத்‌. சூ. 35 நச்‌] எருமை அன்ன கருங்கல்‌ இடை தோறு,

ஆனிற்‌ பரக்கும்‌ யானைய, முன்பின்‌,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீயோர்‌ ஆகலின்‌, நின்‌ஒன்று மொழிவல்‌; .

அருளும்‌ அன்பும்‌ நீக்கி நீங்கா த

நிரயங்‌ கொள்பவரோடு ஒன்றாது காவல்‌,

குழவி கொள்பவரின்‌, ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல்‌ அருங்‌ குரைத்தே.

எருமை போன்ற கரிய பாறைகள்‌ பொருந்திய இடமெங்கணும்‌ இடையிடையே பசுக்கூட்டம்‌ போன்ற பானைகள்‌ உலவும்‌ வலியமைந்த காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்‌! ஆதலின்‌, ஒன்று சொல்வேன்‌ கேட்பாயாக:

அருளையும்‌ அன்பையும்‌ தம்‌ வாழ்விலிருந்து நீக்கி விட்டவர்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ 9

நீங்காத துயரத்திலே கிடந்து உழல்வர்‌. அத்தகையாரோடு சேராதிருப்பாயாக! பெற்ற தாய்‌ குழந்தையைப்‌ பேணுவதுபோல்‌ நின்‌ நாட்டைப்‌ பேணிக்‌ காத்து வருவாயாக! நாட்டு அரசனாவது . எளிதில்‌ வாய்ப்பதன்று. எனவே, அருளோடு காவல்‌ நடாத்துக! (அரசின்‌ அருமையையும்‌ அரசன்‌ அருளுடையவனாகவே விளங்க வேண்டுமென்பதையும்‌ வலியுறுத்திக்‌ கூறுவது இது.) ப

. சொற்பொருள்‌: 2. ஆனின்‌ – பசுக்கூட்டம்‌ போல. முன்பு – வலிமை. 3 – 4. நீயோ, நீயோர்‌ – இவற்றிலுள்ள ஓ, ஓர்‌ அசைகள்‌: ‘நீயோ’ ஓகாரம்‌ வினாவுமாம்‌. 5. அருள்‌ – தொடர்பு இல்லாதார்‌ மாட்டுத்‌ தோன்றும்‌ இரக்கம்‌. அன்பு – தொடர்பு உடையார்‌ மாட்டுத்‌ தோன்றும்‌ மன நெகிழ்ச்சி, 6. நிரயம்‌ – நரகம்‌. 7. மதி: முன்னிலையசை. 4. பெறல்‌ அருங்குரைத்து – பெறுதற்கு அரிய து. குரை : அசை. உ.

6. தண்ணிலவும்‌ வெங்கதிரும்‌!

பாடியவர்‌: காரிகிழார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ பல்யாகசாலை முதுகுடுமிப்‌ பெருவழுதி. திணை: பாடாண்‌. துறை: செவியறிவுறூ௨; வாழ்த்தியலும்‌ ஆம்‌. சிறப்பு: பாண்டியனின்‌ மற மாண்பு. .

[ இவ்வாறு செய்க’ என அரசியல்‌ கூறுதலால்‌, செவியறி வுறூஉம்‌, “மதியமும்‌ ஞாயிறும்‌ போல மன்னுக” என்றதனால்‌ வாழ்த்தியலும்‌ ஆயிற்று. இதனுள்‌ இயல்பாகிய குணம்‌ கூறி, அவற்றோடு செவியுறையும்‌ கூறினர்‌, செவியுறைப்‌. பொருள்‌ சிறப்புடைத்து என்று கருதி, அவன்‌ வாழ்தல்‌ 0வேண்டும்‌ என்பதற்காக, (தொல்‌. புறத்‌. சூ 35 நச்‌]

வாடஅது பனிபடு நெடுவரை வடக்கும்‌,

தெனாஅது உருகெழு குமரியின்‌ தெற்கும்‌,

குணாஅது கரைபொரு தொடுகடல்‌ குணக்கும்‌, .

குடாஅது தொன்றுமுதிர்‌ பெளவத்தின்‌ குடக்கும்‌,

கீழது, முப்புணர்‌ அடுக்கிய முறைமுதற்‌ கட்டின்‌ 5

நீர்நிலை நிவப்பின்‌ கீழும்‌, மேலது ப

ஆனிலை உலகத்‌ தானும்‌, ஆனாது,

உருவும்‌ புகழும்‌ ஆகி, விரிசீர்த்‌ –

தெரிகோல்‌ ஞமன்ன்‌ போல, ஒரு திறம்‌ |

பற்றல்‌ இலியரோ! நின்‌ திறம்‌ சிறக்க! 10

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர்‌ தேஎத்துக்‌,

கடற்படை குளிப்ப மண்டி, அடர்‌ புகர்ச்‌ .

சிறுகண்‌ யானை செவ்விதின்‌ ஏவிப்‌,

10 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ பாசவற்‌ படப்பை ஆர்‌எயில்‌ பலதந்து, அவ்வெயில்‌ கொண்ட செய்வுறு நன்கலம்‌ 15 பரிசின்‌ மாக்கட்கு வரிசையின்‌ நல்கிப்‌, பணியியர்‌ அத்தை நின்‌ குடையே; முனிவர்‌

.. முக்கண்‌ செல்வர்‌ நகர்வலஞ்‌ செயற்கே!

இறைஞ்சுக, பெரும, நின்சென்னி; சிறந்த ப நான்மறை முனிவர்‌ ஏந்துகை எதிரே! ப 20 வாடுக, இறைவ நின்‌ கண்ணி, ஒன்னார்‌ ப ப நாடுசுடு கமழ்புகை எறித்த லானே! செலிஇயர்‌ அத்தை, நின்‌ வெகுளி, வால்‌இழை மங்கையர்‌ துனித்த வாள்முகத்து எதிரே! ப , ப ஆங்கு, வென்றி எல்லாம்‌ வென்று அகத்து அடக்கிய 25 தண்டா ஈகைத்‌ தகைமாண்‌ குடுமி! தண்கதிர்‌ மதியம்‌ போலவும்‌, தெறுசுடர்‌ ஓண்கதிர்‌ ஞாயிறு போலவும்‌, மன்னுக, பெரும! நீ நிலமிசை யானே!

இமயமே வட. எல்லையாகவும்‌ குமரிக்கோடே தென்னெல்லையாகவும்‌, &ழ்க்கடலே கிழக்கு எல்லையாகவும்‌, மேற்கடலே மேற்கு எல்லையாகவும்‌ அமைந்தது நின்‌: நாடு. இவ்வெல்லையுள்‌ அமைந்த பெருநாட்டின்‌ பேரரசன்‌ நீ! நிலம்‌, வான்‌, சுவர்க்கம்‌ என்ற மூவுலகத்தும்‌, நிலத்தின்‌ 8ழாகிய பாதலத்தும்‌, சுவர்க்கத்தின்‌ மேலாகிய ஆனிலை உலகத்தும்‌ பரவிய நின்‌ புகழ்‌ பெரிது! நின்‌ முடிவுகள்‌ சமனாக விளங்குக! படை குடி முதலியன நின்னாட்டில்‌ சிறந்து ஓங்குக! எதிர்த்த பகைவர்‌ பெரும்படையின்‌ வலிதொலைத்து, அவர்‌ அரண்களை அழித்துச்‌ சூறைகொண்டு, அவற்றைப்‌ பரிசிலர்‌ மகிழ வழங்கும்‌ அருளாளன்‌ நீ! நின்‌ வெண்கொற்றக்‌ குடை முக்கண்ணன்‌ கோயிலை வலம்‌ – வருங்கால்‌ மட்டுமே தாழ்ந்து விளங்குக! மறையாளர்‌ – வாழ்த்‌ தும்போது நின்‌ தலை தாழ்க! நின்‌ தலைமாலை பகைவர்‌ நாட்டை எரியிட்டு எழும்‌ வெம்மையால்‌ வாடுக! நின்‌ சினம்‌ நின்‌ தேவியர்‌ புன்சிரிப்பின்முன்‌ தணிக! வெற்றி பல பெற்றும்‌ அதனால்‌ தருக்காது, உள்ளத்துள்‌ அடக்கமுடன்‌ வாழும்‌ வண்மையும்‌ தகுதியும்‌ உடைய குடுமியே! தண்கதிர்‌ நிலவும்‌, வெங்கதிர்‌ ஞாயிறும்‌ போன்று நீ உலகத்து நிலைபெற்று வாழ்வாயாக! (“குடை தாழ்வது இறைவன்‌ ஒருவனுக்கே); தலை தாழ்வது சான்றோர்க்கே; சினந்‌ தாழ்வது வாழ்க்கைத்‌ துணைவியின்‌ முன்னரே; மாலை வாடுவது பகைவர்‌ நாடழிக்கும்‌ எரியாலேயே-எனக்‌ கூறிப்‌ புகழ்கிறார்‌ புலவர்‌. வெற்றி வேந்தனும்‌

லியூர்க்கேசகன்‌ ர ர ர ட 11

அருளாளனுமாதலின்‌, வெம்மைக்கு ஞாயிற்றையும்‌, தண்மைக்கு நிலவையும்‌ கூறி, அவை போல்‌ வாழ்க என்றார்‌.)

சொற்பொருள்‌: வடாஅது – வடக்கின்௧ண்‌ உள்ளதாகிய. 2.தெனாஅது முதலியவற்றிற்கும்‌ அவ்வாறே கண்ணுருபு விரித்துரைக்க. உரு – உட்கு; அச்சம்‌. முப்புணர்‌ – நிலம்‌, ஆகாயம்‌, சுவர்க்கம்‌. 7. அன்நிலை உலகம்‌ – கோலோகம்‌; ஆன்‌ – உயிர்களைக்‌ குறிப்பதால்‌ கோலோகம்‌ உயிர்கள்‌ இறையடி சேரும்‌ பேரின்ப உலகைக்‌ கூறுவதாகும்‌. சுவர்க்கம்‌, போக உலகம்‌ என உணர்க. 9. ஞமன்‌ – துலாக்கோலின்கண்‌ உள்ள சமநிலையை உணர்த்தும்‌ உறுப்பு; தராசு முள்‌ போல்வது என்பர்‌. ஞமன்ன்‌ : ஒற்றளபெடை. 4. பாசவல்‌ – பசுமையான விளை நிலம்‌. 26. குடுமி – அண்மை விளி; பாண்டியனை விளித்தது. ப

7. வளநாடும்‌ வற்றிவிடும்‌!

பாடியவர்‌: கருங்குழல்‌ ஆதனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ கரிகாற்‌ பெருவளத்தான்‌. திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை மழபுல வஞ்சியும்‌ ஆம்‌. ்‌ ப

(“பிறரது அகன்றலை நாடு நல்ல இல்ல ‘“வாகுப” . என்றமையாற்‌ கொற்றவள்ளை ஆயிற்று. “ஊர்‌ சுடு விளக்கத்து அழிவிளிக்‌ கம்பலை” என்றமையால்‌, மழபுல வஞ்சி ஆயிற்று. இச்‌ செய்யுளை வஞ்சித்திணையின்‌ . “எரிபரந்து எடுத்தல்‌” துறைக்குக்‌ காட்டுவர்‌ (தொல்‌. புறத்‌. சூ. 8 நச்‌). “இயல்‌ தேர்‌ வளவ” என்றது, ‘ . இவன்‌ அடுத்தடுத்துப்‌ போர்மேற்‌ சென்றவனாதலை வலி

. யுறுத்தும்‌. “களிறு கடைஇய தாள்‌” என்றது, கரிகாலன்‌ என்னும்‌ பெயரின்‌ விளக்கம்‌ ற. தோன்றும்‌.)

-களிறு கடைஇய தாள்‌,

கழல்‌ உர£இய திருந்துஅடிக்‌,

கணை பொருது கவிவண்‌ கையால்‌,

கண்‌ ஒளிர்வருஉம்‌ கவின்‌ சாபத்து

மாமறுத்த மலர்மார்பின்‌, ‘ ப 5

தோல்‌ பெயரிய எறுழ்‌ முன்பின்‌,

எல்லையும்‌ இரவும்‌ எண்ணாய்‌, பகைவர்‌

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக்‌ கம்பலைக்‌ .. கொள்ளை மேவலை; ஆகலின்‌, நல்ல மீ

இல்ல ஆகுபவால்‌ இயல்தேர்‌ வளவ! – ப 10 ்‌ தண்புனல்‌ பரந்த பூசல்‌ மண்‌ மறுத்து

மீனின்‌ செறுக்கும்‌ யாணர்ப்‌ |

பயன்‌ திகழ்‌ கடன்‌ ட அகன்றலை நாடே.

12. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ களிறுகளைச்‌ செலுத்திய தாள்கள்‌, வீரக்‌ கழல்‌ ஒலிக்கும்‌ கால்கள்‌, கண்போன்று விளங்கும்‌ அழகிய வில்‌, பரந்த மார்பு, யானையையும்‌ பெயர்க்கும்‌. பெருவலிமை அகியவற்றை . உடையவனே! நீ பகைவரை அழித்தலையே இரவும்‌ பகலும்‌ கருத்தாகக்‌ கொண்டவன்‌. நின்னால்‌ எரி கொளுவப்பட்டு எரிகின்ற தீயின்‌ ஒளியிலே, அவ்வூரவர்‌ தம்‌ சுற்றத்தாரை அஞ்சி உருக்கமாக அழைத்துக்கொண்டிருக்கும்‌ கூக்குரல்‌ கேட்கும்‌. அந்த. . இரைச்சலிலும்‌ சூறையாடுதலில்‌ விருப்பமுடையவனாகச்‌ “செல்பவன்‌ நீ! நின்னை எதிர்ப்பவர்‌ நாட்டிலே நல்ல நல்ல பொருள்கள்‌ ஏதும்‌ மிஞ்சி இரா. தேரூர்ந்துவரும்‌ வளவனே! கட்டு மீறிவரும்‌ நீர்ப்பெருக்கை மண்ணால்‌ அடையாது, மீனால்‌ அடைக்கும்‌ நீர்‌ வளஞ்செறிந்த ஊர்களுடைய நினது மாற்றார்‌ நாடுகளின்‌ கதி இவ்வாறானால்‌, எவர்தாம்‌ நின்னைத்‌ துணிந்து இனியும்‌ எதிர்ப்பவர்‌? (நினக்கு எதிரியே ரகக்‌ என்பது கருத்து.) சொற்பொருள்‌: 2. ப தை போரிற்‌ புறங்கொடாத, கால்‌ உறுப்புநூல்‌ வல்லார்‌ கூறும்‌ இலக்கணங்கள்‌ அமைந்த அடி எனலும்‌ ஆம்‌. 4. சரபம்‌ – வில்‌. 5. மாமறுத்த – வெற்றிமகள்‌ பிறர்‌ மார்பை மறுத்ததற்குக்‌ காரணமாகிய. 6. தோல்‌ – யானை. எறுள்‌

.. முன்பு — மிக்க வலி: ஒரு பொருட்‌ பன்மொழி. 71. பூசல்‌ –

உடைப்ப்புக்கள்‌. 12. செறுக்கும்‌ – அடைக்கும்‌. யாணர்‌ – புது வருவாய்‌. 8. கதிர்நிகர்‌ ஆகாக்‌ காவலன்‌!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ கடுங்கோ வாழியாதன்‌: சேரமான்‌ செல்வக்‌ கடுங்கோ வாழியாதன்‌ என்பவனும்‌ இவனே. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி) . பூவை நிலையும்‌ ஆம்‌. ப

(“பூவை நிலை என்பது மனிதனைத்‌ தேவரோடு ௨வமித்துப்‌ போற்றுதல்‌. சேரலாதனைக்‌ கதிரவனோடு 2௨ வமித்துக்‌ கூறுதலால்‌ இதனைப்‌ பூவை நிலையாகக்‌ கொள்க. தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர்‌, தொல்காப்பிய உவமயியல்‌’ உரையுள்‌ (சூ.32) இச்‌ செய்யுளுக்குச்‌ சிறந்த -உரையொன்றை வகுத்துள்ளார்‌. அதனையும்‌ கற்று இச்‌ செய்யுளது னாரா செறிவினை அறிந்து இன்புறுக.)

வையம்‌ காவலர்‌, வழிமொழிந்து ஒழுகப்‌,

போகம்‌ வேண்டிப்‌, பொதுச்சொல்‌ பொறாஅது.

இடம்‌ சிறிது என்னும்‌ ஊக்கம்‌ துரப்ப, –

ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்‌, ப

. கடந்துஅடு தானைச்‌ சேர லாதனை ப 5

புலியூர்க்‌ கேசிகன்‌ ச 13

யாங்கனம்‌ ஒத்தியோ? வீங்குசெலல்‌ மண்டிலம்‌?

பொழுது என வரைதி; புறங்கொடுத்து.இறத்தி;

மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி; –

அகல்‌இரு விசும்பி னானும்‌ ப

பகல்விளங்‌ குதியால்‌, பல்கதிர்‌ விரித்தே. 30

உலகங்‌ காக்கும்‌ மன்னர்‌ பலரும்‌ தத்தம்‌ அணைக்கு உட்பட்டது தத்தம்‌ நிலப்பகுதி எனக்‌ கூறும்‌ பொதுச்சொல்லைப்‌ பொறாதவன்‌; எதிர்த்தார்‌ பலரையும்‌ ஊக்கமுடன்‌ வென்று நிலத்தை விரிவுபடுத்தி ஒப்பற்ற தனியாட்சி நடத்தி வருபவன்‌; செல்வத்தைப்‌ பேணாது வழங்கும்‌ வண்மையன்‌; எதிர்‌ நின்று வெல்லும்‌ ஆற்றல்மிக்க படைத்துணை உடையவன்‌; இவன்‌. மிக்க செலவினை உடைய கதிரவனே! இத்தகைய சேரமானுக்கு எவ்வாறு நீயும்‌ ஒப்பாவாய்‌? பகற்பொழுதுபோதும்‌ என்ற – வரையறுத்து அமைபவன்‌ நீ! திங்கள்‌ தோன்ற அஞ்சி முதுகிட்டு ஒழிபவன்‌ நீ! தெற்கும்‌ வடக்கும்‌ மாறி மாறி வருபவனாதலால்‌ ஒரு நிலையில்‌ நில்லாத தன்மையுடையவன்‌ நீ! மலைக்குப்பின்‌ மறைகின்றாய்‌, பகலில்‌ மட்டும்‌ வானத்திலே தோன்றிப்‌ பல கதிர்களையும்‌ பரப்புகின்றாய்‌. அவனுக்கு ஒருகாலும்‌ நீ ஒப்பாக மாட்டாய்‌ காண்‌! (தன்‌ நாட்டோடு அமையாது பிறர்‌ நாட்டையும்‌ கைக்கொண்டு தன்‌ நாட்டை விரிவுபடுத்துபவன்‌; பகைவர்‌ எதிர்த்தால்‌ எதிர்‌ நிற்பவனேயன்றி ஒருபோதும்‌ புறமுதுகு இடாதவன்‌; நிலையான ஆட்சியுடையவன்‌; விளங்கிய புகழ்‌ உடையவன்‌ எனச்‌ சேரளைப்‌ புகழ்ந்தது இது.)

சொற்பொருள்‌: 4. ஒடுங்கா உள்ளம்‌ – சோம்பல்‌ இல்லாத உள்ளம்‌. ஓம்பா ஈகை – பொருளைத்‌ தன்‌ நலனுக்காகப்‌ பாதுகாவாது, பலருக்கும்‌ உவப்புடன்‌ வழங்கும்‌ கைவண்மை.

9. ஆற்றுமணலும்‌ வாழ்நாளும்‌!

பாடியவர்‌: நெட்டிமையார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ பல்யாகசாலை முதுகுடுமிப்‌ பெருவழுதி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. குறிப்பு: இதனுடன்‌ காரிகிழாரின்‌ அறாவது _ புறப்பாட்டையும்‌ சேர்த்‌ து ஆய்ந்து, இப்‌ ய உ சிறப்பைக்‌ காண்க.

(இச்‌ செய்யுளைப்‌, பொருளின்‌ துய்த்த பேர்ன்‌ பக்கத்திற்கும்‌, இயன்மொழி வாழ்த்திற்கும்‌ இளம்பூரணனார்‌ எடுத்துக்‌ காட்டுவர்‌ (தொல்‌. புறத்‌. சூ 7, 29 உரை. பூதங்களின்‌

தோற்ற முறைமையைக்‌ கருதி, நிலத்திற்கு முன்னாகிய நீர்‌, “முந்நீர்‌” எனப்பட்டது. மன்னுயிர்‌ காக்கும்‌ அன்புடை வேந்தர்க்கு

14 3 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

மறத்துறையினும்‌ தம்‌ நிகழும்‌ என்பதற்கு இச்‌ செய்யுள்‌ சான்றாகும்‌ (தொல்‌.சூ.2 நச்‌) “ஆவும்‌, ஆனியற்‌ பார்ப்பன மாக்களும்‌, பெண்டிரும்‌, பிணியுடை மீரும்‌ பேணித்‌ . தென்புலம்‌ வாழ்நர்க்கு அருங்கடன்‌ இறுக்கும்‌ பொன்போற்‌ புதல்வர்ப்‌ பெறாஅ தீரும்‌ ப எம்‌அம்பு கடிவிடுதும்‌, நும்‌அரண சேர்மின்‌’ என, 5

அறத்துஆறு நுவலும்‌ பூட்கை, மறத்தின்‌ . கொல்களிற்று மீமிசைக்‌ கொடிவிசும்பு நிழற்றும்‌ எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்‌ செந்நீர்ப்‌ பசும்பொன்‌ வயிரியர்க்கு ஈத்த, முந்நீர்‌ விழவின்‌, நெடியோன்‌ ‘ ன நன்னீர்ப்‌ பஃறுளி மணலினும்‌ பலவே! 10

வன்மை உடையரோடு எதிர்த்துப்‌ போரிடுவதே அற்றல்‌ – உடையவரின்‌ இயல்பு; எனவே இம்‌ மன்னன்‌, தான்‌ முற்றுகையிடும்‌ நகர்களில்‌ உள்ள.வன்மை அற்றாரைப்‌ பாதுகாவலான இடஞ்்‌ சேருமாறு முதற்சுண்‌ எச்சரிப்பான்‌ என்கிறார்‌ புலவர்‌. அவ்வாறு எச்சரிக்கப்படுவோர்‌ பயன்தரும்‌ ஆனினம்‌, அவ்வியல்புடைய பார்ப்பன மக்கள்‌. பெண்டிர்‌, பிணி உடையவர்‌, புதல்வர்ப்‌ பெறாதோர்‌ அவர்‌. இவ்வாறு அறவழி நடக்கும்‌ இயல்பும்‌, துணிவும்‌ உடையவனான எம்‌ குடுமியே! நீ வாழ்க! கடல்‌ தெய்வத்துக்கு முந்நீர்‌. விழா எடுத்து, அதனுள்‌ கூத்தர்க்குப்‌ பசும்பொன்‌ வழங்கிய நெடியோனால்‌ ஆக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி ஆற்று மணலிலும்‌ பல 0 ஆண்டுகள்‌ நீ

. புகழுடன்‌ வாழ்வாயாக!

சொற்பொருள்‌ : தென்புலம்‌ வாழ்நர்‌ – தென்‌ திசைக்கண்‌ வாழும்‌ பிதிரர்கள்‌, தம்‌ குலத்தில்‌ வாழ்ந்து இறந்து போன முன்னோர்கள்‌. அருங்கடன்‌ என்றது, அவர்க்குச்‌ செய்யும்‌ நினைவுக்‌ கடன்களை, அக்கடனைப்‌ பொன்போற்‌ கருதிப்‌ பாதுகாத்துச்‌ செய்யும்‌ இயல்புடைமை பற்றிப்‌ பொன்போற்‌ புதல்வர்‌ என்றார்‌. 6. பூட்கை மேற்‌ கொள்ளுதலையுடையது. பூண்“கை: தொழிற்பெயர்‌. வயிரியர்‌ – கூத்தர்‌. 70. முந்நீர்‌ – கடல்‌. .

-10.குற்றமும்‌ தண்டனையும்‌!

பாடியவர்‌: ஊன்‌ பொதி பசுங்குடையார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நெய்தலங்‌ கானல்‌ இளஞ்சேட்‌ சென்னி. திணை: பாடாண்‌. துறை: தன்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ ட… 1

(நெய்தலங்‌ கான நெடியோய்‌ (12) என அரசனின்‌ பெயர்‌ வந்துள்ளது. “வழிபடுவோரை வல்லறிதி” என்பது, அறிந்து அவர்கட்கு அருளுக என்றும்‌ பொருள்‌ தரும்‌, அவ்வாறு எக்‌ இது செவியறிவு றூஉம்‌ ஆகும்‌.)

வழிபடு வோரை வல்லறி தீயே!’

பிறர்பழி கூறுவோர்‌ மொழிதே றலையே;

நீமெய்‌ கண்ட தீமை காணின்‌, ‘

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்‌, _- 5

. தண்டமும்‌ தணிதி, பண்டையிற்‌ பெரிதே; – அமிழ்துஅட்டு ஆனாக்‌ கமழ்குய்‌ அடிசில்‌ _

வருநர்க்கு வரையா வசையில்‌ வாழ்க்கை

மகளிர்‌ மலைத்தல்‌ அல்லது, மள்ளர்‌

_மலைத்தல்‌ போகிய, சிலைத்தார்‌ மார்ப! 10 – செய்து இரங்காவினைச்‌, சேண்விளங்‌ கும்புகழ்‌

நெய்தலங்‌ கானல்‌ நெடியோய்‌!

எய்த வந்தனம்யாம்‌; ஏத்துகம்‌ பலவே! .

அமுதத்தையும்‌ தன்‌ சுவையால்‌ வெல்லுவதும்‌, உண்ண உண்ணத்‌ தெவிட்டாத மணங்கமழும்‌ தாளிதத்தை உடையதுமான உணவை, வருபவருக்கு எல்லையின்றி வழங்குபவர்‌ நின்தேவியார்‌. . வசையில்லாத வாழ்வினரான அவர்‌ தழுவுவதை அல்லாது, மள்ளர்‌ மோதுவதற்கு அஞ்சும்‌, பன்னிற மாலையணிந்த திண்ணிய மார்பனே! ஒன்றைச்‌ செய்து, பின்‌ அதற்காக வருந்தாது, முதலிலேயே செம்மையாக எதனையும்‌ செய்பவன்‌ நீ! .. நெடுந்தொலை வரைக்கும்‌ பரந்தது நின்‌ புகழ்‌! நெய்தலங்‌ காலத்து ‘நெடியோனே! நின்‌ வழியிலே செல்பவரை விரைவில்‌ உணர்ந்து கொள்பவன்‌ நீ! புறம்கூறுவார்‌ சொற்களை நீ கேட்கவே மாட்டாய்‌! கொடுமை என்று. நின்‌ மனத்திலே முடிவாகக்‌ கருதிய ஒன்றை ஒருவன்‌ செய்யக்‌ கண்டால்‌, முறைவழுவாது நடுநிலைநின்று’ ஆய்ந்து அவனுக்குரிய தகுந்த தண்டனையை அளிப்பாய்‌. அவனே வந்து நின்‌ திருவடிகளைப்‌ பணிந்து நின்முன்‌ நின்றால்‌, தண்டனையையுங்‌ குறைத்து, முன்னிலும்‌ பெரிதாக – அவன்பால்‌ அன்பும்‌ பாராட்டுவாய்‌. நின்னை அடைந்து எம்‌ . துயரைத்‌ தீர்த்துக்‌ கொள்ளக்‌ கருதி யாமும்‌ வந்தோம்‌! நின்னைப்‌ பழ ரன்பறாம்‌. ( எமக்கும்‌ அருள்வாயாக என்பது கருத்து.)

– சொற்பொருள்‌: 1. வல்‌ அறிதி – விரைய அறிவாய்‌. 4. அத்தக ப ஒருத்தி – இமைக்குத்‌ தக்கவாறு தண்டிப்பாய்‌. 5. முந்தை – நின்மூன்‌. பண்டையிற்‌ பெரிது – அவர்‌ என்‌ செய்வதற்குமுன்‌ அவர்க்கு நீ.

16 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ செய்யும்‌ வதும்‌ பின்‌ செய்யும்‌ அருள்‌ பெரிதாக. 7. அட்டு – தன்‌ சுவையால்‌ வென்று. அனா – உண்ண உண்ண அமையாத. குய்‌ அடிசில்‌ – தாளிப்பையுடைய அடில்‌. 8. வருநர்க்கு – வரும்‌ விருந்தினர்க்கு. 9. மகளிர்‌ மலைத்தலாவது – பெண்டிர்‌ முயக்கத்தால்‌ மார்பணிகளை மாறுபடுத்துவது. மள்ளர்‌ – வீரர்‌. 10. . சிலைத்தார்‌ – இந்திர வில்போலும்‌ பன்னிற மலர்களாலியற்றிய மாலை 11. “செய்து இரங்கா வினை” யென்றது, ஒரு தொழிலைச்‌ செய்து, பின்‌ இவ்வாறு தவறு செய்தோமே என்று அதனை எண்ணி வருத்தம்‌ அடையாத செயல்‌.

11. பெற்றனர்‌! பெற்றிலேன்‌!

பாடியவர்‌: பேய்மகள்‌ இளவெயினியார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாடாண்‌. . துறை: பரிசில்‌ கடாநிலை.

(பாடினி இழை பெற்றாள்‌; பாணன்‌ பூப்‌ பெற்றான்‌; யானோ யாதும்‌ பெற்றிலேன்‌” என அமைதலால்‌ பரிசில்‌ கடா நிலை – ஆயிற்று. இது, இவர்‌ பேய்வடி வாகப்‌ பிறராற்‌ காணப்‌ பெறாதிருந்த தன்மையான்‌ எனலும்‌ பொருந்தும்‌. “நின்னோடு எதிர்த்துப்‌ பட்டோர்‌ இன்மையின்‌, எனக்குத்‌ தசையுணவு கிடைக்கப்‌ பெற்றிலேன்‌” எனக்‌ கூறியதாகவும்‌ கொள்க.)

அரி மயிர்த்‌ திரள்‌ முன்கை வால்‌ இழை, மட மங்கையர்‌ – வரி மணற்‌ புனை பாவைக்குக்‌ குலவுச்‌ சினைப்‌ பூக்‌ கொய்து தண்‌ பொருநைப்‌ புனல்‌ பாயும்‌ ன ரு 5

– விண்‌ பொருபுக”,, விறல்‌ வஞ்சிப்‌ பாடல்‌ சான்ற விறல்வேந்‌ தனும்மே, வெப்‌ புடைய அரண்‌ கடந்து, துப்புறுவர்‌ புறம்பெற்‌ றிசினே, புறம்‌ பெற்ற வய வேந்தன்‌, 10 மறம்‌ பாடிய பாடினி யும்மே; ஏர்‌ உடைய விழுக்‌ கழஞ்சின்‌, சீர்‌ உடைய இழை பெற்றிசினே! இழை பெற்ற பாடி னிக்குக்‌ குரல்‌ புணர்சீர்க்‌ கொளைவல்பாண்‌ மகனும்மே; 33

என ஆங்கு,

ஒள்‌அழல்‌ புரிந்த. தாமரை வெள்ளி நாரால்‌ பூப்பெற்‌ நிசினே.

. – புலியூர்க்‌ கேசிகன்‌ . 17 .. கருவூரிலிருந்து அரசியற்றியவன்‌ இவன்‌. அவவூர்ச்‌ சிறுமியர்‌ மென்மயிரோடு திரண்ட முன்கையினர்‌. வண்டல்‌ இழைத்த கிறு ்‌ வீட்டிலே, பாவை புனைந்து, அப்‌ பாவைக்குக்‌ கோட்டுப்பூச்‌ சூடி. விளையாடி மகிழ்பவர்‌. அன்‌ பொருநை நீரின்கண்‌ பாய்ந்து நீர்‌ விளையாடி மகிழும்‌ இயல்பினர்‌. ஆங்குப்‌, புலவர்‌ பாடுதற்கு உரிய வெற்றி வேந்தனாக இவன்‌ விளங்கினான்‌. பகைத்த மன்னரின்‌ காவல்‌ செறிந்த அரண்களை அழித்துப்‌ புறக்கொடை பெற்றுச்‌ சிறந்தான்‌. அவ்வீரத்தை வியந்து பாடினாள்‌ பாடினி. அவள்‌, பல கழஞ்சால்‌ செய்யப்பட்ட பசும்பொன்‌ அணிகலன்களைப்‌ பரிசாக . அவனிடமிருந்து பெற்றாள்‌. அவளுக்கு இயைய, முத்ல்‌ தானத்திலே பாடி வருபவன்‌ பாணன்‌. அவன்‌, பொன்னால்‌ செய்‌ து, வெள்ளி நாரால்‌ தொடுக்கப்பெற்ற தாமரைப்‌ பூமாலையினைப்‌ ்‌ பரிசாகப்‌ பெற்றான்‌. யானோ ஏதும்‌ பெற்றிலேன்‌. அவர்களுக்கு வழங்கியது போன்று எனக்கும்‌ சிறந்த பரிசில்‌ வழங்குவாயாக, பெருமானே!” என்றது இது. 5 |

சொற்பொருள்‌: 1. அரி – மென்மை. 2. மடமங்கையர்‌ – பேதை மகளிர்‌ 3. வரி மணல்‌ புனைபாவை – வண்டல்‌ மணலால்‌ இழைத்த சிற்றிற்கண்‌ செய்த பாவை; பஞ்சாங்கோரைப்‌ பாவையும்‌ ஆம்‌. 5. பொருநைப்‌ புனல்‌ – அன்‌ பொருந்தத்து நீர்‌; “அன்‌ பொருந்தம்‌’ என்பது, கரூரின்‌ சமீபத்திலுள்ள ஓர்‌ ஆறு. 9. துப்புறுவர்‌ – வலியோடு எதிர்த்துவரும்‌ பகைவர்‌. புறம்‌ பெற்றிசின்‌ – புறமுதுகு காட்டியேர்டும்‌ தகுதியைத்‌ தான்‌ பெற்றான்‌ என்பதாம்‌. 11, மறம்‌ பாடிய – வீரத்தன்மையைப்‌ புகழ்ந்து பாடிய. 12. கழஞ்சு – சிறிய அளவுடையது; ஆகுபெயராற்‌ பொன்னை உணர்த்திற்று. 17. ஒள்ளழல்‌ புரிந்த தாமரை – விளங்கிய அழலின்கண்ணே பொன்னை உருக்கி, அதனாற்‌ செய்த தாமரை போலும்‌ பூக்கள்‌ அமைந்த பொன்‌ அணி. ர

12. அறம்‌ இதுதானோ? பாடியவர்‌: நெட்டிமையார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ – பல்யாகசாலை முதுகுடுமிப்‌ பெருவழுதி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. ப ப

(பழித்ததுபோலப்‌ புகழ்ந்தது இது. 9, 6ஆவது புறப்பாட்டுக்‌ களையும்‌ இத்துடன்‌ கற்று, இவன்‌ புகழை அறிக. “கொடுத்தல்‌ எய்திய கொடமை’ க்கு இச்‌ செய்யுளை எடுத்துக்‌ காட்டுவர்‌ இளம்பூரணனார்‌ (தொல்‌. புறத்‌. சூ. 7)

பாணர்‌ தாமரை மலையவும்‌, புலவர்‌ பூநுதல்‌ யானையொடு புனைதேர்‌ பண்ணவும்‌, –

18 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ அறனோ மற்றுஇது விறல்மாண்‌ குடுமி! இன்னா ஆகப்‌ பிறர்‌ மண கொண்டு இனிய செய்தி நின்‌ ஆர்வலர்‌ முகத்தே! பாணர்‌ பொற்றாமரைப்‌ பூச்‌ சூடினர்‌. புலவர்கள்‌ யானையும்‌

தேரும்‌ பெற்றனர்‌. வெற்றிச்‌ சிறப்பு உடைய குடுமியே! வேற்றரசர்‌ ‘

நிலத்தை அவர்க்கு உரிமையற்றதாக்கி நீ கவர்ந்து கொள்ளு

– கின்றாய்‌. அனால்‌, நின்பால்‌ வரும்‌ பரிசிலர்க்கு மட்டும்‌ இனிய

வற்றையே செய்து வருகின்றனை. அதுதான்‌ நின்‌ அறநெறியோ?

(அவன்‌ அறத்தை இகழ்வது போல்‌, அவன்‌ வீரத்தையும்‌,

வள்ளன்மையையும்‌ புகழ்ந்தது.)

சொற்பொருள்‌: 1. மலையவும்‌ – சூடவும்‌. 2. பண்ணவும்‌ – ஏறுதற்கு ஏற்ப அமைக்கவும்‌. 5. ஆர்வலர்‌ – பகைவர்‌. 13. நோயின்றிச்‌ செல்க!

பாடியவர்‌: உறையூர்‌ ஏணிச்சேரி முடமோசியார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ முடித்தலைக்‌ கோப்பெருநற்கிள்ளி. திணை: பாடாண்‌. துறை: வாழ்த்தியல்‌.

(கருவூர்‌ வேண்மாடத்திலிருந்த காலத்து, ஊர்ந்து வந்த யானை: மதம்‌ பட்டதனால்‌ கருவூருள்‌ வந்தடைந்த சோழனைக்‌ காட்டி, “இவன்‌ யார்‌?” எனச்‌ சேரமான்‌ கேட்பப்‌, புலவர்‌ கூறியது இச்‌ செய்யுள்‌. “களிறு கையிகந்து பகையகத்துப்‌ புகுந்தமையால்‌ அவற்குத்‌ தீங்குறும்‌” என்று அஞ்சி வாழ்த்தினர்‌, அதனால்‌ வாழ்த்தியல்‌ ஆயிற்‌ று. அன்றி, “இவற்கொரு தீங்காயின்‌, நமக்குத்‌ தீங்கு வந்துறும்‌” எனும்‌ கருத்தால்‌, “நோயிலன்‌ ஆகிப்‌ பெயர்க” என்றாராயின்‌, வாழ்த்தியல்‌ ஆகாது. இதனாற்‌ : புலவரது சொற்றிறமும்‌ சால்பும்‌ காணப்படும்‌.)

“இவன்‌ யார்‌?” என்குவை ஆயின்‌, இவனே, புலிநிறக்‌ கவசம்‌ பூம்பொறி சிதைய,

-. எய்கணை கிழித்த பகட்டுளஎழில்‌ மார்பின்‌, மறலி அன்ன களிற்றுமிசை யோனே; களிறே, முந்நீர்‌ வழங்கு நாவாய்‌ போலவும்‌, 5 பன்மீன்‌ நாப்பண்‌ திங்கள்‌ போலவும்‌,

. சுறவு இனத்து அன்ன வாளோர்‌ மொய்ப்ப,

மரீஇயோர்‌ அறியாது, மைந்துபட்‌ டன்றே;

.. நோயிலன்‌ ஆகிப்‌ பெயர்கதில்‌ அம்ம! பழன மஞ்ஞை உகுத்த பீலி ப 1௦

புலியூர்க்‌ கேசிகன்‌ ட… 19 கழனி உழவர்‌ ருட்டொடு தொகுக்கும்‌,

கொழுமீன்‌, விளைந்த கள்ளின்‌,

விழுநீர்‌ வேலி நாடுகிழ வோனே.

– “மயிலினம்‌ வயல்களிலே பீலிகளை உதிர்க்கும்‌, ‘நெற்சூட்டுடன்‌ அவற்றையும்‌ தொகுத்து வருவர்‌ உழவர்‌. கொழுவிய. மீனும்‌ விளைந்த கள்ளும்‌ எங்கும்‌ நிறைந்திருக்கும்‌. அத்தகைய வளம்‌ மிகுந்த சோணாட்டு மன்னன்‌ இவன்‌! அம்பு தொளைத்த புள்ளிகளோடு, புலிநிறக்‌ கவசமும்‌ அணிந்து, கூற்றுவன்‌ போலக்‌. ‘ களிற்றின்மேல்‌ இவர்ந்து வருகின்றான்‌. அக்‌ .களிறுதான்‌, கடலிடையே . செல்லும்‌ கலம்‌ போலவும்‌, விண்மீன்‌ .. கூட்டத்திடையே விளங்கும்‌ மதியம்‌ போலவும்‌, சுறாமீன்‌ போல, கொடிய வாள்மறவர்‌ மொய்த்துச்‌ சூழப்‌, பாகரையும்‌ மதியாது மதம்பட்டுள்ளது. எவ்விதத்‌ தீங்கும்‌ இன்றி அவ்விடரினின்றும்‌ விடுபட்டுச்‌ செல்ல அவனை விடுவாயாக! (பகைவன்‌ எனினும்‌, அந்‌ . நிலையில்‌ அவனைத்‌ துன்பமின்றிச்‌ செல்ல வழுவாது அறநெறியைக்‌ கூறுகிறார்‌ புலவர்‌.)

சொற்பொருள்‌: 5.புலிநிறக்‌ கவசம்‌ – தங்கினு தோலாற்‌ – செய்யப்பட்ட கவசம்‌. இதனை ‘மெய்புகு கருவி: என்பர்‌. பூம்பொறி – பொலிவினையுடைய தோலினது இணைப்பு. 8. மரீஇயோர்‌ – யானையைச்‌ சூழ்ந்த .பாகர்‌. மைந்‌ துபட்டன்று – மதம்பட்ட து. சூட்டொடு – நெல்லரிக்‌ கட்டோடு. ப

14. மென்மையும்‌! பக்ஸ்‌

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ செல்வக்‌ கடுங்கோ வாழியாதன்‌: திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி.

(தம்‌ கையது மென்மைக்கான காரணத்தைக்‌ கூறுவாரான . புலவர்‌, அரசன்‌ கையது வலிய இயல்பின்‌ காரணத்தைக்‌ கூறியும்‌ . போற்றினர்‌; அதனால்‌, இஃது இயன்மொழி ஆயிற்று. “மெல்லிய வாமால்‌ நும்‌ கை’ எனக்‌ கேட்ட சேரனுக்குக்‌ கபிலர்‌ கூறியதாக அமைந்த இச்‌ செய்யுள்‌, கபிலரது அறிவுத்‌ திட்பத்தை நன்கு காட்டுவதுமாகும்‌.) ப

“கடுங்‌ கண்ண கொல்‌ களிற்றால்‌ காப்‌ புடைய எழு முருக்கிப்‌ பொன்‌இயல்‌ புனை தோட்டியான்‌ முன்பு துரந்து, சமந்‌ தாங்கவும்‌; _- பார்‌ உடைத்த குண்டு அகழி | ப 5 நீர்‌ அழுவம்‌ நிவப்புக்‌ குறித்து, நிமிர்‌ பரிய மா தாங்கவும்‌;

20 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

ஆவம்‌ சேர்ந்த புறத்தை, தேர்மிசைச்‌

்‌ சாபநோன்ஞாண்‌ வடுக்கொள வழங்கவும்‌;

பரிசிலர்க்கு அருங்கலம்‌ நல்கவும்‌; குரிசில்‌! 30

வலிய ஆகும்‌ நின்‌ தாள்தோய்‌ தடக்கை.

புலவு நாற்றத்த பைந்தடி

பூ நாற்றத்த புகை கொளீஇ; ஊன்துவை

கறிசோறு உண்டு வருந்துதொழில்‌ அல்லது

பிறிதுதொழில்‌ அறியா ஆகலின்‌, நன்றும்‌ 15

மெல்லிய பெரும தாமே! நல்லவர்க்கு

ஆரணங்கு ஆகிய மார்பின்‌, பொருநர்க்கு

இருநிலத்து அன்ன நோன்மை

செருமிகு சேசய்‌. நின்‌ பாடுநர்‌ கையே! ப

“யானைப்‌ போரிலே யானையை முன்னர்‌ ஏவிப்‌ பின்னர்‌ இழுத்துப்‌ பிடிக்கின்றாய்‌. படுகுழிகளைத்‌ தாவிச்செல்லும்‌ குதிரைகளை அவற்றின்‌ வாரினைப்‌ பற்றி அடக்கிச்‌ செலுத்துகின்றாய்‌. தேர்மீது நின்று வலிய வில்லிலே நாண்பூட்டி அம்பினைக்‌ கடுகச்‌ செலுத்துகின்றாய்‌. பரிசிலர்க்குப்‌ பெறுதற்கரிய அணிகளை வாரி வாரி வழங்கவும்‌ செய்கின்றாய்‌. இவ்வாறு செய்வனவெல்லாம்‌ நின்‌ கைகளே அன்றோ! பெருமானே! பெண்டிர்க்கு அற்றுதற்கு அரிய்தும்‌, பொருதுவார்க்குத்‌ துளக்கப்படாத வலிமை உடையதுமான மார்பனே! போரில்‌ மிகுந்த ஆற்றல்‌ காட்டுபவனே! நின்‌ கைகள்‌ அதனால்‌ உரம்‌ பெற்றிருப்பது இயல்பே! நின்னைப்‌ பாடும்‌ யாமோ, ஊனும்‌ கறியும்‌, துவையும்‌ சோறும்‌ எடுத்து உண்பதைத்‌ தவிர; எம்‌ . கைகளால்‌ வேறெதும்‌ செய்தறியோம்‌! அதனாலேயே, எம்‌ போல்வார்‌ கைகள்‌ மிக மென்மையாக உள்ளன. (சேரமானின்‌ கைகள்‌ மென்மையாயிராதது ஏன்‌ எனக்‌ கூறி, அவனையும்‌ அதுவே பொருளாகப்‌ புகழ்ந்‌ துரைக்கிறார்‌ புலவர்‌.)

சொற்பொருள்‌: 2. எழு – கணையமரம்‌. 3. பொன்‌ – இரும்பு. தோட்டி – அங்குசம்‌. 5. குண்டு அகழி – குழிந்த அகழி; அழமுடைய அகழி எனும்‌ ஆம்‌. 6. நீர்‌ அழுவம்‌ – நீர்ப்பரப்பு. நிவப்பு – உயர்ச்சி. 7… நிமிர்பரிய – துகைத்த செலவினையுடைய. 8. ஆவம்‌ -. அம்பறாத்தூணி. புறத்தை – முதுகை உடையாய்‌..9. சாபம்‌ – வில்‌. 12. பைந்தடி, – செவ்விய தசை. 15. நன்றும்‌ – பெரிதும்‌. 16. நல்லவர்‌ – பெண்கள்‌. 17. ஆரணங்கு ஆகிய மார்பு – ஆற்றுதற்கு அரிய, காண்பார்‌ அதன்‌ பேரழகால்‌ வருந்துமாறு செய்யும்‌ மார்பு. . .. 78. இரு நிலத்து அன்ன நோன்மை – – துளக்கப்படாமையின்‌, பெரிய

– நிலம்‌ போன்ற வலிமை.

பயர்‌ கேசிகன்‌ பட்டகம்‌. | .. 15, எதனிற்‌ சிறந்தாய்‌? ப

பாடியவர்‌: நெட்டிமையார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ பல்யாகசாலை முதுகுடுமிப்‌ பெருவழுதி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. திணை: 9, 6, 12 அவது ப னா இதனோடு சேர்த்துச்‌ கற்றறிக. ப

(“பாழ்‌ செய்தனை”, “தேர்‌ வழங்கினை”: “கயம்‌ படீயினை; வேள்வி பல செய்தனை’ என இவை எல்லாம்‌ செய்யும்‌ இயல்பினன்‌ எனக்‌ கூறுதலால்‌, “இயன்மொழி வாழ்த்து” ஆயிற்று. இனி இவை செய்தனை; இவையிற்றைத்‌ தொடர்ந்து செய்தருள்க எனப்‌ பொருள்முடி.பு கொள்ளின்‌ செவியறிவுறூஉம்‌ அகும்‌.)

‘கடுந்தேர்‌ குழித்த ஞெள்ளல்‌ ஆங்கண்‌,

வெள்வாய்க்‌ கழுதைப்‌ புல்லினம்‌ பூட்டிப்‌,

பாழ்செய்‌ தனை, அவர்‌ நனந்தலை நல்லெயில்‌;

புள்ளினம்‌ இமிழும்‌ புகழ்சால்‌ விளைவயல்‌,

வெள்ளுளைக்‌ கலிமான்‌ கவிகுளம்‌ புகளத்‌ 5

. தேர்வழங்‌ கினைநின்‌ தெவ்வர்‌ தெளத்துத்‌;

துளங்கு இயலாற்‌, பணை எருத்தின்‌,

பா வடியாற்‌ செறல்‌ நோக்கின்‌,

ஒளிறு மருப்பின்‌ களிறு அவர

காப்‌ புடைய கயம்‌ படியினை டு ப உ டு

அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்‌ விளங்கு பொன்‌ எறிந்த நலங்கிளர்‌ பலகையொடு . நிழல்படு நெடுவேல்‌ ஏந்தி ஒன்னார்‌ ஒண்படைக்‌ கடுந்தார்‌ முன்புதலைக்‌ கொண்மார்‌, நசைதர வந்தோர்‌ பலர்கொல்‌? புரையில்‌ ப 15

நற்‌ பனுவல்‌ நால்‌ வேதத்து

அருஞ்‌ சீர்த்திப்‌ பெருங்‌ கண்ணுறை.

நெய்ம்‌ மலி ஆவுதி பொங்கப்‌, பன்மாண்‌

வீயாச்‌ சிறப்பின்‌ வேள்வி முற்றி, 20

யூபம்‌ நட்ட வியன்களம்‌ பலகொல்‌?

யாபல கொல்லோ பெரும! வார்‌ உற்று

விசிபிணிக்‌ கொண்ட மண்கனை முழவின்‌

பாடினி பாடும்‌ வஞ்சிக்கு |

நாடல்‌ சான்ற மைந்தினோய்‌! நினக்கே? ப 25

இந்த வழுதி பகைவர்‌ நாடுகள்‌ பலவற்றையும்‌ அழித்தவன்‌; பல யாகங்களைச்‌ செய்‌ து புகழ்‌ பெற்றவன்‌; விறலியர்‌ போற்றிப்‌

22 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ பாடும்‌ தகுதிகள்‌ பலவும்‌ உடையவன்‌. அதனால்‌, இவற்றுள்‌,

எதனில்‌ மிகுதியானவன்‌ என்று சொல்லமுடியாத பெருஞ்‌ சிறப்‌பினன்‌ என்கிறார்‌ புலவர்‌.

தேரோடித்‌ தடம்‌ பதிந்த பகைவர்‌ நாட்டுத்‌ தெருவிலே, கழுதைகளைப்‌ பூட்டி உழுதாய்‌! புள்ளினம்‌ ஒலி முழங்கும்‌ . விளைவயலினிடத்தே, தாவிச்‌ செல்லும்‌ குதிரைகள்‌ பூட்டிய தேர்களைச்‌ செலுத்தி அழித்தாய்‌! பகைவர்‌ போற்றிக்‌ காத்த காவற்குளங்களிலே, யானைகளை விட்டுப்‌ பாழ்‌ செய்தாய்‌! பகைவர்‌ மீது அவ்வளவு சினமும்‌, அதனைச்‌ செயற்படுத்தும்‌ மிகுந்த ஆற்றலும்‌ உடையவன்‌ நீ. நின்னை வெல்லுதலின்‌ – பொருட்டாக வேல்‌ கொண்டெழுந்த பெரும்‌ பகைவரும்‌, நின்‌ தூசிப்படையின்‌ எதிரே நிற்கவும்‌ ஆற்றாது, மேற்கண்டவாறு பாழ்பட்டுப்‌ பலராக அழிந்தனர்‌. இதேபோன்று, வேத விதிப்படி தலைமை பூண்டு பெரிய பெரிய யாகங்கள்‌ பலவும்‌ நீ – இயற்றுவித்தனை! பெருமானே! கச்சணிந்த மதர்த்த மார்பினரான விறலியர்‌ போற்றிப்‌ பாடும்‌ புகழிற்கு ஏற்ற தகுதிமிக்க வலிமை உடையோனே! இவற்றுள்‌, எவ்வகையால்‌ நீ மிகுதியானவன்‌ என்று நீயே எமக்கு உரைக்க மாட்டாயோ?

சொற்பொருள்‌: 1. ஜஞெள்ளல்‌ – தெரு. 2. புல்லினம்‌ – புல்லிய நிரையினை; அதாவது கழுதைகளை. 3. நனந்தலை – அகன்ற இடம்‌. 9.அவர – அகரம்‌ அறனுருபு; பன்மைக்‌ கண்‌ வந்தது; அவருடைய – என்பது பொருள்‌.12. பலகை – கிடுகு : கேடகம்‌. 14. தார்‌ – தூசிப்படை, முன்செல்லும்‌ படை. 15. நசை தர – தம்‌ அசை.கொடு வர. பிறக்கொழிய – பின்னொழிய. 76. வசை – பழிப்பு. 18. கண்ணுறை – வேள்விக்குரிய சமிதை முதலியன. 21. யூபம்‌ – ்‌. வேள்வி செய்யுமிடத்து நடப்படும்‌ தூண்‌. 23. மண்களை – மார்ச்சனை; முழவின்கண்‌ இன்னோசை உண்டாகும்‌ பொருட்டுப்‌ பூச்சிடும்‌ ஒருவகைச்‌ சாந்து. 24. வஞ்சி – பகைமேற்‌ செல்லுதலைக்‌ குறித்த துறையமைந்த புறப்பாடல்‌.

16. செவ்வானும்‌ சுடுநெருப்பும்‌!

்‌ பாடியவர்‌: பாண்டரங்‌ கண்ணனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ இராசசூயம்‌ வேட்ட பெருநற்கிள்ளி. திணை: வஞ்சி. துறை: மழபுல வஞ்சி.

. (ஏம நன்னாடு ஒள்‌ எரி யூட்டி’ என்றதனால்‌, இது மழபுல .. வஞ்சி ஆயிற்று. ஆசிரியர்‌ இளம்பூரணனார்‌, “எரிபரந்து எடுத்தல்‌” என்னும்‌ துறைக்கு இதனை எடுத்துக்‌ கட்டுவார்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ 23 ‘வினை மாட்சிய விரை புரவியொடு, மழை யுருவின தோல்‌ பரப்பி, _ முனை முருங்க்த்‌ தலைச்சென்று, அவர்‌ விளை வயல்‌ கவர்பு ஊட்டி, ்‌ மனை மரம்‌ விறகு ஆகக்‌ 5.

கடி துறைநீர்க்‌ களிறு படீஇ, எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்‌ செல்சுடர்‌ ஞாயிற்றுச்‌ செக்கரின்‌ தோன்றப்‌, _- – புலம்கெட’இறுக்கும்‌ வரம்பில்‌ தானைத்‌, _- துணை வேண்டாச்‌ செரு வென்றிப்‌, 10 … புலவுவாள்‌ புலர்‌ சாந்தின்‌ முருகன்‌ சீற்றத்து, உருகெழு குருசில்‌! மயங்கு வள்ளை, மலர்‌ ஆம்பல்‌, பனிப்‌ பகன்றைக்‌ கனிப்‌ பாகல்‌, . , கரும்பு அல்லது காடு அறியாப்‌ ன ப அத பெருந்‌ தண்பணை பாழ்‌ ஆக, ஏமநன்‌ னாடு ஓள்‌எரி ஊட்டினை, நாம நல்லமர்‌ செய்ய, ஓராங்கு மலைந்தன, பெரும! நின்‌ களிறே,

இக்‌ கிள்ளியிடத்தே ஆற்றல்மிக்க பெரும்படை யொன்று. இருந்தது. பகைவர்‌ நாட்டை விரைந்து குதிரைமேற்‌ சென்று வென்று, அவர்தம்‌ நெல்விளையும்‌ கழனியைக்‌ கொள்ளையிட்டு, வீடுகளை இடித்து எரியூட்டிக்‌, காவற்குளங்களில்‌ யானைகளை இறக்கி அழித்துக்‌, கொடும்போரியற்றும்‌ திறம்‌ மிகுந்தது . அப்படை. அது சென்ற பகைவர்‌ நாடு சுடுநெருப்பால்‌ வெந்து ‘செக்கர்‌ வானைப்போலச்‌ செந்தீ ஒளிபரப்பிக்‌ கொண்டிருக்கும்‌. “துணை வேண்டாது தனித்தே போரிடும்‌ பெரிய படையினது . வலுவும்‌, புலால்‌ நாற்றம்‌ நாறும்‌ கொலைவாளும்‌, பூசிப்‌ புலர்ந்த சாந்தும்‌, முருகனைப்‌ போன்ற வெஞ்சினமும்‌ உடைய அச்சம்‌ -ஊட்டுந்‌ தலைவனே! வளமிகுந்த நல்ல நாட்டை, நின்னோடு – மாறுபட்டவர்‌ நாடு என்பதற்காக இவ்வாறு எரியூட்டிக்‌ கொடுமை – செய்தனையே! நின்‌ குதிரைப்படையுடன்‌ சேர்ந்து களிற்றுப்‌ – படையும்‌ அழித்தனவே!'” (எனினும்‌, “புலவர்பால்‌ மட்டும்‌ நீ அன்புடையாய்‌’ என, அவள்‌: போர்‌ வீரத்தையும்‌ உண்வம புகழ்ந்தது இது.)

ப சொற்பொருள்‌: 1. தோல்‌ – பரிசை. 3. முருங்க – கலங்க. 4. கவர்பு ஊட்டி – தள்‌ 6. கடி துறை – காவற்‌ பொய்கை. உண்ணு

24. .. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ நீருடையதாகலின்‌, அதனுள்‌ மக்கள்‌, விலங்குகள்‌ இறங்கிப்‌ படிந்து மாசுபடாவண்ண காதல்‌ மரபாகலின்‌, இவ்வாறு கூறுவர்‌. 7. எல்லுப்பட – விளக்கமுண்டாக.12. உரு – அச்சம்‌. 18. நாமம்‌ – அச்சம்‌.

17. யானையும்‌ வேந்தனும்‌!

பாடியவர்‌: குறுங்கோழியூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ யானைக்கண்சேய்‌ மாந்தரஞ்சேரல்‌ இரும்பொறை. திணை: வாகை. துறை: அரசவாகை; இயன்மொழியும்‌ ஆம்‌. .

(“தென்குமரி….காவல!” என இவனது குடியியல்பு கூறலால்‌, இயன்மொழி ஆயிற்று. “இவனது வெற்றி மேம்பாடு கூறலால்‌ அரசவாகையும்‌ ஆயிற்று. இவன்‌, “நீடு குழி.அகப்பட்ட கொல்‌ களிறு, குழிகொனள்று களை புகலத்‌ தலைக்கூடியமை’ போலப்‌, பாண்டியன்பாற்‌ சிறைப்பட்டிருந்து தப்பிச்‌ சென்றவன்‌ என்பதும்‌ இதனால்‌ அறியப்படும்‌.)

தென்‌ குமரி, வட பெருங்கல்‌

குண குட கடலா வெல்லை,

. குன்று, மலை, காடு, நாடு

ஒன்று பட்டு வழி மொழியக்‌; _

கொடிது கடிந்து, கோல்‌ திருத்திப்‌ 5

படுவது உண்டு, பகல்‌ ஆற்றி,

இனிது உருண்ட சுடர்‌ நேமி

முழுது ஆண்டோர்‌ வழி காவல! ‘

குலை இறைஞ்சிய கோள்‌ தாழை

அகல்‌ வயல்‌, மலை வேலி! ப 10.

நிலவு மணல்‌ வியன்‌ கானல்‌, . ‘

தெண்‌ கழிமிசைச்‌ சுடர்ப்‌ பூவின்‌,

தண்‌ தொண்டியோர்‌ அடு பொருந!

மாப்‌ பயம்பின்‌ பொறை போற்றாது,

நீடு குழி அகப்‌ பட்ட ட 15

பீடு உடைய எறுழ்‌ முன்பின்‌,

கோடு முற்றிய கொல்‌ களிறு,

நிலை கலங்கக்‌ குழி கொன்று,

கிளை புகலத்‌ தலைக்கூடி யாங்கு –

நீ பட்ட.அரு முன்பின்‌, … 20 பெருந்‌ தளர்ச்சி, பலர்‌ உவப்பப்‌,

பிறிது சென்று, மலர்‌ தாயத்துப்‌

பலர்‌ நாப்பண்‌ மீக்‌ கூறலின்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ டவ 8 25 “உண்‌ டாகிய உயர்‌ மண்ணும்‌, _ சென்று பட்ட விழுக்‌ கலனும்‌, 25

பெறல்‌ கூடும்‌, இவன்நெஞ்சு உறப்பெறின்‌’ எனவும்‌,

“ஏந்து கொடி இறைப்‌ புரிசை,

வீங்கு சிறை, வியல்‌ அருப்பம்‌,

இழந்து வைகுதும்‌, இனிநாம்‌; இவன்‌ உடன்று நோக்கினன்‌, பெரிது’ எனவும்‌ 30 வேற்று அரசு பணி தொடங்குநின்‌

ஆற்ற லொடு புகழ்‌ ஏத்திக்‌, –

காண்கு வந்திசின்‌, பெரும! ஈண்டிய

மழையென மருளும்‌ பல்தோல்‌, மலையெனத்‌ ப தேன்‌ இறை கொள்ளும்‌ இரும்பல்‌ யானை. ப 35

உடலுநா உட்க வீங்கிக்‌ கடலென

வான்நீர்க்கு ஊக்கும்‌. தானை, ஆனாது

கடுஓடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,

இடியென முழங்கு முரசின்‌, ப

வரையா ஈகைக்‌ குடவர்‌ கோவே! ்‌ 40

இந்‌ நாவலந்தீவு முழுவதும்‌ ஒருகாலத்தே ஒரு குடைக்‌ கீழ்ப்‌ பேரரசாக அண்டவர்‌ சேரர்‌. தீத்தொழில்‌ போக்கி அறம்‌ பேணி ஆணை செலுத்திவந்த அரச மரபினர்‌ அவர்‌. அவர்‌ மரபைக்‌ காத்தவனே! தென்னையும்‌ .வயலும்‌ மலையும்‌ கடற்கரையுமாக விளங்கும்‌ தொண்டித்‌ துறையின்‌ தலைவனே! யானைபடுங்‌ . குழியிலே செருக்கால்‌ அறிவிழந்து வீழ்ந்தது ஒரு களிறு; பின்‌, அதனைத்‌ தன்‌ வலிய: கொம்புகளால்‌ தாூர்த்துத்‌ தானே வெளிப்பட்டுத்‌ தன்‌ இனத்தோடும்‌ சேர்ந்தது. அஃதேபோல., நீயும்‌ உற்ற தளர்ச்சி நீங்கிச்‌, சூழ்ச்சியாற்‌ பலரும்‌ மகிழ, நின்‌ சுற்றத்தார்‌ நடுவே உயர்வுடன்‌ வந்து விளங்குகின்றாய்‌. நீ சிறைப்படு முன்னர்‌, நின்னால்‌ அடிமைப்‌ படுத்தப்பட்டோர்‌, நீ பிணிப்புண்டதும்‌ தம்நாடும்‌ பொருளும்‌ மீட்டும்‌ பெறலாம்‌ என நினைத்தனர்‌… அவ்வாறு எண்ணியோர்‌ நின்‌ வரவறிந்ததும்‌, தாம்‌ எடுத்த கொடியும்‌ பிறவும்‌ நிறுத்தி விட்டு, மீண்டும்‌ நின்னைப்‌ பணிந்து ஏவல்‌ செய்யத்‌ தொடங்கினர்‌. பெருமானே! கார்மேகம்‌ போலத்‌ திரண்டெழும்‌ பரிசைப்‌ படையினையும்‌, மலையென விளங்கும்‌ யானைப்‌ படையினையும்‌, கடலெனப்‌ பொரும்‌ காலாட்‌ படை. ‘யினையும்‌, இடிபோல முழங்கும்‌ முரசினையும்‌ எல்லார்க்கும்‌ எப்‌ பொருளும்‌ வரையாது வழங்கும்‌ வண்மை யினையும்‌ உடையவனே! குட நாட்டினர்‌ வேந்தனே! நீ வாழ்க!

26. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ சொற்பொருள்‌: 6. படுவது – ஆறில்‌ ஒன்றாகிய இறையை. . ஆறாவன: தென்புலத்தார்‌, தெய்வம்‌, விருந்து, ஒக்கல்‌, தான்‌ என்ற ஐந்தொடு, அரசர்க்குரியதும்‌ ஆக ஆறாம்‌. பகல்‌ – நடுவு நிலைமை. 9. தாழை – இங்கு, தென்னை. 12. சுடர்ப்பூ – தீப்போலும்‌ செந்நிற . முடையஓஒரு பூ.28. அருப்பம்‌ – அரண்‌. 34. பல்‌ தோல்‌ – பல பரிசைப்‌

. படை, ப

18. நீரும்‌ நிலனும்‌! பாடியவர்‌: குடபுலவியனார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌. திணை: பொதுவியல்‌. துறை: முதுமொழிக்‌ காஞ்சி; பொருண்மொழிக்‌ காஞ்சி எனவும்‌ பாடம்‌.

– (“நீர்நிலை பெருகத்‌ தட்கவே, அறன்‌ முதலான மூன்றும்‌ .. பயக்கும்‌’ என்பது கூறினமையின்‌, இது முதுமொழிக்‌ காஞ்சி – ஆயிற்று. உயிருக்கு உறுதி தருகிற பொருளைக்‌ கூறுதலால்‌, “பொருண்மொழிக்‌. காஞ்சியும்‌’ கொள்ளப்படும்‌. “உண்டி. . கொடுத்தோர்‌ உயிர்‌ கொடுத்தோர்‌” என்னும்‌ பொன்‌ மொழியைத்‌ ‘: தந்தது இச்‌ செய்யுளே.) முழங்கு முந்நீர்‌ முழுவதும்‌ வளைஇப்‌

பரந்து பட்ட வியன்‌ ஞாலம்‌

தாளின்‌ தந்து, தம்புகழ்‌ நிறீஇ,

ஒருதாம்‌ ஆகிய உரவோர்‌ உம்பல்‌!

ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய . | 5

பெருமைத்து ஆக நின்‌ ஆயுள்‌ தானே! நீர்த்‌ தாழ்ந்த குறுங்‌ காஞ்சிப்‌ – பூக்‌ கதூஉம்‌ இன வாளை, நுண்‌ ஆரல்‌, பரு வரால்‌, ட. குரூஉக்‌ கெடிற்ற குண்டு அகழி; ‘ டன்‌. 30 வான்‌ உட்கும்‌ வடிநீண்‌ மதில்‌; மல்லல்‌ மூதூர்‌ வய வேந்தே! செல்லும்‌ உலகத்துச்‌ செல்வம்‌ வேண்டினும்‌, ஞாலம்‌ காவலர்‌ தோள்வலி முருக்கி, ஓருநீ ஆகல்‌ வேண்டினும்‌, சிறந்த 15 . நல்‌இசை நிறுத்தல்‌ வேண்டினும்‌, மற்றதன்‌ தகுதி கேள்‌, இனி, மிகுதியாள! நீர்‌இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்‌ உண்டி கொடுத்தோர்‌ உயிர்கொடுத்‌ தோரே; உண்டி முதற்றே உணவின்‌ பிண்டம்‌; : . 2

ட ரந

/ புலியூர்க்‌ கேசிகன்‌ _ ள்‌ 27 உணவெனப்‌ படுவது நிலத்தோடு நீரே; நீரும்‌ நிலனும்‌ புணரியோர்‌, ஈண்டு உடம்பும்‌ உயிரும்‌ படைத்திசி னோரே; வித்திவான்‌ நோக்கும்‌ புன்புலம்‌ கண்ணகன்‌ | வைப்பிற்று ஆயினும்‌, நண்ணி ஆளும்‌ இ 25. இறைவன்‌ தாட்குஉத வாதே; அதனால்‌ அடுபோர்ச்‌ செழிய! இகழாது வல்லே நிலன்நெளி மருங்கின்‌ நீர்நிலை பெருகத்‌ . தட்டோர்‌ அம்ம, இவண்தட்‌ டோரே; : தள்ளா தோர்‌இவண்‌ தள்ளா தோரே. டா 30

ஒலி முழங்கும்‌ கடல்‌ சூழ்ந்த. பரந்த நாடு இந்‌ நாவலந்‌ தீவு. இதனைத்‌ தம்‌ அரிய. முயற்சியால்‌ வெற்றிகொண்டு புகழ்‌ பெற்றுத்‌ தாமே ஒரு குடைக்&ழ்‌ அரசாண்ட வலிமை உடையவர்‌ பாண்டியர்‌. அவர்‌ வழி வந்தவனே! கோடியினும்‌ மேலான அண்டுகளாக நின்‌ வாழ்நாள்‌ நீடிப்பதாக! வாளை மீன்களும்‌, அரல்களும்‌, வரால்களும்‌, கெளிறுகளும்‌ நிறைந்த அகழி சூழ்ந்ததும்‌, வானம்‌ அளாவிய மதிலைக்‌ கொண்டதும்‌ ஆகிய பழைய ‘ஊரைத்‌ தலைநகராக உடையவனே! வலிமிக்க வேந்த்னே! நீ மறுமை இன்பத்தை விரும்பினாலும்‌, உலகு முழுவதையும்‌ வெல்ல வேண்டுமென நினைத்தாலும்‌, நிலைபெற்ற புகழை விரும்பினாலும்‌, அதற்குச்‌ செய்யவேண்டுவன யாவை எனக்‌ கேட்பாயாக, நீர்மை இன்றி வாழாது உடல்‌. அவ்வுடலுக்கு உணவு கொடுத்தவரே உயிர்‌ கொடுத்தவரும்‌ ஆவர்‌. உணவால்‌ உளதாவதுதான்‌ மனித உடல்‌. உணவோ நிலத்தின்‌ விளைவும்‌, நீரும்‌ அகும்‌. நீரையும்‌ நிலத்தையும்‌ ஒருங்குகூட்டி வேளாண்மைக்கு உதவுக, அவ்வாறு உதவியவரே உலகத்தில்‌ உயிரையும்‌ உடலையும்‌ நிலைநிறுத்தி வாழ்வித்தவராவர்‌. புன்செய்‌ நிலம்‌ இடமகன்றும்‌ ‘ – விளையுள்‌ பெருக்காமையினால்‌ பயன்‌ அற்றதாகும்‌. எனவே, செழியனே! இதனை நீ எண்ணுக. நீர்‌ தடிந்து குளம்தொட்டு நின்‌ நாடு எங்கணும்‌ வளம்‌ பெருக்குவாயாக! இது செய்தோர்‌ மூவகை. இன்பமும்‌ பெற்றுப்‌ புகழடை வர்‌; அல்லாதோர்‌ புகழ்பெறாது மடி.வர்‌ எனவும்‌ உணர்வாயாக! (வேளாண்‌ பெருக்கமே மன்னர்க்கு வலுவும்‌ புகழும்‌ தரும்‌ என்ற மிகவுஞ்‌ சிறந்த உண்மையை விளக்குவது இப்‌ பாடல்‌.)

சொற்பொருள்‌: 6. பெருமைத்து -. சங்கம்‌ முதலாகிய பேரெண்ணினை யுடைத்தாக. 10. கெளிறு – மீனின்‌ வகை. 11. வடி. – திருத்திய. 17. தகுதி – வேட்கைக்குத்‌ தக்க செய்கை. 26. தாட்கு – முயற்டிக்கு, 28. நெளி மருங்கின்‌ – குழிந்த விடத்தே.

28 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 19. எழுவரை வென்ற ஒருவன்‌! .

பாடியவர்‌: குடபுலவியனார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற ரத பாகர திணை:

வாகை. துறை: ப

(மன்னுயிர்ப்‌ பன்மையும்‌, கூற்றத்து ஒருமையும்‌ நின்னொடு தூக்கிய வென்வேற்‌ செழிய: என, இச்‌ செழியனின்‌ அள்ப்பரிய – பெரும்‌ பேராற்றலைக்‌ கூறுவர்‌ புலவர்‌. தலையாலங்கானப்‌ பெரும்போரை ஒருவனாக நின்று வென்ற சிறப்பினன்‌ இவன்‌. அகநானூற்று 36, 175, 209 அம்‌ செய்யுட்களும்‌, மதுரைக்காஞ்சியும்‌ இவன்‌ புகழை விளக்கும்‌ பிற செய்யுட்கள்‌ ஆம்‌.)

இமிழ்‌ கடல்‌ வளைஇய ஈண்டு அகல்‌ கிடக்கைத்‌

தமிழ்‌ தலை மயங்கிய தலையாலங்‌ கானத்து,

மன்‌உயிர்ப்‌ பன்மையும்‌, கூற்றத்து ஒருமையும்‌:

நின்னொடு தூக்கிய வென்வேற்‌ செழிய!

இரும்புலி வேட்டுவன்‌ பொறி அறிந்து மாட்டிய 5

பெருங்கல்‌ அடாரும்‌ போன்ம்‌ என்‌ விரும்பி,

முயங்கினேன்‌ அல்லனோ யானே! மயங்கிக்‌

குன்றத்து இறுத்த குரீஇஇனம்‌ போல,

அம்புசென்று இறுத்த அறும்புண்‌ யானைத்‌ ‘

தூம்புஉடைத்‌ தடக்கை வாயொடு துமிந்து 10.

நாஞ்சில்‌ ஒப்ப, நிலமிசைப்‌ புரள,

எறிந்துகளம்‌ படுத்த ஏந்துவாள்‌ வலத்தர்‌

எந்தையோடு கிடந்தோர்‌ எம்‌ புன்தலைப்‌ புதல்வர்‌;

இன்ன விறலும்‌ உளகொல்‌, நமக்கு?” என. 15

மூதில்‌ பெண்டிர்‌ கசிந்து அழ, நாணிக்‌

கூற்றுக்கண்‌ ஓடிய வெருவரு பறந்தலை,

எழுவர்‌ நல்வலங்‌ கடந்தோய்‌! நின்‌

கழூஉ விளங்கு ஆரம்‌ கவைஇய மார்பே?

ஒலிகடலாற்‌ சூழ்ந்தது இவ்வுலகம்‌. தன்கை ஒரு சமயம்‌ ‘

ப தலையாலங்கானத்தில்‌ மன்னர்‌ பலர்‌ தம்முட்‌ கலந்து நின்றனர்‌.

அங்கு வீழ்ந்தாரோ கணக்கற்ற வீரர்‌. அவர்‌ உயிர்‌ குடித்தவன்‌ கூற்றுவனோ, நீயோ என ஒப்பிட்டுக்‌ காண முயன்றவர்‌ பலர்‌. அத்தகைய வெற்றிவேற்‌ செழியனே! புலி வேட்டை. அடுவார்‌ எந்திரமறிந்து கொளுத்திய கல்லையுடைய அடார்‌ போன்றது நின்‌ திண்ணிய முத்தார மார்பு. அதனை யானும்‌ அன்று தழுவினேன்‌ அல்லனோ? அக்‌. களத்தை எண்ணிப்‌ பாராய்‌! இருபெரு

புலியூர்க்‌ கேசிகன்‌ | ……. 29 வேந்தன்‌ சேர த சோழ்டுத்‌ ஐம்பெரு வேளிரும்‌ தம்முள்‌ ஒருங்குகூடி நின்னை எதிர்த்து நின்றும்‌, முடிவில்‌ தாமே தோற்றனர்‌. அச்சத்தால்‌, மலையிடத்தே காற்றைக்‌ கிழித்து. வேகமாகச்‌ செல்லும்‌ பறவையினம்‌ போன்று, நின்‌ படைவீரர்‌ கடுகி . விடுத்த அம்புகள்‌ களிறுகளின்‌ கைகளைத்‌ துளைத்தன. துளைத்த அக்‌ கைகளுடன்‌ அவற்றின்‌ வாயினையும்‌ சேர்த்து வெட்டி வீழ்த்தினர்‌. அவை நிலம்‌ உழும்‌ கலப்பைகள்‌ போன்று தரைமேல்‌ கிடந்தன. அத்தகைய சிறந்த வாள்‌ வலிமை உடையவனே! அக்‌ களத்துள்‌ தம்‌ தலைவரோடு தம்‌ அரிய மைந்தரும்‌ உடன்‌ வீழ்ந்து கிடக்கக்‌ கண்ட மறக்குடி. முதுதாயர்‌, . “இத்தகைய வெற்றியும்‌ எமக்கு இனி உண்டோ?” எனக்‌ கூறி, இன்ப உவகையால்‌ அழுதனரே! அதுகண்டு வெவ்வுயிர்‌ வெளவிய கூற்றமும்‌ அன்று நாணி நின்றதே! ஒருவனாய்‌ இவ்வாறு எழுவரையும்‌ மலைந்து நீ பெற்ற வெற்றிச்‌ சிறப்பை என்னென்பது? (பாண்டியனின்‌ வீரமும்‌ ஆற்றலும்‌ போர்க்‌ களத்தின்‌ கொடுமையும்‌ பாடியது இது.)

சொற்பொருள்‌: 1. ஈண்டு அகன்‌ கிடக்கை – அணுச்‌ செறிந்த ‘ அகன்ற உலகம்‌. 2. தமிழ்‌ – தமிழ்ப்படை. தலை, அசை; இடமும்‌ ஆம்‌. 9..அடார்‌ – விலங்குகளை அகப்படுத்தும்‌ பொறி. 8. இறுத்த – தங்கிய. 10. தூம்பு – துளை. துமிந்து – துணிக்கப்பட்டு. 11. நாஞ்சில்‌ – கலப்பை. 15. மூதில்‌ பெண்டிர்‌ – மறக்குடி.யிற்‌ பிறந்த முதிய மகளிர்‌. 16. பறந்தலை – போர்க்களம்‌. 17. எழுவர்‌ – சேரன்‌, சோழன்‌ என்னும்‌ இரு பெருவேந்தரும்‌, திதியன்‌, எழினி, எருமையூரன்‌, இருங்கோவேண்மான்‌, பொருநன்‌ எனும்‌ ஐம்பெரு வேளிரும்‌. 18. கவைஇய – அகத்திட்ட. ப

20. மண்ணும்‌ உண்பார்‌!

பாடியவர்‌: குறுங்கோழியூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ யானைக்கட்சேய்‌ மாந்தரஞ்‌ சேரல்‌ இரும்பொறை; மாந்தரஞ்‌ சேரல்‌ எனவும்‌ குறிப்பர்‌. திணை: வாகை. துறை: அரச வாகை. ப

(சேரனது மாண்பையும்‌, அவனாற்‌ காக்கப்பட்டு வந்த சேரநாட்டது வளமையினையும்‌ கூறுகின்றார்‌ .புலவர்‌. “புள்‌ நிமித்தத்தால்‌ பாடாண்‌ தலைவற்குத்‌ தோன்றிய தீங்கு கண்டு அஞ்சி ஓம்படை கூறியது என எடுத்துக்‌ காட்டுவர்‌ நச்சினார்க்கினியர்‌ – (தொல்‌. புறத்‌.சூ. 36 உரை)

இரு முந்நீர்க்‌ குட்டமும்‌,

வியன்‌ ஞாலத்து அகலமும்‌,

வளி வழங்கு திசையும்‌,

30. ட்‌ புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ .. வறிதுநிலைஇய காயமும்‌, என்றாங்கு | அவை அளந்து அறியினும்‌, அளத்தற்கு அதிலை 5்‌

அறிவும்‌, ஈரமும்‌, பெருங்க ணோட்டமும்‌; . சோறுபடுக்கும்‌ தீயோடு செஞ்‌ ஞாயிற்றுத்‌ தெறல்‌ அல்லது பிறிதுதெறல்‌ அறியார்‌ நின்‌ நிழல்வாழ்‌ வ வோரே டர திருவில்‌ அல்லது கொலைவில்‌ அறியார்‌; ரக “0

நாஞ்சில்‌ அல்லது படையும்‌ அறியார்‌; திறனறி வயவரொடு தெய்வர்‌ தேய, அப்‌ _ பிற்ர்மண்‌ உண்ணும்‌ செம்மல்‌; நின்நாட்டு . வயவுறு மகளிர்‌ வேட்டு உணின்‌ அல்லது பகைவர்‌ உண்ணா அருமண்‌ ணினையே; 15

அம்பு துஞ்சும்‌ கடி அரணால்‌, அறம்‌ துஞ்சும்‌ செங்கோ லையே;

்‌ புதுப்புள்‌ வரினும்‌, பழம்புள்‌ போகினும்‌, விதுப்புற அறியா ஏமக்‌ காப்பினை; அனையை ஆகல்‌ மாறே; 20 மன்னுயிர்‌ எல்லாம்‌ நின்‌அஞ்‌ சும்மே.

க்‌

– சேரர்‌ பெருமானே! கடலாழமும்‌, நிலப்பரப்பும்‌, காற்றியங்கு திசையும்‌, விரிந்த வானும்‌ ஆகியவற்றை வரையறுத்து அறிந்தாலும்‌, நின்‌ அறிவும்‌ அன்புக்‌ கண்ணோட்டமும்‌ அளவிட்டுக்‌ கூறுவதற்கு அரியன. நின்‌ குடைவாழ்வோர்‌ சோறாக்கும்‌ நெருப்புடனே, செஞ்‌ ஞாயிற்றின்‌ வெம்மையுமன்றிப்‌, போர்‌ வறுமை அகிய வெம்மைகளை அறியார்‌; பகைவர்‌ மண்ணைக்‌ கைப்பற்றி வாழும்‌ தலைவனே! நின்‌ மண்ணைக்‌ கருவுற்ற பெண்டிர்‌ மசக்கையால்‌ உண்பாரே அன்றிப்‌ பசைவர்‌ ஒருபோதும்‌ கைக்கொள்ளார்‌. அத்தகைய அரிய நாடும்‌, காவல்‌ மிகுந்த அரணும்‌, அறம்‌ நிறம்பிய செங்கோன்மையும்‌ உடையவனே! தீய நிமித்தமாகப்‌ புதுப்புள்‌ வரினும்‌ பழம்புள்‌ போயினும்‌ நடுங்காத காவல்‌ உடையது நின்‌ நாடு. அதனால்‌, உலக உயிர்‌ அனைத்தும்‌, நினக்குத்‌ துயரம்‌ நேருமோ எனத்‌ தத்தம்‌ காதலால்‌ நினக்காக அன்புடன்‌ அஞ்சுகின்றன. (இவ்வாறு, “அனைவர்‌ உள்ளமும்‌ நிறைந்தவன்‌ நீயன்றோ” எனப்‌ புகழ்கிறார்‌ புலவர்‌.)

சொற்பொருள்‌: 1. குட்டம்‌ – ஆழம்‌. 10. திரு வில்‌ – இந்திர வில்‌. 14. வயவு உறு. மகளிர்‌ – கருப்பமுடைய பெண்டிர்‌; அவர்‌ _ மண்ணையும்‌ புளியையும்‌ சாம்பரையும்‌ சுவைத்துண்டல்‌ இன்றும்‌ இயல்பு என்பர்‌.

– புலியூர்க்கேசிகன்‌ ட. $1 21. புகழ்சால்‌ தோன்றல்‌!

்‌ பாடியவர்‌: ஐயூர்‌. மூலங்கிழார்‌. பாடப்பட்டோன்‌: கானப்பேரெயில்‌ கடந்த உக்கிரப்‌ பெருவழுதி. திணை: வாகை.

. துறை: அரசவாகை.

– (கானப்பேரெயில்‌. மீட்டற்கு அரிதென்றான்‌ வேங்கை மார்பன்‌. அவனுரையைப்‌ பொய்ப்படுத்து, அதனை மீட்டுச்‌ “சிறப்புற்றான்‌ இவ்‌ வழுதி. ‘இகழுநர்‌ இசையோடு மாயப்‌ புகழொடு விளங்கிப்‌ பூக்க நின்‌ வேல்‌” என்று வாழ்த்துகின்றார்‌ புலவர்‌.)

புலவரை இறந்த புகழ்சால்‌ தோன்றல்‌! ்‌ நிலவரை இறந்த குண்டுகண்‌ அகழி, ‘

வான்தோய்‌ வன்ன புரிசை, விசும்பின்‌

மீன்பூத்‌ தன்ன உருவ ஞாயில்‌,

கதிர்நுழை கல்லா மரம்பயில்‌ கடிமிளை, 2இ அருங்‌ குறும்பு உடுத்த கானப்பேர்‌ எயில்‌,

கருங்கைக்‌ கொல்லன்‌ செந்தீ மாட்டிய

இரும்புஉண்‌ நீரினும்‌, மீட்டற்கு அரிதுஎன,

வேங்கை மார்பன்‌ இரங்க, வைகலும்‌

ஆடுகொளக்‌ குழைந்த தும்பைப்‌, புலவர்‌ ள்‌ 1௦

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே! இகழுநர்‌ இசையொடு மாயப்‌ ச புகழொடு விளங்கிப்‌ பூக்க, நின்‌ வேலே!

புலவர்‌ பாடுவதற்கும்‌ அருமையான புகழ்மிகுந்த தலைவனே! பாதலத்தை எட்டுவது போன்ற ஆழமான அகழி நாற்புறமும்‌ சூழ்ந்திருக்க, வானை முட்டுவது போன்ற உயரமான மதிலுடன்‌ கானப்பேரெயில்‌ முன்னர்‌ விளங்கியது. மீன்பூத்த – வான்போன்ற சூட்டினையும்‌, வெயில்‌ நுழையாத காவற்‌ காட்டினையும்‌, சூழ நெருங்குவதற்கரிய சிற்றரண்களையும்‌ உடைத்தாயிருந்ததும்‌ அது. “கொல்லனின்‌ உலைக்‌ களத்திலே காய்ச்சிய இரும்பு உண்ட நீர்‌ மீளாது; அது போன்று வழுதி கைப்பற்றிய என்‌ கானப்பேரெயிலை மீட்பதும்‌ அரிதாம்‌” என, அவ்‌ வல்லரணுக்குரிய வேங்கை மார்பன்‌ வருந்தும்படியாக, நாடோறும்‌ வெற்றிமேல்‌ வெற்றியாகப்‌ பெற்றுச்‌ சிறந்தாய்‌. புலவர்‌ பாடும்‌ புறத்துறை யெல்லாம்‌ செயலிலே முடித்த வெற்றி வீரனே! நின்னை மதியாத. பகைவருடைய புகழ்‌ முழுவதும்‌ கெடுவதாக! நின்‌ கைவேல்‌, வெற்றிப்‌ புகழுடன்‌ என்றும்‌ மிளிர்வதாக! சொற்பொருள்‌: 1. புல வரை – பாடுவாரது அறிவின்‌ எல்லை. 4. ஞாயில்‌ – கோட்டைக்கண்ணுள்ள ஏவறை. 3. மிளை.- காவற்காடு.

10. ஆடு கொள – வெற்றி கொள்ள.

32. .. புறநா – மூலமும்‌ உரையும்‌ 22. ஈகையும்‌ நாவும்‌!

பாடியவர்‌: குறுங்கோழியூர்‌ கிழார்‌. – பாடப்பட்டோன்‌: “சேரமான்‌ யானைக்கட்‌ சேஎய்‌ மாந்தரஞ்‌ சேரல்‌ இரும்பொறை, . திணை: வாகை. துறை: அரச வாகை.

(“நிற்‌ பாடிய அலங்கு செந்நாப்‌, பிற்பிறர்‌ இசை நுவலாமை, ஓம்பாது ஈயும்‌ ஆற்றல்‌ எங்கோ (31 – 33)” என இவனது சிறப்பை ஆசிரியர்‌ கூறுகின்றார்‌. “வாழிய பெரும நின்‌ வரம்பில்‌ படைப்பே” என்றதனால்‌ வாழ்த்தியலாகவும்‌ கொள்ளப்படும்‌. “மீக்‌ கூறு மன்னன்‌ நிலம்‌” என்னும்‌ குறளுரையுள்‌ (386), “மீக்‌ கூறுதலாவது, இவன்‌ காக்கின்ற நாடு பசி பிணி பகை முதலியவை யின்றி யாவர்க்கும்‌ பேரின்பந்‌ தருதலின்‌, தேவர்‌ உலகினும்‌ நன்று” என்றல்‌” என்பர்‌ பரிமேலழகர்‌. அதனையும்‌ இங்கு நினைக்க.)

தூங்கு கையான்‌ ஓங்கு நடைய

உறழ்‌ மணியான்‌ உயர்‌ மருப்பின,

பிறை நுதலாற்‌ செறல்‌ நோக்கின.

பா வடியால்‌ பணை எருத்தின, ப

தேன்‌ சிதைந்தவரைபோல த

மிஞிறு ஆர்க்கும்‌ கமழ்‌ கடாஅத்து,

அயறு சோரும்‌ இருஞ்‌ சென்னிய,

மைந்து மலிந்த மழ களிறு

கந்து சேர்பு நிலைஇ வழங்கப்‌;

பாஅல்‌ நின்று கதிர்‌ சோரும்‌ 10௦ வான்‌ உறையும்‌ மதி போலும்‌

மாலை வெண்‌ குடை நீழலான்‌,

வாள்மருங்கு இலோர்‌ காப்பு உறங்க,

அலங்கு செந்நெற்‌ கதிர்‌ வேய்ந்த

ஆய்‌ கரும்பின்‌ கொடிக்‌ கூரை 15 சாறு கொண்ட களம்‌ போல,

வேறுவேறு பொலிவு தோன்றக்‌

குற்‌ றானா உலக்‌ கையால்‌,

கலிச்‌ சும்மை வியல்‌ ஆங்கண்‌

பொலம்‌ தோட்டுப்‌ பைந்தும்பை 20 மிசை அலங்கு உளைய பனைப்டோழ்‌ செரீஇச்‌,

சின மர்ந்தர்‌ வெறிக்‌ குரவை

ஓத நீரில்‌ பெயர்பு பொங்க;

வாய்‌ காவாது பரந்து பட்ட

வியன்‌ பாசறைக்‌ காப்‌ பாள! .. 2

புலியூர்க்‌ கேசிகன்‌ க ட: 899 வேந்து தந்த பணி திறையாற்‌ சேர்ந்‌ தவர்தம்‌ கடும்பு ஆர்த்தும்‌,

ஓங்கு கொல்லியோர்‌, அடு பொருந!

வேழ நோக்கின்‌ விறல்வெம்‌ சேஎய்‌!

வாழிய, பெரும! நின்‌ வரம்பில்‌ படைப்பே! 80

நிற்‌ பாடிய அலங்கு செந்நாப்‌

பிற்பிறர்‌ இசை நுவலாமை,

“ஓம்பாது ஈயும்‌ ஆற்றல்‌ எங்கோ!

‘மாந்தரஞ்‌ சேரல்‌ இரும்பொறை ஓம்பிய நாடே

புத்தேள்‌ உலகத்து அற்று” எனக்‌ கேட்டு, வந்து, 35

இனிது காண்டிசின்‌; பெரும! முனிவிலை,

வேறுபுலத்து இறுக்கும்‌ தானையொடு

சோறுபட நடத்தி; நீ துஞ்சா மாறே! உ

சேரமானின்‌ ஆட்சியிலே, கொல்லுங்‌ களிறும்‌ இடையிலே வாளில்லாதவருக்கு இடையூறு விளைவியாது. அசைந்த கையும்‌, நிமிர்ந்த நடையும்‌, ஒலிக்கும்‌ மணியும்‌, உயர்ந்த கோடும்‌, பிறைவடி வாக இடப்பட்ட மத்தகமும்‌, சினந்த நோக்கும்‌, பரந்த அடியும்‌, பாரித்த கழுத்தும்‌, தேனீ மொய்க்கும்‌ மதநீரும்‌, புண்வழலை வடியும்‌ பெருந்தலையும்‌ உடைய அந்த இளங்களிறு, தான்‌ கட்டப்பெற்ற கம்பத்திலே பொருந்தி நின்ற நிலையிலேயே அசைந்து கொண்டிருக்கும்‌. அதனருகே, வெண்கொற்றக்‌ குடை நிழல்‌ செய்யும்‌. அது கண்ட வாள்‌ இலாதோர்‌ ௮க்‌ குடையே காவலாக அதன்$&ழ்ச்‌ சென்று உறங்குவர்‌. சுற்றிக்‌ கரும்பாற்‌ ‘கட்டப்பட்டுச்‌ செந்நெற்‌ கதிரால்‌-வேயப்பட்ட பாடிவீடுகள்‌ அழகுடன்‌ விளங்கும்‌. அரிசி குற்றுவாரின்‌ உலக்கையொலி அங்கே முழங்கும்‌. பொன்னாற்‌ செய்த தும்பை மாலையணிந்து, பனந்‌ தோட்டைச்‌ செருகிச்‌, சினத்துடன்‌ வீரர்‌ வெறியாடுவர்‌. ௮க்‌

குரவையொலி கடலொலி போலக்‌ கேட்கும்‌. அத்தகைய அஞ்சா

மறவர்‌ படையினை உடையவன்‌ சேரன்‌. இவன்‌ வன்மை கேட்டுப்‌ பகைவர்‌ தாமே அஞ்சுவர்‌. ஆதலின்‌, பாசறைக்குக்‌ காவலுங்‌ கிடையாது. எங்கும்‌ அது பரந்தும்‌ விளங்கும்‌. இத்தகைய பாசறையுடையவனைக்‌, “காவலனே! மாற்றரசர்‌ தந்த திறையால்‌ தம்மை வந்தடைந்த சுற்றத்தாரை வாழ்விக்கும்‌ கொல்லி மலையோரின்‌ போர்‌ மறவனே! யானை நோக்கும்‌ வெற்றி விருப்பும்‌ உடைய சேய்‌ என்பானே! வாழ்க, நீ பெருமானே! நின்‌ செல்வம்‌ எல்லையற்றது. நின்னைப்‌ பாடிய நா பிறரை ஒருபோதும்‌ பாடாது எனும்படி வரையாது வழங்கும்‌ பெருமையுடையவன்‌ நீ! நின்‌ நாடு மிக்க பெருமை உடையது எனக்‌ கேட்டு நின்னை நாடி வந்தேன்‌; நின்னையும்‌ கண்டேன்‌! பெருமானே! முயற்சியோடு பகைவரை

34 ட _ புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ வெல்லும்‌ படையுடன்‌, நின்‌ நாட்டில்‌ சோறு பெருக நீ செயலாற்றி நடப்பாயாக! (படை பலத்துடனும்‌ ஈகை யறத்துடனும்‌ அமைந்து விடாதே; நெல்‌ வளமும்‌ பெருகச்‌ செய்வாயாக!” – என்று, புலவர்‌

.. போற்றுகின்றார்‌.) ப

சொற்பொருள்‌: 2. உறழ்‌ மணி – நடைக்கேற்ப றற்ஞ்ஷ்‌ று மாறுபட்டு ஒலிக்கும்‌ மணி. 6. மிஞிறு – தேனீ..7. அயறு – புண்வழலை; புண்ணினின்று வடியும்‌ சீழ்‌. 9. கந்து – கம்பம்‌, கடவுள்‌ குறித்த தறியுமாம்‌. 10. பா.அல்‌ – பக்கம்‌; உயிரளபெடை. 16. சாறு – விழா. 22. சினமாந்தர்‌ – சினத்தையுடைய வீரர்‌. 14. வாய்‌ காவாது – இடம்‌ காவாது. 17. கடும்பு ஆர்த்தும்‌ – தம்மை அடைந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும்‌. 30. படைப்பு – செல்வம்‌. :

23. நண்ணார்‌ நாணுவர்‌!

பாடியவர்‌: கல்லாடனார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ தலையாலங்‌ கானத்து நெடுஞ்செழியன்‌. திணை: வாகை. துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும்‌ ஆம்‌.

பாண்டியருள்‌ பெரும்புகழ்‌ பெற்றவன்‌ இவன்‌. “ஆலங்‌ கானத்து அஞ்சுவர இறுத்த, வேல்கெழு தானைச்‌ செழியன்‌” எனப்‌ பிற சான்றோரும்‌ இவனைப்‌ போற்றுவர்‌ – (நற்‌. 387).

வெளிறில்‌ நோன்காழ்ப்‌ பணைநிலை முனைஇக்‌, களிறுபடிந்து உண்டெனக்‌, கலங்கிய துறையும்‌ கார்நறுங்‌ கடம்பின்‌ பாசிலைத்‌ தெரியல்‌, சூர்நவை, முருகன்‌ சுற்றத்து அன்ன, நின்‌ கூர்நல்‌ அம்பின்‌ கொடுவில்‌ கூளியர்‌ ப 5 கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்‌ – கொள்பதம்‌ ஒழிய வீசிய புலனும்‌; வடிவில்‌ நவியம்‌ பாய்தலின்‌, ஊர்தொறும்‌ ‘ கடிமரம்‌ துளங்கிய காரும்‌, நெடுநகர்‌ வினைபுனை நல்லில்‌ வெவ்வரி நைப்பக்‌, 10

கனைளரி உரறிய மருங்கும்‌ நோக்கி, நண்ணார்‌ நாண, நாள்தொறும்‌ தலைச்சென்று, .. இன்னும்‌ இன்னபல செய்குவன்‌, யாவரும்‌ துன்னல்‌ போக்கிய துணிவினோன்‌ என, ஞாலம்‌ நெளிய ஈண்டிய வியன்படை ப 15 ஆலங்‌ கானத்து அமர்கடந்து அட்ட கால முன்ப! நின்‌ கண்டனென்‌ வருவல்‌; அறுமருப்பு எழிற்கலை புலிப்பால்‌ பட்டெனச்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ 4 டம்‌ சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை பூளை நெடிய வெருவரு பறந்தலை 20 . வேளை வெண்பூக்‌ கறிக்கும்‌ . ஆளில்‌ அத்தம்‌ ஆகிய காடே. கம்பத்திலே கட்டப்பட்டிருந்த நின்‌ யானைகள்‌, கட்டினை அறுத்துச்‌ சென்று, தாமாகவே பகைவரது காவல்‌ நீர்த்துறை _ களைக்‌ கலக்கி அழிக்கும்‌. கூர்மையான அம்புகளும்‌, வளைந்த வில்லும்‌ கொண்டு முருகனது கூளிப்படைபோல வருபவர்‌, நின்‌ மறவர்‌. தம்மால்‌ கொள்ளுமட்டும்‌ பகைவர்‌ விளைவயலுள்‌ புகுந்து அவர்‌ கொள்ளையிட்டபின்‌, எஞ்சிச்‌ சிதறிக்கிடக்கும்‌ தானியங்‌ களை, மாற்றார்‌ பதற்றத்துடன்‌ கொண்டு செல்வர்‌. அவர்‌ காவல்‌

மரங்களும்‌ நின்னால்‌ வெட்டப்பட்டு அழிந்தன. வீட்டில்‌ சமையல்‌

செய்வார்‌ மூட்டிய தீ அவியுமாறு, ஊருக்கே எரியூட்டினாய்‌ நீ. இவ்வளவும்‌ தம்‌ நாட்டிடை விளையக்‌ கண்டும்‌, நின்னை வெல்லும்‌ வகை யாது என அறியாது மயங்கினர்‌, பகைவர்‌. இப்படிப்‌ பல இன்னும்‌ செய்வையோ என ஆஸஞ்சித்‌ தம்‌ வீரமுங்‌ குன்றியவராகி நாணமுற்றும்‌ ஒதுங்கினர்‌. பகைவரைக்‌ கலக்கும்‌ இத்தகைய – போராற்றலும்‌, சூழ்ச்சித்திறனும்‌ உடையவனே! தலையாலங்கானப்‌ பெரும்போரிலே எதிர்‌ நின்ற பகைவரனைவரையும்‌ கொன்று குவித்துக்‌ காலனாக விளங்கிய வலிமையுடையவனே! நின்னைக்‌ காண எண்ணினேன்‌; வழியும்‌ கொண்டேன்‌. வழியில்‌ கோடற்ற கலைமானைப்‌ புலி பற்றக்கண்டு வெருவித்‌ .தன்‌ மறியை . அணைத்துக்‌ கொண்டே துள்ளியோடிற்று அம்மானின்‌ பிணை; . அதற்கு இரங்கினேன்‌. ஆயின்‌, நாளும்‌ நடைபெறும்‌ கொடுநிகழ்ச்சி அதுவே யாதலாற்‌ போலும்‌, அப்‌ பிணை அருகிருந்த வேளைப்‌

– பூவினைத்‌ தன்‌ மறியினை வாழ்விக்கும்‌ பாலினைப்‌ பெறுவான்‌

வேண்டித்‌ தின்று கொண்டிருந்தது! நின்‌ படையெடுப்பால்‌ தம்‌

கணவரை இழந்த நின்‌ பகைநாட்டுப்‌ பெண்டிர்‌, தம்‌ மக்கள்‌ வாழ்வு குறித்துத்‌ தாமும்‌ உயிர்‌ ஓம்பியிருப்பர்‌ என்ற உண்மையுணர்த்தும்‌, கடத்தற்கரிய ௮க்‌ கொடுங்காடும்‌ கடந்து வந்து, நின்னைக்‌ கண்டேன்‌. என்‌ துயரும்‌ இனி இல்லையாகும்‌! நீ வாழ்வாயாக, பெருமானே! . ப

சொற்பொருள்‌: 1. வெளிறு – வெண்மை. பணை – கூடம்‌. 5. சூர்‌ நவை – சூரப்ன்மாவைக்‌ கொன்ற. கூளியர்‌ – மறவர்‌. 6. மிச்சில்‌ – ஒழி

பொருள்‌. 7..வீசிய புலனும்‌ – சிதறிய நிலங்களையும்‌. 9. கடி. மரம்‌ –

. காவல்‌ மரம்‌. 10. நைப்ப – கெடுக்க; “இனைப்ப” என்றும்‌ பாடம்‌ உண்டு; கெடுப்ப என்பதே பொருள்‌. 11. நண்ணார்‌ – பகைவர்‌. 72. துன்னல்‌ போகிய – அணுக வொண்ணாத. 18. எழிற்‌ கலை – ‘பெரிய ்‌- கலை. 10. பறந்தலை – பாழிடத்து. 22. அத்தம்‌ – அருஞ்‌ சுரம்‌.

24. வல்லுனர்‌ வாழ்ந்தோர்‌!

பாடியவர்‌: மாங்குடி கிழவர்‌; மாங்குடி. மருதனார்‌ எனவும்‌ பாடம்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ தலையாலங்‌ கானத்துச்‌ – செருவென்ற நெடுஞ்செழியன்‌. திணை: பொதுவியல்‌. துறை: கம்ப வங்க ம்‌ காஞ்சி.

.. : (தொல்லிசை உலகத்துத்‌ தோன்றி நின்று இறந்தோர்‌ பலராவர்‌’ என நிலையாமை கூறி, “அதனால்‌ இனிது .ஓழுகுமதி’ . என்றமையால்‌, இச்‌ செய்யுள்‌ பொருண்மொழிக்‌ காஞ்சி ஆயிற்று. _ நின்று நிலைஇயர்‌ நின்‌ நாண்மீன்‌’ என, அவன்‌ நாளிற்கு முற்கூறியவாற்றான்‌ ஓர்‌ இடையூறு கண்டு, அவன்கண்‌ அன்பால்‌ அஞ்சி, ஓம்படை கூறியது என்பர்‌ நச்சினார்க்கினியர்‌ – (தொல்‌. புறத்‌. சூ. 16 உரை). தொன்‌ முதிர்‌ வேளிர்‌ – தொன்மையாகவே தோன்றி வழிவழி நிலத்தைக்‌ கர்த்துச்‌ சிறந்த பழங்குடி யினரான – வேளிர்‌.)

நெல்‌ அரியும்‌ இருந்‌ தொழுவர்‌

செஞ்‌ ஞாயிற்று வெயில்‌ முனை யின்‌,

தெண்‌ கடல்‌ திரை மிசைப்பா யுந்து;

திண்‌ திமில்‌ வன்‌ பரதவர்‌ ப

“வெப்‌ புடைய மட்‌ டுண்டு, ப 5 தண்‌ குரவைச்‌ சீர்தூங்‌ குந்து;

தூவற்‌ கலித்த தேம்பாய்‌ புன்னை

மெல்லிணர்க்‌ கண்ணி மிலைந்த மைந்தர்‌

எல்வளை மகளிர்த்‌ தலைக்கை தரூஉந்து;

வண்டுபட மலர்ந்த தண்ணறுங்‌ கானல்‌ 1௦

முண்டகக்‌ கோதை ஒண்டொடி மகளிர்‌ இரும்‌ பனையின்‌ குரும்பை நீரும்‌, ப பூங்‌ கரும்பின்‌ தீஞ்‌ சாறும்‌ .. ஓங்குமணற்‌ குவவுத்‌ தாழைத்‌ ட தீ நீரோடு உடன்‌ விராஅய்‌, ்‌ ஜட

முந்நீர்‌ உண்டு முந்நீர்ப்‌ பாயுந்து; தாங்கா உறையுள்‌ நல்லூர்‌ கெழீஇய ஓம்பா ஈகை மாவேள்‌ எவ்வி ப .. புனலம்‌ புதவின்‌ மிழலையொடு – கழனிக கயலார்‌ நாரை போர்வில்‌ சேக்கும்‌, : ப ்‌ 20 . பொன்னணி யானைத்‌ தொன்முதிர்‌ வேளிர்‌, குப்பை நெல்லின்‌, முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக்‌ கொடித்தேர்ச்‌ செழிய! நின்று நிலைஇயர்‌ நின்‌ நாண்மீன்‌; நில்லாது ப படாஅச்‌ செலீஇயர்‌ நின்‌ பகைவர்‌ மீனே; – 25

புலியூர்க்‌ கேசிகன்‌ ட _ந்தர்‌ நின்னொடு; தொன்றுமூத்த உயிரினும்‌, உமிரொடு நின்று மூத்த யாக்கை யன்ன, நின்‌ ப -ஆடுகுடி மூத்த விழுத்திணைச்‌ சிறந்த வாளின்‌ வாழ்நர்‌ தாள்வலம்‌ வாழ்த்த, ப இரவன்‌ மாக்கள்‌ ஈகை நுவல, ட ஆர 30 ஒண்டொடி மகளிர்‌ பொலங்கலத்து ஏந்திய தண்கமழ்‌ தேறல்‌ மடுப்ப, மகிழ்சிறந்து ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது வல்லுநர்‌ வாழ்ந்தோர்‌ என்ப, தொல்லிசை, ப மலர்தலை உலகத்துத்‌ தோன்றிப்‌ 35 _ பலர்செலச்‌ செல்லாது, நின்று விளிந்‌ தோரே. .

பொருளைத்‌ தனக்கெனக்‌ காவாது வழங்கி மகிழ்பவன்‌ பெருவேள்‌ எவ்வி. அவனது மிழலைக்‌ கூற்றம்‌ நீர்‌ வழங்கும்‌ வாய்த்தலைகளை உடையது. ஞாயிற்றின்‌ வெம்மையை நெல்லரியும்‌ உழவர்‌ வெறுப்பர்‌. கடல்‌ அலைமேல்‌ பாயும்‌ திண்மையான படகினையுடைய நுளையரோ வெம்மையான மதுவை விரும்பி உண்பர்‌. புன்னைப்‌ புதுமலர்‌ மாலை சூடிக்‌, கானலிடத்தே, அவர்‌ வளையணிந்த :’ மகளிர்க்கு முதற்கை கொடுத்துக்‌ குரவைக்‌ கூத்தும்‌ ஆடுவர்‌. முள்ளிப்பூ மாலை சூடிய. பரதவர்‌ மகளிர்‌, பனைநுங்கின்‌ நீரும்‌ கருப்பஞ்சாறும்‌ இளநீருடன்‌ ‘

கலந்து உண்டு, பின்‌ கடல்‌ நீரிலே பாய்ந்து ஆடியும்‌ மகிழ்வர்‌.

இத்தகைய வளமுடன்‌, பல்வகை மக்களும்‌ வாழும்‌ கடற்கரை நாடு எவ்வியின்‌ மிழலைக்கூற்றம்‌. அதனை யடுத்தது, வயலிடத்துக்‌ கயல்மீன்களை உண்ட நாரை நெற்போரிடத்தே உறங்கும்‌ பொன்னணிந்த யானைகளையுடைய நெல்வளமிக்க முத்தூற்றுக்‌ கூற்றம்‌. இவ்விரண்டையும்‌ வெற்றி கொண்டவன்‌ நீ. உயர்ந்த குடையும்‌, கொடி பறக்கும்‌ தேரும்‌ உடைய செழியனே! நின்‌ . .. வாழ்நாள்‌ நிலைப்பதாக! நின்‌ பகைவர்‌. வாழ்நாள்‌ இற்றுப்‌ போவதாக! நின்‌ வெற்றிக்குடியும்‌, வாள்மறவரும்‌ நின்‌ முயற்சி _ வன்மையை வாழ்த்துவாராக!: இரக்கும்‌ பரிசிலர்‌ நின்‌ புகழைப்‌ பாடுவாராக! வளையணிந்த மகளிர்‌ நறுமணமிக்க மதுவை மடுப்ப, அதனையுண்டு மகிழ்வுடன்‌. இனிதே வாழ்வாயாக! பெருமானே! “வீர ஒழுக்கம்‌ வல்லவரே. வாழ்ந்தோராவார்‌” என்பர்‌ அறிவுடையோர்‌. பழமையான புகழும்‌ அதுவே! பரந்த இவ்வுலகிற்‌ பிறந்தும்‌ அவ்வாறே வீரமுடன்‌ ஓழுகாது இருந்தோர்‌ பலர்‌. அவர்‌ எல்லாம்‌ வாழ்ந்தவரன்று, தாழ்ந்தவரே யாவர்‌!

சொற்பொருள்‌: இருந்தொழுவர்‌ – பெரிய உழவர்‌. 15. விரா பன

அய்‌ – கலந்து. 20. சேக்கும்‌ – உறங்கும்‌.

38. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 25. கூந்தலும்‌ வேலும்‌! உ

பாடியவர்‌: கல்லாடனார்‌. பாடப்பட்டோன்‌: தலையாலங் கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌. திணை: வாகை. துறை:

. அரச வாகை.

/ (தலைவனது வேலைப்‌ புகழ்ந்தது இச்‌ செய்யுள்‌. பகைவரை : அழிக்கச்‌ சினந்து எழுந்தகாலை ஞாயிறாகவும்‌, துயருற்றோர்க்கு இரங்கி அருள்கின்ற வேளைத்‌ தண்மதியம்‌ போலவும்‌, “உருகெழு ஞாயிறு நிலவுத்‌ திகழ்‌ மதியமொடு நிலஞ்‌ .சேர்ந்தாங்கு’ விளங்கியவன்‌ நெடுஞ்செழியன்‌ என்கிறது செய்யுள்‌.) மீன்திகழ்‌ விசும்பின்‌ பாய்‌இருள்‌ அகல ஈண்டு செலல்‌ மரபின்‌ தன்‌இயல்‌ வழாஅது, உரவுச்சினம்‌ திருகிய உருகெழு ஞாயிறு, நிலவுத்திகழ்‌ மதியமொடு, நிலஞ்சேர்ந்‌ தாஅங்கு உடலருந்‌ துப்பின்‌ ஒன்றுமொழி வேந்தரை ப 5 அணங்கரும்‌ பறந்தலை உணங்கப்‌ பண்ணிப்‌ .. பிணியுறு முரசம்‌ கொண்ட காலை, – நிலைதிரிபு எறியத்‌, திண்மடை கலங்கிச்‌ . சிதைதல்‌.உய்ந்தன்றோ, நின்வேல்‌; செழிய; ப முலைபொலி ஆகம்‌ உருப்ப நூறி, 10

மெய்ம்மறந்து பட்ட வரையாப்‌ பூசல்‌ ‘

ஒள்நுதல்‌ மகளிர்‌ கைம்மை கூர,

அவிர்‌ அறல்‌ கடுக்கும்‌ அம்மென்‌ –

குவையிரும்‌ கூந்தல்‌ கொய்தல்‌ கண்டே.

இருளைப்‌ போக்கும்‌ இயல்புடைய ஞாயிறு, திங்களோடும்‌ நிலத்தைப்‌ பொருந்த இறங்கியது போன்று, நின்பால்‌ வஞ்சினங்‌ . கூறிய இருபெரு’ வேந்தரும்‌ கொடிய போர்க்களத்தினிடத்தே அழியுமாறு போரிட்டுக்‌ கொன்று, அவரது முரசத்தையும்‌ கைக்கொண்டாய்‌. அப்பொழுது, தம்‌ மார்பகம்‌ அழல அறைந்து. கொண்டு, தம்‌ கணவர்‌ போரிற்‌ பட்டதனால்‌ கைம்மை பூணும்‌ ஒண்ணுதலார்‌, கரிய தம்‌ கூந்தலைக்‌ களையக்‌ கண்டனை! அவர்‌

நிலைக்கு இரங்கிப்‌ போரிடுவதைத்‌ தாமாகவே நிறுத்திற்று நின்‌

கைவேல்‌ !/ (மகளிர்‌ துயர்கண்டு செழியனின்‌ . போர்வெறி கருணையாக மாறிற்று என்பதால்‌, அவனது இரக்க உள்ளமும்‌ காண்க)

சொற்பொருள்‌: 2. ஈண்டு செலல்‌ – ஓங்கிச்‌ செல்லுதல்‌, 7 , – பிணியுறு – வாராற்‌ பிணிப்புற்ற. 8. நிலை திரிபு எறிய – நின்ற நிலையிலே நின்று தன்னைச்‌ சூழ்ந்து கொண்ட வீரரைப்‌ புரிந்து

புலியூர்க்‌ கேசிகன்‌ 39. எறிதலால்‌. 13. படை – த ்னசம்‌ டவல்‌ 11. மெய்ம்மறந் து – அறிவு மயங்கி, 13. அறல்‌ – ஆற்றுக்‌ கருமணல்‌.

26. நோற்றார்‌ நின்‌ பகைவர்‌!

பாடியவர்‌: மாங்குடி கிழவர்‌, மாங்குடி. மருதனார்‌ எனவும்‌ பாடம்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ தலையாலங்‌ கானத்துச்‌ – செருவென்ற நெடுஞ்செழியன்‌. திணை: வாகை. துறை: அரச வாகை.

(நான்‌ மறையாளர்‌ தொடர்போடு அரசன்‌ வேள்வி யாற்றியது பற்றிக்‌ கூறுகிறது செய்யுள்‌. “மாற்றார்‌ என்னும்‌ பெயர்‌ பெற்றுக்‌ களத்தில்‌ ஆற்றாராய்‌ வீழினும்‌, சுவர்க்கத்து.வாழ்வார்‌ – ஆதலின்‌, அவர்‌ நோற்றார்‌’ என அவரைப்‌ புகழ்ந்தது போல, இவனது வெற்றி மேம்பாட்டைக்‌ கூறுகின்றனர்‌ ஆசிரியர்‌)

நளிகடல்‌ இருங்‌ குட்டத்து வளி புடைத்த கலம்‌ போலக்‌, களிறு சென்று களன்‌ அகற்றவும்‌ களன்‌ அகற்றிய வியல்‌ ஆங்கண்‌ | ஒளிறு இலைய எஸ்கு ஏந்தி, 5 . அரைசு பட அமர்‌ உழக்கி, உரை செல முரசு வெளவி, … முடித்தலை அடுப்பாகப்‌, . புனல்‌ குருதி உலைக்‌ கொளீ இக்‌, ப / தொடித்தோள்‌ துடுப்பின்‌ துழந்த வல்சியின்‌, 10

அடுகளம்‌ வேட்ட அடுபோர்ச்‌ செழிய! ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர்‌ சுற்ற மாக, மன்னர்‌ ஏவல்‌ செய்ய, மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள்‌ வேந்தே! 15 நோற்றோர்‌ மன்ற நின்‌ பகைவர்‌; நின்னொடு – மாற்றார்‌ என்னும்‌ பெயர்‌ பெற்று, ஆற்றார்‌ ஆயினும்‌, ஆண்டுவாழ்‌ வோரே. (* மன்னர்‌ செய்தொழில்‌ அயர மன்னிய – புறத்திரட்டு) . இப்‌ பாடலுள்‌ இருவகை வேள்விகள்‌ கூறப்படுகின்றன.

ஒன்று கள வேள்வி; மற்றொன்று மறைமுறை வேள்வி. “கடல்‌ ..”

்‌ நடுவேநீர்‌ கிழித்துச்‌ செல்லும்‌ கலம்போலப்‌, பகைவர்‌ படை நடுவே . களிறுகள்‌ ஊடறுத்துப்‌ பிளந்து செல்லும்‌. அவ்வூடுவழியே வேலேந்திச்‌ சென்ற வீரர்‌, பகைவரைக்‌ கொன்று குவித்து, அவர்‌

40 ட புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

முரசையும்‌ கவர்வர்‌. அத்துடனும்‌ அமையாது, பகைவர்‌ முடித்தலைகளை அடுப்பாக்கிக்‌ குருதியைப்‌ புனலாகப்‌ பெய்து, பகைவர்‌ தசையையும்‌ மூளையையும்‌ அதனுள்‌ இட்டு, வெட்டிய தோள்களைத்‌ துடுப்பாகக்‌ கொண்டு துழாவிக்‌ களவேள்வியும்‌ செய்வர்‌. இவ்வாறு, களவேள்வி பல செய்த செழியனே! அடுத்து, நான்மறை முதல்வர்‌ சூழ்ந்திருக்க, அடிப்பட்ட மாமன்னர்‌ ஏவல்‌ செய்ய மறைவேள்வி யியற்றிய வாள்வலியும்‌ உடையவனாகிய செழியனே! வேந்தே! நின்‌ பகைவரும்‌ ஒருவாற்றால்‌ நோன்பு இயற்றிச்‌ சிறந்தவரேயாவர்‌. நின்னுடைய “மாற்றார்‌” என்ற பெயர்‌ பெற்று, நினக்கு ஆற்றாராய்‌ அவர்‌ மடிந்தாலும்‌, வீர மரணம்‌ எய்திப்‌ புகழ்‌ பெறுகின்றார்கள்‌ அல்லவோ!”

சொற்பொருள்‌: 1. குட்டத்து – அழத்திடத்து. 3. களன்‌ அகற்ற – போர்க்களத்தை இடம்‌ அகலச்‌ செய்ய.

27. புலவர்‌ பாடும்‌ புகழ்‌!

பாடியவர்‌: உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. பாடப்‌ பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: பொதுவியல்‌. துறை: முதுமொழிக்‌ காஞ்சி. ப

(நிலையாமை கூறி அரசனைக்‌ கொடை வள்ளலாகிப்‌ புகழ்‌ பெறுமாறு வற்புறுத்துவது இச்‌ செய்யுள்‌. “பகை எதிர்ந்தோர்‌ கொடாமை வல்லராகுக’ எனக்‌ கூறுவதனால்‌, “நீ கொடை வல்லான்‌ ஆகுக” என்றதும்‌ ஆம்‌.)

சேற்றுவளர்‌ தாமரை பயந்த, ஒண்‌ கேழ்‌,

நூற்றிதழ்‌ அலரின்‌ நிறைகண்‌ டன்ன, |

வேற்றுமை இல்லா விழுத்திணைப்‌ பிறந்து,

வீற்றிருந்‌ தோரை எண்ணுங்‌ காலை,

உரையும்‌ பாட்டும்‌ உடையோர்‌ சிலரே; 5

மரைஇலை போல மாய்ந்திசினோர்‌ பலரே;

புலவர்‌ பாடும்‌ புகழுடையோர்‌ விசும்பின்‌

வலவன்‌ ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம்‌ செய்வினை முடித்து’ எனக்‌

கேட்பல்‌; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! 1௦

தேய்தல்‌ உண்மையும்‌, பெருகல்‌ உண்மையும்‌,

மாய்தல்‌ உண்மையும்‌, பிறத்தல்‌ உண்மையும்‌,

அறியா தோரையும்‌, அறியக்‌ காட்டித்‌,

திங்கட்‌ புத்தேள்‌ திரிதரும்‌ உலகத்து

வல்லார்‌ ஆயினும்‌, வல்லுநர்‌ ஆயினும்‌, | 15

புலியூர்க்கேசிகன்‌ – 41 வருந்தி வந்தோர்‌ மருங்கு நோக்கி, ப அருள வல்லை ஆகுமதி; அருளிலர்‌ கொடா அமை வல்லர்‌ ஆகுக; கெடாஅத்‌ துப்பின்நின்‌ பகைஎதிர்ந்‌ தோரே.

சேற்றில்‌ வளரும்‌ தாமரையிலே தோன்றிய செந்தாமரை மலரின்‌ நூற்றுக்கணக்கான இதழ்களும்‌, நிரலே உயர்வுடன்‌ தம்முள்‌ வேற்றுமையற்ற குணம்‌ உடையனவா யிருக்கும்‌. அது போல, வேற்றுமை இல்லாத உயர்ந்த குடியில்‌ பிறந்து வாழ்ந்தவ ராயினும்‌, அவருள்ளும்‌ உரையும்‌ பாட்டுமாகப்‌ புகழப்பட்டோர்‌ மிகச்சிலரே யாவர்‌. அத்‌ தாமரையின்‌ இலைபோலப்‌ புகழற்று மாய்ந்தவரே பலர்‌. புலவர்‌ பாடும்‌ புகழ்‌ பெற்றோர்‌, வானின்௧கண்‌ செலுத்துபவன்‌ இல்லாது தானே இயங்கும்‌ வானவூர்தியிற்

– “செல்லும்‌ அளவு உயர்வர்‌. “அவர்தாம்‌ செயத்தகு வினை

யெல்லாம்‌ செவ்வையாக இவ்வுலகத்தே நிறைவேற்றினவர்‌” என, அன்றோர்‌ கூறக்‌ கேட்டுள்ளோம்‌. அதனால்‌, எம்‌ இறைவனே! சேட்சென்னியே! நலங்கிள்ளியே! தேய்தலும்‌, பெருகலும்‌, மாய்தலும்‌, பிறத்தலும்‌ உளவென அறியாதோரையும்‌ அறியக்‌ காட்டித்‌ திங்களாகிய தெய்வம்‌ திரியும்‌ வானகத்து உள்ளவ ராயினும்‌, வருந்தி வந்து தம்மைச்‌ சேர்ந்தவரது பசியால்‌ உட்குழிந்த மருங்கை நோக்கி, அவருக்கு அருளவல்லவனாக நீ ஆகுக! வலியுடைய நினக்குப்‌ பகையாகி நின்னை எதிர்த்தோர்‌, அவ்வாறு அருளிலாதோராகவும்‌, கொடுக்கும்‌ நிலையற்றோராகவும்‌ ஆகுக!

சொற்பொருள்‌: 5 உரை – புகழ்‌. மரையிலை – தாமரை இலை; தலைக்‌ குறை. 8. வலவன்‌ – பாகன்‌. 11. தேய்தல்‌ உண்மையும்‌ – வளர்ந்ததொன்று பின்‌ குறைதல்‌ உண்டாதலும்‌. அறியா தோரையும்‌ – கல்வி முகத்தான்‌ அறியாத மடவோரையும்‌. 15. வல்லார்‌ ஆயினும்‌ – ஒன்றை மாட்டார்‌ ஆயினும்‌. 16. மருங்கு நோக்கி – உட்குழிந்த அடிவயிற்றைப்‌ பார்த்து. 28. போற்றாமையும்‌ ஆற்றாமையும்‌!

பாடியவர்‌: உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. . பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: பொதுவியல்‌. துறை: முதுமொழிக்‌ காஞ்சி. சிறப்பு: எண்பேர்‌. எச்சங்கள்‌ பற்றிய விளக்கம்‌. அறம்‌ பொருள்‌ இன்பம்‌ எனும்‌ உறுதிப்‌ பொருள்கள்‌ பற்றிய குறிப்பு.

(“அறனும்‌ பொருளும்‌ இன்பமும்‌ மூன்றும்‌ அற்றும்‌ பெரும நின்‌ செல்வம்‌’ என்று உறுதிப்பொருள்‌ மூன்றையும்‌ அறிவித்தனர்‌. ஆதலின்‌, இச்‌ செய்யுள்‌ முதுமொழிக்‌ காஞ்சி ஆயிற்று. அறஞ்‌ செய்யாதானை அறஞ்‌ செய்க என வலியுறுத்திக்‌ கண்டன்ன லு கொள்க.)

னன்‌

42 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

“சிறப்பில்‌ சிதடும்‌, உறுப்பில்‌ பிண்டமும்‌,

்‌ கூனும்‌, குறளும்‌, ஊமும்‌, செவிடும்‌, மாவும்‌, மருளும்‌ உளப்பட வாழ்நா்க்கு எண்பேர்‌ எச்சம்‌ என்றிவை எல்லாம்‌ . ‘ பேதைமை அல்லது ஊதியம்‌ இல்‌’ என முன்னும்‌ அறிந்தோர்‌ கூறினர்‌; இன்னும்‌ . 5 அதன்‌ திறம்‌ அத்தை யான்‌ உரைக்க வந்தது; ப வட்ட வரிய செம்பொறிச்‌ சேவல்‌ ஏனல்‌ காப்போர்‌ உணர்த்திய கூஉம்‌ கானத்‌ தோர்‌, நின்‌ தெவ்வர்‌; நீயே, 10

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்‌

புய்த்தெறி கரும்பின்‌ விடுகழை தாமரைப்‌

பூம்போது சிதைய வீழ்ந்தெனக்‌, கூத்தர்‌

ஆடுகளம்‌ கடுக்கும்‌ அகநாட்‌ டையே; | அதனால்‌, அறனும்‌ பொருளும்‌ இன்பமும்‌ மூன்றும்‌ _- 15 ஆற்றும்‌, பெரும! நின்‌ செல்வம்‌; _- ப

ஆற்றாமை நின்‌ போற்றா மையே!

மக்கட்‌ பிறவியிற்‌ குறைபாடு உடையவை என்பன குருடு, வடிவற்ற தசைத்திரள்‌, கூன்‌, குறள்‌, ஊமை, செவிடு. மா, மருள்‌ ஆகிய எண்வகையாம்‌. இவற்றால்‌ பயன்‌ யாதுமில்லை என்பர்‌ அறிந்தோர்‌. இக்‌ குறை யாதுமின்றி நல்லுடல்‌ பெற்றவன்‌ நீ, ஆதலின்‌, அதன்‌ திறத்தை யான்‌ உரைக்க வரவில்லை. வட்டவரிச்‌ . செம்பொறிக்‌ காட்டுக்கோழிச்‌ சேவல்‌ புனங்காப்போரைத்‌ துயிலெழுப்பும்‌ காட்டகத்தே, நின்‌ பகைவர்‌ நினக்கு அஞ்சிச்‌ சென்று ஒளிந்துவிட்டனர்‌. வேலிப்புறத்து நின்று வேண்டியவர்க்கு, உள்ளேயிருப்போர்‌ பிடுங்கி எறியும்‌ கரும்பு தாமரைப்‌ பூந்தாதினை உதிர்க்கும்‌; அதனால்‌, பொய்கையில்‌ எழுந்தடங்கும்‌ அலைகளால்‌ கூத்தர்‌ அடுகளம்‌ போல்‌. அப்‌ பொய்கையும்‌ தோன்றும்‌. அத்தகைய வளநாட்டினன்‌ நீ! எனவே, வளம்பெறவும்‌ நின்னை யாம்‌ வாழ்த்த வேண்டுவதில்லை. அறம்‌ பொருள்‌ இன்பம்‌ ஆகிய மூன்றும்‌ செய்பவன்‌ நீ! பெருமானே! நின்னைப்‌ போற்றாதவரே நின்‌ செல்வத்தைப்‌ பெறாதவராவர்‌!

சொற்பொருள்‌: 1. சிதடு – குருடு. உறுப்பில்‌ பிண்டம்‌ – வடிவு இல்லாத தசைத்‌ திரள்‌, மணைபோலப்‌ பிறக்கும்‌ அது. மா என்பது, விலங்கு வடிவமாகப்‌ பிறக்கும்‌ அது. மருள்‌என்பது, அறிவு இன்றியே மயங்கியிருக்கும்‌ அது. ஊதியம்‌ என்பது, அறம்‌ பொருள்‌ இன்பங்களை; அறம்‌ ஒன்று மட்டுமே என்பாரும்‌ உளர்‌.

புலியூர்க்‌ கேசிகன்‌ ்‌ 43 29. நண்பின்‌ பண்பினன்‌ ஆகுக!

பாடியவர்‌: உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: பொதுவியல்‌. துறை: முதுமொழிக்‌ காஞ்சி. சிறப்பு: சிறந்த அறநெறிகள்‌.

(இல்லை என்போர்க்கு இனனாகிலியர்‌’ என்பது முதலியவற்றால்‌ அறனும்‌, “படைகொள்‌ மாக்கள்‌ – நின்‌ செய்கை’ என்பது முதலியவற்றால்‌ பொருளும்‌, “பாண்‌ முற்றுக நின்‌ நாள்‌ மகிழ்‌ இருக்கை’ என்பது முதலியவற்றால்‌ இன்பமும்‌ கூறப்பெற்றன. இவ்வாறு உறுதிப்பொருள்‌ மூன்றையும்‌ வற்புறுத்துதலால்‌ இது முதுமொழிக்‌ காஞ்சி அயிற்று. நல்ல தன்‌ நலனும்‌ தீயதன்‌ தீமையும்‌ இல்லை என்போர்‌ அறிவிலிகள்‌, அவர்பாற்‌ சேராதொழிக என்பதும்‌ கூறினார்‌.)

அழல்‌ புரிந்த அடர்‌ தாமரை

ஐது அடர்ந்த நூறு பெய்து,

புனைவினைப்‌ பொலிந்த பொலன்நறுந்‌ தெரியல்‌

பாறு மயிர்‌ இருந்தலை பொலியச்‌ சூடிப்‌;

பாண்‌ முற்றுக, நின்‌ நாள்மகிழ்‌ இருக்கை! . ன்‌ இ

பாண்‌ முற்று ஒழிந்த பின்றை, மகளிர்‌ _ தோள்‌ முற்றுக, நின்‌ சாந்துபுலர்‌ அகலம்‌! ஆங்க முனிவில்‌ முற்றத்து, இனிது முரசு இயம்பக்‌, ப கொடியோர்த்‌ தெறுதலும்‌, செவ்வியோர்க்கு அளித்தலும்‌, ப ஓடியா முறையின்‌ மடிவிலை யாகி 10 “நல்லதன்‌ நலனும்‌ தீயதன்‌ தீமையும்‌ ‘இல்லை என்போர்க்கு இனன்‌ ஆகி லியர்‌! நெல்விளை கழனிப்‌ படுபுள்‌ ஓப்புநர்‌

. ஓழிமடல்‌ விறகின்‌ கழிமீன்‌ சுட்டு, வெங்கள்‌ தொலைச்சியும்‌ அமையார்‌, தெங்கின்‌ . 15

இளநீர்‌ உதிர்க்கும்‌ வளமிகு நன்னாடு பெற்றனர்‌ உவக்கும்‌ நின்‌ படைகொள்‌ மாக்கள்‌ பற்றா மாக்களின்‌ பரிவு முந்து உறுத்துக்‌, கூவை துற்ற நாற்கால்‌ பந்தர்ச்‌, சிறுமனை வாழ்க்கையின்‌ ஒரீஇ, வருநர்க்கு ்‌.. 20 உதவி ஆற்றும்‌ நண்பின்‌ பண்புடை . ஊழிற்று ஆக, நின்‌ செய்கை! விழவின்‌ – கோடியர்‌ நீர்மை போல முறைமுறை : ஆடுநர்‌ கழியும்‌இவ்‌ உலகத்துக்‌ கூடிய நகைப்‌ புறனாக, நின்‌ சுற்றம்‌! _- ப டட… 25 இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!

44 _ £ – மூலமும்‌ உரையும்‌ பொன்னாற்‌ செய்த தாமரைப்‌ பூவைச்‌, சன்னமாகத்‌ தட்டித்‌ தட்டிக்‌ கம்பியாகச்‌ செய்த வெள்ளி நூலிலே கோத்து அணியாக்கித்‌, தம்‌ கரிய தலையிற்‌ பொலிவுபெறச்‌ சூடிய பாண்சுற்றம்‌ நின்‌ நாள்மகிழ்‌ இருக்கையைச்‌ சூழ்வதாக! பாணர்‌ போயினபின்‌, நின்‌ சாந்துபுலர்ந்த மார்பகம்‌ நின்‌ தேவியரைத்‌ தழுவி மகிழ்க! கோயின்‌ முற்றத்தே இனிதாக முரசம்‌ ஒலிக்கக்‌, கொடியோரை ஒறுத்தலும்‌, செவ்வியோரைக்‌ காத்தலும்‌ அகிய முறையான அறநெறியிலே, நாளும்‌ சோம்பலின்றி நீ இருப்பாயாக! நல்லதன்‌ நன்மையும்‌, தீயதன்‌ தீமையும்‌ இல்லை என்பாரோடு சேராது விளங்குக! நெல்விளை வயலில்‌, புள்‌ ஓட்டுபவர்‌, பனைமட்டை விறகால்‌ கழியிடத்தே மீனைச்‌ சுட்டு, அதனுடன்‌ வெம்மையான கள்ளினை உண்டும்‌ அமையாது, தெங்கின்‌ இளநீரையும்‌ உதிர்த்துக்‌ கொண்டிருக்கும்‌, வளமிகுந்த நல்ல நாட்டைப்‌ பெற்றனர்‌ நின்‌ படை வீரர்‌. அவர்‌, இனி, வறுமை யுடையோர்பால்‌ இரக்கம்‌ கொண்டவராகிக்‌, கூவையிலையால்‌ வேயப்பட்ட நாற்காற்‌ பந்தரான சிறுமனையாம்‌ பாசறை வாழ்வை நீத்துத்‌, தம்மைத்‌ தேடி வருபவருக்கு மனமுவந்து உதவிசெய்யும்‌ நண்பென்னும்‌ நற்பண்பு உடையவராகுக! இதற்கு ஏற்ற . முறைகளையே நீ இனிச்‌ செய்வாயாக. விழாவிலே ஆடும்‌ கூத்தரைப்போல வகைவகையாக ஆடிக்‌ கழிவதுதான்‌ இவ்வுலக வாழ்வு. இதன்கண்‌, நின்‌ சுற்றம்‌ என்றும்‌ மகிழ்விலே திளைப்பதாக! நீ பாதுகாக்கும்‌ பொருள்‌ புகழ்‌ பெறுவதாக! (போர்ப்‌ படையினர்‌, போர்‌ முடிவுற்றதும்‌, நாட்டு கராகாகா்‌ ஈடுபட வேண்டும்‌ என்று உரைப்பது இது:) ப

சொற்பொருள்‌: 2 ஐது – அழகிது. 4. பாறு மயிர்‌ – பொலிவற்ற மயிர்‌. 5 நாண்மகிழ்‌ இருக்கை – காலையில்‌ யாவரும்‌ தன்னைக்‌ காணும்படி காட்சிக்கு எளியனாய்‌ வீற்றிருத்தல்‌; இது நாளவை எனவும்‌ கூறப்படும்‌. 6 பாண்முற்று – பாணர்‌ சுற்றம்‌ சூழ்தல்‌. 12. இனன்‌ ஆகிலியர்‌ – இனமாகா தொழிவாயாக. 15. வெங்கள்‌ – வெய்ய மது; வேண்டாதார்க்கு வெறுப்பும்‌, வேண்டியவர்க்கு விருப்பமும்‌ செய்தலின்‌, “வெங்கள்‌” என்றார்‌. 19. துற்ற – கூவையிலையால்‌ வேயப்பட்ட.

80. எங்ஙனம்‌ பாடுவா?

பாடியவர்‌: உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. சிறப்பு: தலைவனின்‌ இயல்பு கூறுதல்‌,

(“அறிவு அறிவாகச்‌ செறிவினையாகி… ஒளித்த துப்பினை’்‌ என நலங்கிள்ளியின்‌ இயல்பைக்‌ கூறினமையால்‌, இது இயன்‌ மொழி வாழ்த்து ஆயிற்று. “செஞ்ஞாயிற்றுச்‌ செலவும்‌… இனைத்து

புலியூர்க்‌ கேசிகன்‌ _ ட 45 என்போரும்‌ உளரே’ என்றது, ௮க்‌ காலத்திலிருந்த வானியல்‌ – ஆய்வாளரது நுண்ணறிவுத்‌ திறனைக்‌ காட்டி வியந்தது ஆகும்‌.) செஞ்ஞா யிற்றுச்‌ செலவும்‌ அஞ்ஞா யிற்றுப்‌ பரிப்பும்‌, பரிப்புச்‌ சூழ்ந்த மண்‌ டிலமும்‌, வளி திரிதரு திசையும்‌, வறிது நிலைஇய காயமும்‌, என்றிவை 5

சென்றளந்து அறிந்தார்‌ போல, என்றும்‌

இனைத்து என்போரும்‌ உளரே, அனைத்தும்‌

அறிவுஅறி வாகச்‌ செறிவினை யாகிக்‌

களிறுகவுள்‌ அடுத்த எறிகல்‌ போல

ஒளித்த -துப்பினை ஆதலின்‌, வெளிப்பட ப 10

யாங்ஙனம்‌ பாடுவர்‌, புலவர்‌? கூம்பொடு

மீப்பாய்‌ களையாது, மிசைப்‌ பரந்‌ தோண்டாது,

புகா அர்ப்‌ புகுந்த பெருங்கலந்‌ தகாஅர்‌

இடைப்புலப்‌ பெருவழிச்‌ சொரியும்‌

கடல்பல்‌ தாரத்த நாடுகிழ வோயோ!. 15

.. செஞ்ஞாயிற்றின்‌ செலவும்‌, அஞ்ஞாயிற்றின்‌ இயக்கமும்‌

இயக்கத்தால்‌ சூழப்படும்‌ மண்டிலமும்‌, காற்றுச்‌ செல்லும்‌ திசையும்‌, ஆதாரமின்றி நிற்கும்‌ வானமும்‌, என்றிவற்றைத்‌ தாமே அவ்வவ்விடஞ்‌ சென்று அளந்து அறிந்தவரைப்‌ போல, இஃதிஃது இப்படிப்பட்டது என்‌ உரைக்கும்‌ அறிவுடையோரும்‌ உளர்‌. அத்தகைய நுண்ணறிவினார்க்கும்‌ அறியவியலாப்‌ பேரறிவுச்‌ . செறிவுடன்‌, யானை, கதுப்பின்கண்‌ அடக்கி எறியும்‌ கல்போல, நின்‌ வலிமையை நீ நின்னுள்ளேயே மறைத்தபடி அடக்கமுடன்‌ விளங்குகிறாய்‌. நின்னைப்‌ புலவர்தாம்‌ எங்ஙனம்‌ பாடுவர்‌? கூம்புடன்‌ மேற்பாயினையும்‌ களையாது, மேற்பாரமும்‌ அகற்றாது, ஆற்றுமுகத்துள்‌ புகுந்த பெருங்கலத்தில்‌ வந்த பொருளைப்‌, பரதவர்‌, இடைப்புலப்‌ பெருவழிக்கண்ணே கொண்டுசெல்லுங்‌ காலத்திலே, பொருளின்‌ செழுமையால்‌ அருமையறியாது வழிநெடுகச்‌ சொரிந்து கொண்டே கவலையின்றிச்‌ செல்வர்‌. அத்தகைய பெரிய வளநாட்டவன்ன்றோ நீ!

சொற்பொருள்‌: 1. செலவும்‌ – வீதியும்‌. 5. காயம்‌ – ஆகாயம்‌. 9. . செறிவு -.அடக்கம்‌. 12. தோண்டாது – பறியாமல்‌. புகா அர்‌ – . அற்றுமுகம்‌. தகாஅர்‌ – பரதவரும்‌, அளவரும்‌. அளவர்‌ – உப்பு விளைப்போர்‌. 16. தாரத்த – பண்டத்தையுடைய, “பரிப்பு’ என்றது, இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனைத்‌ தொலைவு செல்லும்‌ என்னும்‌ இயக்கவேகத்தை.

6. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 31. வடநாட்டாா தூங்கார்‌

பாடியவர்‌: கோவர்கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: வாகை. துறை: அரசவாகை; மழபுல வஞ்சியும்‌ ஆம்‌. சிறப்பு: வடபுலத்து அரசர்கள்‌ இச்சோழனது மறமாண்பைக்‌ கேட்டு அஞ்சிய அச்சத்தால்‌ துஞ்சாக்‌ கண்ணர்‌ ஆயினமை.

(இச்‌ செய்யுள்‌ தலைவனது போர்மற மேம்பாட்டைக்‌ கூறுதலால்‌ அரசவாகை ஆயிற்று. அவன்‌ பகைவர்‌ நாட்டை அழித்தமை பற்றியும்‌ கூறுதலான்‌ மழபுல . வஞ்சியாகவும்‌ கொள்ளப்படும்‌. “பொருளும்‌ இன்பமும்‌ அறத்து வழிப்படூஉம்‌’ என்னும்‌ சிறந்த ஓழுகலாற்று நெறியினை இச்‌ செய்யுள்‌ கூறுதல்‌

காணலாம்‌.) சிறப்புடை மரபிற்‌ பொருளும்‌ இன்பமும்‌ ப அறத்து வழிப்படூஉம்‌ தோற்றம்‌ போல, ‘இருகுடை பின்பட ஓங்கி ஒருகுடை உருகெழு மதியின்‌ நிவந்துசேண்‌ விளங்க, நல்லிசை வேட்டம்‌ வேண்டி, வெல்போர்ப்‌ 5.

பாசறை யல்லது நீயொல்‌ லாயே;

நுதிமுகம்‌ மழுங்க மண்டி, ஒன்னார்‌ –

கடிமதில்‌ பாயும்நின்‌ களிறு அடங்‌ கலவே;

“போர்‌ எனில்‌ புகலும்‌ புனைகழல்‌ மறவர்‌, ப காடிடைக்‌ கிடந்த நாடுநனி சேய உ: 1௦ செல்வேம்‌ அல்லேம்‌’ என்னார்‌; கல்லென்‌

விழவுடை ஆங்கண்‌ வேற்றுப்புலத்து இறுத்துக்‌,

குணகடல்‌ பின்ன தாகக்‌, குடகடல்‌

வெண்தலைப்‌ புணரி நின்‌ மான்குளம்பு அலைப்ப

வலமுறை வருதலும்‌ உண்டு! என்று அலமந்து . 15

நெஞ்சு நடுங்கு, அவலம்‌ பாயத்‌, துஞ்சாக்‌ கண்ண, வடபுலத்து அரசே.

சிறப்பு மிகுந்த முறைமையால்‌, பொருளும்‌ இன்பமும்‌ ‘ அறத்திற்குப்‌ பிற்பட்டனவாகவே கருதப்படும்‌. அ துபோல, அறம்‌ சிறந்த நின்‌ கொற்றக்குடை, சேரபாண்டியர்‌ குடைகளுக்கும்‌ முற்பட்டதாகச்‌ சிறப்புடன்‌ தோன்றும்‌. முழு நிலவு போன்று நெடுந்தொலைவுக்கும்‌ நின்‌ புகழ்‌ சிறப்புடன்‌ விளங்கும்‌. அதனையே மென்மேலும்‌ விரும்பிப்‌ போர்ப்‌ பாசறையை விட்டுப்‌ பிறவற்றை நீயும்‌ நாடுவதில்லை. கோட்டுமுகம்‌ மழுங்க மோதிப்‌ பகைவரின்‌ வன்மையான கோட்டைச்சுவரில்‌ பாயும்‌ நின்‌ யானைகளும்‌ என்றும்‌ அடங்கி இருப்பன அல்ல. வீரக்கழல்‌

– புலியூர்க்‌ கேசிகன்‌ ர ப. 47

புனைந்த நின்‌ மறவரோ “போர்‌’ என்றால்‌ “யாம்‌” என்று கூறி எழுபவர்‌. தூரத்து நாடு ஆயிற்றே; “அங்கு யாம்‌ வாரோம்‌” என்றும்‌ அவர்‌ சொல்வதில்லை. ஆரவாரமான வேற்று நாட்டு வெற்றி _ விழாவிலே கலந்து கொண்டு, &ழ்க்கடல்‌ பின்னாக, மேற்கடல்‌ அலைகள்‌ நின்‌ குதிரைக்‌ குளம்புகளை மோத, இந்நாட்டை வலம்‌ வந்து -கொண்டே இருப்பாய்‌” என்று அஞ்சி, நெஞ்சம்‌ நடுங்கித்‌ துயரம்‌ பெருகத்‌, தூங்காத கண்ணராக, வடபுலத்து அரசுகள்‌ விளங்குகின்றனவே! (சோழனின்‌ வீரமுழ்க்கம்‌ வட வேந்தரைத்‌ . தூங்காதாராக்கிற்று என்று வியந்தது இது.)

சொற்பொருள்‌: 2. ஓங்கிய – உயர்ந்த 4. உருகெழும்தி – முழுநிலவு. 6. ஒல்லாய்‌ – நாட மாட்டாய்‌. 9. புனைகழல்‌ – கழல்‌ புனைந்த. 12. வேற்றுப்‌ புலம்‌ – வேற்று நாடு.

32. பூவிலையும்‌ மாடமதுரையும்‌!

பாடியவர்‌: கோவூர்கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும்‌ உறுதிப்பாடு.

(“கடும்பின்‌ அடுகலம்‌ நிறையாக, நெடுங்கொடிப்‌ பூவா _ வஞ்சியும்‌ தருகுவன்‌” எனவும்‌, விறலியர்‌ பூவிலை பெறுக’ என “மாட மதுரையும்‌ தருகுவன்‌’ எனவும்‌, சோழனது கொடை இயல்பை வியந்து கூறினர்‌. அதனால்‌ இது இயன்மொழி ஆயிற்று. ‘பாடுகம்‌ வம்மினோ’ எனக்‌ கூறுதலின்‌, பிறரையும்‌

ஆற்றுப்படுத்தும்‌ முகத்தான்‌ உரைத்தது எனவும்‌ கருதலாம்‌.)

‘கடும்பின்‌ அடுகலம்‌ நிறையாக, நெடுங்கொடிப்‌

பூவா வஞ்சியும்‌ தருகுவன்‌; ஒன்றோ? |

வண்ணம்‌ நீவிய வணங்குஇறைப்‌ பணைத்தோள்‌,

ஒண்ணுதல்‌, விறலியர்‌ பூவிலை பெறுக!” என, ப

மாட மதுரையும்‌ தருகுவன்‌; எல்லாம்‌ 5 5.

பாடுகம்‌ வம்மினோ, பரிசில்‌ மாக்கள்‌! -. தொன்னிலக்‌ கிழமை சுட்டின்‌, நன்மதி ‘ வேட்கோச்‌ சிறாஅர்‌ தேர்க்கால்‌ வைத்த பசுமண்‌ குரூ௨த்திரள்‌ போல, அவன்‌ ப – கொண்ட குடுமித்து, இத்‌ தண்பணை நாடே. 10 இச்‌ சோழன்‌ பகைவரை அழிக்குந்‌ திறல்‌ மிக்கவன்‌; எனினும்‌, இரவலர்பால்‌ பேரருள்‌ பாராட்டுபவன்‌. அவன்பாற்‌ சென்று, உணவில்லையென அடுகலம்‌ நீட்டினால்‌, அவன்‌ அதிற்‌ சோறு பெய்பவன்‌ அல்லன்‌; அவன்‌ தலைநகரான கருவூரையே அதற்கு

46 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

ஈடாகத்‌ தந்‌ ;துவிடும்‌ இயல்பினன்‌. ஒண்ணுதல்‌ விறலியர்‌ அவனை மகிழ்வித்துப்‌ “பூ விலை தருதி’ என வேண்டினால்‌, மாட மதுரையையே அவர்க்கு மனமகிழ்ந்து வழங்கிவிடுவான்‌. அகவே, “பரிசில்‌ மாக்களே! எல்லாரும்‌ அவனையே பாடலாம்‌ வாருங்கள்‌! பழையதான இம்‌ மண்ணின்‌ உரிமை எவருக்கு என ஆராய்ந்தால்‌, நல்ல மதி நுட்பமுடைய வேட்கோவர்‌ குலச்சிறுவர்‌ திகிரியில்‌ வைத்த பசுமண்‌, அவர்‌ கருத்துப்‌ போலெல்லாம்‌ உருவெடுத்‌ தலைப்‌ போல, இச்‌ சோழன்‌ கொண்ட கருத்தைப்‌ பொ றுத்தே இம்‌ மருதநில நாடும்‌, அதன்‌ உரிமையும்‌ எனக்‌ கொள்வீ ராக” என்கிறார்‌ புலவர்‌. (சோழன்‌ தன்‌ கருத்தைச்‌ செயற்படுத்தும்‌ ஆற்றல்‌ மிகுந்தவன்‌ என்பது கருத்து.) ப சொற்பொருள்‌: 2. பூவா வஞ்சி – என்றது, கருவூரை. – 3. இறை – சந்து; பொருத்தப்பட்ட வளையல்‌. 8. வேட்‌ கோச்சிறாஅர்‌ – குயக்குலத்து இளையோர்‌. தேர்க்கால்‌ – சக்கரம்‌. 70. குடுமித்து – முடியை யுடையது. ப 33. புதுப்பூம்‌ பள்ளி!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: வாகை. துறை: அரச வாகை. சிறப்பு: பகைவரது கோட்டைகளைக்‌ கைப்பற்றியவுடன்‌, அவற்றின்‌ கதவுகளில்‌ வெற்றிபெற்றோன்‌ தனது அரச முத்திரையைப்‌ பதிக்கும்‌ மரபு பற்றிய செய்தி.

(சோழனின்‌. வெற்றி மேம்பாட்டைக்‌ கூறுதலால்‌, இச்‌ செய்யுள்‌ அரச வாகை ஆயிற்று. “ஏழெயில்‌’ என்பது. ஒரு கோட்டை. ஒன்றுள்‌ ஒன்றாக அமைந்த ஏழு கோட்டைகளைக்‌ கொண்டது; அதலின்‌ பிறராற்‌ கைப்பற்றுதலுக்கு அரியது; . அதனையும்‌ வென்றவன்‌ இவன்‌ என்பது சிறப்பு.)

– கான்‌ உறை வாழ்க்கைக்‌ கதநாய்‌ வேட்டுவன்‌, மான்தசை சொரிந்த வட்டியும்‌, ஆய்மகள்‌ தயிர்கொடு வந்த தசும்பும்‌, நிறைய, ஏரின்‌ வாழ்நர்‌ பேரில்‌ அரிவையர்‌ குளக்கீழ்‌ விளைந்த களக்கொள்‌ வெண்ணெல்‌ 5 முகந்தனர்‌ கொடுப்ப, உகந்தனர்‌ பெயரும்‌ தென்னம்‌ பொருப்பன்‌ நன்னாட்‌ டுள்ளும்‌, ஏழெயில்‌ கதவம்‌ எறிந்து, கைக்கொண்டு, நின்‌ பேழ்வாய்‌ உழுவை பொறிக்கும்‌ ஆற்றலை; ப பாடுநர்‌ வஞ்சி பாடப்‌, படையோர்‌ 10

புலியூக்‌ கேசிகன்‌ ப _ 49 தாதுஎர மருகின்‌ பாசறை பொலியப்‌, புலராப்‌ பச்சிலை இடையிடுபு தொடுத்த மலரா மாலைப்‌ பந்துகண்‌ டன்ன .. ன்சோற்‌ றமலை பாண்கடும்பு அருத்தும்‌ ப செம்மற்று அம்மநின்‌ வெம்முனை இருக்கை! 15 வல்லோன்‌ தைஇய வரிவனப்பு உற்ற இ அல்லிப்‌ பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்‌ காம இருவர்‌ அல்லது, யாமத்துத்‌ தனிமகன்‌ வழங்காப்‌ பனிமலர்க்‌ காவின்‌, ஒதுக்குஇன்‌ திணிமணல்‌ புதுப்பூம்‌ பள்ளி 20 வாயின்‌ மாடந்தொறும்‌ மைவிடை வீழ்ப்ப நீஆங்குக்‌ கொண்ட விழவினும்‌ பலவே.

கானிலே வாழும்‌ வாழ்க்கையினன்‌ வேட்டுவன்‌. சின மிகுந்த நாயுடன்‌ அவன்‌ வருவான்‌. மான்‌ தசையினை வட்டியிலே கொண்டுவந்து உழவர்‌ வீட்டிலே சொரிவான்‌. ஆய்‌ மகளும்‌ பானையிலே தயிரைக்‌ கொண்டுவந்து தருவாள்‌. இவ்விருவரும்‌ இவ்வாறு தர, ஏரினால்‌ வாழ்பவரின்‌ பெருவீட்டுப்‌ பெண்கள்‌, குளத்திற்குக்‌ உழ்ப்புற வயல்களில்‌ விளைந்த, களங்கொண்ட : வெள்ளை நெல்லை முகந்து முகந்து அவ்‌ வட்டியும்‌ பானையும்‌ நிறையுமாறு கொடுப்பர்‌. அவரும்‌, அது பெற்று மகிழ்ந்து செல்வர்‌. பொதிய மலையினையுடைய பாண்டியரின்‌ நன்னாடு, அத்‌ துணைப்‌ பெருவளமுடையது. அவ்‌ வளநாட்டிலுள்ள ஏழெயில்‌ கோட்டைக்‌ கதவை உடைத்து, அதனைக்‌ கைப்பற்றி, நின்‌ புலி இலச்சினையை அதன்கண்‌ பொறித்த போர்‌ ஆற்ற லுடையவன்‌ நீ. – புலவர்‌ நின்‌ மேற்செலவைப்‌ பாடவும்‌, படைக்கலங்‌ கொண்டோர்‌ தாதெரு மருகின்‌ பாசறையிற்‌ செம்மாந்து விளங்கவும்‌, பாண்‌ “குற்றத்திற்கு அவ்விடத்திலும்‌ ஊனும்‌ சோறும்‌ கலந்த உருண்டைகளை நீ அளிக்கவுமாகச்‌ சிறப்புற்று விளங்குவது நின்‌ போர்முனைப்‌ பாசறை. கலைவல்லோன்‌ செய்த அல்லிப்‌ பாவைகள்‌ அல்லிக்கூத்து ஆடுவது போன்று, ஓத்த அழகும்‌ அன்பும்‌ உடைய துணைவனும்‌ துணைவியுமாகிய இருவர்‌ அல்லாது, சாம வேளையிலே, தனிமகன்‌ வரக்கூடாத பனி மலர்க்காவின்‌ ஓரத்திலே, நீ எடுத்துச்‌ செய்த விழாவினை என்னென்பேன்‌! இயங்குவதற்கு இனிய செறிந்த மணலையும்‌, புதிய . பூவையும்‌ உடைய சாலையினது வாயில்‌ மாடந்தோறும்‌ செம்மறிக்‌ கிடாக்களை வெட்டி, நீ நடத்தும்‌ சிறுசோற்று விழாவினும்‌, நின்‌ பாசறைக்‌ காட்சி பெரிதும்‌ சிறப்பு உடையதே யாகும்‌.

50 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ ‘

சொற்பொருள்‌: 1. கதநாய்‌ – சினம்‌ பொருந்திய நாய்‌. 5. களம்கொள்‌ – களத்தின்கண்‌ கொள்ளப்பட்ட. 7. பொருப்பன்‌ – பாண்டியன்‌. 8. ஏழெயிற்‌ கதவம்‌ – ஏழெயில்‌ என்பது சிவகங்கை யைச்‌ சார்ந்துள்ள “எழு பொன்கோட்டை – என்னும்‌ ஊராக

இருக்கலாம்‌. 12. இடையிடுபு – இடையிட்டு. 14. ஊன்சோற்று .

அமலை – தசையோடு கூடிய பெருஞ்‌ சோற்றுத்‌ திரளை. 17.

அல்லிப்பாவை – அல்லியம்‌ என்னும்‌ கூத்தையாடும்‌ பாவை. 18 காம இருவர்‌ – யா ட்ட துணைவனும்‌ சன்‌ மாகிய

இருவர்‌. . 84. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

பாடியவர்‌: அலத்தூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. சிறப்பு: “செய்தி கொனள்றோர்க்கு உய்தி இல்‌” என்னும்‌ அறநெறி பற்றிய செய்தி.

[வளவனின்‌ இயல்பை வியந்து பாராட்டிக்‌ கூறுதலால்‌, இது இயன்மொழி ஆயிற்று. பரிசில்‌ பெற்றுப்‌ போகின்றானை “எம்மை இனியும்‌ நினைத்து வருவையோ?” என்றான்‌ வளவன்‌. அது கேட்ட அவன்‌, தன்‌ நன்றியுணர்வு வெளிப்படச்‌ சொல்லியதாகவும்‌ இதனைக்‌ கொள்க. “வாழ்த்து” என்னும்‌ துறைக்கு எடுத்துக்‌ : காட்டுவர்‌ இளம்பூரணர்‌ (தொல்‌. புறத்‌, சூ.29.]

“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்‌,

மாண்‌ இழை மகளிர்‌ கருச்சிதைத்‌ தோர்க்கும்‌,

‘குரவர்த்‌ தப்பிய கொடுமை யோர்க்கும்‌,

வழுவாய்‌ மருங்கின்‌ கழுவாயும்‌ உள” என,

‘நிலம்புடை பெயர்வ தாயினும்‌, ஒருவன்‌ 5

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்‌’ என,

அறம்‌ பாடின்றே ஆயிழை கணவ!

காலை அந்தியும்‌, மாலை அந்தியும்‌,

புறவுக்‌ கருவன்ன புன்புல வரகின்‌ . பாற்பெய்‌ புன்கம்‌ தேனொடு மயக்கிக்‌ | 10

குறுமுயற்‌ கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,

இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்‌,

கரப்பில்‌ உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,

அமலைக்‌ கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு |

அகலாச்‌ செல்வம்‌ முழுவதும்‌ செய்தோன்‌, 15

எங்கோன்‌ வளவன்‌ வாழ்க!” என்று, நின்‌

ன பீடுகெழு நோன்தோள்‌ பாடேன்‌ ஆயின்‌,

புலியூர்க்‌ கேசிகன்‌ 51. படுபறி யலனே, பல்கதிர்ச்‌ செல்வன்‌, யானோ தஞ்சம்‌; பெரும! இவ்வுலகத்துச்‌ சான்றோர்‌ செய்த நன்றுண்‌ டாயின்‌, 20 இமயத்து ஈண்டி, இன்குரல்‌ பயிற்றிக்‌ கொண்டல்‌ மாமழை பொழிந்த நுண்பல்‌ துளியினும்‌ வாழிய பலவே!

ஆயிழை நல்லாளின்‌ கணவனே! “அவின்‌ மடியினை அறுத்தும்‌, மங்கல மகளிர்‌ கருவினைச்‌ சிதைத்தும்‌, அறிவு தந்த . ஆசானையே பழித்தும்‌ கொடுமை செய்தவர்க்குங்‌ கூடக்‌ கழுவாய்‌ உண்டு; ஆனால்‌, உலகமே தலை&ழாகப்‌ போனாலும்‌ ஒருவர்‌ செய்த நன்றியை அழிக்க முயன்றவர்க்கு உய்வே கிடையாது” என்று அறவோர்‌ கூறுவர்‌. காலையும்‌ மாலையும்‌ புறாக்கருப்‌ போன்ற புன்செய்‌ வரகைப்‌ பால்‌ பெய்து சமைத்துத்‌ தேனுடன்‌ கலந்தும்‌, அத்துடன்‌ கொழுத்த முயலின்‌ சூடான இறைச்சியைச்‌ சேர்த்தும்‌ தின்பர்‌ என சுற்றத்தார்‌. அவரோடு, இலவமரம்‌ ஓங்கி வளர்ந்துள்ள பரந்த மன்றத்தில்‌, கரவறியாத உள்ளத்தோடு ்‌… நினைத்தன வெல்லாம்‌ பேசிப்பேசி, பெரிய கட்டிகளான கொழுமையான சோற்றை உண்டு மகிழ்பவர்‌ பாணர்கள்‌. இவர்க்கு அழியாத செல்வம்‌ முழுவதும்‌ அடையுமாறு செய்தவன்‌ எம்‌ – கோமானாகிய வளவன்‌ நீயே யன்றோ! வாழ்க என்று நின்‌ பெருமை மிகுந்த வலிய திருவடி களைப்‌ பாடேனாயின்‌, கதிரவனும்‌ தோன்றான்‌. பெருமானே! யானோ எளியவன்‌! இவ்வுலகத்திலே சான்றோர்‌ செய்த நன்மைகள்‌ இருக்குமானால்‌, இமயச்‌ சாரலில்‌ திரண்டு, இனிய இடியோசையைச்‌ செய்து மேகங்கள்‌ பொழியும்‌ நுண்ணிய மழைத்துளிகளிலும்‌ பல அண்டுகளின்‌ மேலாக நீ வாழ்வாயாக! (“நன்று உண்டாயின்‌” என்றது, உறுதியாக நிறைவேறும்‌ என்னும்‌ தேற்றம்‌ பற்றிக்‌ கூறியது.)

சொற்பொருள்‌: 70. புன்கம்‌ – சோறு. 11. கொழுஞ்‌ சூடு – கொழுவிய சூட்டிறைச்சி. கிழித்த – தின்ற. 12. இரத்தி – இலவமரம்‌. 4. ஆர்ந்த – அருந்திய. அமலை – திரளை. 17. பீடு கெழு – பெருமை பொருந்திய. 19. தஞ்சம்‌ – எளியேன்‌. 20. நன்றி உண்டாயின்‌ -‘ நல்வினை உண்டாயின்‌. 21. கொண்டல்‌ – சீழ்க்‌ காற்று.

35. உழுபடையும்‌ பொருபடையும்‌!

பாடியவர்‌: வெள்ளைக்குடி நாகனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌. திணை:. பாடாண்‌. துறை: செவியறிவுறூக. சிறப்பு: அரச நெறியின்‌ செவ்விபற்றிய செய்திகள்‌. சிறப்பு: “பாடிப்‌ ப்ழஞ்‌ செய்க்‌ கடன்‌ வீடு கொண்டது” என்று இதனைக்‌ குறிப்பர்‌. ப

52. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

(“நொதுமலாளர்‌ பொது மொழி கொள்ளாது, பாரம்‌ ஓம்பிப்‌ புறந்‌ தருகுவை யாயின்‌, நின்னடி புறந்தருகுவர்‌ அடங்காதோர்‌’ என்றமையால்‌, செவியறிவுறூஉ ஆயிற்று. ஈண்டு, முறைவேண்டு பொழுதின்‌ பதன்‌ எளியோர்‌, உறைவேண்டு பொழுதின்‌ பெயல்‌ பெற்றோரே’ என, அரசன்‌ அறம்புரிந்து, . செங்கோல்‌ நாட்டத்தனாவது பற்றிக்‌ கூறும்‌ அறவுரை சிறப்புடைய தாகும்‌.)

நளிஇரு முந்நீர்‌ ஏணி யாக,

வளிஇடை வழங்கா வானம்‌ சூடிய

மண்திணி கிடக்கைத்‌ தண்தமிழ்க்‌ கிழவர்‌,

முரசு முழங்கு தானை மூவர்‌ உள்ளும்‌,

அரசு எனப்‌ படுவது நினதே, பெரும! 5

அலங்குகதிர்க்‌ கனலி நால்வயின்‌ தோன்றினும்‌,

இலங்குகதிர்‌ வெள்ளி தென்புலம்‌ படரினும்‌,

அந்தண்‌ காவிரி வந்து கவர்பு ஊட்டத்‌,

தோடுகொள்‌ வேலின்‌ தோற்றம்‌ போல

ஆடுகண்‌ கரும்பின்‌ வெண்பூ நுடங்கும்‌, 10

நாடு எனப்‌ படுவது நினதே அத்தை, ஆங்க

நாடுகெழு செல்வத்துப்‌ பீடுகெழு வேந்தே!

நினவ கூறுவல்‌; எனவ கேண்மதி;

அறம்புரிந்‌ தன்ன செங்கோல்‌ நாட்டத்து

முறைவேண்டு பொழுதின்‌ பதன்‌ எளியோர்‌ ஈண்டு 15

உறை வேண்டு பொழுதில்‌ பெயல்பெற்‌றோரே;

ஞாயிறு சுமந்த கோடுதிரள்‌ கொண்மூ

மாக விசும்பின்‌ நடுவுநின்‌ றாங்குக்‌

கண்பொர விளங்கும்நின்‌ விண்பொரு வியன்குடை ப

வெயில்மறைக்‌ கொண்டன்றோ! அன்றே, வருந்திய 20

‘குடிமறைப்‌ பதுவே, கூர்வேல்‌ வளவ! வெளிற்றுப்பனந்‌ துணியின்‌ வீற்றுவீற்றுக்‌ த இஸ்ட்‌- களிற்றுக்கணம்‌ பொருத கண்ணகன்‌ பறந்தலை, ்‌ வருபடை தாங்கிப்‌, பெயர்புறத்‌ தார்த்துப்‌, பொருபகை தரூஉ௨ங்‌ கொற்றமும்‌, உழுபடை 25

ஊன்றுசால்‌ மருங்கின்‌ ஈன்றதன்‌ பயனே;

மாரி பொய்ப்பினும்‌ வாரி குன்றினும்‌,

இயற்கை அல்லன செயற்கையில்‌ தோன்றினும்‌,

காவலர்ப்‌ பழிக்கும்‌ இக்‌ கண்ணகன்‌ ஞாலம்‌;

அதுநற்கு அறிந்தனை யாயின்‌, நீயும்‌ 30

புலியூர்க்‌ கேசிகன்‌ ப 53 நொதும லாளர்‌ பொதுமொழி கொள்ளாது, பகடுபுறந்‌ தருநர்‌ பாரம்‌ ஓம்பிக்‌

குடிபுறம்‌ தருகுவை யாயின்‌, நின்‌ ‘

அடிபுறந்‌ தருகுவர்‌, அடங்கா தோரே. :

தண்‌ தமிழுக்கு உரிமையுடையவராகக்‌ கடல்‌ சூழ வானங்‌ கவிய விளங்கும்‌ இத்‌ தமிழ்நிலத்தை, முரசு முழங்குந்‌ தானைகளோடு, வென்றியுடன்‌ அள்பவர்‌ மூவேந்தர்‌. அவருள்ளும்‌ “அரசு’ எனச்‌ சிறப்பிக்கப்படுவது நின்‌ அரசே. பெருமானே! . நாற்புறத்‌ திசையினும்‌ கதிரவன்‌ தோன்றினாலும்‌, வெள்ளி தென்திசைச்‌ சென்றாலும்‌, காவிரி வாய்க்கால்கள்‌ வழியாகச்‌ சென்று ஊட்டத்‌, தொகுதி கொண்ட வேலின்‌ தோற்றம்‌ போலக்‌ கரும்பின்‌ வெண்மையான பூக்கள்‌ அசைந்தாடும்‌ நின்‌ வளநாடு ஒன்றே, “நாடு: எனச்‌ சிறப்பித்துக்‌ கூறத்‌ தக்கதாகும்‌. அத்தகைய நாடுதரும்‌ செல்வத்தால்‌ பெருமை நிரம்பிய வேந்தே! நினக்குச்‌ சில சொல்‌! வேன்‌! கேட்பாயாக:

அறமே நிலவும்‌ செங்கோல்‌ அராய்ச்சியிலே, ஒருவர்‌ நீதி வேண்டும்போது அவர்க்கு எளிதிலே காட்சியுடையவனாதல்‌, மழைத்துளியை வேண்டும்பொழுது பெருமழையே பெய்வது போலும்‌ தகவுடையதாகும்‌. ஞாயிற்றைச்‌ சுமந்து திரிவன போல முகில்கள்‌ விளங்கும்‌ வானத்து நடுவே, ஓங்கி விளங்கும்‌ நின்‌ வெண்கொற்றக்‌ குடை, வெயிலை மறைக்கக்‌ கொண்டதன்று; கூரிய வேலேந்தும்‌ வளவனே, அது குடிகளின்‌ வருத்தத்தினைப்‌ போக்கி அருள்‌ செய்வதன்‌ அடையாளமாகும்‌. முற்றாத பனையின்‌ துண்டங்களைப்‌ போலத்‌ தம்‌ உடலுறுப்புக்கள்‌ அங்காங்கே கிடக்குமாறு, பகைவரின்‌ யானைத்‌ தொகுதிகள்‌ தம்முடன்‌ பொருத காலத்திலே, அகன்ற அப்‌ போர்‌ முனையிலே, நின்‌ படைவீரர்‌ அவற்றை வென்று நினக்குத்‌ தேடித்தந்த வெற்றியும்‌, கொழமுமழுனை கிழித்த விளைவயலின்‌ சாலிடத்தே விளைந்த நெல்லின்‌ பயனால்தான்‌ வாய்ப்‌ பதாயிற்று என்பதை மறவாதே. மழை இல்லையானாலும்‌, விளைவு குறைந்தாலும்‌, இவ்வாறு இயற்கை யல்லாத தீங்குகள்‌ செயற்கையால்‌ தோன்றினாலும்‌. உலகம்‌ காவலரையே பழிக்கும்‌. அதனை நன்கு நீ அறிந்தவன்‌ என்றால்‌, ஓன்று கேள்‌ : மாறுபட்டோரின்‌ பொது மொழியை மனத்திற்‌ கொள்ளாதே. உழவர்‌ குடியினரை முதற்கண்‌ பாதுகாத்து, அதனால்‌ ஏனைக்‌ குடியினரையும்‌ பசியின்றி நீ காப்பாயானால்‌, நின்‌ அணைக்கு அடங்காதவர்கூட நின்‌ அடியிணைகளைப்‌ பணிந்து, நின்னைப்‌ போற்றுவர்‌!

54. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ – சொற்பொருள்‌: 1. நளியிரு – நீர்‌ செறிந்த. ஏணியாக –

எல்லையாக. 6. அலங்குகதிர்‌ கனலி – விளங்கிய சுடரையுடைய ஞாயிறு (சூரியன்‌. 17. கொண்மூ – முகில்‌. 22. வீற்று – வேறு. 23. கண்ணகன்‌ – இடமகன்ற. 32. பாரம்‌ – குடி.. ஓம்பி’- பாதுகாத்து. ” அத்தையும்‌, அங்கவும்‌, மதியும்‌: அசை நிலைகள்‌. 34. நின்‌.அடி.புறம்‌ தருகுபவர்‌ – நின்னடியைப்‌ போற்றுவர்‌.

36. நீயே அறிந்து செய்க! ்‌ பாடியவர்‌: அலத்தூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. குறிப்பு: சோழன்‌ கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.

(மேற்சென்றானைச்‌ சந்துசெய்து மீட்டலின்‌, இது துணை வஞ்சி ஆயிற்று. “உள்ளியது முடிக்கும்‌: வேந்தனது சிறப்பும்‌” என்னும்‌ துறைக்கு இளம்பூரணரும்‌ (புறத்‌. சூ. 10), இது, “புறத்து உழிஞையோன்கண்‌ தூதன்‌ அவன்‌ சிறப்பு எடுத்து உரைத்தது” என்பதற்கு எடுத்துக்காட்டாக (புறத்‌.சூ.12) நச்சினார்க்கினியரும்‌ காட்டுவர்‌.)

அடுநை யாயினும்‌, விடுநை யாயினும்‌,

நீ அளந்‌ தறிதி நின்‌ புரைமை; வார்கோல்‌,

செறியரிச்‌ சிலம்பின்‌, குறுந்தொடி மகளிர்‌

பொலஞ்செய்‌ கழங்கின்‌ தெற்றி யாடும்‌.

தண்ணான்‌ பொருநை வெண்மணல்‌ சிதையக்‌ 5

கருங்கைக்‌ கொல்லன்‌ அரஞ்செய்‌ அவ்வாய்‌

நெடுங்கை நவியம்‌ பாய்தலின்‌, நிலையழிந்து,

வீகமழ்‌ நெடுஞ்சினை புலம்பக்‌ காவுதொறும்‌

கடிமரம்‌ தடியும்‌ ஓசை, தன்ஊர்‌

நெடுமதில்‌ வரைப்பின்‌ கடிமனை இயம்ப, . 1௦

‘ஆங்குஇனி.திருந்த வேந்தனோடு, ஈங்குநின்‌

சிலைத்தார்‌ முரசம்‌ கறங்க

மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே. ப

சிலம்பும்‌ வளையும்‌ அணிந்த இளமகளிர்‌, பொன்னாற்‌ ‘: செய்த கழற்காய்‌ கொண்டு மணல்‌ மேடுகளிலே இருந்து விளையாடும்‌ ஆன்பொருநையின்‌ வெண்மணல்‌ கிதறும்படியாக, நின்‌ வீரர்‌, கூரிய கோடரி கொண்டு காவற்காடுகளின்‌ மரங்களை வெட்டுகின்றனர்‌. அதனால்‌, பூநாறும்‌ ௮ம்‌ மரங்களின்‌ நெடிய : கொம்புகள்‌ நிலைகலங்கி வீழ்கின்றன. இவ்வாறு வெட்டும்‌ ஒலி, நகருள்‌ காவல்‌ மிகுந்த நெடுமதில்‌ சூழ்ந்த அரண்மனையிலே

புலியூர்க்‌ கேசிகன்‌ 2 55 இருக்கும்‌ சேரனின்‌ காதுகளிலும்‌ சென்று ஒலித்திருக்குமன்றோ! அது கேட்டும்‌ போருக்கு எழுந்து வராமல்‌, அங்கேயே அவன்‌ இனிதாக இருக்கின்றானே! வீரமற்ற அத்தகையவனுடன்‌, முரசம்‌ : , கறங்க நீ போரிட்டனை என்பது, வெட்கந்தரும்‌ செயலாகும்‌, போரிடுவாயோ, அன்றி விடுவாயோ? அதை நீயே எண்ணி அராய்ந்து முடிவு செய்வாயாக!

சொற்பொருள்‌: 1. அடுநை – கொல்வாய்‌. விடுநை – கொல்லாதொழிவாய்‌ 2. புரைமை – உயர்ச்சி. 4. தெற்றி ஆடும்‌ – திண்ணை போல உயர்ந்த எக்கர்க்கண்ணே இருந்து கழற்சி விளையாடும்‌; எக்கர்‌ – மணல்மேடு. 6. கருங்கை – வலிய கையை உடைய. அரம்செய்‌ – அரத்தாற்‌ கூர்மை செய்யப்பட்ட, 8. வீ – பூ புலம்ப – தனிப்ப. 10. கடிமனை – காவலையுடைய கோயிற்கண்ணே. 11. இனிது இருந்த: இனிதாக மானம்‌ இன்றியிருந்த, 12. சிலைத்தார்‌ – இந்திரவில்போலும்‌ மாலையையுடைய.

31. புறவும்‌ போரும்‌!

பாடியவர்‌: மாறோக்கத்து நப்பசலையார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. திணை: வாகை; உழிஞை எனவும்‌ பாடம்‌. துறை: அரச வாகை, குற்றுழிஞை . எனவும்‌, முதல்‌ வஞ்சி எனவும்‌ பாடம்‌. |

[ புறவுக்கு உற்ற துயரைத்‌ தீர்க்கும்‌ பொருட்டுத்‌ துலைபுக்க அருளாளனின்‌ மரபினனாகியும்‌, செருவினிடத்து இவற்றை நல்லனவென்று பாராது அழித்தல்‌ வல்லையாயிருந்தாய்‌’ என, அவன்‌ மறமாண்பை வியந்து கூறினர்‌. அரசனது இயல்பின்‌ மிகுதியைக்‌ கூறுதலால்‌, இச்‌ செய்யுள்‌ அரச வாகை ஆயிற்று. பழைய வரலாற்றையுடைய முன்னோனது நிலையைக்‌ கூறுதலால்‌ முதல்‌ வஞ்சியும்‌ அகும்‌. “முரணிய புறத்தோன்‌ அணங்கிய பக்கம்‌” “என்னும்‌ துறைக்கு எடுத்துக்‌ காட்டுவர்‌. இளம்பூரணர்‌ (புறத்‌. சூ. 10).]

நஞ்சுடை வால்‌ எயிற்று, ஐந்தலை சுமந்த, வேக வெந்திறல்‌, நாகம்‌ புக்கென, விசும்புதீப்‌ பிறப்பத்‌ திருகிப்‌ பசுங்கொடிப்‌ – பெருமலை விடரகத்து உரும்எறிந்‌ தாங்குப்‌, ப புள்ளுறு புன்கண்‌ தீர்த்த, வெள்‌ வேல்‌ ப 5

-சினங்கெழு தானைச்‌ செம்பியன்‌ மருக! ‘ கராஅம்‌ கலித்த குண்டுகண்‌ அகழி, இடம்கருங்‌ குட்டத்து உடன்தொக்கு ஓடி; யாமம்‌ கொள்பவர்‌ சுடர்நிழல்‌ கதூஉம்‌

56 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ கடுமுரண்‌ முதலைய நெடுநீர்‌ இலஞ்சிச்‌, செம்புஉறழ்‌ புரிசைச்‌, செம்மல்‌ மூதூர்‌, 1௦ வம்புஅணி யானை வேந்துஅகத்‌ துண்மையின்‌, ‘நல்ல என்னாது, சிதைத்தல்‌ வவ்லையால்‌ நெடுந்தகை! செருவத்‌ தானே!

புறாவின்‌ துயரினைப்‌ போக்கிய செம்பியன்‌ மரபினனே! சினமிகுந்த வேல்‌ தாங்கிய படையை உடையவனே! முதலைகள்‌ நிறைந்த அகழியினையும்‌, இரவு வேளையிலே, ஊர்‌ காப்பாரின்‌ விளக்கு நிழலைக்‌ கவரும்‌ முதலைகள்‌ திரண்டிருக்கும்‌ நீர்‌ நிறைந்த மடுவினையும்‌, செம்பாற்‌ செய்தாற்போலும்‌ மதிலையுமுடையது, தலைமையோடு விளங்கிய மிகப்பழைய அரண்‌. சுச்சணிந்த யானைப்‌ படையுடன்‌ வலிபொருந்திய அரசும்‌ அங்கே இருந்தது. அவற்றை நல்லன என்றும்‌ பாராது, நச்சுப்பற்களும்‌ ஐந்தலையும்‌ உடைய நாகம்‌ புக்கது போல்‌ புகுந்து, வானம்‌ செவ்விருள்பட அவ்வூரை எரியூட்டி அழித்து, வானத்தும்‌ செந்தீ எழச்‌ செய்தாய்‌. மலைமுழையின்‌ கண்ணே இடிமுழக்கம்‌ எதிர்‌ ஒலித்தாற்போல, அவ்வூரினுள்‌ புகுந்து அதனை அழித்துப்‌ போரிட்டு வெல்லும்‌ வல்லமையுடையவனாகவும்‌ இருந்தாய்‌! பெருந்தகாய்‌! நின்‌ முன்னோர்‌ அருளும்‌ நின்‌ கொடிய வன்மையும்‌ இருந்தவாறு என்னே! (பழிப்பது போலப்‌ புகழ்ந்து உரைத்தது இது.)

சொற்பொருள்‌: 2. தீப்பிறப்பத்‌ திருகி – வானம்‌ – தீப்பரக்கும்‌ பரிசு முறுகி. 6. செம்பியன்‌ – சிபிச்சக்கரவர்த்தி என்பர்‌. 7. கராம்‌ – முதலையுள்‌ ஒரு சாதி. 8. கருங்குட்டத்து – கரிதாகிய அழத்தின்கண்‌. 9. யாமம்‌ கொள்பவர்‌ – இடையாமத்து ஊர்க்காப்பாளருடைய. சுடர்‌ விளக்கு. கதூஉம்‌ – கவரும்‌. 10. கடுமுரண்‌ – கடிய மாறுபாடு. இலஞ்சி – மடு, 11. செம்பு உறழ்‌ – செம்பு பொருவும்‌. செம்மல்‌ – தலைமை. 12. வம்பு – கச்சு, 13. செருவத்தான்‌ – போரின்சண்‌.

38. வேண்டியது விளைக்கும்‌ வேந்தன்‌!

பாடியவர்‌: ஆவூர்‌ மூலங்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. குறிப்பு: “எம்‌ முள்ளீர்‌, எந்‌ நாட்டீர்‌?” என்று அவன்‌ கேட்ப, அவர்‌ பாடியது. ப

(“நீ உடன்று நோக்கும்‌’ என்பது முதலியவற்றால்‌, ௮ அரசனது இயல்பைக்‌ கூறினமையின்‌, இது இயன்மொழி ஆயிற்று. புகழ்ச்சிக்கண்‌ வந்த செந்துறைப்‌ பாடாண்‌ பாட்டிற்கு எடுத்துக்‌ காட்டுவர்‌ நச்சினார்க்கினியர்‌ (தொல்‌. புறத்‌.சூ.27), உடையரும்‌ இல்லோருமாதலும்‌, இறப்போரும்‌ பிறப்போரும்‌ ஆதலும்‌, முன்வினைப்‌ பயனால்‌ வந்தடைவன எனக்‌ கூறுகின்றார்‌ புலவர்‌.)

புலியூர்க்‌ கேசிகன்‌ 57 வரை புரையும்‌ மழகளிற்றின்‌ மிசை, வான்‌ துடைக்கும்‌ வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும்‌! வியன்‌ தானை விறல்‌ வேந்தே! _ .. நீ உடன்று நோக்கும்வாய்‌ எரிதாழ ‘ ப 5 நீ நயந்து நோக்கும்‌ வாய்‌ பொன்பூப்பச்‌, செஞ்‌ ஞாயிற்று நிலவு வேண்டினும்‌, வெண்‌ திங்களுள்‌ வெயில்‌ வேண்டினும்‌ வேண்டியது விளைக்கும்‌ ஆற்றலை ஆகலின்‌, நின்நிழல்‌ பிறந்து, நின்நிழல்‌ வளர்ந்த, 10 எம்‌ அளவு எவனோ மற்றே?’ இன்நிலைப்‌ பொலம்பூங்‌ காவின்‌ நன்னாட்‌ டோரும்‌ செய்வினை மருங்கின்‌ எய்தல்‌ அல்லதை, உடையோர்‌ ஈதலும்‌, இல்லோர்‌ இரத்தலும்‌

கடவ தன்மையின்‌, கையறவு உடைத்து, என 15

ஆண்டுச்‌ செய்‌ நுகர்ச்சி ஈண்டும்‌ கூடலின்‌, நின்நாடு உள்ளுவர்‌, பரிசிலர்‌: ஒன்னார்‌ தேஎத்தும்‌, நின்னுடைத்‌ தெனவே.

குன்றுகளைப்‌ போன்ற இளங்‌ களிறுகளின்‌ மீது வானத்தையே தடவுவன போன்று பலநிறக்‌ கொடிகள்‌ அசைந்து தோன்றும்‌, பரந்த படைத்திரளை உடைய, ஆற்றல்‌ மிகுந்த வேந்தனே! நீ சினங்கொண்டு பார்க்கும்‌ இடத்திலே எரி பரக்கும்‌. நீ அருள்கொண்டு பார்க்கும்‌ இடத்திலோ பொன்‌ பொலியும்‌. ஞாயிற்றிலே நிலவு உண்டாக என்றாலும்‌, நிலவிலே வெயில்‌ உண்டாக என்றாலும்‌, விரும்பினால்‌, அவ்வாறே உண்டாக்கும்‌ வலிமையுடையவன்‌ நீ! விண்ணவர்‌, உலகில்‌’ தாம்‌ செய்த நல்வினைக்கு ஏற்பப்‌ போகம்‌ நுகர்ந்து அங்கே இன்புறுவர்‌ என்பர்‌. அஃதன்றிச்‌, செல்வர்‌ வறியோர்க்கு வழங்கலும்‌, வறியோர்‌ செல்வரிடத்தே அவர்‌ பரிசை நாடிச்‌ செல்லலும்‌ அங்கே கிடையாது. அது நின்‌ நாட்டிலேதான்‌ நிகழும்‌! எனவே, பகைவர்‌ நாட்டுப்‌ பரிசிலரும்‌, நின்‌ நாடு நின்னை உடையதாகின்றது என்றும்‌, அந்த விண்ணுலகினும்‌ இல்லாத இன்பம்‌ இங்கே உளது என்றும்‌ கருதியவராக நின்‌ நாட்டையே நினைத்துக்‌ கொண்டிருப்பர்‌. அங்ஙனமிருக்க, நின்‌ நிழலிலேயே பிறந்து வளர்ந்த எம்‌ நினைவின்‌ எல்லையைப்‌ பற்றி, ஏதும்‌ அளவிட்டுச்‌ சொல்லவும்‌ முடியுமோ?

சொற்பொருள்‌: பொன்‌ பூப்ப – பொன்‌ பொலிய.॥!. எம்‌ அளவு – எமது நினைவின்‌ எல்லை. 12. மருங்கின்‌ – இன்பத்தின்‌ பக்கத்தை.

55 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 3. எய்தல்‌ அல்லதை – பொருந்துவதல்லது. 15. கடவ து அன்மையின்‌ – ஆண்டுச்‌ செய்யக்‌ கடவது இன்மையால்‌. 18. தேஎத்தும்‌ – தேயத்து “இருந்தும்‌. ்‌. 39. புகழினும்‌ சிறந்த சிறப்பு!

பாடியவர்‌: மாறோக்கத்து நப்பசலையார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌. திணை: பாடாண்‌. துறை: இயன்‌ மொழி. சிறப்பு: வளவன்‌ எ வஞ்கவை வெற்றி கொண்டது.

( தலைவன்‌ செய்தியையும்‌, அவன்‌ மரபினோர்‌ செய்தியை யும்‌ உரைத்தமையால்‌ இச்‌ செய்யுள்‌ “இயன்மொழி’ ஆயிற்று. _ ஈதல்‌, அடுதல்‌, முறைமை என்பவற்றுள்‌ சிறந்தோனாகவும்‌, போர்‌ மறத்துள்‌ ஒப்பற்றோனாகவும்‌ வளவனை வியந்து பாடுகின்றார்‌ புலவர்‌. புறவின்‌ அல்லலைத்‌ தீர்த்தோனைப்‌ பற்றிய குறிப்பும்‌, தூங்கெயில்‌ எறிந்த செம்பியனது மறமாண்பு பற்றிய குறிப்பும்‌ காணப்படுகிறது. “தூங்கு எயில்‌” என்பது தற்காலத்தைய குண்டு வீச்சு விமானங்களைப்‌ போல்வதொரு சாதனமாயிருக்கலாம்‌.)

புறவின்‌ அல்லல்‌ சொல்லிய, கறையடி யானை வான்மருப்‌ பெறிந்த வெண்கடைக்‌

கோல்‌ நிறை துலாஅம்‌ புக்கோன்‌ மருக!

ஈதல்நின்‌ புகழும்‌ அன்றே; சார்தல்‌

“ஒன்னார்‌ உட்கும்‌ துன்னரும்‌ கடுந்திறல்‌ ப 5

தூங்கெயில்‌ எறிந்தநின்‌ ஊங்கணோர்‌ நினைப்பின்‌, ‘

அடுதல்நின்‌ புகழும்‌ அன்றே; கெடுவின்று,

மறங்கெழு சோழர்‌ உறந்தை அவையத்து,

அறம்நின்று நிலையிற்‌ றாகலின்‌, அதனால்‌

முறைமைநின்‌ புகழும்‌ அன்றே; மறம்மிக்கு, 10

எழுசமம்‌ கடந்த எழுவுறழ்‌ திணிதோள்‌,

கண்ணார்‌ கண்ணிக்‌ கலிமான்‌ வளவ! –

யாங்கனம்‌ மொழிகோ யானே; ஓங்கிய

வரையளந்‌ தறியாப்‌ பொன்படு நெடுங்கோட்டு

… இமயம்‌ சூட்டிய ஏம விற்பொறி, 15

மாண்வினை நெடுந்தேர்‌, வானவன்‌ தொலைய வாடா வஞ்சி வாட்டும்நின்‌ பீடுகெழு நோன்தாள்‌ பாடுங்‌ காலே? . புறாவினது அல்லலைத்‌ தீர்க்கத்‌ தானே துலை ஏறி அமர்ந்த அருளாளனாகிய செம்பியனின்‌ மரபினன்‌ நீ; ஆதலால்‌ நீயுமோர்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ 59 ஈகைக்குணம்‌ உடையவனாதல்‌ நினக்குப்‌ புகழ்‌ அன்று. தூங்கு எழில்‌ அழித்து வென்ற நின்‌ முன்னோரை நினைத்தால்‌, போர்களில்‌ வெற்றி கொள்வதுங்கூட நினக்குப்‌ புகழ்‌ அன்று. கேடின்றி வீரம்‌. செறிந்த சோழரின்‌ உறையூர்‌ அவையினிடத்தே அறம்‌ என்றும்‌ நிலைபெற்று நிற்கும்‌; ஆதலின்‌, நீ முறைமை செய்தாயென்பதும்‌ நினக்குப்‌ புகழ்‌ தருவதன்று. இமயத்திலே பொறித்த விற்பொறியையும்‌, நெடிய தேரையும்‌ உடையவனான: சேரனை வென்று, அவனது கருவூர்க்‌ கோட்டையையும்‌ அழித்த நின்‌ முயற்சிச்‌ சிறப்பை யான்‌ எவ்வாறு கூறுவேன்‌! கணைய மரமும்‌ ஒவ்வாத தசைசெறிந்த திண்தோளும்‌, கண்ணுக்கினிய மாலையும்‌, மனஞ்செருக்கிய குதிரையும்‌ உடையவனே! நீயே கூறுவாயாக!

சொற்பொருள்‌: 2. வான்மருப்பு எறிந்த – வெளியே கோட்டாற்‌ .. கடைந்து செறிக்கப்பட்ட 4. உட்கும்‌ – கிட்டுதற்கு வெருவும்‌. 6. தூங்கு எயில்‌ – அகாயத்து மதில்‌.11. எழு – கணையமரம்‌. 12. கலிமான்‌ – மனம்‌ செருக்கிய குதிரை. 18. தாள்‌ – முயற்சி, _

40. ஒரு பிடியும்‌ எழு களிரும்‌!

பாடியவர்‌: அவுர்‌ மூலங்கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌. ணை: பாடாண்‌. துறை: செவியறிவுறூஉ.

(“என்றும்‌ இன்சொல்‌ எண்‌ பதத்தை அகுமதி’ என. அறத்தாறு கூறி அறிவுறுத்தலின்‌, செவியறிவுறஉ ஆயிற்று. “ஒரு , பிடி படியும்‌ சீறிடம்‌ எழுகளிறு புரக்கும்‌ நாடு என்றது. அந்‌ நாட்டது வளமையை வியந்ததாம்‌. இதனால்‌, அந்‌ நாட்டார்‌ பசியற்று நல்வாழ்வினராகத்‌ திகழ்ந்ததும்‌ பெறப்படும்‌. செவியறி வுறுத்தற்கு இச்‌: மக்டனு ரகா க்‌ எடுத்துக்‌ காட்டுவர்‌.)

நீயே, பிறர்‌ ஓம்புறு மறமன்னெயில்‌

ஓம்பாது கடந்தட்டு, அவர்‌

முடி புனைந்த பசும்‌ பொன்னின்‌

அடி பொலியக்‌ கழல்‌ தைஇய ட

வல்‌ லாளனை; வய வேந்தே! 5 யாமே நின்‌, இகழ்‌ பாடுவோர்‌ எருத்தடங்கப்‌,

புகழ்‌ பாடுவோர்‌ பொலிவு தோன்ற,

இன்றுகண்‌ டாங்குக்‌ காண்குவம்‌; என்றும்‌

இன்சொல்‌ எண்பதத்தை ஆகுமதி, பெரும! .

ஒருபிடி படியுஞ்‌ சீறிடம்‌ ல ஆ. 2 எழுகளிறு புரக்கும்‌ நாடுகிழ வோயே! 1௦

60. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

பெருமானே! ஒரு பிடியானை கடக்கும்‌ அளவு சிறிய இடமாயினும்‌, அதன்கண்‌ வளம்பெருக்கி, ஏழு களிற்று யானை களைப்‌ பாதுகாக்க வல்ல உணவுப்‌ பொருள்களை உளவாக்கும்‌ சோழ வளநாட்டை உரிமையாக உடையவனே! காவல்‌ மிகுந்த நின்‌ (பகைவரது அரண்களை எதிர்நின்று அழித்தனை. அவரையுங்‌ கொன்று அவர்‌ மகுடத்துப்‌ பசும்‌ பொன்னால்‌ வீரக்கழல்‌ செய்தும்‌ அணிந்துள்ளனை. அத்துணை வலிமையும்‌ அண்மையும்‌ உடையவனே! வயவேந்தனே! நின்னை இழித்து உரைப்பவர்‌ கழுத்திறைஞ்சித்‌ தாழவும்‌, நின்னைப்‌ புகழ்ந்து உரைப்பவர்பால்‌ இன்பப்‌ பொலிவு தோன்றவும்‌ இன்று கண்டோம்‌. இனியும்‌, இவ்வாறே காண்போம்‌. எந்‌ நாளும்‌ இன்மொழி பேசுபவனாகவும்‌, காண்போர்க்கு. எளிய செவ்வி உடையவனாகவும்‌, நீ விளங்குவாயாக:!

சொற்பொருள்‌: 2. கடந்து அட்டு – எ தரதின்று அழித்து. 4, கழல்தைஇய. – வீரக்கழல்‌ செய்து புனைந்த. 6. எருத்து அடங்க – கழுத்து இறைஞ்ச. 9: எண்‌ பதத்தை – எளிய செவ்வியை. 8. ஆகுமதி – ஆகுக. மதி : முன்னிலை அசைச்சொல்‌.

41. காலனுக்கு மேலோன்‌!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றுத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. ரக வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.

(“காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவிற்‌ செருமிகு வளவ” என மன்னவன்‌ புகழும்‌, “நிற்‌ சனைஇயோர்‌ நாடு பைதன்‌ மாக்களொடு பெருங்‌ கலக்குற்றன்று’ என, ஒன்னார்‌ நாடு அழிபிரங்கியதும்‌ கூறுதலால்‌, இது கொற்றவள்ளை ஆயிற்று நிமித்தம்‌ பற்றி வந்ததற்கு இளம்பூரணரும்‌ (தொல்‌. புறத்‌ சூ. 30), பாடாண்‌ கொற்ற வள்ளைக்கும்‌ (சூ. 34), ஓம்படை வாழ்த்திற்கும்‌ (சூ, 36) நச்சினார்க்கினியரும்‌ இச்‌ செய்யுளை எடுத்துக்‌ காட்டுவர்‌.

காலனும்‌ காலம்‌ பார்க்கும்‌; பாராது

வேல்‌ஈண்டு தானை விழுமியோர்‌ தொலைய,

வேண்டிடத்து அடூஉம்‌ வெல்போர்‌ வேந்தே!

திசைஇரு நான்கும்‌ உற்கம்‌ உற்கவும்‌,

பெருமரத்து, இலையில்‌ நெடுங்கோடு வற்றல்‌ பற்றவும்‌, 5 வெங்கதிர்க்‌ கனலி துற்றவும்‌, பிறவும்‌,

அஞ்சுவரத்‌ தகுந புள்ளுக்குரல்‌ இயம்பவும்‌,

எயிறுநிலத்து வீழவும்‌, எண்ணெய்‌ ஆடவும்‌,

களிறுமேல்‌ கொள்ளவும்‌, காழகம்‌ நீப்பவும்‌,

வெள்ளி நோன்படை கட்டிலொது கவிழவும்‌, 1௦

புலியூர்க்‌ கேசிகன்‌ த 61 கனவின்‌ அரியன காணா, நனவின்‌ செருச்செய்‌ முன்ப! நின்‌ வருதிறன்‌ நோக்கி, மையல்‌ கொண்ட ஏமம்‌இல்‌ இருக்கையர்‌, புதல்வர்‌ பூங்கண்‌ முத்தி, மனையோட்கு, எவ்வம்‌ கரக்கும்‌ பைதல்‌ மாக்களொடு ‘பெருங்கலக்‌ குற்றன்றால்‌ தானே, காற்றோடு எரிநிகழ்ந்‌ தன்ன செலவின்‌ செருமிகு வளவ! நிற்‌ சினைஇயோர்‌ நாடே. .

கூற்றுவனும்‌ ஒருயிரைக்‌ கொள்ள, அதற்கான ஆயுளின்‌ முடிவுகாலம்‌ வரும்வரை காத்திருப்பான்‌. அவ்வாறு பகைவரின்‌ அழிவுக்கான காலம்‌ எதுவெளவும்‌ பாராது, வேல்‌ நெருக்கங்‌ கொண்ட பெரும்படையுடைய மேலான மன்னரும்‌ தொலையு மாறு, விரும்பினால்‌ விரும்பியவுடனேயே கொன்று அழிக்கும்‌ வெற்றிப்‌ பேராற்றல்‌ உடைய வேந்தனே! எட்டுத்‌ திசைகளிலும்‌ எரிகொள்ளி எரிந்து வீழவும்‌, பெருமரங்கள்‌ இலையற்றுக்‌ தளைகள்‌ வற்றி உலரவும்‌, அச்சந்தரும்‌ பறவைகளின்‌ குரல்கள்‌ ஒலிக்கவும்‌, பற்கள்‌ தரையிலே உதிரவும்‌, தலைமயிர்‌ மீது எவரோ எண்ணெய்‌ வார்க்கவும்‌, பன்றி ஏற்றின்மேல்‌ ஏறவும்‌, அடையைக்‌ களையவும்‌, ஒளிவீசும்‌ படைக்கலங்கள்‌ தாமிருக்கும்‌ கட்டிலிலே முறிந்து சரியவும்‌ – இங்ஙனமாகக்‌ கனவிலும்‌ பொறுத்தற்கு அரியனவற்றையே கண்டு பகைவர்‌ அஞ்சப்‌ போர்‌ செய்யும்‌ அற்றல்‌ உடையவனே! நீ மேன்மேலும்‌ வெற்றியுடன்‌ முன்னேறக்கண்ட பகை நாட்டினர்‌ நிலையை என்னென்பேன்‌? காற்றுடன்‌ சேர்ந்து நெருப்புப்‌ பற்றியதுபோல நீ சென்றாய்‌. பகைநாட்டுப்‌ போர்‌ மறவர்‌ வீழ்ந்துபடக்‌, காவலற்று மயங்கின அவர்‌ இல்லங்கள்‌. . அந்நிலைக்கு வருந்தும்‌ எஞ்சின அடவர்‌, தம்‌ வருத்தத்தைத்‌ தம்‌ மனைவியர்‌ அறியக்காட்டாது, தம்‌ சிறுமகாரின்‌ பூவனைய கண்களை முத்தங்கொண்டு, தம்‌ துயரை மறப்பர்‌. இவ்வாறு ‘ துன்புறும்‌ ஆடவரோடு. அந்நாடுகள்‌ கலக்கமுற்றவனே! சொற்பொருள்‌: 4. உற்கம்‌ – எரிகொள்ளி. உற்கவும்‌ – எரிந்து வீழவும்‌; விண்மீன்‌ எரிந்து விழவும்‌. 5. வற்றல்‌ – பசையற்று உலர்ந்த “கொம்பு. 6. கனலி – ஞாயிறு. துற்றவும்‌ – பலவிடத்தும்‌ செறிந்து . தோன்றவும்‌. 7. பிள்‌ – அந்தை முதலாயின. 9. களிறு – அண்பன்றி. காழகம்‌ – ஆடை. 10. நோன்படை – வலிய படைக்கலம்‌. 11. காணா – கண்டு. 12. முன்ப – வலிமையுடையோய்‌. 13. மையல்‌ – மயக்கம்‌. ஏமம்‌ – காவல்‌. 14. முத்தி – முத்தங்‌ கொண்டு. எவ்வம்‌ கரக்கும்‌. தமது வருத்தம்‌ தோன்றாமல்‌ மறைக்கும்‌.

62 ப புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ …. 42. ஈகையும்வாகையும்‌

பாடியவர்‌: இடைக்காடனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. திணை: வாகை. துறை: அரச வாகை. சிறப்பு: சோழனின்‌ மற மேம்பாடும்‌, கொடை மேம்பாடும்‌, வலிமைச்‌ சிறப்பும்‌.

(“அரசனது வெற்றி உறுதியைக்‌ கனல்‌ கனக்‌. ஆயிற்று. “கொள்ளார்‌ தேங்‌ குறித்த கொற்றம்‌” என்னும்‌ துறைக்கு நச்சினார்க்கினியர்‌ எடுத்துக்‌ காட்டுவர்‌ (தொல்‌ புறத்‌. சூ 12); இளம்பூரணரும்‌ அவ்வாறே காட்டுவர்‌ (சூ.10). புலவர்‌ கூட்டம்‌ .. இவனை அடைந்து பயன்பெற்றதனை, “மலையின்‌ இழிந்து மாக்கடல்‌ நோக்கி, நிலவரை இழிதரும்‌ பல்யாறு போலப்‌ புலவர்‌ எல்லாம்‌ நின்னோக்கினரே’ என்றனர்‌; இஃது இவனருளைக்‌ காட்டும்‌.)

. ஆனா ஈகை, அடு போர்‌, அண்ணல்‌! நின்‌ யானையும்‌ மலையின்‌ தோன்றும்‌; பெரும! நின்‌ தானையும்‌ கடலென முழங்கும்‌! கூர்நுனை வேலும்‌ மின்னின்‌ விளங்கும்‌; உலகத்து அரைசுதலை பனிக்கும்‌ ஆற்றலை யாதலின்‌, . 5

புரைதீர்ந்‌ தன்று, அது புதுவதோ அன்றே;

தண்புனற்‌ பூசல்‌ அல்லது, நொந்து,

“களைக வாழி, வளவ!” என்று, நின்‌

முனைதரு பூசல்‌ கனவினும்‌ அறியாது, ப _ புலிபுறங்‌ காக்கும்‌ குருளை போல, 10

மெலிவில்‌ செங்கோல்‌ நீபுறங்‌ காப்பப்‌,

பெருவிரல்‌ யாணர்த்‌ தாகி, அரிநர்‌

கீழ்மடைக்‌ கொண்ட வாளையும்‌, உழவர்‌

படையிளிர்ந்‌ திட்ட யாமையும்‌, அறைநர்‌

கரும்பிற்‌ கொண்ட தேனும்‌, பெருந்துறை 15

நாதரு மகளிர்‌ குற்ற குவளையும்‌,

வன்புலக்‌ கேளிர்க்கு வருவிருந்‌ தயரும்‌

மென்புல வைப்பின்‌ நன்னாட்டு பொருந!

மலையின்‌ இழிந்து, மாக்கடல்‌ நோக்கி,

நிலவரை இழிதரும்‌ பல்யாறு போலப்‌, 20 புலவ ரெல்லாம்‌ நின்நோக்‌ கினரே,

நீயே, மருந்தில்‌ கணிச்சி வருந்த வட்டித்துக்‌

கூற்றுவெகுண்‌ டன்ன முன்பொடு, மாற்றுஇரு வேந்தர்‌ மண்நோக்‌ கினையே.

– புலியூர்க்‌ கேசிகன்‌ ப்‌ 4 இ 63

…. எல்லை இல்லாத வள்ளன்மையும்‌, போரிட்டு வெல்லும்‌ ஆற்றலும்‌ உடைய அண்ணலே! நின்‌ யானையும்‌ மலைபோலத்‌ தோன்றும்‌. நின்‌ படையும்‌ கடல்போல்‌ முழங்கும்‌. கூர்மையான முனையுடைய நின்‌ வேலும்‌ விட்டுவிட்டு மின்னலைப்போல ஒளிவீசும்‌ இவ்வாறு, பிற அரசுகள்‌ நடுங்கும்‌ அளவு நீ வலிமை உடையவனாதலால்‌, எங்கும்‌ குற்றங்கள்‌ தீர்ந்தன. இது நினக்கு. மட்டும்‌ புதுமை அன்று, நின்‌ மரபினர்க்கு இயல்பாக வரும்‌ பழமையே யாகும்‌. குளிர்ந்த நீர்ப்பெருக்கின்‌ ஒலியல்லாது வருந்தி, “வாழி வளவ! எம்‌ துயரினைத்‌ தீர்ப்பாயாக” என்று, நின்முன்‌ வந்து நின்படையினர்‌ பூசலிடுவதைக்‌ கனவிலும்‌ காணாதவன்‌ ‘ நீ. அனைவரையும்‌, புலி தன்‌ குட்டிகளைக்‌ காப்பதுபோலச்‌ செவ்வையாகப்‌ பேணிக்‌ காத்து வருபவனும்‌ நீ. பெருஞ்சிறப்புடன்‌ புது வருவாய்‌ மலிந்தது நின்‌ நாடு. நெல்‌ அறுப்பவர்‌ கடைமடை யிடத்தே வாளை மீனைப்‌ பிடித்து வருவர்‌. உழுபவர்‌, கொழு முனையைத்‌ தடுத்து நிற்கும்‌ அமைகளைப்‌ பிடித்துக்‌ கொணர்வர்‌. கரும்பறுப்பவர்‌ கரும்பினின்று. தேன்‌ எடுத்துக்‌ கொணர்வர்‌. துறையிலே நீர்முகக்க வரும்‌ பெண்கள்‌ செங்கழுநீர்ப்‌ பூவினைப்‌ பறித்துச்‌ செல்வர்‌. இவற்றை எல்லாம்‌, நின்‌ நாட்டு வேளாண்‌ மக்கள்‌ வறண்ட நாட்டிலிருந்து வரும்‌ தம்‌ சுற்றத்தார்க்கு விருப்பமுடன்‌ விருந்தாகக்‌ கொடுத்து மகிழ்வர்‌. இத்தகைய பல

ஊர்களை உடையது நினது நாடு. அவ்‌ வளநாட்டின்‌ வேந்தனே! பலவாக மலையினின்றும்‌ இழிந்து, நிலத்தையுங்‌ கடந்து, கடலை . நோக்கிச்‌ செல்லும்‌ கானாறுகளைப்போலப்‌ புலவர்‌ யாவரும்‌ . நின்னையே நோக்கி வருகின்றனர்‌. அவருக்குப்‌ பரிசில்‌ அளிப்பதற் காகக்‌, கணிச்சி என்னும்‌ படைக்கலத்தை உயிர்வருந்தச்‌ சுழற்றிக்‌ கூற்றம்‌ சினந்தாற்‌ போல, நினக்கு மாறுபட்ட இருவேந்தர்‌ நிலத்தையும்‌ வென்று அட்படுத்தினாய்‌. வளவனே! நீ வாழ்வாயாக!

“சொற்பொருள்‌: 5. தலைபனிக்கும்‌ – தலைநடுங்குதற்கு ‘ ஏதுவாகிய. 7. தண்புனல்‌ பூசல்‌ – குளிர்ந்த நீரால்‌ உளதாகிய பூசல்‌. 9. முனைதரு பூசல்‌ – நினது முந்துற்றுச்‌ செல்லும்‌ படை யுண்டாக்கும்‌ பூசல்‌, பூசல்‌ – அரவாரம்‌. 10. குருளை – புலிக்குட்டி. 12. அரிநர்‌ – நெல்லறுப்போர்‌. 12. &ழ்மடைக்கொண்ட – கடை மடைக்கண்‌ பிடித்துக்‌ கொள்ளப்பட்ட. 14. படை மிளிர்ந்திட்ட – . படைவாளால்‌ மறிக்கப்பட்ட. அறைநர்‌ – கரும்பு அறுப்போர்‌

76. குற்ற – பறித்துக்‌ கொண்ட்‌. 17. வன்புலம்‌ – குறிஞ்சியும்‌ முல்லையும்‌. 18. மென்புலம்‌ – மருதமும்‌ நெய்தலும்‌. 22. மருந்து இல்‌ – பரிகாரம்‌ இல்லாத. 22. கணிச்சி – குந்தாலிப்‌ படை.

64 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 43. பிறப்பும்‌ சிறப்பும்‌!

– பாடியவர்‌: தாமப்பல்‌ கண்ணனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்‌. திணை: வாகை. துறை: அரச வாகை. குறிப்பு: புலவரும்‌ அரச குமரனும்‌ வட்டுப்‌ பொருவுழிக்‌ கைகரப்ப, வெகுண்டு, வட்டுக்‌ கொண்டு எறிந்தானைச்‌, “சோழன்‌ மகன்‌ அல்லை’ என, நாணியுருந்தானை அவர்‌ பாடியது.

(பொறுத்தற்கு அரிய பிழையையும்‌ பொறுத்த குணவென்றி கூறுதலால்‌ இஃது அரச வாகை ஆயிற்று. யானே பிழைத்தனென்‌; சிறக்க நின்‌ ஆயுள்‌, மிக்குவரும்‌ இன்னீர்க்‌ காவிரி எக்கரிட்ட மணலினும்‌ பலவே” என வாழ்த்தும்‌ மன நிலையை அறித்து பாராட்டுக,)

நிலமிசை வாழ்நர்‌ அலமரல்‌ தீரத்‌,

தெறுகதிர்க்‌ கனலி வெம்மை தாங்கிக்‌,

கால்‌உண வாகச்‌, சுடரொடு கொட்கும்‌

அவிர்சடை முனிவரும்‌ மருளக்‌, கொடுஞ்சிறைக்‌

கூருகிர்ப்‌ பருந்தின்‌ ஏறுகுறித்‌ தொரீஇத்‌, 5 தன்னகம்‌ புக்க குறுநடைப்‌ புறவின்‌

தபுதி யஞ்சிச்‌ சீரை புக்க

வரையா ஈகை உரவோன்‌ மருக!

நேரார்க்‌ கடந்த முரண்மிகு திருவின்‌

தேர்வண்‌ கிள்ளி தம்பி! வார்‌ கோல்‌, 10

கொடுமர மறவர்‌ பெரும! கடுமான்‌

கைவண்‌ தோன்றல்‌! ஐயம்‌ உடையேன்‌,

ஆர்புனை தெரியல்நின்‌ முன்னோர்‌ எல்லாம்‌

பார்ப்பார்‌ நோவன செய்யலர்‌; மற்றுஇது

நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக்‌ கூறி, ட 15

“நின்யான்‌ பிழைத்தது நோவாய்‌; என்னினும்‌,

நீபிழைத்‌ தாய்போல்‌ நனிநா ணினையே,

“தம்மைப்‌ பிழைத்தோர்ப்‌ பொறுக்குஞ்‌ செம்மல்‌

இக்குடிப்‌ பிறந்தோர்க்‌ கெண்மை காணும்‌’ எனக்‌

காண்டகு மொய்ம்ப! காட்டினை ஆகலின்‌, 20 யானே பிழைத்தனென்‌! சிறக்கநின்‌ ஆயுள்‌;

மிக்குவரும்‌ இன்னாீரக்‌ காவிரி |

எக்கர்‌ இட்ட மணலினும்‌ பலவே!

தன்‌ அழிவுக்கு அஞ்சாது புறவினது அழிவுக்கே அஞ்சித்‌ தான்‌ துலையேறி அமர்ந்த ண ட எ வழிவந்தவனே!

புலியூர்க்‌ கேசிகன்‌ 65 பகைவரை வென்ற சிறப்பும்‌, மிக்க செல்வமும்‌ உடைய தேர்வண்‌ கிள்ளியின்‌ தம்பியே! நீண்ட அம்பினையும்‌ வளைந்த வில்லினை யும்‌ உடைய மறவர்களின்‌ தலைவனே! விரைந்த குதிரையை உடையவனே! கை வண்மையான தோன்றலே! “நின்‌ பிறப்பையே நான்‌ ஐயுறுகின்றேன்‌. நின்‌ முன்னோர்‌ எவரும்‌, பார்ப்பார்‌ துன்புற : எதனையும்‌ செய்யார்‌. மற்றும்‌ நினக்கு மட்டும்‌ இவ்‌ வெறுக்கத்தக்க செய்கை நியாயமோ?” எனக்கூறி, நீ என்னை வெறுக்குமாறு தவறு செய்தேன்‌. அது கண்டும்‌, நீ என்னை வெறாது, நின்‌ உத்தம குணத்தால்‌, நீயே பிழை செய்தாய்போல மிகவும்‌ நாணங்‌ கொண்டவனாயினாய்‌. தம்மைப்‌ பிழைத்தலர்களைப்‌ பொறுக்கும்‌ . பெருந்தகைமை இச்‌ சோழர்‌ குடியில்‌ பிறந்தவர்க்கு எளிது; இதோ காணும்‌ எனவும்‌ காட்டினை. வலியுடையவனே! தவறு செய்தவன்‌ யானே! பெருகிவரும்‌ காவிரி மணலினும்‌ நின்‌ வாழ்நாள்‌ பலவாகப்‌ பெருக, நீ நீண்ட காலம்‌ வாழ்வாயாக!

சொற்பொருள்‌: 3. கால்‌ உணவாக.- காற்றை உணவாகக்‌ கொண்டு. கொட்கும்‌ – சூழ வரும்‌ 4. மருள – வியப்பால்‌ மயங்க 5. ஏறு குறித்து – எறிதலைக்‌ கருதி. ஒரீஇ – அதனைத்‌ தப்பி. 7, தபதி _ – அழிவு. கீரைபுக்க – தன்‌ அழிவிற்கு அஞ்சாது துலாத்தலையுள்‌ : . புக்க. 9. முரண்மிகு – மாறுபாட்டான்‌ மிக்க. 10. வார்கோல்‌ – நீண்ட அம்பு. 11. கொடு மரம்‌ – வளைந்த வில்‌.

44, அறமும்‌ மறமும்‌!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌

நெடுங்கிள்ளி. திணை: வாகை. துறை: அரச வாகை. குறிப்பு:

நலங்கிள்ளி அவூரை முற்றியிருந்தான்‌; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக்‌ கண்டு பாடியது, இச்‌ செய்யுள்‌.

(அகத்து அரசற்கு அழிந்து கூறியதற்கு இளம்பூரணர்‌ எடுத்துக்‌ காட்டுவர்‌ (புறத்‌. சூ. 10). “நினது எனத்‌ திறத்தல்‌; அல்லது போரொடு திறத்தல்‌ அரசர்க்குரிய இயல்பு” என்று நினைந்து கூறினமையின்‌, அரச வாகை ஆயிற்று.)

இரும்பிடித்‌ தொழுதியொடு பெருங்கயம்‌ படியா,

நெல்லுடைக்‌ கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,

திருந்தரை நோன்வெளில்‌ வருந்த ஒற்றி,

நிலமிசைப்‌ புரளும்‌ கைய, வெய்துயிர்த்து,

அலமரல்‌ யானை உருமென முழங்கவும்‌, 5

பாலில்‌ குழவி அலறவும்‌, மகளிர்‌ . பூவில்‌ வறுந்தலை முடிப்பவும்‌, நீரில்‌

66 ட புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

வினைபுனை நல்லில்‌ இனைகூஉக்‌ கேட்பவும்‌,

இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்‌; ப

துன்னரும்‌ துப்பின்‌ வயமான்‌ தோன்றல்‌! க. 1௦

அறவை யாயின்‌, “நினது’ எனத்‌ திறத்தல்‌;

ம்றவை யாயின்‌, போரொடு திறத்தல்‌;

– அறவையும்‌ மறவையும்‌ அல்லை யாகத்‌

திறவாது அடைத்த திண்ணிலைக்‌ கதவின்‌

நீள்மதில்‌ ஒருசிறை ஒடுங்குதல்‌ 15

நாணுத்தக வுடைத்திது காணுங்‌ காலே.

பசி மிகுந்த யானைகள்‌ உணவு பெறாது, கட்டிய கம்பம்‌ வருந்தச்‌ சாய்ந்து, நிலத்திற்‌ புறண்டு, இடியேறுபோலப்‌ பிளிறுகின்றன. பாலில்லாதவாய்க்‌ குழந்தைகள்‌ அழுகின்றன. மகளிர்‌ பூவில்லாத வெறுந்தலையை முடிக்கின்றனர்‌. நல்ல வீட்டிலும்‌ குடிநீர்‌ இன்றி வருந்தி மக்கள்‌ கதறுகின்றனர்‌. இவையெல்லாம்‌ கேட்டும்‌ நாணங்கொள்ளாது இங்கு இனிதாக நீ இருப்பது மிகவும்‌ தவறானது. நெருங்க முடியாத ஆற்றல்‌ மிகுந்த ‘குதிரைகளையடைய தலைவனே! அறத்தை உடையவனானால்‌, “இது நின்‌ கோட்டைதானே’ எனக்‌ கூறித்‌ திறந்து விட்டுவிடு. அன்றி, வீரம்‌ உடையவன்‌ என்றால்‌, போர்‌ செய்வதற்காகக்‌ . கதவைத்‌ திறந்து எதிர்த்துச்‌ செல்‌. இரண்டும்‌ செய்யாது, மதிற்‌ கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே ஒளிந்திருத்தல்‌ வெட்கக்கேடு அகும்‌ (சோழனை இடித்துரைக்கிறார்‌ புலவர்‌.)

சொற்பொருள்‌: நெய்ம்மிதி – நெய்யால்‌ மிதித்துத்‌ திரட்டப்பட்ட கவளம்‌. பெறாஅ – பெறாவாய்‌. 3. அரை – மருங்கு. நோன்‌ வெளில்‌ – வலிய கம்பம்‌. 8. இனைகூஉக்‌ கேட்பவும்‌ – வருந்திக்‌ கூப்பிடும்‌ கூப்பீட்டைக்‌ கேட்பவும்‌.11. அறவை- அறத்தை யுடையை. 12. மறவை ஆயின்‌ – மறத்தையுடையை ஆயின்‌; வீரம்‌ உடைய ஆயின்‌. 14. திண்நிலைக்‌ கதவு திண்ணிய நிலையையுடை.ய மதிலின்‌ கதவு.

45. தோற்பது நும்‌ குடியே!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளியும்‌, நெடுங்கிள்ளியும்‌. திணை: வஞ்சி. துறை: துணை , வஞ்சி. குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும்‌, அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும்‌ பாடிய செய்யுள்‌ இது.

(“நும்மோரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌; குடிப்‌ பொருள்‌ தருவதும்‌ அன்று; இருவரும்‌ வென்றி காணல்‌ இயற்கையும்‌ அன்று” என்பன கூறிச்‌ சந்து செய்தலால்‌, இது துணை வஞ்சி ஆயிற்று?

புலியூர்க்‌ கேசிகன்‌ , ப 67 இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌. அல்லன்‌; ‘ கருஞ்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ அல்லன்‌; 5 நின்ன கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்நேர்‌; நின்னொடு பொருவோன்‌ கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே; ப ஒருவீர்‌ தோற்பினும்‌, தோற்பதும்‌ குடியே 5

“இருவீர்‌ வேறல்‌ இயற்கையும்‌ அன்றே; அதனால்‌, குடிப்பொருள்‌ அன்று, நும்‌ செய்தி; கொடித்தேர்‌ நும்மோர்‌ அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌, இவ்‌ இகலே!

…. நின்னைஎதிர்த்து நிற்பவன்‌ பனம்பூச்‌ சூடி ய சேரன்‌ அல்லன்‌; வேப்பந்தார்‌ அணிந்த பாண்டியனும்‌ அல்லன்‌. நின்‌ கண்ணியும்‌, நின்னுடன்‌ போரிடுவோன்‌ கண்ணியும்‌ ஆத்திப்‌ பூவால்‌ ஆயினவே. ஆகவே, ஒருவர்‌ தோற்றாலும்‌ தோற்பது நும்‌ சோழர்‌ குடியே அல்லவோ! இருவரும்‌ வெற்றி பெறுவதும்‌ இயல்பன்றே! அதனால்‌ நும்‌ செயல்‌ குடிப்‌ பெருமைக்குத்‌ தக்கதன்று. நும்போன்ற வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும்‌ அளவு நகையுண்டாக்குவதே நீவிர்‌ இயற்றும்‌ போராகும்‌. (ஈண்டு, இருவரையும்‌ புலவர்‌ இடித்து

உரைக்கும்‌ நயம்‌ சிறப்புடையது;) | ப

சொற்பொருள்‌: இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌ – – சேரன்‌. 2. கருஞ்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ – பாண்டியன்‌. 3. ஆர்மிடைந்தன்று – அத்தியால்‌ செறியக்‌ கட்டப்பட்டது. 7. குடிப்பொருள்‌ அன்று – நும்‌ குடிக்குத்‌ தக்கது ஒன்றன்று. 9: மெய்ம்மலி உவகை – உடம்பு பூரிக்கும்‌ உவகை. : 46. அருளும்‌ பகையும்‌!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌. குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. திணை: வஞ்சி, துறை: துணை வஞ்சி. குறிப்பு: மலையமான்‌ மக்களை யானைக்‌ காலில்‌ இட்ட காலத்துப்‌ பாடி உய்யக்‌.கொண்டது. ப

[அவரைக்‌ கொல்லாமல்‌ படிக்குச்‌ சந்துசெய்து காத்தலின்‌

இது துணை வஞ்சி ஆயிற்று. துணை வஞ்சித்‌ துறைக்கே இளம்பூரணர்‌ எடுத்துக்‌ காட்டுவர்‌ (புறத்‌. சூ.7) இப்‌ பாட்டு மேற்செலவின்கண்‌ அடங்காமையின்‌ துணைவஞ்சியன்று என்‌ அம்‌, பாடாண்திணைச்‌ செய்யுளே என்றும்‌ உரைப்பர்‌ ந்ச்சினார்க்‌ கினியர்‌ (தொல்‌. புறத்‌. சூ. 8 உரை] ப ப

நீயே, புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌

இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை!

68 .. புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

| இவரே, புலனுழுது உண்மார்‌ புன்கண்‌ அஞ்சித்‌, தமதுபகுத்து உண்ணும்‌ தண்ணிழல்‌ வாழ்நர்‌! களிறுகண்டு அழூ௨ம்‌ அழாஅல்‌ மறந்த 5 புன்றலைச்‌ சிறாஅர்‌ மன்று மருண்டு நோக்கி . “விருந்திற்‌ புன்கண்நோ வுடையர்‌! . கேட்டனை யாயின்‌, நீ வேட்டது செய்ம்மே!

புறாவின்‌ துயரமன்றியும்‌ பிற துயரங்கள்‌ பலவற்றையும்‌ நீக்கியவர்‌ மரபினன்‌ நீ! இவரோ, கற்றோர்‌ வறுமை அடையாத வாறு தம்‌ விளைபொருளைப்‌ பகுத்து உண்ணும்‌ குளிர்‌ நிழல்‌ வாழும்‌ மரபினர்‌! யானையைக்‌ கண்டதும்‌ தம்‌ இளமையால்‌ மகிழ்பவர்‌. அழுகையையும்‌ மறந்து நிற்பவர்‌. மிக்க சிறு பிள்ளைகள்‌! கூடியிருப்போரைப்‌ புதியவராகக்‌ கண்டு வருந்தும்‌ புதியதோர்‌ வருத்தமும்‌ உடையவர்‌. யாம்‌ சொன்னதைக்‌ கேட்டனை! ஆனால்‌, நின்‌ விருப்பப்படியே செய்க. (அருளும்‌ … இரசும்‌ புலவர்‌ உள்ளத்திலே கலக்க, அங்கே அருள்‌: ஒன்றே .. அரசினும்‌ சிறந்து எழக்‌ காட்டுவது இப்‌ பாடல்‌)

சொற்பொருள்‌: 4. தமது – தம்முடைய பொருளை. 7. புன்கண்‌ – வறுமையை. விருந்திற்‌ புன்கண்‌ நோவுடையர்‌ – முன்பு அறியாத புதியதோர்‌ வருத்தத்தை உடையவர்‌.

47. புலவரைக்‌ காத்த புலவா!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: காரியாற்றுத்‌ துஞ்சிய நெடுங்கிள்ளி. திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. குறிப்பு: சோழன்‌ நலங்கிள்ளியிடமிருந்து உறையூர்‌ புகுந்த இளந்தத்தன்‌ என்னும்‌ புலவனை, ஒற்று வந்தான்‌ என்று கொல்லப்‌ புகுந்தவிடத்துப்‌, பாடி உப்யக்கொண்ட செய்யுள்‌ இது.

(சந்து செய்து புலவரது உயிரை உய்யக்‌ கொண்டமையின்‌ துணைவஞ்சி ஆயிற்று. இளம்பூரணனார்‌ இத்‌ துறைக்கே – மேற்கோள்‌ காட்டுவர்‌. மேற்செலவின்கண்‌ அடங்காமையின்‌ துணைவஞ்சியன்று என்றும்‌, பாடாண்திணைச்‌ செய்யுள்‌ என்றும்‌ உரைப்பர்‌ நச்சினார்க்கினியர்‌ (தொல்‌.புறத்‌.சூ.8). பழிகாப்புச்‌ செவியுரை அங்கதம்‌ எனவும்‌ அவர்‌ விளக்குவர்‌. (தொல்‌. செய்‌ சூ. 128 உரை), ச ்‌

வள்ளியோர்ப்‌ படர்ந்து, புள்ளின்‌ போகி,

“நெடிய” என்னாது, சுரம்பல கடந்து,

வடியா நாவின்‌ வல்லாங்குப்‌ பாடிப்‌, ‘

பெற்றது மகிழ்ந்து, சுற்றம்‌ அருத்தி,

ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, 5

_ புலியூர்க்‌ கேசிகன்‌ ப 89 வரிசைக்கு வருந்தும்‌இப்‌ பரிசில்‌ வாழ்க்கை

பிறர்க்குத்‌ தீ தறிந்‌ தன்றோ? இன்றே; திறப்‌ பட

நண்ணார்‌ நாண, அண்ணாந்து ஏகி,

ஆங்குஇனிது ஒழுகின்‌ அல்லது, ஓங்கு புகழ்‌

மண்ணாள்‌ செல்வம்‌ எய்திய 1௦

நும்மோர்‌. அன்ன செம்மலும்‌ உடைத்தே.

“பழமரம்‌ நாடிச்செல்வன பறவை இனம்‌. அவைபோல, நீண்ட அரிய வழிபலவும்‌ கடந்து, தமக்கு வழங்குபவரை நாடிச்‌ செல்பவர்‌ பரிசிலர்கள்‌. அங்கு தம்‌ வல்லமைக்கு ஏற்பப்‌ பாடிப்‌ . பெறும்‌ பரிசிலால்‌ மகிழ்பவர்‌. ௮ப்‌ பொருள்‌ கொண்டு தம்‌ சுற்றத்தை உணவளித்துக்‌ காப்பவர்‌. பொருளை மிகுத்துக்‌ காப்பதும்‌ இவர்கள்‌ இயல்பன்று. தாமும்‌ உண்டு பிறர்க்கும்‌ மனமகிழ்வுடன்‌ வழங்குபவர்‌ இவர்‌. தம்மைப்‌ புரப்போரால்‌ பெறும்‌ சிறப்புக்காக இவ்வாறு வருந்தி நாளும்‌ அலைவதே இப்‌ பரிசிலர்களுடைய வாழ்க்கையின்‌ தன்மையாகும்‌. பிறர்க்குக்‌. : கொடுமை செய்ய அறிந்தவரோ இவர்‌ எனின்‌, இல்லை. கல்வியால்‌ தம்முடன்‌ மலைந்தவரை, அவர்‌ நாண வென்று, செம்மாந்து நடந்து, அவ்விடத்தில்‌ இனிதாக இவர்‌ ஓழுகுபவர்‌. வேந்தே! அவ்வாறு நிகழும்போது, “ஓங்கு புகழுடன்‌ நிலம்‌ ஆளும்‌ -நும்போன்ற சீரும்‌ உடையோர்‌ இவராவர்‌!” (பரிசிலர்‌ தன்மைகளைக்‌ கூறி, அப்‌ புலவரைக்‌ காத்தனர்‌ கோவர்கிழார்‌),

சொற்பொருள்‌: 1.படர்ந்து – நினைந்து. புள்ளிற்போகி – பழமரம்‌ தேடும்‌ பறவை போலப்‌ போகி. 3. வடி.யா – திருந்தாத. 5. கூம்பாது வீசி – உள்ளம்‌ மலர்ந்து வழங்கி. 8. நண்ணார்‌ – கல்வி முகத்தால்‌ தம்மொடு மலைந்தோர்‌. அண்ணாந்து க – மவத்து தலையெடுத்து நடந்து. ப

48. “கண்டனம்‌” என நினை!

பாடியவர்‌: பொய்கையார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ கோக்கோதை மார்பன்‌. திணை: பாடாண்‌. துறை: புலவராற்றுப்‌ படை.

(தலைவனது இயல்பையும்‌ ஊரையும்‌ உரைத்து. “முதுவாய்‌ – இரவல! எம்மும்‌ உள்‌”ளெனத்‌ தம்‌ தலைமை தோன்றக்‌ கூறினர்‌. இதனால்‌, இது புலவராற்றுப்படை ஆயிற்று.)

கோதை மார்பிற்‌ கோதை யானும்‌,

கோதையைப்‌ புணர்ந்தோர்‌ கோதை யானும்‌,

மாக்கழி மலர்ந்த நெய்த லானும்‌,

70 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ கள்நா றும்மே, கானல்‌அம்‌ தொண்டி; அஃதுஎம்‌ ஊரே; அவன்‌எம்‌ இறைவன்‌; ப 5 எம்மும்‌ உள்ளுமோ, முதுவாய்‌ இரவல, “அமர்மேம்‌ படுஉங்‌ காலை, நின்‌ புகழ்மேம்‌ படுநனைக்‌ கண்டனம்‌, எனவே.

2

சேரமான்‌ மார்பில்‌ விளங்கும்‌ மாலையாலும்‌, சேரமானை மணந்த மகளிர்‌ சூடிய மாலையாலும்‌, பெரிய கழியிடங்களிலே மலர்ந்த நெய்தற்பூவாலும்‌, தேன்‌ மணம்‌ வீசிக்‌ கொண்டிருக்கும்‌ கானலையுடையது எம்‌ தொண்டி. அதுதான்‌ எமது ஊர்‌. அச்‌ சேரமான்‌ எம்‌ இறைவன்‌! அவனிடம்‌ நீயும்‌ போவதாயின்‌ முதிய வாய்மையாளனான இரவலனே, “போர்க்களங்களில்‌ வெற்றி பெறும்போது நின்‌ புகழ்‌ போற்றுவானை யாம்‌ கண்டோம்‌’ என எம்மையும்‌ மறவாது சொல்வாயாக! (சொன்னால்‌, உறுதியாக மிக்க பரிசிலைப்‌ பெறுவாய்‌ என்பது கருத்து.)

சொற்பொருள்‌:3. மாக்கழி மலர்ந்த – கரிய கழியின்கண்‌ மலர்ந்த. 4. கானல்‌ – கடற்கரை; “காணல்‌: என்பதும்‌ பாடம்‌. 6. படர்தி அயின்‌ – போகின்றா யாயின்‌.

49. எங்ஙனம்‌ மொழிவேன்‌?

ப பாடியவர்‌: பொய்கையார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ கோக்கோதை மார்ன்‌. திணை: பாடாண்‌. துறை: புலவராற்றுப்‌ படை.

(பெருஞ்‌ செல்வம்‌ உடையவன்‌: நீ அவன்பாற்‌ செல்க என . ஆற்றுப்படுத்தினர்‌. அரசனது இயல்பைப்‌ புகழ்ந்தமையால்‌ இயன்மொழியாகவும்‌. கொள்ளப்படும்‌. அவனிடம்‌ ஆற்றுப்‌ படுத்தியமையால்‌ புலவராற்றுப்‌ படையும்‌ அகும்‌.)

நாடன்‌ என்கோ? ஊரன்‌ என்கோ,

பாடிமிழ்‌ பனிக்கடற்‌ சேர்ப்பன்‌ என்கோ,

யாங்கனம்‌ மொழிகோ, ஓங்குவாள்‌- கோதையை?

புனவர்‌ தட்டை புடைப்பின்‌, அயலது ன்‌

இறங்குகதிர்‌ அலமரு கழனியும்‌, ப 6:

பிறங்குநீர்ச்‌ சேர்ப்பினும்‌, புள்‌ ஒருங்கு எழுமே. ப

புனங்காப்போர்‌ தட்டையை அடித்து ஒலி ரண்த பக்கத்திலுள்ள கதிர்‌ தலை சாய்ந்து அசையும்‌ வயலிலும்‌ , மிக்க நீரையுடைய கடற்கரையிலுமுள்ள பறவையினங்கள்‌ ஒருசேர எழுகின்றனவே! அதனால்‌, மேம்பட்டவனான கோதையை, நாடன்‌ என்று நவில்வேனா? ஊரன்‌ என்று உரைப்பேனா? சேர்ப்பன்‌ என்று சொல்வேனா? எவ்வாறு கூறுவேன்‌ யான்‌? _

புலியூர்க்‌ கேசிகன்‌ ப. 71 சொற்பொருள்‌: 5. இறங்கு – வளைந்த. அலமரு – சுழலுகின்ற. 6. சேர்ப்பினும்‌ – கடற்கரைக்‌ கண்ணும்‌. நாடன்‌, ஊரன்‌, சேர்ப்பன்‌ என்பன முறையே குறிஞ்சி, மருத, நெய்தல்‌ நிலத்‌ தலைவரின்‌ _ பெயர்கள்‌. ப 50. கவரி வீசிய காவலன்‌!

பாடியவர்‌: மோசி£ரனார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ தகடூர்‌ எறிந்த பெருஞ்சேரல்‌ இரும்பொறை. திணை: பாடாண்‌. துறை: இயன்‌ மொழி. குறிப்பு: அறியாது முரசுகட்டிலில்‌ ஏறியவரைத்‌ தண்டம்‌ செய்யாது துயில்‌ எழுந்துணையும்‌ கவரிகொண்டு -: வீசினன்‌ சேரமான்‌; அது குறித்துப்‌ புலவர்‌ பாடிய செய்யுள்‌ இது.

. [அரசனது இயல்பை வியந்து கூறினமையால்‌, இயன்‌ மொழி ஆயிற்று. “முரசு நாட்கோடலுக்கு” அடியார்க்கு நல்லார்‌ எடுத்துக்‌ காட்டுவர்‌ (சிலப்‌. 5.89 – 94 உரை]

மாசற விசித்த வார்புஉறு வள்பின்‌

மைபடு மருங்குல்‌ பொலிய, மஞ்ஞை

ஒலிநெடும்‌ பீலி ஒண்பொறி, மணித்தார்‌,

பொலங்குழை உழிஞையொடு, பொலியச்‌ சூட்டிக்‌,

குருதி வேட்கை உருகெழு முரசம்‌ ப ப 5 மண்ணி வாரா அளவை, எண்ணெய்‌ ப நுரைமுகந்‌ தன்ன மென்பூஞ்‌ சேக்கை

அறியாது ஏறிய என்னைத்‌, தெறுவர, இருபாற்‌ படுக்குநின்‌ வாள்வாய்‌ ஒழித்ததை அதூ௨ம்‌ சாலும்‌, நற்‌ ற்மிழ்‌ முழுது அறிதல்‌; _ 10

அதனொடும்‌ அமையாது, அணுக வந்து, நின்‌

மதனுடை முழுவுத்தோள்‌ ஓச்சித்‌, தண்ணென

வீசி யோயே; வியலிடம்‌ கமழ,

இவண்‌இசை உடையோர்க்கு அல்லது, அவணது

உயர்நிலை உலகத்து உறையுள்‌ இன்மை 15

விளங்கக்‌ கேட்ட மாறுகொல்‌, வலம்படு குருசில்‌, நீ ஈங்குஇது செயலே?

வீர முரசும்‌ கட்டிலினின்றும்‌ நீராடக்‌ கொண்டு செல்லப்‌ பட்டிருந்தது. அவ்வேளை, எண்ணெய்‌ நுரை முகந்தாற்போல மெல்லிய பூ விரித்துக்‌ கிடந்த இம்‌ முரசு கட்டிலில்‌ உண்மை அறியாது உறங்கிக்‌ கிடந்தேன்‌. அவ்வாறு கிடந்த என்னை இருகூறாக்காது, நின்‌ வாளை மாற்றியதொன்றே தமிழறிந்தாரை மதிக்கும்‌ நின்‌ . மாண்பினை உணர்த்தப்‌ போதுமானதாகும்‌.

72 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ அத்துடனும்‌ அமையாது, அருகே வந்து, நின்‌ வலிய முழவுத்தோளால்‌ விசிறி கொண்டும்‌ குளிர வீசி நின்றனை! வெற்றி பொருந்தும்‌ தலைவனே! “இங்கே புகழ்‌ உடையவர்க்கு அல்லாது பிறருக்கு உயர்நிலை உலகத்து வாழ்வு கிடையாது” என்ற உண்மையை விளங்கக்‌ கேட்டதனாலோ, நீ இவ்வாறு இங்கே இப்படிச்‌ செய்தனை, பெருமானே! ‘

சொற்பொருள்‌: 1 வள்பின்‌ – வாரையுடைய 2. மைபடு மருங்குல்‌ பொலிய – கருமரத்தாற்‌ செய்தலான்‌, இருட்சி பொருந்திய பக்கம்‌ பொலிவு பெற. 6. மண்ணி – நீராடி. 8. தெறுவர – வெருட்சி தோன்ற. 9. வாள்வாய்‌ ஒழித்ததை – வாளினது வாயை மாற்றியதாகிய. 12. மதனுடை – வலியையுடைய. 12. தண்ணென வீசியோய்‌ – சாமரத்தாற்‌ குளிர வீசியவனே! 51. ஈசலும்‌ எதிர்ந்தோரும்‌! பாடியவர்‌: ஐயூர்‌ முடவனார்‌! ஐயூர்‌ கிழார்‌ எனவும்‌ பாடம்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ கூடகாரத்துத்‌ துஞ்சிய மாறன்‌ வழுதி. திணை: வாகை. துறை: அரச வாகை. குறிப்பு: “செம்புற்று ஈயல்போல ஒருபகல்‌ வாழ்க்கைக்கு உலமருவோர்‌” என்னும்‌ செறிவான அறவுரையைக்‌ கூறுவது. ப (பகை “மன்னரை வென்று கொள்ளும்‌ வெற்றி மேம்பாட்டினும்‌, கொடை மாண்பினும்‌ மிக்கோன்‌ எனக்கூறி, அவனது வென்றியைச்‌ சிறப்பித்ததனால்‌, அரசவாகை ஆயிற்று) நீர்மிகின்‌, சிறையும்‌ இல்லை; தீமிகின்‌, மன்னுயிர்‌ நிழற்றும்‌ நிழலும்‌ இல்லை; வளிமிகின்‌, வலியும்‌ இல்லை; ஒளிமிக்கு அவற்றோர்‌ அன்ன சினப்போர்‌ வழுதி, ‘தண்தமிழ்‌ பொது’ எனப்‌ பொறாஅன்‌, போர்‌ எதிர்ந்து, 5 கொண்டி வேண்டுவன்‌ ஆயின்‌, “கொள்க: எனக்‌ கொடுத்த மன்னர்‌ நடுக்கற்‌ றனரே; அளியரோ அளியர்‌, அவன்‌ அளிஇழந்‌ தோரே; நுண்பல்‌ சிதலை அரிதுமுயன்று எடுத்த செம்புற்று ஈயல்‌ போல, ன சோர 10 ஒருபகல்‌ வாழ்க்கைக்கு உலமரு வோரே! ப

பெருக்கெடுத்து வரும்‌ வெள்ளத்தைத்‌ தடுக்கவொரு தடையும்‌ இல்லை. மிகுந்துவிட்ட நெருப்புக்கு அஞ்சி ஒதுங்க ஒரு “நிழலும்‌ இல்லை. கொடுங்காற்றை எதிர்க்க ஒரு வலியும்‌ இல்லை. இவற்றைப்போன்று, சினத்துடன்‌ போரிடும்‌ வழுதி, “தண்‌, தமிழ்‌ பொது” என்ற சொல்லைப்‌ பொறாது போருக்கு எழுந்தா

புலியூர்க்‌ கேசிகன்‌ ட 73

னென்றால்‌, அவனுக்கு எதிர்நிற்பவரும்‌ யாருமிலர்‌. திறை தந்து .: பணிந்தோர்‌ நடுக்கம்‌ தீர்பவராவர்‌; பிறரோ, இரங்கத்தக்க நிலையினையே அடைவர்‌. அவர்‌ வாழ்வு, புற்றிலிருந்து எழும்‌ ஈசலின்‌ வாழ்வைப்‌ போன்று, போர்க்கெழுந்த ஒரு .. பகலுக்குள்ளாகவே, தவறாது அழிந்துபோம்‌.

சொற்பொருள்‌: 6. கொண்டி – திறை; கொள்ளப்படுவது எனும்‌ “பொருள்படுவது. 9. சிதலை – கரையான்‌. 10. ஈயல்‌ – இறக்கை யுடையதான அண்கரையான்‌; ஈசல்‌ எனச்‌ சில பகுதியினர்‌ வழங்குவர்‌.

52. ஊன்‌ விரும்பிய புலி!

பாடியவர்‌: மருதன்‌ இளநாகனார்‌; மருதிள நாகனார்‌ என்பதும்‌ பாடம்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ கூட காரத்துத்‌ துஞ்சிய மாறன்‌ வழுதி. திணை: வாகை. துறை: அரச வாகை. குறிப்பு: நாயும்‌ புலியும்‌ என்னும்‌ வல்லாடல்‌ பற்றிய செய்தி.

(அரசன்‌ “எண்ணிய எண்ணியாங்கே செயலாற்றி மேம்படும்‌ சிறப்பினன்‌” என, அவனது வென்றி மேம்பாட்டையும்‌ அவனது நாடு வளமுடையது எனக்‌ காவன்‌ மேம்பாட்டையும்‌ கூறிச்‌ ்‌ சிறப்பித்தாதலின்‌, அரசவாகை ஆயிற்று.)

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம்‌ முனைஇ, முணங்குநிமிர்‌ வயமான்‌ முழுவலி ஒருத்தல்‌,

ஊன்நசை உள்ளம்‌ துரப்ப, இசை குறித்துத்‌

தான்வேண்டு மருங்கின்‌ வேட்டுஎழுந்‌ தாங்கு,

வடபுல மன்னர்‌ வாட, அடல்‌ குறித்து, 5 இன்னா வெம்போர்‌ இயல்தேர்‌ வழுதி, .

இதுநீ கண்ணியது ஆயின்‌, இரு நிலத்து

யார்கொல்‌ அளியர்‌ தாமே? ஊர்தொறும்‌

மீன்சுடு புகையின்‌ புலவுநாறு நெடுங்கொடி

வயல்‌ உழை மருதின்‌ வாங்குசினை வலக்கும்‌, 10

பெருநல்‌ யாணரின்‌ ஒரீஇ, இனியே

கலிகெழு கடவுள்‌ கந்தம்‌ கைவிடப்‌

பலிகண்‌ மாறிய பாழ்படு பொதியில்‌,

நரைமூ தாளர்‌ நாயிடக்‌ குழிந்த

வல்லின்‌ நல்லகம்‌ நிறையப்‌, பல்பொறிக்‌ 12 கான வாரணம்‌ ஈனும்‌ ப ப

காடாகி விளியம்‌ நாடுடை யோரே.

மலைக்‌ குகையினுள்ளே வாழும்‌ ஆண்‌ புலியானது, உணவை விரும்பிப்‌ புறப்பட்டுவிட்டால்‌, எந்த விலங்காயினும்‌ அதனை

74 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ ப

எதிர்த்துநின்று உயிர்பிழைக்க முடியுமோ? அதேபோன்று, வடநாட்டு வேந்தர்கள்‌ வாடுமாறு, அவரை ஒழிக்கக்‌ கருதி நீ தேரில்‌ அமர்ந்து போருக்கு எழுந்து விட்டால்‌, வழுதியே! இப்‌ பெரிய உலகில்‌ நினக்கு எதிர்நின்று உயிர்பிழைத்து வாழ்வார்தாம்‌ யாரோ? மீன்சுடும்‌ நாற்றம்‌ மிகுந்த பகைவரின்‌ வயல்களெல்லாம்‌ ‘புதுவருவாயின்றி அழியும்‌. தெய்வ வழிபாடுகள்‌ நீங்கிப்‌ பலி இடங்கள்‌ பாழ்‌ விழுந்த இடங்களிலே காட்டுக்‌ கோழிகள்‌ முட்டையிடும்‌. இவ்வாறே, பகைவரின்‌ வளநாடுகள்‌, அவர்‌ நின்னைப்‌ பகைத்தனர்‌ என்றால்‌, முற்றவும்‌ அழித்து காடாகிக்‌ .. கெடுமே!

சொற்பொருள்‌: 2 முணங்குநிமிர்‌ – சோம்பல்‌ முரித்தல்‌. 9. நெடுங்கொடி – நெடிய ஒழுங்கு. 10. வலக்கும்‌ – சூழும்‌. 12. கலிகெழு கடவுள்‌ – முழவு முதலாகிய ஓலிபொருந்திய தெய்வ இடங்கள்‌. 14. நாய்‌ – சூதாடுங்‌ கருவி. 15. வல்லின்‌ நல்லகம்‌ – சூதாடு கருவியினது நல்ல மனையாகிய இடம்‌. 16. கான வாரணம்‌ – காட்டுக்‌ கோழி. .

59. செந்நாவும்‌ சேரன்‌ புகழும்‌!

பாடியவர்‌: பொருந்தில்‌ இளங்கீரனார்‌ பாடப்பட்டோன்‌: சேரமான்‌ மாந்தரஞ்சேரல்‌ இரும்பொறை. திணை: வாகை. துறை:

அரச வாகை. குறிப்பு: கைகோத்து அடும்‌ தெற்றியாட்டம்‌ பற்றிய செய்தி.

(அரசனது புகழை மேம்படுத்திக்‌ கூறினார்‌. கபிலரது புலமையை வியந்து கூறியுள்ள திறமும்‌ வியத்தற்கு உரியது.) முதிர்வார்‌ இப்பி முத்த வார்மணல்‌, ட – கதிர்விடு மணியின்‌ கண்பொரு மாடத்து, இலங்குவளை மகளிர்‌ தெற்றி ஆடும்‌ விளங்குசீர்‌ விளங்கில்‌ விழுமம்‌ கொன்ற

களங்கொள்‌ யானைக்‌, கடுமான்‌ பொறைய! _- 5

விரிப்பின்‌ அகலும்‌; தொகுப்பின்‌ எஞ்சும்‌;

மம்மர்‌ நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை

கைம்முற்‌ றலநின்‌ புகழே, என்றும்‌, ‘

ஒளியோர்‌ பிறந்தஇம்‌ மலர்தலை உலகத்து

வாழேம்‌ என்றாலும்‌ அரிதே; ‘தாழாது 30 செறுத்த செய்யுள்‌ செய்செந்‌ நாவின்‌,

வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க்‌ கபிலன்‌

இன்றுளன்‌ ஆயின்‌, நன்றுமன்‌” என்ற நின்‌

ஆடு கொள்‌ வரிசைக்கு ஒப்பப்‌

பாடுவன்‌ மன்னால்‌, பகைவரைக்‌ கடப்பே, 15

புலியூர்க்‌ கேசிகன்‌ ட டட 75. சிப்‌.பியில்‌ பிறந்த முத்துப்‌ போன்ற வெண்மணல்‌ நிறைந்த முற்றத்தையுடைய கண்கவரும்‌ மாடத்தின்மேல்‌, வளையணிந்த இளமகளிர்‌ தெற்றியாடிக்‌ கொண்டிருப்பர்‌. அத்தகைய விளங்கிலைப்‌ பகைவர்‌ சூழ்ந்தனராக, அவரை வென்று, அதன்‌ துயரைத்‌ தீர்த்தனை. வலிமிகுந்த யானைப்‌ படையையும்‌ குதிரைப்‌ படையையும்‌ உடையவனே! பொறையனே! நின்‌ புகழை விரித்துஞ்‌ சொல்ல முடியவில்லை! தொகுத்துஞ்‌ சொல்ல இயலவில்லை! அதனால்‌, மயங்கிய நெஞ்சினனான எனக்கு, ஒருக்காலும்‌ நின்னை வாழ்த்தவும்‌ முடியாது. “கல்வி சிறந்தோர்‌ பிறந்த இந்நாட்டிலே, நாமும்‌ வாழோம்‌’ என்று போய்விடவும்‌ கூடாது. “பல பொருள்களையும்‌ அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும்‌ செந்‌ நாவும்‌, . மிக்க அறிவும்‌, விளங்கிய புகழும்‌ உடைய கபிலன்‌ இன்றிருந்தால்‌ நல்லது” என்று நீ சொன்னாய்‌. அது நன்று! அவரில்லாததால்‌, நின்‌ பகைவரை வெற்றி கொண்ட சிறப்பை என்னால்‌ இயன்றவரை யானே பாடுவேன்‌; கேட்பாயாக!

சொற்பொருள்‌: 3. தெற்றி – மகளிர்‌ விளையாட்டு. 4. விழுமம்‌ – பகைவரான்‌ வந்த இடும்பை. 6. எஞ்சும்‌ – பொருள்‌ ஒழிவுபடும்‌. 11. செறுத்த – பல பொருளையும்‌ அடக்கிய. 12. வெறுத்த கேள்வி – மிக்க கேள்வி. 15. கடப்பு – வென்றி. மன்‌: கழிவின்கண்‌ வந்தது.

54. எளிதும்‌ கடிதும்‌!

பாடியவர்‌: கோனாட்டு எறிச்சலூர்‌ மாடலன்‌ மதுரைக்‌ குமரனார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ குட்டுவன்‌ ரத திணை: வாகை. துறை: அரச வாகை.

(“அவை புகுதல்‌ இரவலர்க்கு எளிது, நாடு மன்னர்க்குப்‌ புலி துஞ்சுல்‌ வியன்‌ புலத்தற்று’ என, அக அம்‌ ப கூறினர்‌… அதனால்‌, அரச வாகை ஆயிற்று.)

எங்கோன்‌ இருந்த கம்பலை மூதூர்‌, :

உடையோர்‌ போல இடையின்று குறுகிச்‌,

செம்மல்‌ நாளவை அண்ணாந்து புகுதல்‌

எம்‌அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;

இரவலர்க்கு எண்மை யல்லது, புரவு எதிர்ந்து 5-

வானம்‌ நாண, வரையாது, சென்றோர்க்கு ஆனாது ஈயும்‌ கவிகை வண்மைக்‌ கடுமான்‌ கோதை துப்பெதிர்ந்து எழுந்த நெடுமொழி மன்னர்‌ நினைக்குங்‌ காலைப்‌, பாசிலைத்‌ தொடுத்த உவலைக்‌ கண்ணி, 1௦

76 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ -மாசுண்‌ உடுக்கை, மடிவாய்‌, இடையன்‌

சிறுதலை ஆயமொடு குறுகல்‌ செல்லாப்‌

புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே ‘

வலிதுஞ்சு தடக்கை அவனுடை. நாடே.

நாடுகாவலை ஏற்றுக்கொண்டு, வானத்து மழையும்‌ நாணும்படியாக, இரவலர்க்கு வரையாது வழங்குபவன்‌ கடுமான்‌ கோதை. அவன்‌ எம்‌ இறைவன்‌! அவன்‌ தலை நகரிலே, அந்‌ நகரவரே போலக்‌ கேட்பாரின்றி தலைநிமிர்ந்து செல்வது எம்போன்ற இரவலர்க்கு மட்டுமே மிகவும்‌ எளிது. எம்போல அதனுள்‌ புகுவதற்கு எளிது எனப்‌ பகைவரும்‌ நினைத்தால்‌, அது அவரது அறியாமையே யாகும்‌. இடையன்‌ ஆட்டு மந்தையை ஓட்டிக்‌ கொண்டு புலி படுத்திருக்கும்‌ இடத்தை நோக்கிப்‌ போயினாற்‌ போல, வலிமிகுந்த அவன்‌ ஊரினுட்‌ புகமுயன்ற மாற்றார்தம்‌ நிலையும்‌ படையும்‌ அழிந்து போக, அவர்‌ முயற்சியும்‌ அவர்க்கே கேடாக முடியும்‌!

சொற்பொருள்‌: 3 நாளவை – நாளோலக்கத்தின்கண்‌. 2. கவிகை – இடக்‌ கவிந்த கை. 8. துப்பு எதிர்ந்து – வலியொடு மாறுபட்டு. 9. நெடு மொழி – வஞ்சினம்‌. 10. உவலைக்‌ கண்ணி – தழைக்‌ கண்ணி. 12. சிறுதலை ஆயம்‌ – சிறிய தலையை யுடைய ஆட்டினம்‌.

55. மூன்று அறங்கள்‌!

பாடியவர்‌: மதுரை மருதன்‌ இளநாகனார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ இலவந்திகைப்‌ பள்ளித்‌ துஞ்சிய நன்மாறன்‌. திணை: பாடாண்‌. துறை: செறியறிவுறூஉ.

(அரசின்‌ கொற்றம்‌ அறநெறி முதற்று. அதனாற்‌ கோல்‌ கோடாது, குணங்‌ கொல்லாது, அண்மையும்‌ சாயலும்‌ வண்மையும்‌ உடையையாகி, இல்லோர்‌ கையற, நீ எக்கர்‌

மணலினும்‌ பல காலம்‌ வாழ்க” என, அறநெறி அறிவுறுத்தி வாழ்த்தலின்‌, செவியறிவு றூஉ ஆயிற்று.)

ஓங்குமலைப்‌ பெருவில்‌ பாம்பு ஞாண்‌ கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூவெயில்‌ உடற்றிப்‌

பெருவிறல்‌ அமரர்க்கு வென்றி தந்த

கறை மிடற்று அண்ணல்‌ காமர்‌ சென்னிப்‌

பிறைநுதல்‌ விளங்கும்‌ ஒருகண்‌ போல, 5 வேந்து மேம்பட்ட பூந்தார்‌ மாற!

கடுஞ்‌ சினத்த கொல்களிறும்‌;

கதழ்பரிய கலிமாவும்‌,

புலியூர்க்‌ கேசிகன்‌ ரர நெடுங்கொடிய நிமிர்தேரும்‌, நெஞ்சுடைய புகழ்மறவரும்‌, என, 10

நான்குடன்‌ மாண்ட தாயினும்‌, மாண்ட

அறநெறி முதற்றே, அரசின்‌ கொற்றம்‌;

அதனால்‌, நமரெனக்‌ கோல்கோ டாது,

“பிறர்‌” எனக்‌ குணங்‌ கொல்லாது, ப ஞாயிற்‌ றன்ன வெந்திறல்‌ ஆண்மையும்‌, ப 15 திங்கள்‌ அன்ன தண்பெருஞ்‌ சாயலும்‌,

(வானத்து அன்ன வண்மையும்‌, மூன்றும்‌,

உடையை ஆகி, இல்லோர்‌ கையற,

நீ நீடு வாழிய நெடுந்தகை; தாழ்நீர்‌

வெண்தலைப்‌ புணரி அலைக்கும்‌ செந்தில்‌ 20 நெடுவேள்‌ நிலைஇய காமர்‌ வியன்துறைக, ப

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுஆம்‌ எக்கர்‌ மணலினும்‌ பலவே.

மூவெயில்‌ எய்து அழித்த இறைவனின்‌ நெற்றிக்கண்ணைப்‌ ப போலப்‌ பிற வேந்தரினும்‌ மேம்பட்டு விளங்கும்‌ மாறனே! கொல்களிறும்‌, விரைந்து செல்லும்‌ குதிரையும்‌, கொடி பறக்கும்‌ தேரும்‌, அஞ்சாத போர்‌ மறவரும்‌ உடையாய்‌! அவை நினக்குப்‌ பெருமை தருவனவே; என்றாலும்‌, அறநெறியை முதலாக – உடையதே அரசனது சிறப்பு: அதனால்‌, “நம்மவர்‌’ என அறம்‌ கோணாது, “அயலார்‌’ என அவர்‌ நற்குணங்களை வெறுத்து அவரைக்‌ கொல்லாது, ஞாயிறு போன்ற கொடையும்‌, திங்கள்‌ “போன்ற அருளும்‌, மழை போன்ற கொடையும்‌ உடையவனாக நீ விளங்குக! இல்லாதவர்க்கு இரங்கி அவர்‌ துயரினைத்‌ தீர்ப்பாயாக. நெடுந்தகையே! திருச்செந்தூர்க்‌ கடற்கரையிலே பெருங்காற்றுத்‌ திரட்டிக்‌ குவித்திருக்கும்‌ மணலினும்‌ காட்டில்‌ நெடுநாள்‌ புகமுடன்‌ நீயும்‌ வாழ்வாயாக!

சொற்பொருள்‌: வேந்து மேம்பட்ட – பிறவேந்தருள்ளும்‌ மேம்பட்ட. 7 கதழ்‌ – விரைவு. கலி – மனம்‌ செருக்கிய. 14. சாயலும்‌ – மென்மையும்‌. 16. கையற – இல்லையாக. 18. புணரி – அலை. செந்தில்‌. – – திருச்செந்தூர்‌. 27. எக்கர்‌ – மணல்‌ மேடு.

56. கடவுளரும்‌ காவலனும்‌!

பாடியவர்‌: மதுரைக்‌ கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌;

(மதுரை மருதன்‌ இளநாகனார்‌ எனவும்‌ பாடம்‌). பாடப்பட்டோன்‌:

பாண்டியன்‌ இலவந்திகைப்‌ பள்ளித்‌ துஞ்சிய நன்மாறன்‌. க ன்‌ பாடாண்‌. துறை: பூவை நிலை.

78 __ புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

(பாண்டியனை வெங்கதிர்ச்‌ செல்வனோடு உவமித்துக்‌ கூறுதலால்‌ பூவைநிலை ஆயிற்று.)

ஏற்று வலன்‌ உயரிய எரிமருள்‌ அவிர்சடை,

மாற்றருங்‌ கணிச்சி, மணிமிடற்‌ றோனும்‌,,

கடல்‌ வளர்‌ புரிவளை புரையும்‌ மேனி,

அடல்‌ வெந்‌ நாஞ்சில்‌, பனைக்கொடி யோனும்‌

மண்‌ ணுறு திருமணி புரையும்‌ மேனி, 5

விண்ணுயர்‌ புட்கொடி விறல்வெய்‌ யோனும்‌, மணி மயில்‌ உயரிய மாறா வென்றிப்‌, பிணிமுக ஊர்தி, ஒண்செய்‌ யோனும்‌ – என ஞாலம்‌ காக்கும்‌ கால முன்பின்‌, தோலா நல்‌இசை, நால்வர்‌ உள்ளும்‌, ப 1௦ கூற்றுஒத்‌ தீயே, மாற்றருஞ்‌ சீற்றம்‌; வலிஒத்‌ தீயே, வாலி யோனைப்‌; _ புகழ்‌ஒத்‌ தீயே, இகழுநர்‌ அடுநனை; முருகுஒத்‌ தீயே, முன்னியது முடித்தலின்‌; ஆங்கு ஆங்கு அவரவர்‌ ஒத்தலின்‌, யாங்கும்‌ 15 அரியவும்‌ உளவோ, நினக்கே? அதனால்‌, இரவலர்க்கு அருங்கலம்‌ அருகாது ஈயா யவனர்‌ நன்கலம்‌ தந்த தண்கமழ்‌ தேறல்‌. பொன்செய்‌ புனைகலத்து ஏந்தி, நாளும்‌ ப ஒண்தொடி மகளிர்‌ மடுப்ப, மகிழ்‌ சிறந்து, ப 20

ஆங்கினிது ஒழுகுமதி ஓங்குவாள்‌ மாற

அங்கண்‌ விசும்பின்‌ ஆரிருள்‌ அகற்றும்‌

வெங்கதிர்ச்‌ செல்வன்‌ போலவும்‌, குடதிசைத்‌

தண்கதிர்‌. மதியம்‌ போலவும்‌,

நின்று நிலைஇயர்‌ உலகமோடு, உடனே. 25

வெற்றியால்‌ உயர்ந்த வாளையுடைய மாறனே! சினத்தால்‌ கூற்றத்தையும்‌, வலியால்‌ பலராமனையும்‌, புகழால்‌ பகைவரை அழித்த மாயோனையும்‌, எண்ணியது முடித்தலால்‌ முருக வேளையும்‌ நீ ஒப்பவனாவாய்‌! நினக்கு அரியனவும்‌ உளவோ? அதனால்‌, இரவலர்க்குப்‌ பெறுதற்கரிய அணிகலன்களை – வழங்குகின்றாய்‌. யவனர்‌, கலன்‌ ஏற்றிக்‌ கொண்டுதந்த ம துவைப்‌, பொற்கலனில்‌ நாடோறும்‌ இளமகளிர்‌ வார்த்து ஊட்ட, உண்டு மகிழ்கின்றாய்‌. வானத்து இருள்நீக்கும்‌ வெங்கதிர்‌ ஞாயிற்றைப்‌ போலவும்‌, மேல்‌-திசையிலே விளங்கும்‌ பிறை போலவும்‌, உலகம்‌ உள்ளளவும்‌ நிலைபெற்று, நீயும்‌, பகைவர்க்கு வெம்மையும்‌,

இரவலர்க்குத்‌ தண்மையும்‌ உடையவனாக வாழ்வாயாக!

புலியூர்க்‌ கேசிகன்‌ 19.

சொற்பொருள்‌: 2. கணிச்சி – மழுப்படை. 5. திருமணி – அழகிய நீல. மணி. 6. புட்கொடி – கருடக்‌ கொடி. 8. பிணிமுகம்‌ – மயில்‌; முருகன்‌ ஏறும்‌ யானை என்றும்‌ கூறுப. 9. கால முன்பின்‌ – முடிவு காலத்தைச்‌ செய்யும்‌ வலியினையும்‌. 12. வலி – வலியால்‌. வாலியோன்‌ – நம்பி மூத்த பிரானாகிய பலதேவன்‌; வெண்ணிறம்‌ உடையவன்‌ ஆதலின்‌ வாலியோன்‌ என்றார்‌. 13. இகழுநர்‌ அடுநனை – பகைவரைக்‌ கொல்லும்‌ மாயோனை. 14. முருகு – முருகன்‌. 17. ஈயா – ஈந்து. 18. நன்கலம்‌ – நல்ல கப்பல்‌. 20. மகளிர்‌ மடுப்ப – மகளிர்‌ ஊட்ட. 21. மதி : அசை.

57. காவன்மரமும்‌ கட்டுத்தறியும்‌!

பாடியவர்‌: காவிரிப்பூம்‌ பட்டினத்துக்‌ காரிக்கண்ணனார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ இலவந்திகைப்‌ பள்ளித்‌: துஞ்சிய நன்மாறன்‌. திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி.

[ நின்‌ யானைக்குக்‌ கந்து ஆற்றாவாதலால்‌, கடி.மரந்‌ தடி.தல்‌ ஓம்பு எனக்‌ கூறுவார்போற்‌ சந்துசெய்விக்கும்‌ நினைவாற்‌ கூறினமையின்‌, துணைவஞ்சி ஆயிற்று. புகழ்தல்‌ கருத்தாகக்‌ கொள்ளின்‌ பாடாண்‌ திணை, கொற்றவள்ளைத்‌ துறை ஆகும்‌ – (புறத்‌.34, நச்சர்‌)]

வல்லார்‌ ஆயினும்‌, வல்லுநர்‌ ஆயினும்‌,

புகழ்தல்‌ உற்றோர்க்கு மாயோன்‌ அன்ன,

உரைசால்‌ சிறப்பின்‌ புகழ்சால்‌ மாற! ஷு ஜு

நின்னொன்று கூறுவது உடையேன்‌ என்னெனின்‌,

நீயே, பிறர்நாடு கொள்ளும்‌ காலை, அவர்‌ நாட்டு _- டத

இறங்குகதிர்க்‌ கழனிநின்‌ இளையரும்‌ கவர்க:

நனந்தலைப்‌ போரூர்‌ எரியும்‌ நைக்க;

மின்னுநிமிர்ந்‌ தன்ன நின்‌ ஒளிறுஇலங்கு நெடுவேல்‌

ஒன்னார்ச்‌ செகுப்பினும்‌ செகுக்க; என்னதூஉம்‌

கடிமரம்‌ தடிதல்‌ ஓம்பு; நின்‌ ப 1௦

நெடுநல்‌ யானைக்குக்‌ கந்தாற்‌ றாவே. ர்‌

வல்லவரானாலும்‌ அல்லாதவரானாலும்‌ நின்னைப்புகழ்ந்து ” போற்றியவருக்கு மாயோனைப்போலத்‌ துணைநின்று அருளிக்‌ காக்கும்‌ புகழ்‌ அமைந்தவனே! மாறனே! நின்னிடம்‌ ஒன்று -கூற விரும்புகிறேன்‌. “பகைவர்‌ நாட்டின்மேல்‌ நீ படையெடுத்துச்‌ செல்லுங்‌ காலத்திலே, விளைவயலை வேண்டுமானாலும்‌ – கொள்ளையிடுவாயாக, பேரூர்களையும்‌ எரிவூட்டுவாயாக; நின்‌ நெடுவேலால்‌ பகைவரை அழித்துக்‌ கொல்லினும்‌ கொல்லுக. ஆனால்‌, காவல்‌ மரங்களை மட்டும்‌: ஒரு போதும்‌

80 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

வெட்டாதிருப்பாயாக. அவை எல்லாம்‌ இளமரங்கள்‌. நின்‌ யானைகளுக்குக்‌ கட்டுத்தறிகளாக அவை ஒருபோதும்‌ பயன்படா.” (இவ்வாறு கூறி, அவனைப்‌ போர்‌ நீக்கிச்‌ சமாதானம்‌ பேணத்‌. தூண்டுகிறார்‌ புலவர்‌, அவன்‌ வலிமையையும்‌ கூறுகின்றார்‌.)

சொற்பொருள்‌: 6. இறங்கு கதிர்‌ – வளைந்த கதிர்‌. இளையர்‌ – வீரர்‌. நைக்க – சுடுக. ஒளிறு – பாடஞ்‌ செய்தல்‌; பாடம்‌ செய்தலாவது வடித்துத்‌ தீட்டி, நெய்பூசி உறையிலிட்டு வைத்தல்‌. 9. என்னதூம்‌ – யாவதும்‌. 11. கடி.மரம்‌ – காவல்‌ மரம்‌. கந்து ஆற்றா – நட்டு நிற்கின்ற தறிகள்‌ ஆக மாட்டா.

58. புலியும்‌ கயலும்‌!

பாடியவர்‌: காவிரிப்‌ பூம்பட்டினத்துக்‌ காரிக்கண்ணனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குராப்பள்ளித்‌ துஞ்சிய பெருந்‌ திருமாவளவனும்‌ பாண்டியன்‌ வெள்ளியம்பலத்துத்‌ துஞ்சிய பெரு வழுதியும்‌. குறிப்பு: இருவேந்தரும்‌ ஒருங்கிருந்தபோது பாடியது. திணை: பாடாண்‌. துறை: உடனிலை.

(இருவரசர்‌ ஒருங்கே வீற்றிருந்தாரைப்‌ பாடியமையின்‌ உடனிலை ஆயிற்று.)

நீயே, தண்புனற்‌ காவிரிக்‌ கிழவனை; இவனே, முழுமுதல்‌ தொலைந்த கோளி ஆலத்துக்‌ கொழுநிழல்‌ நெடுஞ்சினை வீழ்பொறுத்‌ தாங்குத்‌, . தொல்லோர்‌ மாய்ந்தெனத்‌ துளங்கல்‌ செல்லாது, நல்லிசை முதுகுடி நடுக்குஅறத்‌ தழீஇ, 5

இளையது ஆயினும்‌ கிளை அரா எறியும்‌, அருநரை உருமின்‌, பொருநரைப்‌ பொறாஅச்‌ செருமாண்‌ பஞ்சவர்‌ ஏறே; நீயே, அறந்துஞ்சு உறந்தைப்‌ பொருநனை; இவனே, ப நெல்லும்‌ நீரும்‌ எல்லோர்க்கும்‌ எளியவென, 10 வரைய சாந்தமும்‌, திரைய முத்தமும்‌, இமிழ்குரல்‌ முரசம்‌ மூன்றுடன்‌ ஆளும்‌, தமிழ்கெழு கூடல்‌ தண்கோல்‌ வேந்தே பால்நிற உருவின்‌ பனைக்கொடி யோனும்‌, நீல்நிற உருவின்‌ நேமியோனும்‌, என்று 15 இருபெருந்‌ தெய்வமும்‌ உடன்நின்‌ றாஅங்கு, ப

. உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, இந்நீர்‌ ஆகலின்‌, இனியவும்‌ உளவோ?

.. இன்னும்‌ கேண்மின்‌ நும்‌ இசைவா ழியவே; ப ஒருவீர்‌ ஒருவீர்க்கு ஆற்றுதிர்‌; இருவீரும்‌ 20 ‘

புலியூர்க்‌ கேசிகன்‌ 51 உடனிலை திரியீர்‌ ஆயின்‌, இமிழ்திரைப்‌ பெளவம்‌ உடுத்தஇப்‌ பயங்கெழு மாநிலம்‌ கையகப்‌ படுவது பொய்யா காதே; அதனால்‌ நல்ல போலவும்‌, நயவ போலவும்‌, தொல்லோர்‌ சென்ற நெறிய போலவும்‌, 25

காதல்‌ நெஞ்சின்நும்‌ இடைபுகற்கு அலமரும்‌

‘ஏதில்‌ மாக்கள்‌ பொதுமொழி கொள்ளாது

இன்றே போல்க நும்‌ புணர்ச்சி; வென்று வென்று

அடுகளத்து உயர்க நும்‌ வேலே: கொடுவரிக்‌

கோள்மாக்‌ குயின்ற சேண்விளங்கு தொடுபொறி 30

நெடுநீர்க்‌ கெண்டையொடு பொறித்த ‘ குடுமிய ஆக, பிறர்‌ குன்றுகெழு நாடே.

நீயோ, குளிர்நீர்‌ நிரம்பிய காவிரிக்குத்‌ தலைவன்‌; இவனோ, தன்‌ குடியின்‌ பழைய பெருமையை நிலைநாட்டத்‌ தன்‌ இளவயதிலேயே பகைவரை வென்ற புகழ்மிக்க பாண்டியன்‌. நீ. அறம்‌ விளங்கும்‌ உறையூர்‌ மன்னன்‌; இவனோ, நெல்லும்‌ நீரும்‌ யாவருக்கும்‌ எளிதில்‌ கிடைப்பன எனக்‌ கருதிப்‌, பொதியத்துச்‌ சந்தனமும்‌ ஆழ்கடல்‌ முத்தும்‌ கொண்டு, மும்முரசமும்‌ முழங்கத்‌ தமிழ்‌ மதுரையிலே ஆட்சி நடத்தும்‌ செங்கோல்‌ வேந்தன்‌. நீவிர்‌ இருவீரும்‌, பால்நிறப்‌ பனைக்கொடியேனும்‌ நீலவண்ணத்‌ திருமாலும்‌ போல ஒருங்கே இருக்கின்றீர்‌. அஞ்சும்‌ வலியுடைய இருவரும்‌ இவ்வாறு இருப்பதைக்‌ காண்பதிலும்‌ இனியது எமக்கு வேறு உளதோ? நீங்கள்‌ ஒன்றுபட்டவராக விளங்கினால்‌, கடல்‌ சூழ்ந்த பயன்‌ தரும்‌ உலக முழுதும்‌ நும்‌ கைப்படும்‌ என்பது உண்மை! எனவே, நும்‌ புகழ்‌ ஓங்குக! நீங்கள்‌ ஒருவர்க்கொருவர்‌ உதவுக! நல்லன போலவும்‌, நியாயம்‌ உடையன போலவும்‌, பழையோர்‌ ஒழுகிய ஒழுக்கம்‌ போலவும்‌ நீங்கள்‌ இருக்கவும்‌, நும்‌ அன்பு நெஞ்சத்தை இடை புகுந்து பிரித்தற்கு முயலும்‌ அயலோரின்‌ சிறப்பற்ற சொற்களைக்‌ கேட்டுவிடாதீர்கள்‌! இன்று போலவே என்றும்‌ இணைந்தே வாழுங்கள்‌! வெற்றிமேல்‌ வெற்றி பெற்று நீங்கள்‌ உயர்க! நும்‌ வேல்‌ வெல்க! பகைவர்‌ நாடுகளில்‌ நும்‌ புலிக்கொடியும்‌ மீன்‌ கொடியும்‌ எத க அவை நுமக்கு . அடி.ப்படுவதாக!

சொற்பொருள்‌: 2. கோளி – பூவாது காய்க்கும்‌ மரம்‌. 4 துளங்கல்‌ செல்லாது – தான்‌ தளராது. 5. நடுக்கு அற – தடுமாற்றம்‌ அற. 6. கிளை அரா – சுற்றத்துடன்‌ கூடி ய பாம்பை. நரை உருமின்‌ – வெள்ளிய இடியேறு போல. 8. பஞ்சவர்‌ – பாண்டியர்‌. 10. எளிய – எளிய எனக்‌ கருதி. 11. திரைய – கடலிடத்‌ துண்டான. 17. உரு – உட்கு;

82 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ உட்கு – அச்சம்‌, (“உருவுட்காகும்‌’ தொல்‌, சொல்‌, உரி, சூ 4.) 18. இன்நீர்‌ ஆகலின்‌ – நீர்‌ இத்‌ தன்மையர்‌ அகுதலின்‌, 24. நயவ போலவும்‌ – நியாயத்தையுடையன போலே இருக்கவும்‌. 27. பொது மொழி – சிறப்பு இல்லாத மொழி. 30. கோள்மா குயின்ற – புலி வடிவாகச்‌ செய்யப்பட்ட. 32. பொறி – இண கால்‌ அடையாளக்‌ குறி.

59. பாவலரும்‌ பகைவரும்‌!

பாடியவர்‌: மதுரைக்‌ கூலவாணிகள்‌ சீத்தலைச்‌ சாத்தனார்‌, பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ சித்திரமாடத்துத்‌ துஞ்சிய நன்மாறன்‌. திணை: பாடாண்‌ துறை: பூவை. நிலை.

(அரசனை ஞாயிற்றோடும்‌ திங்களோடும்‌ உவமித்தமையால்‌, இச்‌ செய்யுள்‌ பூவை நிலை ஆயிற்று.)

ஆரம்‌ தாழ்ந்த அணிகிளர்‌ மார்பின்‌,

தாள்தோய்‌ தடக்கைத்‌, தகைமாண்‌ வழுதி!

வல்லை மன்ற, நீநயந்‌ தளித்தல்‌

தேற்றாய்‌, பெரும! பொய்யே, என்றும்‌ –

காய்சினம்‌ தவிராது கடல்‌ ஊர்பு எழுதரும்‌ டடத

ஞாயிறு அனையை, நின்‌ பகைவர்க்குத்‌ திங்கள்‌ அனையை, எம்ம னோர்க்கே!

ஆரம்‌ தாழ்ந்த அழகுமிக்க மார்பும்‌, முழந்தாள்வரை நீண்ட கைகளும்‌ உடையவனே! பேரழகு வாய்ந்த சிறப்பு மிக்க வழுதியே! யாவருக்கும்‌ உவப்புடன்‌ வழங்கி மகிழ்வதிலே நீ மிகவும்‌ வல்லவன்‌; என்றும்‌ பொய்ம்மையைக்‌ கொள்ளாதவன்‌. கடலிலிருந்து எழுகின்ற ஞாயிற்றைப்‌ போன்ற வெம்மையுடன்‌ நின்‌ பகைவர்‌ மீது சினந்து எழுபவன்‌! எனினும்‌, எம்‌ போல்பவர்க்கோ திங்களைப்‌ போன்று குளிர்ந்த அருளைப்‌ பொழியும்‌ இயல்பும்‌ உடையவன்‌. வாழ்க நீ, பெருமானே!

60. மதியும்‌ குடையும்‌!

பாடியவர்‌: உறையூர்‌ மருத்துவன்‌ தாமோதரனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குராப்பள்ளித்‌ துஞ்சிய பெருந்திருமா வளவன்‌. திணை: பாடாண்‌. துறை: குடை மங்கலம்‌.

(“உவாமதியைக்‌ கண்டு” வளவனின்‌ வெண்கொற்றக்‌ குடை புறப்பட்டதெனக்‌ கருதித்‌ தொழுதேம்‌ என்று கூறுதலால்‌, குடை

மங்கலம்‌ ஆயிற்று?

புலியூர்க்‌ கேசிகன்‌ .. 83. முந்நீர்‌ நாப்பண்‌ திமில்குடர்‌ போலச்‌, ‘ செம்மீன்‌ இமைக்கும்‌ மாக விசும்பின்‌ உச்சி நின்ற உவவுமதி கண்டு, கட்சி மஞ்ஞையின்‌ சுரமுதல்‌ சேர்ந்த, ப சில்வளை விறலியும்‌ யானும்‌, வல்விரைந்து. ப 5 தொழுதனம்‌ அல்லமோ, பலவே! கானல்‌ கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்‌ ஆரைச்‌ சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்‌ உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்‌, ப வலன்‌ இரங்கு முரசின்‌ வாய்வாள்‌ வளவன்‌, 10 வெயில்மறைக்‌ கொண்ட உருகெழு சிறப்பின்‌ மாலை வெண்குடை ஓக்குமால்‌ எனவே!

மீன்படகின்‌ விளக்குப்‌ போல, வான்‌ நடுவே செவ்வாய்‌ மீன்‌ விளங்கும்‌! அப்போது, உச்சியிலே தோன்றும்‌ முழுநிலவைக்‌ கண்டு காட்டுமயில்கள்‌ மகிழ்ந்து ஆடும்‌. அதைப்‌ போல, இடைச்‌ சுரத்திலே வந்து கொண்டி ருந்த யானும்‌, சிலவான வளைகளை அணிந்த விறலியும்‌, அம்‌ மதியை விரைந்து தொழுதோமே! கடலுப்பு ஏற்றிய பாரமிக்க வண்டியை மலை நாட்டை நோக்கி இழுத்துச்‌ செல்லும்‌ பகட்டினைப்‌ போல, ஆட்சிச்‌ சுமையைத்‌ தாங்கி நடத்திச்‌ செல்லுபவன்‌ எம்‌ கோமானான வளவன்‌. வெற்றி முரசினையும்‌ தப்பாத வாளினையும்‌ உடைய அவ்‌ வளவனுக்கு, வெயில்‌ மறைக்க எடுத்த வெண்கொற்றக்‌ குடைபோல்வது என்று எண்ணி, அன்றே மதியினைத்‌ தொழுத எமக்கு, இன்று அவன்‌ குடையினைத்‌ தொழச்‌ சொல்லுதலும்‌ வேண்டுமோ!

சொற்பொருள்‌: 2. செம்மீன்‌ – செவ்வாய்மீன்‌; திருவா திரையும்‌ ஆம்‌. 4. கட்சி – காடு. சுரமுதல்‌ – சுரத்திடை;: முதல்‌; ஏழாம்‌ வேற்றுமைச்‌ சொல்லுருபு. 7. மடுக்கும்‌ – நோக்கிச்‌ செல்கின்ற. 8. ஆரை – ஆரைக்கால்‌. சாகாடு – வண்டி. 70. இரங்கு – முழங்கும்‌.

61. மலைந்தோரும்‌ பணிந்தோரும்‌!

பாடியவர்‌: கோனாட்டு எறிச்சிலார்‌ மாடலன்‌. மதுரைக்‌ குமரனார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ இலவந்திகைப்‌ பள்ளித்‌ துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. கல்‌ வாகை. துறை: அரச வாகை.

(அரசனது வெற்றி மேம்பாட்டை, “மலைந்தோர்‌ வாழக்‌ கண்டன்றும்‌ இலமே, தாழாது திருந்தடி பொருந்த வல்லோர்‌ வருந்தக்‌ காண்டல்‌ அதனினும்‌ இலமே” எனப்‌ பாடுதலால்‌ இது அரச வாகை ஆயிற்று.)

௩ 84 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ கொண்டைக்‌ கூழைத்‌ தண்தழைக்‌ கடைசியர்‌ சிறுமாண்‌ நெய்தல்‌ ஆம்பலொடு கட்கும்‌, மலங்குமிளிர்‌, செறுவின்‌ தளம்புதடிந்‌ திட்ட பழன வாளைப்‌ பரூஉக்கண்‌ துணியல்‌ புதுநெல்‌ வெண்சோற்றுக்‌ கண்ணுறை ஆக, 5

விலாப்‌ புடை மருங்கு விசிப்ப மாந்தி,

நீடுகதிர்க்‌ கழனிச்‌ சூடுதடு மாறும்‌

வண்கை வினைஞர்‌ புன்தலைச்‌ சிறாஅர்‌

தெங்குபடு வியன்பழம்‌ முனையின்‌, தந்தையர்‌

குறைக்கண்‌ நெடும்போர்‌ ஏறி, விசைத்‌ தெழுந்து 10

செழுங்கோட்‌ பெண்ணைப்‌ பழந்தொட முயலும்‌,

வைகல்‌ யாணர்‌, நன்னாட்டுப்‌ பொருநன்‌,

எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச்‌ சென்னி,

சிலைத்தார்‌.அகலம்‌ மலைக்குநர்‌ உளர்‌எனின்‌

தாம்‌அறி குவர்தமக்கு உறுதி; யாம்‌ அவன்‌ 15

எழு உறழ்‌ திணிதோள்‌ வழுவின்றி மலைந்தோர்‌

வாழக்‌ கண்டன்றும்‌ இலமே; தாழாது,

திருந்து அடி பொருந்த வல்லோர்‌

வருந்தக்‌ காண்டல்‌, அதனினும்‌ இலமே!

சென்னியின்‌ சோழ நாடு மருத வளத்தால்‌ மிகுந்தது. கொண்டை முடித்து அதிலே தழையும்‌ செறுகியவராக, உழத்தியர்‌, பயிரிடத்தே வளர்ந்த அம்பலும்‌ நெய்தலும்‌ ப ஆகியவற்றைக்‌ களைந்தஃ௩துக்குவர்‌. வயலிடத்தே, பொய்கையிற் கிடைத்த பருத்த வாளைமீனைத்‌ துணைக்கறியாகக்‌ கொண்டு, புது நெல்லின்‌ வெண்சோற்றை விலாப்‌ புடைக்கத்‌ தின்று உழவர்கள்‌ மகிழ்வர்‌. அப்‌ பெருந்‌ தவனத்தால்‌ வயலிலே சூட்டை இடும்‌ இடம்‌ அறியாது தடுமாறுவர்‌. அவர்‌ சிறுவர்களோ, தென்னை நெற்றை – விரும்பாது, உயரக்‌ குவிந்த போரின்மீது ஏறி நின்று, பனம்பழம்‌ பறிக்க உந்திக்‌ கொண்டு இருப்பர்‌. இத்தகைய புதுவருவாய்‌ மிகுந்த வளநாட்டின்‌ வேந்தனே! வலிய . வேலும்‌, கடிய தேரும்‌ உடையவனே! பன்மலர்‌ மாலை அணிந்த மார்பனான சென்னியே! நின்னோடு மாறுபடுவார்‌ யார்‌? தமக்கு நேரும்‌ காரியத்தை அவரே அறிந்து அஞ்சி ஒதுங்கி விடுவர்‌. நினக்கு மாறுபட்டோர்‌ வாழவும்‌ கண்டிலோம்‌! நின்‌ திருவடி பணிந்தோர்‌ வருந்தவும்‌ யாம்‌ கண்டிலோம்‌!

சொற்பொருள்‌: 1. கொண்டைக்‌ கூழை – கொண்டையாகிய தலைமயிர்‌. தழை – குளிர்ந்த தழை. 3. மலங்கு – ஒருவகை மீன்‌. 4. துணியல்‌ – தடியை; தசைத்‌ துண்டை. 6. விசிப்ப – விம்ம. 9. முனையின்‌ – வெறுப்பின்‌. 12. யாணர்‌ – புது வருவாய்‌.

“புலியூர்க்‌ கேசிகன்‌ டட… 8 62. போரும்‌ சீரும்‌!

பாடியவர்‌: கழாத்‌ தலையார்‌. பாடப்பட்டோர்‌: சேரமான்‌ குடக்கோ நெடுஞ்சேரலாதன்‌; சோழன்‌ வேற்பஃறடக்கைப்‌ பெருவிறற்‌ கிள்ளி. குறிப்பு: போர்ப்புறத்துப்‌ பொருது இவர்‌ வீழ்ந்த காலைப்‌ பாடியது. திணை: தும்பை. துறை: தொகை நிலை.

(“வாள்‌ வாய்த்து, இருபெரு வேந்தர்‌ தாமும்‌ சுற்றமும்‌ ஒருவரும்‌ ஒழியாத்‌ தொகை நிலை”. இது எனக்‌ காட்டுவர்‌ இளம்பூரணரும்‌ நச்சினார்க்கினியரும்‌ (புறத்‌. சூ. 14, 77) வருதார்‌ தாங்கி, அமர்மிகல்‌ யாவது? பொருது ஆண்டொழிந்த மைந்தர்‌ புண்தொட்டுக்‌, ்‌. குருதிச்‌ செங்கைக்‌ கூந்தல்‌ தீட்டி, நிறம்கிளர்‌ உருவின்‌ பேஎய்ப்‌ பெண்டிர்‌ எடுத்துஎறி அனந்தற்‌ பறைச்சீர்‌ தூங்கப்‌, 5 பருந்து அருந்துற்ற தானையொடு, செருமுனிந்து, அறத்தின்‌ மண்டிய மறப்போர்‌ வேந்தர்‌ தாம்‌ மாய்ந்‌ தனரே; குடைதுளங்‌ கினவே; உரைசால்‌ சிறப்பின்‌ முரசு ஒழிந்தனவே; பண்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்‌ 1௦ இடம்கெட. ஈண்டிய வியன்கண்‌ பாசறைக்‌, – களங்கொளற்கு உரியோர்‌ இன்றித்‌, தெறுவர, உடன்வீழ்ந்‌ தன்றால்‌, அமரே; பெண்டிரும்‌ பாசடகு மிசையார்‌, பனிநீர்‌ மூழ்கார்‌, மார்பகம்‌ பொருந்தி ஆங்கமைந்‌ தனரே; 15

வாடாப்‌ பூவின்‌, இமையா நாட்டத்து,

நாற்ற உணவி ஜனோரும்‌, ஆற்ற அரும்பெறல்‌ உலகம்‌ நிறைய ‘ ‘விருந்துபெற்‌ றனரால்‌; பொலிக, நும்‌ புகழே!

போரிட்டு ஒருவரை ஒருவர்‌ வெல்வோம்‌ என்ப து எவ்வளவு பேதைமை? பேய்மகளிர்‌ மகிழ்ந்து கூத்தாடப்‌, பருந்துகள்‌ ஊன்தின்று மகிழப்‌, பெரும்‌ போரிட்ட இருபுறத்து மன்னரும்‌ களத்திலே பட்டனர்‌; அவர்‌ குடைகள்‌ தாழ்ந்தன; முரசுகள்‌ வீழ்ந்தன; ஆயிரம்‌ ஆயிரம்‌ வீரர்‌ செறிந்த படைத்‌ தொகுதி நிரம்பிய அவர்‌ பாசறைகள்‌. ஒருவரும்‌ எஞ்சி இல்லாதவாறு அழிந்தன. அவர்‌ மனைவியர்‌, பச்சிலையும்‌ தின்னாது, நீரும்‌ மூழ்காது, இறந்து கிடக்கும்‌ தத்தம்‌ கணவரின்‌ மார்பைக்‌ கட்டியவாறே, களத்தில்‌ கிடந்தழும்‌ காட்சிதான்‌ எத்துணைக்‌

96 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ கொடுமை! எனினும்‌, அறப்போர்‌ புரிந்தீர்‌! ஆதலின்‌, மேல்‌ உலகத்தோர்‌ விருந்தினர்‌ வந்து நிரம்பினர்‌ என மிகவும்‌ மகிழ்ந்தனர்‌. நும்‌ புகழ்‌ இவ்வுலகிற்‌ சிறந்து என்றும்‌ விளங்குவதாக!

சொற்பொருள்‌: 4. அனந்தல்‌ – மந்தமான ஓசை; பறை கொட்டுவார்‌ கை புண்படுதலின்‌ மந்தமாக ஒலித்தல்‌. பறைச்சீர்‌ – பறைக்குரிய தாளம்‌. 9. முரைசு: இடைப்போலி. 10. வேறுபடு பைஞ்ஞிலம்‌ – பதினெண்‌ பாடை மாக்களாலாகிய படைத்‌ தொகுதி. 14. பாசடகு – பச்சையிலை; வெற்றிலை பாக்கு.

63. என்னாவது கொல்‌?

ப பாடியவர்‌: பரணர்‌. பாடப்பட்டோர்‌: சோழன்‌ வேற்பஃறடக்கைப்‌ பெருவிறற்‌ கிள்ளி; சேரமான்‌ குடக்கோ நெடுஞ்சேரலாதன்‌

குறிப்பு: இருவரும்‌ பொருது களத்தில்‌ வீழ்ந்தபோது பாடியது.

திணை: தும்பை. துறை: தொகை நிலை ப

(“வேந்தரும்‌ பொருது” களத்து ஒழிந்தனர்‌: இனியே கழனி, தானே என்னாவது கொல்‌?’ என, இருவரும்‌ பட்டுவீழ்ந்த தொகைநிலை கூறி இரங்கினது.)

. எனைப்பல்‌ யானையும்‌ அம்பொடு துளங்கி, விளைக்கும்‌ வினையின்றிப்‌ படைஒழிந்‌ தனவே; விறற்புகழ்‌ மாண்ட புரவி எல்லாம்‌ ப மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட்‌ டனவே தேர்தர வந்த சான்றோர்‌ எல்லாம்‌ 5

தோல்‌ கண்‌ மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;

விசித்துவினை மாண்ட மயிர்க்கண்‌ முரசம்‌,

பொறுக்குநர்‌ இன்மையின்‌, இருந்துவிளிந்‌ தனவே;

சாந்தமை மார்பின்‌ நெடுவேல்‌ பாய்ந்தென, .

வேந்தரும்‌ பொருது, களத்து ஒழிந்தனர்‌; இனியே, 10

என்னா வதுகொல்‌ தானே! கழனி

ஆம்பல்‌ வள்ளித்‌ தொடிக்கை மகளிர்‌

பாசவல்‌ முக்கித்‌, தண்புனல்‌ பாயும்‌,

யாணர்‌ அறாஅ வைப்பின்‌ ‘

காமர்‌ கிடக்கை அவர்‌ அகன்றலை நாடே! 15 .

யானைப்படை முழுவதும்‌ அம்புபட்டு வீழ்ந்தன. குதிரைப்‌ ‘ ‘ படைகள்‌ தம்‌ வீரருடன்‌ ஒருசேரக்‌ களத்திலே வீழ்ந்தன. தேர்‌ கொண்டு வந்தவரெல்லாம்‌ ஒருசேரப்‌ பட்டனர்‌. முரசங்கள்‌, முழங்குவோர்‌ இல்லாததால்‌, இருந்தும்‌ ஒலியின்றிக்‌ கெட்டன. சாந்து விளங்கிய தம்‌ மார்பிலே வேல்பாய, இருபெரு வேந்தரும்‌, அந்தோ, வீழ்ந்து மாய்ந்தனர்‌! ஆம்பல்‌ தண்டால்‌ வளைசெய்து அணிந்த கையினரான மகளிர்‌, செவ்விய அவலைத்‌ தின்று

புலியூர்க்‌ கேசிகன்‌ 87

குளிர்நீர்‌ பாய்ந்தாடும்‌ புது வருவாய்‌ மிக்க ஊர்களையுடைய நும்‌ இருவர்‌ பெருநாடும்‌, இனி என்ன வருத்தம்தான்‌ அடையக்‌ கூடுமோ? பொறுக்கலாற்றாத்‌ துயர்தான்‌ இதோ வந்துவிட்டதே!

சொற்பொருள்‌: 5. தேர்தரவந்த – தேர்‌ கொடுதர வந்த. சான்றோர்‌ – போரிடற்கு அமைந்தோர்‌, அறப்போர்‌ செய்தற்குரிய பண்புகளால்‌ அமைந்தோர்‌ ஆகலின்‌ சான்றோர்‌ எனப்பட்டனர்‌. 6. தோல்கண்‌ மறைப்ப – பிடித்த பரிசை தம்‌ கண்‌ மறைப்ப. . 7. மயிர்க்கண்‌ முரசம்‌ – மயிர்‌ சீவாது தோல்‌ போர்க்கப்பட்ட : கண்ணையுடைய முரசம்‌. 13. முக்கி – உண்டு.

64. புற்கை நீத்து வரலாம்‌!

பாடியவர்‌: நெடும்பல்லியத்தனார்‌. பாடப்பட்டோன்‌: . பாண்டியன்‌ பல்யாக சாலை முதுகுடுமிப்‌ பெருவழுதி. திணை: பாடாண்‌. துறை: விறலியாற்றுப்படை.

(“விறலி. செல்லாமோ” சரக விறலியாற்றுப்‌ படை ஆயிற்று.)

நல்யாழ்‌, ஆகுளி, பதலையொடு சுருக்கிச்‌,

செல்லா மோதில்‌, சில்வளை விறலி!

களிற்றுக்கணம்‌ பொருத கண்ணகன்‌ பறந்தலை,

விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்‌, ப

பகைப்புலம்‌ மரீஇய தகைப்பெருஞ்‌ சிறப்பின்‌ 5

குடுமிக்‌ கோமாற்‌ கண்டு, ப

நெடுநீர்ப்‌ புற்கை நீத்தனம்‌ வரற்கே!

ஒரு சில வளைகளே அணிந்தவளான விறலியே! யானை அணி பொருத இடம்‌அகன்ற பாசறை இடத்தே, வானத்துப்‌ பறக்கும்‌ பறவைக்‌ கூட்டத்தைத்‌ தடுத்துத்‌ தம்பால்‌ ஈர்க்கும்‌ அளவுக்கு ஊன்‌ துண்டங்கள்‌ சிதறுமாறு, மாற்றார்‌ தேசத்தின்‌ கண்ணே கடும்போரிட்டு வெற்றி பெற்ற, பெருஞ்செல்வத்தை உடைய முதுகுடுமியாகிய கோமானைச்‌ சென்று காணலாம்‌, வருவாயாக! கண்டால்‌, நீர்‌ பெருகிக்‌ கஞ்சியுண்டு வாழும்‌ இவ்‌ வாழ்வை நாம்‌ அறவே விட்டுவிடலாம்‌. யாழையும்‌ பறையையும்‌ கட்டி எடுத்துக்‌ கொண்டு உடனே புறப்படுவாயாக!

சொற்பொருள்‌: 1. ஆகுளி – சிறுபறை. பதலை – ஒரு தலை மாக்கிணை; ஒரு பக்கம்‌ மட்டில்‌ அடித்து ஓசையுண்டாக்கும்‌ இடம்‌ அமைந்த முழவு. 3. பறந்தலை – பாசறை. 4. பசுந்தடி. – பசுமையாகிய ஊன்‌; தடுத்தலாவது எருவையை மேலே பறந்து செல்லாமல்‌ தடுப்பதாம்‌. 7. புற்கை – புல்லிய சோற்றுக்‌ கஞ்சி.

58 புறநானூற | – மூலமும்‌ உரையும்‌ 65. நாணமும்‌ பாசமும்‌ 1

பாடியவர்‌: கழாஅத்‌ தலையார்‌. பாடப்பட்டோன்‌: சேரமான்‌ நெடுஞ்சேரலாதன்‌; இவன்‌ கரிகாற்‌ பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது. திணை: பொதுவியல்‌. துறை: கையறுநிலை. சிறப்பு: புறப்புண்பட்டோர்‌ நாணி வடக்கிருந்து உயிர்விடும்‌ மரபு.

(மன்னன்‌ வடக்கிருந்தனன்‌, “நாள்‌ போற்‌ கழியல ஞாயிற்றுப்‌ பகலே” என வருந்திக்‌ கூறுதல்‌ அவலம்‌ மிக்கது அகும்‌;)

மண்‌ முழா மறப்பப்‌, பண்‌ யாழ்‌ மறப்ப,

இருங்கண்‌ குழிசி கவிழ்ந்துஇழுது பறப்பச்‌,

சுரும்புஆர்‌ தேறல்‌ சுற்றம்‌ மறப்ப,

உழவர்‌ ஓதை மறப்ப, விழவும்‌

அகலுள்‌ ஆங்கண்‌ சீறூர்‌ மறப்ப, 5

உவவுத்‌ தலைவந்த பெருநாள்‌ அமையத்து,

இருசுடர்‌ தம்முள்‌ நோக்கி, ஒரு சுடர்‌

புன்கண்‌ மாலை மலைமறைந்‌ தாங்குத்‌,

தன்போல்‌ வேந்தன்‌ முன்புகுறித்து எறிந்த

புறப்புண்‌ நாணி, மறத்தகை மன்னன்‌ 10

வாள்‌ வடக்கு இருந்தனன்‌; ஈங்கு,

நாள்போற்‌ கழியல, ஞாயிற்றுப்‌ பகலே!

பெளர்ணமி நாளிலே மாலை வேளை, தீழ்ப்பால்‌ நிலவும்‌ எழுகிறது; மேற்றிசையிலே எதிர்த்து இருந்த கதிரவன்‌, முடிவிலே அதற்கு எதிர்‌ நிற்கவும்‌ நாணி, மலைவாயிலிற்‌ சென்று ஒளிந்தனன்‌. அதேபோல்‌, நின்போன்ற வேந்தனுடன்‌ போரிட்டபோது எதிர்பாராது புறப்புண்பட்ட நீ நாணினாய்‌; வாளுடன்‌ வடக்கிருந்தாய்‌. என்னே இக்‌ கொடுமை! முழவுகள்‌ ஒலியடங்கின; யாழ்‌ இசை துறந்தன; தயிர்ப்‌ பானைகள்‌ வெறும்‌ பானைகளாகக்‌ கிடந்தன; சுற்றத்தினர்‌ மதுவை மறந்தனர்‌; உழவர்‌ ஓதையும்‌ அடங்கின; ஊர்‌ விழாவும்‌ ஒழிந்தன! நின்னையும்‌ பகலையும்‌ ஒருங்குக்‌ கண்டு மகிழ்ந்து இன்புற்றோமே! நீயே இல்லையானால்‌, இனிப்‌ பகல்தான்‌ எமக்கு எவ்வாறு இன்பமுடன்‌ கழியுமோ? (புலவர்‌ கொண்ட நட்புப்‌ பாசத்தினைக்‌ காண்க.)

சொற்பொருள்‌: 1. மண்‌ – மார்ச்சனை. 2. குழிசி – பானை, இழுது – நெய்‌. 5. அகலுள்‌ அங்கண்‌ – அகன்ற தெருவினையுடைய. _ 10.புறப்புண்‌ – முகத்‌ தும்‌, மார்பிடத்‌ தும்‌ ஒழிந்து ஏனைய விடத்துற்ற புண்‌.

_ புலியூர்க்‌ கேசிகன்‌ | 89 66. நல்லவனோ அவன்‌! _-

பாடியவர்‌: வெண்ணிக்‌ குயத்தியார்‌. வெண்ணிற்‌ வண்ணம்‌ எனவும்‌ பாடம்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ கரிகாற்‌ பெரு வளத்தான்‌. திணை: வாகை. துறை: அரச வாகை.

[புறப்புண்‌. நாணி வடக்கிருந்தோன்‌ நின்னிலும்‌ நல்லன்‌ என்றனர்‌. இதனாற்‌ கரிகாலனது வென்றியே கூறினர்‌. ஆதலின்‌ . அரசவாகை ஆயிற்று. “வளி தொழில்‌ அண்ட” செய்தியை அறிக. இது புயல்‌ முதலாயவற்றாற்‌ கலங்கட்கு ஊறு நேராவாறு காத்தற்குத்‌ தக்க எந்திர அமைப்பு அகலாம்‌,]

நளியிரு முந்நீர்‌ நாவாய்‌ ஓட்டி

வளிதொழில்‌ ஆண்ட உரவோன்‌ மருக!

களி இயல்‌ யானைக்‌ கரிகால்‌ வளவ!

சென்று அமர்க்‌ கடந்த நின்‌ ஆற்றல்‌ தோன்ற

வென்றோய்‌, நின்னினும்‌ நல்லன்‌ அன்றே 5

கலிகொள் யாணர்‌ வெண்ணிப்‌ பறந்தலை,

மிகப்‌ புகழ்‌ உலகம்‌ எய்திப்‌,

புறப்புண்‌ நாணி, வடக்‌ கிருந்தோனே!

வளவனே! கடலிற்‌ செல்லும்‌ மரக்கலம்‌, காற்று உரிய திசையிலே வீசாததனால்‌ ஓடாதுபோகக்‌, காற்று இயங்குமாறு போலக்‌ கலத்தைச்‌ செலுத்துதற்குரிய பொறிமுறைகளைக்‌ கையாண்டு கலம்‌ செல்லுமாறு செய்த அறிவாற்றல்‌ உடையவர்‌ நின்‌ முன்னோர்‌. மதயானை மிகுந்த படை வன்மை உடையோனே! பகைவரினும்‌ மேற்சென்று, அவர்‌ எதிர்‌ நின்று, அவரைக்‌ கொன்று அழித்த வெற்றி வீரனே! “வெண்ணி: யென்னும்‌ ஊர்ப்புறத்தே நடந்த போரில்‌ புறப்‌ புண்பட்டனன்‌ சேரன்‌. உலகத்திலே புகழ்‌ பெறுமாறு அவன்‌ வடக்கிலிருந்து உயிர்‌ நீத்தனன்‌. புறப்புண்‌ நாணி வடக்கிருந்து உயிர்‌ துறந்த அவன்‌, புறத்தே அம்பேவிப்‌ போர்‌ முறை பிறழ்ந்த நின்னைக்‌ காட்டினும்‌, நல்லவன்‌ அல்லனோ!

67. அன்னச்‌ சேவலே!

பாடியவர்‌: பிசிராந்தையார்‌. பாடப்பட்டோன்‌: கோப்‌. பெருஞ்சோழன்‌. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி.

(ஆசிரியர்‌ பெயரை இரும்பிசிராந்தை என்பர்‌ தெய்வச்‌ சிலையார்‌ (தொல்‌. எச்ச. சூ.25). அரசனது இயல்பு கூறுதலான்‌, இயன்மொழி ஆயிற்று. “பெருங்கோக்கிள்ளி’ என்பதும்‌, கோப்பெருஞ்‌ சோழனின்‌ பெயர்‌ போலும்‌, “பெருமகோக்‌ கிள்ளி கேட்க” என வருவது காண்க.) ப

90 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ அன்னச்‌ சேவல்‌! அன்னச்‌ சேவல்‌! ஆடுகொள்‌ வென்றி அடுபோர்‌ அண்ணல்‌, நாடுதலை அளிக்கும்‌ ஒண்முகம்‌ போலக்‌, கோடுகூடு மதியம்‌ முகிழ்நிலா விளங்கும்‌

மையல்‌ மாலை யாம்‌ கையறுபு இனையக்‌, 5

குமரிஅம்‌ பெருந்துறை அயிரை மாந்தி,

வடமலைப்‌ பெயர்குவை ஆயின்‌, இடையது

சோழநன்‌ னாட்டுப்‌ படினே, கோழி

உயர்நிலை மாடத்துக்‌, குறும்பறை அசைஇ

வாயில்‌ விடாது கோயில்‌ புக்கு, எம்‌ 10

பெருங்கோக்‌ கிள்ளி கேட்க, ‘இரும்பிசிர்‌

ஆந்தை அடியுறை’ எனினே, மாண்ட நின்‌

இன்புறு பேடை அணியத்‌, தன்‌

அன்புறு நன்கலம்‌ நல்குவன்‌ நினக்கே –

அன்னச்‌ சேவலே! போர்‌ வெல்லும்‌ பெருமித உணர்வோடு நாடு காக்கும்‌ நல்லோனின்‌ முகம்போல்‌, முழுநிலா ஒளிவிடும்‌ இம்‌ மாலைக்‌ காலத்திலே, நண்பனிடம்‌ செல்ல இயலாது செயலற்று யான்‌ வருந்துகின்றேன்‌. நீயோ, குமரிப்‌ பெருந்‌ துறையின்‌ அயிரைமீனை உண்டு வடமலையை நோக்கிச்‌ செல்லுகிறாய்‌. இடைவழியில்‌ சோழ நாட்டு உறையூருக்குச்‌ சென்றால்‌, அங்கே உயிர்‌ மாடத்தினிடத்தே நின்‌ பேடையுடன்‌ தங்குவாயாக. தங்கிச்‌ சோழனின்‌ அரண்மளனையினுள்‌ புகுந்து, அவன்‌ கேட்குமாறு, பெரிய பிசிர்‌ என்ற ஊரிலுள்ள ஆந்தையின்‌ அடியவன்‌” என்று நின்னைப்‌ பற்றிக்‌ கூறுவாயாக. அவ்வாறு நீ சொன்னால்‌, நின்‌ பேடைக்குத்‌ தன்னுடைய அன்பின்‌ சின்னமாக, நல்ல பல அணிகலன்களை அவன்‌ வழங்குவான்‌! (நட்பின்‌ செறிவால்‌ கூறியது இது.) ப ப

சொற்பொருள்‌: 5 மையல்‌ மாலை – பிரிந்திருக்குங்கால்‌ மயக்கத்தை யுண்டாக்கும்‌ மாலைக்காலம்‌. 6. அயிரை – ஒருவகை மீன்‌. 9. குறும்பறை அசைஇ – குறுகப்‌ பறத்தலுடனே சென்றனை யாகி. 12. ஆந்தை – ஆந்தையார்‌; (பிசிர்‌ ஆந்தையார்‌). “அடி.யுறை” – என்பதற்கு, ஆந்தையின்‌ அடிக்கண்‌ உறைவான்‌ என்றுரைப்பாரு முளர்‌. ப 68. மறவரும்‌ மறக்களிறும்‌!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: பாடாண்‌. துறை: பாணாற்றுப்படை.

புலியூர்க்‌ கேசிகன்‌ 91

(ஈங்கென்‌ செய்தியோ; உறந்தையோனே குருசில்‌ செலினே. பிறன்கடை மறப்ப நல்குவன்‌” எனப்‌ பாணனை அற்றுப்படுத்தலின்‌, பாணாற்றுப்படை அயிற்று. “மென்மையின்‌ மகளிர்க்கு வணங்கி” என்றதனால்‌, இவனது எழில்‌ நலமும்‌ “வன்மையின்‌ ஆடவர்ப்‌ பிணிக்கும்‌” என்றதனால்‌, மறநலமும்‌ கூறப்பட்டன.)

உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்‌: கடும்பின்‌ கடும்பசி களையுநர்க்‌ காணாது, சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து, ஈங்குஎவன்‌ செய்தியோ பாண? :பூண்சுமந்து,

அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து 5

மென்மையின்‌ மகளிர்க்கு வணங்கி, வ்ன்மையின்‌

ஆடவர்ப்‌ பிணிக்கும்‌ பீடுகெழு நெடுந்தகை,

புனிறுதீர்‌ குழவிக்கு இலிற்றுமுலை போலச்‌

சுரந்த காவிரி மரங்கொல்‌ மலிநீர்‌

மன்பதை புரக்கும்‌ நன்னாட்டுப்‌ பொருநன்‌, 10

உட்பகை ஒருதிறம்‌ பட்டெனப்‌, புட்பகைக்கு ஏவான்‌ ஆகலின்‌, சாவேம்‌ யாம்‌’ என,

நீங்கா மறவர்‌ வீங்குதோள்‌ புடைப்பத்‌, ‘ தணிபறை அறையும்‌ அணிகொள்‌ தேர்வழிக்‌ கடுங்கண்‌ பருகுநர்‌ நடுங்குகை உகுத்த , எற்கு

நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை ச்ஸி நெடுநகர்‌ வரைப்பின்‌ படுமுழா ஓர்க்கும்‌ ன்‌ (4

உறந்தை யோனே, குருசில்‌; ட்‌ பிறன்கடை மறப்ப நல்குவன்‌ செலினே!

ட டக்லஸ்‌

ப்ட்‌

பிம்‌ 34 பலி உடல்‌ வற்றிப்‌ பசிமிகுந்த சுற்றத்‌ துடனே, “கேட்யோர்‌:ஃபலர்‌; உணர்ந்து உதவுவோர்‌ சிலரே” என யாழையும்‌ஃகைக்குகஈண்டு – இங்கிருந்தே வருந்துவது ஏனோ, பாண்‌ மகனே இிமன்மைக்கு வணங்கி, வன்மைக்கு எதிர்த்து அழிக்கும்‌: ‘ஜேற்றல்ஃ்டுறடைய நெடுந்தகை; தாய்ப்பால்‌ போன்று, அன்புடன்‌ அருள்‌ தீரந்து உலகினரைக்‌ காக்கும்‌ காவிரி நாட்டு வேந்தன்‌; பகைவர்பால்‌ எம்மை ஏவான்‌; ஆதலால்‌, நாமும்‌ நம்‌ வீட்டிலிருந்தே. மடிவதோ

எனப்‌ பூரித்த தோள்களை மறவர்கள்‌. தட்ட, அவரு 1 டய ஆத்திரம்‌ தணிதற்குக்‌ காரணமான போர்ப்பறை .முழங்கக்‌, கள்ளுண்பார்‌ கை நடுங்கிய்தால்‌ &ழே ஒழுகவிட்ட கள்ளால்‌ தேர்ப்பாதைகள்‌ சேறாக, அச்‌ சேற்றிலே பாகரின்றி .3 தேடிப்‌ மகிழும்‌ும்‌ யானையும்‌ அவ்வொலியைச்‌ செவிதாழ்த்துக்‌:கே. டும்‌: போருக்கு”ளிழுகின்ற

தன்மையுடைய உறையூரிலிருப்பவ்ன்‌?எம்‌:இறைவளன்‌. “அன்ன்பாற்‌

்‌ 52 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ செல்க. சென்றால்‌, பிறர்‌ வாயிலைப்‌ பற்றியே நினையாதவாறு நின்‌ – குறைதீர அவன்‌ நினக்கு.வழங்குவான்‌.

சொற்பொருள்‌: 3. சில்செவித்து ஆகிய கேள்வி – கேட்டார்‌ . பலரும்‌ அதன்‌ நுட்பத்தன்மை அறிதற்கரியதாய்‌, அறிவார்‌ சிலரேயாதலின்‌ அவர்‌ செவிக்கண்ணதாகிய யாழை; கேள்வி – யாழ்‌. 5. செம்பொறி – மார்பிடையுள்ள மூன்று கோடுகள்‌. “வரையகன்‌ மார்பிடை. வரையும்‌ மூன்றுள” (சீவகசிந்தாமணி, செ. 1462). திருமகள்‌ எனினும்‌ அமையும்‌. இலிற்றுதல்‌ – சுரத்தல்‌. 11. புட்புகை – புள்‌ செய்யும்‌ பகை; காரி செம்போத்து முதலிய பறவைகள்‌ குறுக்கிட்டோடித்‌ தீநிமித்தம்‌ செய்தலைப்‌ ‘ பகை” என்றனர்‌.

69. காலமும்‌ வேண்டாம்‌ !

பாடியவர்‌: ஆலந்தூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. திணை: பாடாண்‌. துறை: பாணாற்றுப்படை.

[பாணனைச்‌ செல்க என ஆற்றுப்படுத்தலின்‌ பாணாற்றுப்‌ படை ஆயிற்று. “பசும்பூட்‌ கிள்ளி’ என வந்த இவன்‌ பெயரைக்‌ ்‌… தாண்க்‌. (6- 17)]

கையது, கடன்நிறை யாழே; மெய்யது,

புரவலர்‌ இன்மையின்‌ பசியே; அரையது

வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்‌

ஓம்பி உடுத்த உயவற்‌ பாண!

பூட்கை இல்லோன்‌ யாக்கை போலப்‌ 5

பெரும்புல்‌ என்ற இரும்பேர்‌ ஒக்கலை;

வையகம்‌ முழுதுடன்‌ வளைஇப்‌ பையென

என்னை வினவுதி ஆயின்‌, மன்னர்‌

அடுகளிறு உயவும்‌ கொடிகொள்‌ பாசறைக்‌.

குருதிப்‌ பரப்பின்‌ கோட்டுமா தொலைச்சிப்‌, 1௦

புலாக்‌ களம்‌ செய்த கலாஅத்‌ தானையன்‌

பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே!

பொருநர்க்கு ஓக்கிய வேலன்‌, ஒரு நிலைப்‌ |

பகைப்‌ புலம்‌ படர்தலும்‌ உரியன்‌; தகைத்‌ தார்‌

ஒள்ளெரி புரையும்‌ உருகெழு பசும்பூண்‌ 5

கிள்ளி வளவற்‌ படர்குவை ஆயின்‌, ‘ நெடுங்கடை நிற்றலும்‌ இலையே; கடும்‌ பகல்‌ தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,

௫. :ூ

புலியூர்க்‌ கேசிகன்‌ -: / 93 :

நீ அவற்‌ கண்ட பின்றைப்‌, பூவின்‌

ஆடுவண்டு இமிராத்‌ தாமரை 20

சூடாய்‌ ஆதல்‌ அதனினும்‌ இலையே!

பாணனே! “யாழ்‌ கையிலே; பசி வயிற்றிலே; தைத்த பழங்கந்தை இடுப்பிலே; பெரிய சுற்றத்துடனே உலகெல்லாம்‌ சுற்றி வந்தோம்‌; வறுமை தீர்ப்பவர்‌ யார்‌?” எனக்‌ கேட்கின்றாய்‌. பகைவர்‌ யாளையையுங்‌ கொன்று வீழ்த்தும்‌ படை மறவரை உடையவன்‌; உயர்நிலை மாடத்து உறையூரில்‌ உள்ளவன்‌; பசைவர்பாற்‌ சினந்து எரியொளிர்வேல்‌ தாங்கிச்‌ செல்பவன்‌; அக்‌ கிள்ளியினிடம்‌ செல்வாயாக. அவனைக்‌ காணக்‌ காலமும்‌ பார்க்க வேண்டிய தில்லை. பகல்‌ வேளையிலே வரும்‌ பரிசிலர்க்குத்‌ தேரினை வழங்கிக்‌ கொண்டே இருக்கும்‌ அவனைக்‌ கண்டபின்‌, நீ பொற்றாமரைப்‌ பூச்சூடி மகிழும்‌ பேறு உறுதியாகப்‌ பெறுவாய்‌..அகலின்‌, இன்னே

அவன்பாற்‌ செல்வாயாக!

சொற்பொருள்‌: 1. கடன்‌ – இலக்கண முறைமை. 3. வேற்றிழை நுழைதலாவது, கிழிந்த துணிகள்‌ பலவிடத்துந்‌ தைத்த நூலிழை. வேர்நனை – வியர்வையால்‌ நனைந்த. 4. உயவல்‌ – வருத்தம்‌. 9. உயவும்‌ – புண்பட்டு வருந்தும்‌. 11. கலாஅம்‌ – போர்‌ ஆரவாரம்‌. 12. பொருநர்‌ – ஈண்டுப்‌ போர்‌ செய்வோர்‌. 14. தகைத்தார்‌ – சுற்றப்‌ பட்ட மாலை. 17. நிற்றல்‌ – காலம்‌ பார்த்து நிற்றல்‌. 19. இமிரா – ஊதாத. 70. குளிர்நீரும்‌ குறையாத சோறும்‌!

பாடியவர்‌: கோவூர்‌ கிழார்‌, (கோவூர்‌ அழகியார்‌ எனவும்‌ பாடம்‌). பாடப்பட்டோன்‌: சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌. திணை: பாடாண்‌. துறை: பாணாற்றுப்படை.

(கிள்ளி வளவனின்‌ நல்லிசை யுள்ளிச்‌ செல்வையாயின்‌ பெறுகுவை என்று உரைத்தலால்‌, பாணாற்றுப்படை ஆயிற்று. “அவனது தாள்‌ வாழ்க்‌ என வாழ்த்தியதும்‌ ஆம்‌.)

தேஎம்‌ தீந்தொடைச்‌ சீறியாழ்ப்‌ பாண,

“கயத்து வாழ்‌ யாமை காழ்கோத்‌ தன்ன

நுண்கோல்‌ தகைத்த தெண்கண்‌ மாக்கிணை

இனிய காண்க; இவண்‌ தணிக’ எனக்‌ கூறி,

வினவல்‌ ஆனா முதுவாய்‌ இரவல! 5

தைஇத்‌ திங்கள்‌ தண்கயம்‌ போலக்‌,

கொளக்கொளக்‌ குறைபடாக்‌ கூழுடை வியனகர்‌;

அடுதீ அல்லது சுடுதீ அறியாது!

இருமருந்து விளைக்கும்‌ நன்னாட்டுப்‌ பொருநன்‌;

கிள்ளி வளவன்‌ நல்லிசை யுள்ளி, 1௦

94 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

நாற்ற நாட்டத்து அறுகாற்‌ பறவை

சிறுவெள்‌ ளாம்பல்‌ ஞாங்கர்‌ ஊதும்‌

கைவள்‌ ஈகைப்‌ பண்ணன்‌ சிறுகுடிப்‌

பாதிரி கமழும்‌ ஓதி, ஒண்ணுதல்‌,

இன்னகை விறலியொடு (மென்மெல இயலிச்‌ 15 செல்வை ஆயின்‌, செல்வை ஆகுவை;

விறகுஓய்‌ மாக்கள்‌ பொன்பெற்‌ றன்னதோர்‌,

தலைப்பாடு அன்று, அவன்‌ ஈகை;

நினைக்க வேண்டா; வாழ்க, அவன்தாளே!

சிறிய யாழை உடைய பாணனே! “கயத்து அமையை அம்பிலே கோத்தாற்‌ போன்ற உடுக்கையின்‌ இசையைக்‌ கேட்டு இளைப்பாறிச்‌ செல்க’ என, என்னைப்‌ பலவும்‌ கேட்கிறாய்‌ முதியோனே! தைப்பனியால்‌ குளிர்ந்த குளத்தின்‌ தெளிவான நிறைநீர்‌ போலக்‌, கொள்ளக்‌ கொள்ளக்‌ குறையாத சோறுடையது அவனது நகர்‌. அடு நெருப்பு அல்லது சுடுநெருப்பு அறியாதது அது. அவ்‌ வளமிகுந்த நாட்டு வேந்தன்‌ கிள்ளிவளவன்‌. அவன்‌ புகழை உள்ளத்திலே கொண்டவனாக, இன்நகை தவழும்‌ விறலியோடும்‌, மெல்ல மெல்ல நடந்து அவன்பாற்‌ செல்வாயாக. சென்றால்‌, நீ பெருஞ்செல்வம்‌ பெறலாம்‌. விறகு வெட்டக்‌ காட்டுக்குச்‌ சென்றவனுக்குப்‌ பொன்‌ கிடைத்ததுபோல எதிர்பாராது கிடைப்பதல்ல அவன்‌ ஈகை. உறுதியாக நீ நம்பியே செல்லலாம்‌. – அவன்‌ தாள்‌ வாழ்க! (இவ்வாறு பாணனைக்‌ கிள்ளியிடம்‌ செல்ல:”. வழிப்படுத்துகிறார்‌ புலவர்‌.) –

சொற்பொருள்‌: 2.காழ்‌ – நாராசம்‌; இரும்பினாற்‌ செய்த அம்பு. 3. தகைத்த – பிணிக்கப்பட்ட. கணை – உடுக்கை யோசை. 4. தணிக – ஆறிப்‌ போவாயாக. 4. சுடு$ – பகைவர்‌ ஊரைச்‌ சுடும்‌ நெருப்பு. 9. இரு மருந்து – சோறும்‌ தண்ணீரும்‌. 17. விறகு ஓய்‌ மாக்கள்‌ – விறகைக்‌ காட்டினின்றும்‌ ஊரகத்து வெட்டிக்‌ கொணரும்‌ மாக்கள்‌. பொன்‌ – விழுப்பொருள்‌. 18. தலைப்பாடு – நேர்ப்பாடு; வாய்ப்பு.

£1. இவளையும்‌ பிரிவேன்‌!

பாடியவர்‌: ஒல்லையூர்‌ தந்த பூதப்பாண்டியன்‌. திணை: காஞ்சி. துறை: வஞ்சினக்‌ காஞ்சி.

(“பகைவரைப்‌ புறங்காண்பேன்‌; பிழைப்பின்‌ இதுவாகியர்‌” என வஞ்சினம்‌ உரைத்தனன்‌; அதனால்‌ வஞ்சினக்‌ காஞ்சி ஆயிற்று. “மாவன்‌, ஆந்தை, அந்துவஞ்‌ சாத்தன்‌, ஆதனழிசி, இயக்கன்‌ இவர்‌ உளப்படப்‌ பிறருடனும்‌ கலந்து பழகுதலை இழந்தேனாகுக’ என்பதனால்‌, “இவரது தகுதியும்‌ மேம்பாடும்‌ அறியப்படும்‌.)

புலியூர்க்‌ கேசிகன்‌ ம – 95 மடங்கலின்‌ சினைஇ, மடங்கா உள்ளத்து, அடங்காத்‌ தானை வேந்தர்‌ உடங்கு இயைந்து என்னோடு பொருதும்‌ என்ப; அவரை ஆரமர்‌ அலறத்‌ தாக்கித்‌ தேரொடு அவர்ப்புறம்‌ காணேன்‌ ஆயின்‌ – சிறந்த 5 பேரமர்‌ உண்கண்‌ இவளினும்‌ பிரிக; அறன்நிலை திரியா அன்பின்‌ அவையத்துத்‌, திறன்‌இல்‌ ஒருவனை நாட்டி, முறை திரிந்து மெலிகோல்‌ செய்தேன்‌ ஆகுக; மலிபுகழ்‌ வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்‌ 10

பொய்யா யாணர்‌ மையற்‌ கோமான்‌ மாவனும்‌, மன்‌எயில்‌ ஆந்தையும்‌, உரைசால்‌ அந்துவஞ்‌ சாத்தனும்‌, ஆதன்‌ அழிசியும்‌, வெஞ்சின இயக்கனும்‌, உளப்படப்‌ பிறரும்‌, . கண்போல்‌ நண்பிற்‌ கேளிரொடு கலந்த 15

இன்களி மகிழ்நகை இழுக்கி, யான்‌ ஒன்றோ, மன்பதை காக்கும்‌ நீள்குடிச்‌ சிறந்த தென்புலம்‌ காவலின்‌ ஒரீ இப்‌, பிறர்‌ வன்புலங்‌ காவலின்‌ மாறி யான்‌ பிறக்கே!

:’தஇிங்கம்போலச்‌ சீறிவரும்‌ அடங்காத உள்ளமுடைய பகைவரை அவர்‌ அழியவென்று புறங்காண்பேன்‌. காணேனாயின்‌, என்‌ தேவியான இவளைப்‌ பிரிவேனாகுக. அறமன்றிலே கொடியோனை நியமித்து முறைகலங்கச்‌ செய்த கொடுங்கோல னாகுக! மாவனும்‌, ஆந்தையும்‌, அந்துவஞ்‌ சாத்தனும்‌, அதனழிசியும்‌, இயக்கனும்‌, இன்னும்‌ பிறருமாகிய என்‌ கண்ணைப்‌ போன்ற நண்பரின்‌ புன்சிரிப்பை இழந்தவனாகுக. பாண்டியர்‌ குடியில்‌ நீங்கி வன்புலங்‌ காவல்‌ கொண்ட குடியிற்‌ சென்று பிறப்பேனாகுக” (இச்‌ சூளுரையால்‌, மனைவியைப்‌ பிரிவதும்‌, அறந்தவறுவதும்‌, அரிய நண்பரை இழப்பதும்‌, நன்னாட்டு அரச மரபிற்‌ பிறவாமையும்‌ பழி என்பதனை உணர்க.) டு ப சொற்பொருள்‌: 2. உடங்கு இயைந்து – தம்மில்‌ ஒப்பக்கூடி.

– 6. “இவள்‌’ என்றது மனைவியை. 9. மெலிகோல்‌ – கொடுங்கோல்‌. “அகுக’ என்பது எங்கும்‌ தந்துரைக்கப்பட்டது. 1. மையல்‌ – மையல்‌ என்னும்‌ உளர்‌. 76. இழுக்கி – தப்பியவனாகி. ஒன்றோ – எண்ணின்‌ கண்‌ வரும்‌ இடைச்‌ சொல்‌; அதனை முன்னும்‌ பின்னும்‌ கூட்டுக. 19. பிறக்கு – பிறப்பேனாகுக; “செய்கு’ என்னும்‌ வாய்ப்பாட்டுத்‌ தன்மைப்‌ பன்மை வினைஞாற்று.

96 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 72. இனியோனின்‌ வஞ்சினம்‌!

“பாடியவர்‌: பாண்டியன்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற

நெடுஞ்செழியன்‌. திணை: காஞ்சி. துறை: வஞ்சினக்‌ காஞ்சி.

(சிறு சொல்‌ சொல்லிய சினங்கெழு வேந்தரை வென்று அகப்படுத்துவேன்‌: அது செய்யேனாயின்‌ இன்னவாகுக என வஞ்சினம்‌ உரைத்தலால்‌ வஞ்சினக்‌ காஞ்சி ஆயிற்று. இக்‌ காலத்தே புலவர்‌ தலைவராக விளங்கியவர்‌ மாங்குடி மருதனார்‌ என்பது இச்‌ – செய்யுளால்‌ விளங்கும்‌.) ப

‘நகுதக்‌ கனரே, நாடுமீக்‌ கூறுநர்‌;

இளையவன்‌ இவன்‌ என உளையக்‌ கூறிப்‌,

படுமணி இரட்டும்‌ பாவடிப்‌ பணைத்தாள்‌

நெடுநல்‌ யானையும்‌, தேரும்‌, மாவும்‌,

படைஅமை மறவரும்‌, உடையம்‌ யாம்‌’ என்று ்‌ 5

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம்‌ செருக்கிச்‌

சிறுசொல்‌ சொல்லிய சினங்கெழு வேந்தரை

அருஞ்சமஞ்‌ சிதையத்‌ தாக்கி, முரசமொடு

ஒருங்குஅகப்‌ படேஎன்‌ ஆயின்‌ பொருந்திய

என்நிழல்‌ வாழ்நர்‌ சென்னிழல்‌ காணாது 1௦

– கொடியன்‌எம்‌ இறை எனக்‌ கண்ணார்‌ பரப்பிக்‌, குடிபழி தூற்றும்‌ கோலேன்‌ ஆகுக! ஓங்கிய சிறப்பின்‌ உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்‌ தலைவன்‌ ஆக, ப உலகமொடு நிலைஇய பலர்புகழ்‌ சிறப்பின்‌ ட 15

புலவர்‌ பாடாது’ வரைக, என்‌ நிலவரை; புரப்போர்‌ புன்கண்‌ கூர, இரப்போர்க்கு ஈயா இன்மை யான்‌ உறவே.

“இவன்‌ இளையவன்‌! யாம்‌ பெரும்படை உடையேம்‌’ எனப்‌ புல்லிய வார்த்தைகள்‌ பலவும்‌ கூறிப்‌ போரிட வருகின்றனர்‌. இவரைச்‌ சிதறியோடுமாறு போரிட்டு இவர்‌ முரசையும்‌ கைப்‌ பற்றுவேன்‌. இன்றேல்‌, கொடியவன்‌ எனக்‌ கண்ணீர்‌ பெருக்கிக்‌ குடிமக்கள்‌ பழி தூற்றம்‌ கொடுங்கோலன்‌ என்று இகழ்வாராக; மாங்குடி. மருதன்‌ முதலாகப்‌ போற்றும்‌ பெரும்‌ புலவர்‌ பலரும்‌ என்னைப்‌ பாடாது என்‌ நாட்டை விட்டு நீங்குக! என்‌ சுற்றும்‌ துயர்‌ மிக்கதாகுக! இரப்பவர்க்குக்‌ கொடுக்கவியலாத வ இமையுடையவ னாக யான்‌ ஆகுக! (இங்கே, குடியோம்பல்‌, புலவர்ப்‌ போற்றுதல்‌, சுற்றம்‌ காத்தல்‌, இரவலர்க்கு உதவுதல்‌ அகியவை மன்னனின்‌ முதன்மையான கடமைகள்‌ எனக்‌ கூறப்பட்டன;

புலியூர்க்‌ கேசிகன்‌ ட. 97 சொற்பொருள்‌: மீக்கூறுநர்‌ – மிகுத்துச்‌ சொல்லுபவர்கள்‌. 2. உளையக்‌ கூறி – வெறுப்பச்‌ சொல்லி. 16. நில்‌ வரை – நிற எல்லை. 73. உயிரும்‌ தருகுவன்‌ ! பாடியவர்‌: சோழன்‌ நலங்கிள்ளி; “நல்லுருத்திரன்‌ பாட்டு’

எனவும்‌ பாடம்‌. திணை: காஞ்சி. துறை: வஞ்சினக்‌ காஞ்சி. (“இன்னது பிழைப்பின்‌ இதுவாகியரென உரைத்தலால்‌’

வஞ்சினக்‌ காஞ்சி ஆயிற்று. “இரக்குவர்‌” ஆயின்‌, இன்னுயி

ராயினும்‌ கொடுப்பேன்‌; என்‌ உள்ளத்தை இகழ்ந்தாராயின்‌ அவர்‌

உய்ந்து போதல்‌ அரிது” என்னும்‌ சொற்கள்‌, இவனுடைய

பெருமாண்பைக்‌ காட்டுவனவாகும்‌.)

மெல்ல வந்து, என்‌ நல்லடி பொருந்தி,

ஈயென இரக்குவர்‌ ஆயின்‌, சீருடை

முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்‌;

இன்னுயிர்‌ ஆயினும்‌ கொடுக்குவென்‌, இந்நிலத்து;

ஆற்றல்‌ உடையோர்‌ ஆற்றல்‌ போற்றாது, என்‌ 5 உள்ளம்‌ எள்ளிய மடவோன்‌, தெள்ளிதின்‌

துஞ்சுபுலி இடறிய சிதடன்‌ போல,

உய்ந்தனன்‌ பெயர்தலோ அரிதே; மைந்துடைக்‌

கழைதின்‌ யானைக்‌ கால்‌அகப்‌ பட்ட

வன்றிணி நீண்முளை போலச்‌, சென்று அவண்‌ 1௦

வருந்தப்‌ பொரேஎன்‌ ஆயின்‌, பொருந்திய

தீதுஇல்‌ நெஞ்சத்துக்‌ காதல்‌ கொள்ளாப்‌

பல்லிருங்‌ கூந்தல்‌ மகளிர்‌

“ஒல்லா முயக்கிடைக்‌ குழைக, என்‌ தாரே!

என்னைப்‌ பணிந்து வேண்டுவாரானால்‌, என்‌ அரசு மட்டுமென்ன, என்‌ உயிரையே கேட்பினும்‌ கொடுப்பேன்‌, என்‌ உள்ளத்தை அறிவில்லாது இகழ்ந்தவன்‌, தூங்கும்‌ புலியை இடறிய குருடனைப்போல உயிர்‌ பிழைத்தலே மிகவும்‌ அரிதாகும்‌. யானையின்‌ காலடியிலே பட்ட மூங்கில்‌ முளையைப்‌ போல, என்னை எதிர்க்கும்‌ பகைவரை அவர்‌ ஊர்வரையும்‌ சென்று ஒழிப்பேன்‌. ஒழியேனாயின்‌, காதலற்ற பொதுமகளிர்‌ தழுவ, என்‌ மாலை துவள்வதாக! (என்‌ தேவியும்‌ என்னை ஒதுக்குவாளாக என்பது கருத்து.)

சொற்பொருள்‌: 3. தாயம்‌ – பழையதாய்‌ வருகின்ற உரிமை. தஞ்சம்‌ – எளிது; அரசு கொடுத்தல்‌ எளிது. 5. ஆற்றல்‌ உடையோர்‌ – அமைச்சர்‌ படைத்தலைவர்‌ முதலாகிய வலிமையுடையோர்‌.

98 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 10. நீள்‌ முளை – மூங்கிலினது நீண்ட முளை. 14. ஒல்லா முயக்கிடை – பொருந்தாத புணர்ச்சியிடை. குழைக – துவள்வதாக. “உள்ளம்‌” என்றது, உள்ளத்தால்‌ சூழும்‌ சூழ்ச்சியை.

74. வேந்தனின்‌ உள்ளம்‌ 1

பாடியவர்‌: சேரமான்‌ கணைக்கால்‌ இரும்பொறை. திணை: பொதுவியல்‌. துறை: முதுமொழிக்‌ காஞ்சி. “தாமே தாங்கிய தாங்கரும்‌ பையுள்‌’ என்னும்‌ துறைக்குக்‌ காட்டுவர்‌ இளம்பூரணர்‌ (புறத்‌. சூ. 19)

(“சோழன்‌ செங்கணானோடு திருப்போர்ப்‌ புறத்துப்‌ பொருது, பற்றுக்கோட்பட்டுக்‌ குடவாயிற்‌ கோட்டத்துச்‌ சிறையிற்கிடந்து, தண்ணீர்‌ கேட்டுப்‌ பெறாது, பின்‌ பெற்றுக்‌ கைக்கொண்டிருந்து உண்ணாது சொல்லித்‌ துஞ்சிய பாட்டு இது” என்பது பழைய குறிப்பு. “அரசர்க்கு மானத்தினும்‌ மிக்க உறுதிப்‌ பொருளில்லை’ என்று கூறினமையின்‌, முதுமொழிக்‌ காஞ்சி ஆயிற்று.) ப குழவி இறப்பினும்‌, ஊன்தடி பிறப்பினும்‌,

“ஆஅள்‌ அன்று’ என்று வாளின்‌ தப்பார்‌; தொடர்ப்படு ஞமலியின்‌ இடர்ப்படுத்து இரீஇய கேளல்‌ கேளிர்‌ வேளாண்‌ சிறுபதம்‌, ப 5

மதுகை இன்றி, வயிற்றுத்தீத்‌ தணியத்‌

தாம்‌இரந்து உண்ணும்‌ அளவை

ஈன்ம ரோ, இவ்‌ உலகத்‌ தானே.

மன்னர்‌ குடியிலே குழந்தை இறந்து பிறந்தாலும்‌, தசைப்‌ பிண்டமாகப்‌ பிறந்தாலும்‌, அவற்றை வாளால்‌ வெட்டியே புதைப்பர்‌. பகைவர்‌ வாளால்‌ சாவாது போயினேன்‌! சங்கிலியி னாலே கட்டிவைத்து, நாய்போலத்‌ துன்புறுத்தி என்னைச்‌ சிறையிலிட்டனர்‌. அப்படிச்‌ சிறையிலிட்டவரின்‌ உபகாரத்தால்‌ வந்த தண்ணீரை, “இரந்து உண்ணேம்‌” என்ற மன வலியின்றி, வேட்கை தாளாது, என்னைப்‌ போலத்‌ தாமே இரந்து உண்பவரையும்‌ இவ்வுலகில்‌ அரசர்‌ எனப்‌ போற்றிக்‌ கொள்வார்களோ? ப

சொற்பொருள்‌: 1. ஊளன்தடி – தசைத்தடி யாகிய மணை. 2. வாளின்‌ தப்பார்‌ – வாளால்‌ ஓங்கி வெட்டுதலைத்‌ தவறார்‌. 3. ஞமலி – நாய்‌. 4. கேள்‌ அல்‌ கேளிர்‌ – கேளாண்மையல்லாத கேளிராகிய பகைவர்‌. 3. மதுகை – மனவலி; அரசர்க்கு மானத்தின்‌ மிக்க அறனும்‌, பொருளும்‌. இன்பமும்‌ இல்லை என்று கூறினமையின்‌, இது முதுமொழிக்காஞ்சியாயிற்று.

-.. புலியூர்க்‌ கேசிகன்‌ படட 99 75. அரச பாரம்‌! தி ப

பாடியவர்‌: சோழன்‌ நலங்கிள்ளி. திணை: பொதுவியல்‌. துறை: பொருண்மொழிக்‌ காஞ்சி.

(தெளிந்த பொருளைக்‌ கூறினன்‌; அதனால்‌ பொருண்‌

மொழிக்‌ காஞ்சி ஆயிற்று; பொதுமொழிக்‌ காஞ்சி எனவும்‌ பாடம்‌.) ‘மூத்தோர்‌ மூத்தோர்க்‌ கூற்றம்‌ உய்த்தெனப்‌,

பால்தர வந்த பழவிறல்‌ தாயம்‌

எய்தினம்‌ ஆயின்‌, எய்தினம்‌ சிறப்பு’ எனக்‌

குடிபுரவு இரக்கும்‌ கூரில்‌ ஆண்மைச்‌

,சிறியோன்‌ பெறின்‌அது சிறந்தன்று மன்னே! 5

மண்டுஅமர்ப்‌ பரிக்கும்‌ மதனுடை நோன்தாள்‌

விழுமியோன்‌ பெறுகுவன்‌ ஆயின்‌, தாழ்நீர்‌

அறுகய மருங்கின்‌ சிறுகோல்‌ வெண்கிடை

என்றூழ்‌ வாடுவறல்‌ போல, நன்றும்‌

நொய்தால்‌ அம்ம தானே – மையற்று – 10

.. விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர்‌ அரசுகெழு திருவே. மூத்தோர்‌ காலன்வாய்ப்பட, அரசுரிமையை ஏற்றுக்‌ . குடிகளைக்‌ காப்பது அவரவர்‌ மன இயல்பால்‌. இருவகைப்படும்‌.

குடிகளிடம்‌ வரிவேண்டி இரக்கும்‌ சிறுமை உடையவனுக்கு அது பெரும்‌ பாரமாக விளங்கும்‌. போராற்றலும்‌ சால்பும்‌ உடைய வனுக்குக்‌ கிடேச்சி தக்கையைப்‌ போலச்‌ சுமப்பதற்கு மிகவும்‌ இலேசாகத்‌ தோன்றும்‌.

சொற்பொருள்‌: 2. பால்‌ – விதி. 4. குடி.புரவு இரக்கும்‌ – தம்‌ குடிமக்களை இறைவேண்டி. இரக்கும்‌. 5. சிறந்தன்று – அத்‌ தாயம்‌ அவனுக்குச்‌ சுமக்க வொண்ணாதாம்படி கனத்தது. மதன்‌ – வலிமை. . 6. நோன்றாள்‌ – வலிய முயற்சி.8. கிடை – நெட்டி. இதனைத்‌ தக்கைப்‌ பூண்டு எனவும்‌ கூறுவர்‌. 9. என்றூழ்‌ – கோடை க்கண்‌. வறல்‌ – கள்ளி. “மன்‌” அக்கத்தின்கண்‌ வந்தது. “அம்ம” – அசைநிலை. 76. அதுதான்‌ புதுமை! பாடியவர்‌:இடைக்குன்‌ நூர்கிழார்‌: பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்‌ செழியன்‌. திணை: வாகை. துறை: அரச வாகை. ப (அரசனது இயல்பையும்‌ வெற்றியையும்‌ கூறுதலால்‌

அரசவாகை ஆயிற்று. “நூழில்‌’ என்னும்‌ துறைக்கு எடுத்துக்‌ காட்டுவர்‌ இளம்பூரணர்‌ (புறத்‌ சூ. 14 உரை) ்‌

1௦0 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ ஒருவனை ஒருவர்‌ அடுதலும்‌, தொலைதலும்‌ புதுவது அன்று; இவ்‌ உலகத்து இயற்கை; இன்றின்‌ ஊங்கோ கேளலம்‌; திரளரை மன்ற வேம்பின்‌ மாச்சினை ஒண்தளிர்‌ நெடுங்கொடி உழிஞைப்‌ பவரொடு மிடைந்து, 5

செறியத்‌ தொடுத்த தேம்பாய்‌ கண்ணி,

ஒலியல்‌ மாலையொடு, பொலியச்‌ சூடிப்‌

பாடின்‌ தெண்கிணை கறங்கக்‌, காண்தக,

நாடுகெழு திருவிற்‌ பசும்பூட்‌ செழியன்‌,

பீடும்‌ செம்மலும்‌ அறியார்‌ கூடிப்‌, | 10 ‘பொருதும்‌’ என்று தலை தன்தலை வந்த

புனைகழல்‌ எழுவர்‌ நல்வலம்‌ அடங்க,

ஒருதான்‌ ஆகிப்‌ பொருது, களத்து அடலே!

ஒருவனை ஒருவன்‌ கொல்லுதலும்‌ ஒருவனுக்கு ஒருவன்‌ தோற்றலும்‌, இந்த உலகத்திலே புதுமையன்று. ஆனால்‌ நெடுஞ்செழியனின்‌ வலிமையை அறியாதவராகத்‌, தாம்‌ ஒன்றாகக்‌ கூடி, இருபெரு வேந்தரும்‌ ஐம்பெரும்‌ வேளிரும்‌ போரிட்டு நின்றனர்‌. அவர்களைத்‌ தான்‌ ஒருவனாகவே நின்று போரிட்டுக கொல்லுதலைச்‌ செய்தானே நெடுஞ்செழியன்‌, அதுதான்‌ புதுமை!

சொற்பொருள்‌: 3. திரள்‌ அரை – அடிப்பகுதி பருத்துத்‌ திரண்ட. 5. பவர்‌ – கொடி. 7. ஒலியல்‌ மாலை – வளையல்‌ மாலை. 10. செம்மலும்‌ – தலைமையையும்‌.

77. யார? அவன்‌ வாழ்க !

பாடியவர்‌: இடைக்குன்‌ நூர்‌ கிழார்‌ பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌. திணை: வாகை. துறை: அரச வாகை.

[செழியனது இயல்பையும்‌ வெற்றியையும்‌ கூறுதலால்‌ : அரசவாகை ஆயிற்று. செழியன்‌ களத்தில்‌ போரிட்ட நிலையை ஓவியமாக்கிக்‌ காட்டுகின்றார்‌ புலவர்‌: உழிஞைத்‌ திணைத்‌ . துறைகளுள்‌, “திறற்பட ஒருவன்‌ மண்டிய குறுமைக்கு’ எடுத்துக்‌ காட்டுவர்‌ இளம்பூரணனார்‌ ( புறத்‌.சூ.15.உரை)]

கிண்கிணி களைந்தகால்‌ ஒண்கழல்‌ தொட்டுக்‌,

குடுமி களைந்த நுதல்‌ வேம்பின்‌ ஒண்தளிர்‌

நெடுங்கொடி உழிஞைப்‌ பவரொடு மிலைந்து,

குறுந்தொடி கழித்தகைச்‌ சாபம்‌ பற்றி

நெடுந்தேர்க்‌ கொடிஞ்சி பொலிய நின்றோன்‌ 5

புலியூர்க்‌ கேசிகன்‌ 101

யார்கொல்‌? வாழ்க்‌, அவன்‌ கண்ணி! தார்பூண்டு,

தாலி களைந்தன்றும்‌ இலனே; பால்விட்டு

“அயினியும்‌’ இன்று அயின்‌ றனனே; வயின்வயின்‌

உடன்றுமேல்‌ வந்த வம்ப மள்ளரை |

வியந்தன்றும்‌, இழிந்தன்றும்‌ இலனே; அவரை 1௦

அழுங்கப்‌ பற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்‌;

கவிழ்ந்து நிலம்சேர அட்டதை

மகிழ்ந்தன்றும்‌, இகழ்ந்தன்றும்‌, அதனினும்‌ இலனே.

வீரக்கழல்‌ புனைந்து, வேப்பந்‌ தளிரைச்‌ சூடிக்‌ கையிலே வில்லினைக்‌ கொண்டு, தேரிலே அழகுற நின்றவன்‌ யாரோ? அவன்‌ யாவனேயாயினும்‌, அவன்‌ கண்ணி வாழ்வதாக! ஐம்படைத்‌ தாலி கழித்ததும்‌ இலனே; பால்குடித்தலை மறந்து இன்றே உணவுண்‌ டானே போலும்‌. இளையனாகவும்‌ உள்ளான்‌; வெகுண்டு மேலும்‌ மேலும்‌ வரும்‌ வீரரை மண்‌ கவ்வச்‌ செய்தான்‌! அதற்கு, அவன்‌ மகிழவும்‌ இல்லை! தன்னைப்‌ பெருமையாக நினைக்கவும்‌ இல்லை! அத்தகைய அற்றலுடையவன்‌, அவன்‌! அவன்‌ வாழ்க!

சொற்பொருள்‌: சாபம்‌ – வில்‌. 5. கொடி.ஞ்சி – மொட்டு: தேர்த்‌ தட்டின்‌ நடுவே மொட்டுப்போல்‌ அமைந்த இடம்‌. 7. தாலி – ஐம்படைத்‌ தாலி. 6. “யார்கொல்‌” என்றது வியப்பின்கட்‌ குறிப்பு. 8. அயினி – உணவு. 10. இழித்தன்‌ றென்பது. இழிந்தன்று என மெலிந்து நின்றது. 13. மகிழ்ந்தன்றும்‌ எனவும்‌ பாடம்‌.

78. அவர்‌ ஊர்‌ சென்று அழித்தவன்‌ !

பாடியவர்‌: இடைக்குன்றூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌: பாண்டியன்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌. திணை: வாகை துறை: அரச வாகை. ப

(பாண்டியனது புகழையும்‌, வெற்றிச்‌ சிறப்பையும்‌ கூறதலால்‌, அரச வாகை ஆயிற்று. உழிஞைத்‌ திணையாகக்‌ கொண்டு, அதற்கேற்பவும்‌ உரைப்பர்‌.) ப ‘

வணங்கு தொடைப்‌ பொலிந்த வலிகெழு நோன்தாள்‌,

அணங்குஅருங்‌ கடுந்திறல்‌ என்ஐ முணங்கு நிமிர்ந்து, :. அளைச்செறி உழுவை இரைக்குவந்‌ தன்ன

மலைப்பரும்‌ அகலம்‌ மதியார்‌, சிலைத்தெழுந்து,

விழுமியம்‌, பெரியம்‌, யாமே; நம்மிற்‌ ள்‌ ப 5

பொருநனும்‌ இளையன்‌, கொண்டியும்‌ பெரிது’ என,

எள்ளி வந்த வம்ப மள்ளர்‌,

புல்லென்‌ கண்ணர்‌, புறத்திற்‌ பெயர,

102 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

ஈண்டுஅவர்‌ அடுதலும்‌ ஒல்லான்‌; ஆண்டுஅவர்‌

மாண்‌இழை மகளிர்‌ நாணினர்‌ கழியத்‌, 10

தந்‌ைத தம்மூர்‌ ஆங்கண்‌. ‘

தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே!

போரிலே நிலைதளராத கால்களையும்‌, வருத்துதற்கரிய பெருவலியையும்‌ உடையவன்‌ எம்‌ இறைவன்‌! இவனை எதிர்த்து, “சிறப்புடையோம்‌! பெரும்படை உடையோம்‌! இவனோ இளைஞன்‌; கொள்ளையும்‌ பெரிது” என இகழ்ந்து வந்தனர்‌ பலர்‌. அவரைப்‌ போர்க்களத்திலே கொல்ல எண்ணாதவனாக, அவரவர்‌ ஊர்வரை ஓடஓட வெருட்டி, அங்கங்கே போர்ப்பறை முழக்கிச்‌ சென்று அழித்தவன்‌ அன்றோ இவன்‌!

சொற்பொருள்‌: என்‌ஐ – என்‌ இறைவன்‌. முணங்கு – மூரி. அளை – குகை. 4. சிலைத்து – ஆர்த்து. புல்லென்‌ கண்ணர்‌ – ஒளி மங்கிய கண்ணை யுடையராய்‌. 11. தந்தை தம்மூர்‌: பால்‌ வழுவமைதி. “ஏவல்‌ இளையர்‌ தாய்‌ வயிறு கறிப்ப’ என்றாற்போலத்‌ “தந்‌ைத தம்மூர்‌” என்றது, தாம்‌ போற்றிச்‌ செய்த நகரையன்றி, உறையூரும்‌, கருவூரும்‌ முதலாகிய ஊர்களை எனவும்‌ கொள்ளப்படும்‌.

79. பகலோ சிறிது!

பாடியவர்‌: இலங்குன்றூர்‌ கிழார்‌. பாடப்பட்டோன்‌ பாண்டியன்‌ தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்‌. திணை: வாகை. துறை: அரச வாகை.

(அரசனது புகழையும்‌ வெற்றியையும்‌ கூறுகி ன்‌ அரச – வாகை ஆயிற்று.) . மூதூர்‌ வாயில்‌ பனிக்கயம்‌ மண்ணி,

மன்ற வேம்பின்‌ ஒண்குழை மிலைந்து,

தெண்கிணை முன்னர்க்‌ களிற்றின்‌ இயலி,

வெம்போர்ச்‌ செழியனும்‌ வந்தனன்‌; எதிர்ந்த

வம்ப மள்ளரோ பலரே; ப ப 5

எஞ்சுவர்‌ கொல்லோ, பகல்தவச்‌ சிறிதே!

த்‌ தன்‌ பழநகர்‌ வாயிலின்‌ குளிர்ந்த நீருள்ள. பொய்கையிலே ்‌ மூழ்கி, மன்றத்து வேம்பின்‌ தளிரைச்‌ சூடிப்‌, பறை ஒலி முன்னாக ஒலிக்கக்‌, களிறுபோலப்‌ பெருமிதமுடனே, வெம்‌ போர்‌ வல்ல . நெடுஞ்செழியனும்‌ வந்தான்‌. அவனை எதிர்த்த நிலையற்ற மறவரோ மிகப்பலர்‌. பகல்‌ நேரம்‌ மிகக்‌ குறைவே! ஆதலால்‌, அவருள்‌ சிலர்‌ உயிர்தப்பிப்‌ பிழைக்கவும்‌ கூடுமோ?

புலியூர்க்‌ கேசிகன்‌ ப 103

சொற்பொருள்‌: மண்ணி – மூழ்கி. போர்‌ மடந்தையைப்‌ புணர வருகின்ற கன்னிப்‌ போர்‌ ஆதலால்‌, “பனிக்கயம்‌ மண்ணி” என்றார்‌. 2. குழை – தளிர்‌. கணை – ஓசையையுடைய பறை. 4. செழியன்‌ – நெடுஞ்செழியன்‌. 5. வம்ப மள்ளர்‌ – நிலையில்லாத. மறவர்‌. . 6. எஞ்சுவர்‌ கொல்‌ – அவருட்‌ சிலர்‌ இறக்கா தொழியவும்‌ தல்‌

80. காணாய்‌ இதனை!

பாடியவர்‌:சாத்தந்தையார்‌. பாடப்பட்டோன்‌;:சோழன்‌ போர்வைக்கோப்‌ பெருநற்கிள்ளி. திணை: தும்பை. துறை: எருமை மறம்‌. ப ப

-[அரசனானவன்‌, முதுகிட்ட தன்‌ படைக்குப்‌ பின்னே நின்ற

எதிரியை எதிர்ப்பது எருமை மறம்‌ ஆம்‌. அத்துறையைச்‌ சார்ந்த செய்யுள்‌ இது. இதனை, “மல்‌ வென்றித்‌ துறைக்கு நச்சினார்க்‌ கினியர்‌ எடுத்துக்‌ காட்டுவர்‌. (புறத்‌. சூ.20. உரை)]

இன்கடுங்‌ கள்ளின்‌ ஆமூர்‌ ஆங்கண்‌, .

மைந்துடை மல்லன்‌ மதவலி முருக்கி,

ஒருகால்‌ மார்பொதுங்‌ கின்றே; ஒருகால்‌

வருதார்‌ தாங்கிப்‌ பின்னொதுங்‌ கின்றே;

நல்கினும்‌ நல்கான்‌ ஆயினும்‌, வெல்போர்ப்‌ 5

பொரல்‌ அருந்‌ தித்தன்‌ காண்கதில்‌ அம்ம – –

பசித்துப்‌ பணைமுயலும்‌ யானை போல,

இருதலை ஓசிய எற்றிக்‌,

களம்புகும்‌ மல்லன்‌ கடந்துஅடு நிலையே!

அமூர்க்கண்‌ வலியுடைய மல்லனின்‌ மதவலியை முருக்கி அழித்தான்‌. ஒரு கால்‌ அவன்‌ மார்பிலும்‌, ஒரு கால்‌ அவன்‌ தந்திரங்களைத்‌ தடுத்து அவன்‌ பின்புறமாகவும்‌ அன்று அமைந்து இருந்தது. அவன்‌ ஆற்றலைக்கண்டு மகிழ்ந்தாலும்‌ மகிழாது . போனாலும்‌, தித்தன்‌ அந்தக்‌ காட்சியைப்‌ பார்க்கட்டும்‌. ்‌ பசிகொண்ட யானை எதிர்ப்பட்ட மூங்கில்‌ தண்டினை எளிதே ஒடித்துத்‌ தள்ளுவதைப்‌ போலக்‌, களம்புகுந்த மல்லனைக்‌ கிள்ளி வெல்லும்‌ அந்தக்‌ காட்சியைக்‌ காணட்டும்‌!

– சொற்பொருள்‌: 1. கடுங்கள்‌ – அழன்ற கள்‌; புளிப்பு பக்‌ களிப்புற்றுச்‌ சறிப்பொங்கும்‌ கள்‌. 3. மார்பு ஒதுங்கின்று – மண்டியாக மார்பிலே மடித்து வைத்து. 4. தார்‌ – உபாயம்‌. பின்‌ – முதுகு. 5. நல்கினும்‌ – கண்டால்‌ உவப்பினும்‌. 7. பணை முயலும்‌ – – ‘ மூங்கிலைத்‌ தின்றற்கு முயலும்‌. 8. ஓசிய – முறிய.

104 க, புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ _ 81. யார்கொல்‌ அளியர்‌!

பாடியவர்‌: சாத்தந்தையார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ போர்வைக்கோப்‌ பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை : அரச வாகை.

(சோழனது இயல்பையும்‌, வென்றிச்‌ சிறப்பையும்‌ கூறுதலால்‌ அரச வாகை ஆயிற்று.)

ஆர்ப்பு எழு கடலினும்‌ பெரிது; அவன்‌ களிறே கார்ப்பெயல்‌ உருமின்‌ முழங்கல்‌ ஆனாவே; யார்கொல்‌ அளியர்‌ தாமே ஆர்‌; நார்ச்‌ செறியத்‌ தொடுத்த கண்ணிக்‌

கவிகை மள்ளன்‌ கைப்பட்‌ டோரே?

கடல்‌ ஆரவாரத்தினும்‌ அவன்‌ படை ஆரவாரம்‌ பெரிது. கார்கால இடிமுழக்கினும்‌ அவனுடைய களிறு பெருமுழக்கஞ்‌ செய்வது. அத்தி மாலையும்‌ வழங்குவதற்குக்‌ குவிந்த கையும்‌ உடையவன்‌ அவன்‌. அவ்‌ வீரனின்‌ கையால்‌ வீழ்ந்தவரிலே எவர்தாம்‌ இரக்கத்தக்க நிலையில்‌ உள்ளனர்‌?

சொற்பொருள்‌: 2. உருமின்‌ – இடியினும்‌. 3. ஆர்கண்ணி , எனக்கூட்டி அத்திமாலை என்‌ து கொள்க. அளியர்‌ – இரங்கத்‌ தக்கவர்‌.

82. ஊசி வேகமும்‌ போர்‌ வேகமும்‌!

பாடியவர்‌: சாத்தந்தையார்‌. பர்டப்பட்டோன்‌: சோழன்‌ போர்வைக்கோப்‌ பெருநற்கிள்ளி. திணை: வாகை. துறை: அரச வாகை.

(அரசனின்‌ இயல்பையும்‌ வென்றியையும்‌ கூறுதலால்‌ அரசவாகை ஆயிற்று. விரைந்து தொழில்‌ ம்டித்தற்கு அசிரியர்‌ கூறும்‌ உவமை மிகமிக நுட்பமானது அகும்‌.)

சாறுதலைக்‌ கொண்டெனப்‌, பெண்ணீற்‌ றுற்றெனப்‌,

பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்‌,

கட்டில்‌ நிணக்கும்‌ இழிசினன்‌ கையது

போழ்தூண்டு ஊசியின்‌ விரைந்தன்று லம்‌

ஊர்கொள வந்த பொருநனொடு, 6

ஆர்புனை தெரியல்‌ நெடுந்தகை போரே!

ஊரிலே விழா; அதற்குப்‌ போகவேண்டும்‌. மனைவிக்குப்‌ பேறுகால சமயம்‌; அவளுக்கும்‌ சென்று உதவவேண்டும்‌. மாலை வேளை; மழை பெய்துகொண்டிருக்கிறது. கட்டிலைக்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ ப 105 கட்டிக்கொண்டிருக்கிற அவனின்‌ கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச்‌ செலுத்‌ துமோ, அவ்வளவு விரைவிலே முடிந்தது, ஊரைக்‌ கொள்ள எண்ணிவந்த வீரனுடன்‌, இந்‌ நெடுந்தகை நடத்திய பெரும்போர்‌! |

சொற்பொருள்‌: – சாறு – விழா. தலைக்கொண்டென தொடங்கிற்றாக. பெண்‌ – மனைவி. ஈற்று உற்றென – பெறுதலைப்‌ பொருந்தினாளாக. பட்டமாரி – பெய்கின்ற மழையுடைய. ஞான்ற ஞாயிற்று – ஞாயிறு வீழ்ந்த பொழுதின்கண்‌. 3. நிணக்கும்‌ – பிணிக்கும்‌. இழிசினன்‌ – புலைமகன்‌. 4. போழ்‌ தூண்டு ஊசியின்‌ – வாரைச்‌ செலுத்தும்‌ ஊசியினும்‌.

83. இருபாற்பட்ட ஊர்‌!

பாடியவர்‌: பெருங்கோழி நாய்கன்‌ மகள்‌ நக்கண்ணையார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ போர்வைக்கோப்‌ பெருநற்கிள்ளி. திணை: கைக்கிளை. துறை: பழிச்சுதல்‌. ப

(ஒத்த அன்பினாற்‌ காமம்‌ உறாத வழியும்‌, குணச்சிறப்பின்றித்‌ தானே காமமுற்றுக்‌ கூறியது இது என்பர்‌. “மையலூரும்‌ என்போற்‌ பெரிதும்‌ நடுக்கம்‌ அடைக”: என்பதாம்‌.)

அடிபுனை தொடுகழல்‌, மையணல்‌ காளைக்கு, என்‌ தொடிகழித்‌ திடுதல்யான்‌ யாய்‌அஞ்‌ சுவலே; ப அடுதோள்‌ முயங்கல்‌ அவைநா ணுவலே;

என்போற்‌ பெருவிதுப்‌ புறுக; என்றும்‌

ஒருபால்‌ படாஅது ஆகி

இருபாற்‌ பட்ட இம்‌ மையல்‌ ஊரே!

வீரக்‌.கழலும்‌ கரிய தாடியும்‌ உடைய இளையோனுக்காக என்‌ வளைகள்‌ கழல்கின்றன; தாய்க்கும்‌ அஞ்சுகிறேன்‌. பகைவரை வென்ற அவன்‌ தோளைத்‌ தழுவ விம்பினும்‌ சபையோரைக்‌ கண்டு நாணி நிற்பேன்‌. இந்த ஊர்‌ என்பக்கமும்‌ நிற்காது; என்‌ தாய்ப்பக்கமும்‌ நில்லாது, ‘இரு பக்கத்துமாக மாறிமாறி நின்று மயங்குகின்றதே! யான்‌ என்‌ செய்வேன்‌?

சொற்பொருள்‌: 1. அணல்‌ – தாடி; மீசை. 2. தொடி கழித்திடுதல்‌ – வளை என்னைக்‌ கைவிடுதலால்‌. 3. அவை – அவையின்‌ கண்‌ உள்ளாரை. 4. விதுப்புறுதல்‌ – நடுக்கமுறல்‌. 6. இருபாற்பட்ட – தாயும்‌ ப மகளுமாகிய இரு கூற்றிற்பட்ட. _. 84. புற்கையும்‌ பெருந்தோளும்‌ ! பாடியவர்‌: பெருங்கோழி நாய்கன்‌ மகள்‌ நக்கண்ணையார்‌

பாடப்பட்டோன்‌: சோழன்‌ போர்வைக்கோப்‌ பெருநற்‌ ன்‌ திணை: கைக்கிளை. துறை : பழிச்சுதல்‌.

7 106 _ புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

[காதலனின்‌ சிறப்பைக்‌ கூறிப்‌ போற்றுதலால்‌ பழிச்சுதல்‌ ஆயிற்று. பெண்பாற்‌ கைக்கிளைக்குப்‌ பேராசிரியரும்‌ (தொல்‌ செய்‌. சூ. 160), சுட்டி யொருவர்ப்‌ பெயர்‌ கொள்ளாத பாடாண்‌ திணைக்‌ கைக்கிளைக்கு நச்சினார்க்கினியரும்‌ (செய்‌. சூ. 160) எடுத்துக்‌ காட்டுவர்‌.)]

என்ஐ, புற்கை யுண்டும்‌ பெருந்தோ என்னே;

யாமே, புறஞ்சிறை இருந்தும்‌ பென்னன்‌ னம்மே,

போறெதிர்ந்து என்ஐ போர்க்களம்‌ புகினே,

கல்லென்‌ பேரூர்‌ விழவுடை ஆங்கண்‌,

ஏமுற்றுக்‌ கழிந்த மள்ளர்க்கு

உமணர்‌ வெரூஉம்‌ துறையன்‌ னன்னே!

என்‌ தலைவன்‌, கூழுண்டாலும்‌ பெரிய தோள்வளம்‌ உடையவன்‌; யானோ அவன்‌ சிறைப்புறத்திலேயே இருந்தும்‌ பசலை பாய்ந்தவளானேன்‌. போர்க்களத்தில்‌ அவன்‌ புகுந்தால்‌, பேரூர்‌ விழாவிலே செருக்குற்று அடிவரும்‌ மள்ளருக்கு உமணர்‌ அஞ்சுவது போன்று, பகைவரை அச்சமுறச்‌ செய்யும்‌ அற்றலுள்ளவன்‌ அவன்‌.

சொற்பொருள்‌: 2. பொன்‌ அன்னம்‌ – பொன்‌ போலும்‌ நிறத்தையுடைய பசலை உடையேம்‌ ஆயினேம்‌. 5. ஏமுற்றுக்‌ கழிந்த மள்ளர்‌ – தம்‌ வலியைத்‌ தாமே வியந்து ல வந்து, பின்னை அதனை இழந்த வீரர்‌.

85. யான்‌ கண்டனன்‌ !

பாடியவர்‌: பெருங்கோழி நாய்கன்‌ மகள்‌ நக்கண்ணையார்‌. பாடப்பட்டோன்‌: சோழன்‌ போர்வைக்கோப்‌ பெருநற்கிள்ளி. திணை: கைக்கிளை. துறை : பழிச்சுதல்‌.

(இதுவும்‌ மேற்‌ செய்யுளைப்‌ போன்றதே. ஏதாவது ஒன்றைச்‌ சார்ந்து நின்று ஒருவரைப்‌ பார்த்தலும்‌, கேட்டலும்‌ நாணமுடைய குலமகளிர்க்கு இயல்பு, அதனை இச்‌ செய்யுளும்‌ அடுத்த செய்யுளும்‌ காட்டும்‌.)

என்னைக்கு ஊர்‌இஸ்து அன்மை யானும்‌,

என்னைக்கு நாடு இஃ்து அன்மை யானும்‌,

ஆடுஆடு என்ப ஒருசா ரோரோ;

ஆடன்று என்ப ஒருசா ரோரே:

நல்ல, பல்லோர்‌ இருநன்‌ மொழியே;

அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்‌இல்‌,

முழாஅரைப்‌ போந்தை பொருந்தி நின்று, யான்கண்‌ டனன்‌அவன்‌ ஆடா குதலே.

புலியூர்க்‌ கேசிகன்‌ 107 என்‌ தலைவன்‌, இவ்வூரனல்லன்‌. அவனுக்கு உரிய நாடும்‌ இஃதன்று. அதனால்‌, அவன்‌ வெற்றிபெற்றும்‌ அதுபற்றிப்‌ பேசுவோர்‌ இருவகையார்‌. ஆயினர்‌. அவன்‌ வெற்றி என்பார்‌ சிலர்‌; இல்லை என்பார்‌ சிலர்‌. என்‌ காதுகளுக்கு இருவர்‌ சொற்களும்‌ நன்றாகவே இருந்தன. என்‌ வீட்டின்‌ முன்னே வந்து பனைமரத்தில்‌ சாய்ந்து நின்றேன்‌; முடிவில்‌ அவன்‌ வெற்றியாதலையே யானும்‌ கண்டேன்‌! ப சொற்பொருள்‌: 1. என்‌ ஐ – என்னுடைய தலைவன்‌. 4. அடு – வென்றி. 7. அரை – பக்கத்தையுடைய. போந்தை – பனைமரம்‌. “நல்ல’ என்றது, இகழ்ச்சிக்‌ குறிப்பு. . 86. கல்லளைபோல்‌ வயிறு!

பாடியவர்‌: காவற்‌ பெண்டு; காதற்பெண்டு எனவும்‌ பாடம்‌. பாடப்பட்டோன்‌: ….. திணை: வாகை. துறை : ஏறாண்‌ முல்லை. “(நிகரற்ற தமிழ்க்குடி, மரபின்‌ தன்மையை உயர்த்துக்‌ . கூறுவாராக, “ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன்‌. மாதோ போர்க்களத்‌ தானே” என்றலின்‌ ஏறாண்‌ முல்லை ஆயிற்று. காவற்பெண்டு – செவிலித்தாய்‌. நற்றாய்க்கும்‌ தனக்கும்‌ பாசத்தால்‌ வேறுபாடற்ற நிலையில்‌ இவ்வாறு கூறுகின்றாள்‌.) சிற்றில்‌ நற்றூண்‌ பற்றி, “நின்மகன்‌ யாண்டுள னோ? என வினவுதி; என்மகன்‌ : யாண்டு உளன்‌ ஆயினும்‌ அறியேன்‌; ஓரும்‌ புலிசேர்ந்து போகிய கல்‌அளை போல. ஈன்ற வயிறோ இதுவே; 5 தோன்றுவன்‌ மாதோ, போர்க்களத்‌ தானே! என்‌ சிறுவீட்டின்‌ தூணைப்பற்றி நின்று, “நின்‌ மகன்‌ எவ்விடத்தான்‌?” என்று கேட்கிறாய்‌! என்‌ மகன்‌ எங்கு உள்ளானோ யான்‌ அறியேன்‌. புலி கிடந்து பின்‌ வெளியே போன மலைக்குகை போல, அவனைப்‌ பெற்ற வயிற்றினை இதோ பார்‌. அவன்‌ போர்க்களத்திலே வந்து தோன்றுவான்‌. அவனை அங்கே போய்க்‌ காண்பாயாக! ப சொற்பொருள்‌: ஒரும்‌, மாதோ; அசைகள்‌. 5. “என்றோ வயிறோ இது” – என்ற கருத்து, புலிசேர்ந்து போகிய அளைபோல அவனுக்கு என்னிடத்து உறவும்‌ அத்தன்மைத்தே என்பதற்காம்‌. 87. எம்முளும்‌ உளன்‌! பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமானஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்‌.

108 ட புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

. (போர்‌ எதிர்ந்து களம்புகல்‌ ஓம்புமின்‌’ எனவுரைத்து, அதியனின்‌ தானைமறச்‌ செவ்வியை உரைத்தனர்‌. வாகைத்‌ .திணையுள்‌, “அரும்பகை தாங்கும்‌ ஆற்றல்‌” என்பதற்கு எடுத்துக்‌ .. காட்டுவர்‌ இளம்பூரணரும்‌, நச்சினார்க்கினியரும்‌.)

களம்புகல்‌ ஓம்புமின்‌, தெவ்விர்‌! போர்‌ எதிர்ந்து, எம்முளும்‌ உளன்‌ஒரு பொருநன்‌; வைகல்‌ எண்தேர்‌ செய்யும்‌ தச்சன்‌

திங்கள்‌ வலித்த.கால்‌அன்‌ னோனே!

– பகைவர்களே! போர்க்களம்‌ சேர்வதைப்‌ போற்றுங்கள்‌. எதிர்த்துப்‌ போரிடும்‌ ஆற்றல்‌ உடையவன்‌ எம்முள்ளும்‌ ஒருவன்‌ இருக்கின்றான்‌. ஒரு நாளைக்கு எட்டுத்‌ தேர்‌ செய்யும்‌ தச்சன்‌, ஒரு மாதங்‌ கூடிச்‌ செய்த தேர்க்காலைப்‌ போன்ற அழகும்‌ வலிமையு முடையவன்‌ அவன்‌!

சொற்பொருள்‌: 1. களம்‌ – போர்க்களம்‌. ஓம்புமின்‌ – போற்றுமின்‌. 4. திங்கள்‌ வலித்த – ஒரு மாதமாகச்‌ செய்யப்பட்ட. கால்‌ அன்னோன்‌ – தேர்க்காலின்‌ வலிமையும்‌ அழகும்‌ ஒப்பவன்‌! திண்மையும்‌ அழகும்‌ தோள்களுக்கு உவமையாயின.

88. எவருஞ்‌ சொல்லாதீர்‌!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்‌;

(அதியனின்‌ தானைமற மேம்பாட்டை வியந்து உரைக்‌ கின்றனர்‌. “காணாஜஷூங்கு யாம்‌ பொருதும்‌ என்றல்‌ ஓம்புமின்‌; காணின்‌ அது கூறில்‌, நீவிர்‌ அழிவது உறும்‌” என்று கூறியதாம்‌;

யாவிர்‌ ஆயினும்‌, “கூழை தார்‌ கொண்டு

யாம்பொருதும்‌ என்றல்‌ ஓம்புமின்‌; ஓங்குதிறல்‌

ஒளிறுஇலங்கு நெடுவேல்‌ மழவர்‌ பெருமக்கள்‌,

கதிர்விடு நுண்பூண்‌ அம்பகட்டு மார்பின்‌

விழவுமேம்‌ பட்ட நற்போர்‌ 5

முழவுத்தோள்‌ என்னையைக்‌ காணா ஊங்கே.

நீர்‌ எப்படி ப்பட்டவராயினும்‌, “அவனோடு போரிடுவோம்‌’ என்று மட்டும்‌ சொல்லாதீர்‌. உயர்ந்த வலிமையுடையவன்‌; வேல்‌ உடைய படை மறவர்க்குத்‌ தலைவன்‌, பூணணிந்த பரந்த மார்பினன்‌; களவேள்வி ஆற்றிச்‌ சிறந்த நல்ல போரைச்‌ செய்யும்‌ முழவுபோன்ற தோளினை உடையவன்‌; அவன்‌ எம்‌ இறைவன்‌! அவனைக்‌ காண்பதற்குமுன்‌ சொன்னது சரி, கண்டபிறகும்‌ அவ்வாறு சொன்னால்‌, சொல்லியபடி. செய்தல்‌ அரிதாதலை அறிந்திருப்பீர்‌, அதலால்‌ சொல்லாதீர்‌. ்‌

புலியூர்க்‌ கேசிகன்‌ 109 சொற்பொருள்‌: 1. கூழை – பின்னணிப்‌ படை.3.ஒளிரு- பாடஞ்‌ செய்யும்‌; ஒளிவிடும்‌.

89. ந்தம்‌ உளனே!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்‌.

(“எறிகோல்‌ அஞ்சா அரவின்‌ அன்ன சிறுவன்‌ மள்ளரும்‌ : உளரே எனவும்‌, “உமை வளிபொரு தெண்கண்‌ கேட்பின்‌, அது போர்‌ என்னும்‌ என்‌ ஐயும்‌ உளனே’ எனவும்‌, தானை மறம்‌ கூறினார்‌.)

‘இழையணிப்‌ பொலிந்த ஏந்துகோட்‌ டல்குல்‌,

மடவரல்‌, உண்கண்‌, வாள்நுதல்‌, விறலி!

பொருநரும்‌ உளரோ, நும்‌அகன்றலை நாட்டு?” என,

வினவல்‌ ஆனாப்‌ பொருபடை வேந்தே!

எறிகோல்‌அஞ்சா அரவின்‌ அன்ன ப 5

_ சிறுவன்‌ மள்ளரும்‌ உளரே; அதாஅன்று பொதுவில்‌ தூங்கும்‌ விசியுறு தண்ணுமை வளிபொரு தெண்கண்‌ கேட்பின்‌,

“அது போர்‌’ என்னும்‌ என்னையும்‌ உளனே! .

“மடவரல்‌ உண்கண்‌ வாள்நுதல்‌ ‘வஞ்சியே, உன்‌ பெரிய நாட்டிலே என்னோடும்‌ போரிடுவார்‌ உளரோ?” என, என்னைக்‌ கேட்ட படைபலம்‌ உடைய வேந்தனே! கேள்‌: “எம்‌ நாட்டிலே அடிக்குங்‌ கோலுக்கு எதிரே ஏறி எழும்‌ பாம்பு போன்ற வலிமையுடைய படைமறவர்‌ கணக்கற்றோர்‌ உளர்‌. அவர்கள்‌ மட்டுமன்று; முழவிலே காற்று மோத, அதனால்‌ எழுந்த ஓசையையே போர்ப்‌ பறையொன்று மகிழ்ந்து எழும்‌ எம்‌ தலைவனும்‌ உளன்‌! இவை கண்டுமோ நீ கேட்கின்றாய்‌?” (பகைவரை நோக்கிக்‌ கேட்கிறார்‌ புலவர்‌.)

ப சொற்பொருள்‌: 1. இழை அணி – மணிக்கோவையாகிய அணி.

3. பொருநரும்‌ – என்னோடு பொருபவரும்‌; 4. வினவல்‌ அனா – கேட்டல்‌ அமையாத. 5. எறிகோல்‌ – அடிக்குங்‌ கோல்‌. 6. மள்ளர்‌ – வீரர்‌. அதா அன்று – அதுவேயுமின்று. 7. பொதுவில்‌ – மன்றில்‌. ‘ 8. வளி – காற்று. 9. என்‌ ஐ – எனது தலைவன்‌. தெண்கண்‌ – ஓசையை.

. 90. புலியும்‌ மானினமும்‌!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: தும்பை. துறை: தானைமறம்‌.

110 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

(“நீ களம்‌ புகின்‌, இருநிலம்‌ மண்கொண்டு சிலைக்கும்‌ பொருநரும்‌ உளரோ?” என்று, அதியனின்‌ தானை மறத்தை : வியந்து போற்றுவது இச்‌ செய்யுள்‌.)

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்‌

அடைமல்கு குளவியொடு கமழும்‌ சாரல்‌

மறப்புலி உடலின்‌, மான்கணம்‌ உளவோ?

மருளின விசும்பின்‌ மாதிரத்து ஈண்டிய

இருளும்‌ உண்டோ, ஞாயிறு சினவின்‌? 5

அச்சொடு தாக்கிப்‌ பாருற்று இயங்கிய பண்டச்‌ சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, விரிமணல்‌ ஜஞெமரக்‌, கல்பக நடக்கும்‌ பெருமிதப்‌ பகட்டுக்குத்‌ துறையும்‌ உண்டோ? எழுமரம்‌ கடுக்கும்‌ தாள்தோய்‌ தடக்கை 10

வழுவில்‌ வன்கை, மறவர்‌ பெரும! இருநில மண்கொண்டு சிலைக்கும்‌ பொருநரும்‌ உளரோ, நீ களம்‌ புகினே?

புலி சீறினால்‌ எதிரே நிற்கும்‌ மானினம்‌ உளதோ? ஞாயிறு எழுமாயின்‌ ஓடாது நிற்கும்‌ இருளும்‌ வானில்‌ உளதோ? ஆற்றல்‌ மிக்க கடாவானது போகுதற்கு அரிய துறையும்‌ உண்டோ? இல்லை அன்றோ! முழந்தாள்வரை நீண்ட வலிய கையினையுடைய வீரர்க்குத்‌ தலைவனே! அவையபோல, நின்‌ நாட்டைக்‌ கைப்பற்றப்‌ போரிடும்‌ பகை வீரரும்‌ உளரோ? நீ.களம்‌ புகுந்தால்‌, எவர்தாம்‌ நின்னை எதிருற்று எதிர்க்கவல்லார்‌?

சொற்பொருள்‌: 2. அடை – இலை. குளவி – மலை மல்லிகை. 4. மருளின – மயங்கிய. விரிமணல்‌ – புனல்‌ கொழிக்கப்பட்ட மணல்‌. 10. எழுமரம்‌ – கணையமரம்‌, கோட்டைக்‌ கதவின்‌ உட்புறத்தே குறுக்காகப்‌ போடப்படும்‌ வலிய மரம்‌.

91. எமக்கு ஈத்தனையே!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: பாடாண்‌. துறை: வாழ்த்தியல்‌.

(அதியமான்‌ அளித்த கருநெல்லிக்‌ கனியைப்‌ பெற்று _ உண்டதன்பின்‌, “அவன்‌ உளச்செவ்வியை வியந்து பாடியது இது. “நீல மணிடற்று ஒருவன்‌ போல மன்னுக” என வாழ்த்தலின்‌, வாழ்த்தியல்‌ ஆயிற்று. தன்னாக்கங்‌ கருதானாய்ப்‌ பல்லுயிர்‌ களையும்‌ காத்தலே கருத்தாக விடமுண்ட புண்ணியன்‌ நீல மணிமிடற்றன்‌ அதனால்‌, அவனை உவமை கூறினார்‌.)

புலியூர்க்‌ கேசிகன்‌ : _ 111 வலம்படு வாய்வாள்‌ ஏந்தி, ஒன்னார்‌ களம்படக்‌ கடந்த கழல்தொடி தடக்கை, ஆர்கலி நறவின்‌, அதியர்‌ கோமான்‌ போர்‌அடு திருவின்‌ பொலந்தார்‌ அஞ்சி! பால்புரை பிறைநுதல்‌ பொலிந்த சென்னி 5 நீல மணிமிடற்று ஒருவன்‌ போல . மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்‌ பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித்‌ தீங்கினி குறியாது, ஆதல்‌ நின்னகத்து அடக்கிச்‌, 10 சாதல்‌ நீங்க, எமக்கு ஈத்தனையே.

களத்திலே பகைவரை வென்று வீரவளை அணிந்திருக்கும்‌ தலைவனே! வீரச்‌ செல்வமும்‌ பொன்மாலையும்‌ உடைய அஞ்சியே! மலைச்சரிவிலே கடுமுயற்சியுடன்‌ பெற்ற நெல்லியின்‌ இனிய கனி அது. அதனைப்‌ பெறுதற்கு அரிது என்றும்‌ கருதாது, அதனால்‌ விளையும்‌ பேற்றினையும்‌ கூறாது, நின்னுள்ளத்திலேயே அடக்கிக்கொண்டு, எம்‌ சாதல்‌ ஒழிய எமக்கு அளித்தனையே!’ பெருமானே! பிறையணிந்த நீலமணிமிடற்று இறைவனைப்போல, நீயும்‌ நிலைபெற்று வாழ்வாயாக!

92. மழலையும்‌ பெருமையும்‌!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி.

(அரசனது இயல்பை வியந்து கூறிப்‌ பாராட்டுதலால்‌ இயன்மொழி ஆயிற்று.)

யாழொடும்‌ கொள்ளா; பொழுதொடும்‌ புணரா;

பொருள்‌ அறி வாரா; ஆயினும்‌, தந்தையர்க்கு

அருள்வந்‌ தனவால்‌, புதல்வர்தம்‌ மழலை,

என்வாய்ச்‌ சொல்லும்‌ அன்ன; ஒன்னார்‌

கடிமதில்‌ அரண்பல கடந்து 5

நெடுமான்‌ அஞ்சி! நீ அருளல்‌ மாறே.

புதல்வரின்‌ மழலைச்‌ சொற்கள்‌ யாழ்‌ இசையும்‌ அல்ல; . காலத்தோடும்‌ கூடியிராதன; பொருளும்‌ அறிய முடியாதன; . எனினும்‌, தந்தையர்க்கு அருளுதல்போல வந்தனவாம்‌. என்‌ – சொற்களும்‌ அத்தகையவே! பகைவர்‌ வலிய அரண்கள்‌ பலவும்‌

கடந்த நெடுமான்‌அஞ்சியே! அவ்வா கருதி, நீயும்‌ எனக்கு அருள்கின்றாய்‌!

112 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ சொற்பொருள்‌: 1. யாழொடும்‌ கொள்ளா – யர்ழோசை போல இன்பமும்‌ செய்யா. 3. மழலை – எழுத்து வடிவு பெறாது தோன்றும்‌ இளஞ்சொல்‌. 6. அருளல்‌ மாறு – அருளுதலால்‌. 93. பெருந்தகை புண்பட்டாய! பாடியவர்‌: ஓளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: வாகை. துறை: அரச வாகை.

[பொருது புண்பட்டு நின்றோனாகிய அதியனை, அவனது . போர்வென்றியைப்‌ போற்றுவது மூலம்‌ பாராட்டிக்‌ கூறிய செய்யுள்‌ இது. “அடுத்தூர்ந்து அட்ட கொற்றம்‌” என்னும்‌ வஞ்சித்‌ திணைத்‌ துறைக்கு மேற்கோள்‌ காட்டுவர்‌ இளம்பூரணர்‌ (தொல்‌. புறத்‌. சூ. 7.)]

திண்பிணி முரசம்‌ இழுமென முழங்கச்‌ சென்று, அமர்‌ கடத்தல்‌ யாவது? வந்தோர்‌ தார்தாங்‌ குதலும்‌ ஆற்றார்‌, வெடிபட்டு, ஓடல்‌ மரீ இய பீடுஇல்‌ மன்னர்‌ நோய்ப்பால்‌ விளிந்த யாக்கை தழீஇக்‌, 5 காதல்‌ மறந்து, அவர்‌ தீதுமருங்‌ கறுமார்‌ அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்‌ திறம்புரி பசும்புல்‌ பரப்பினர்‌ கிடப்பி, ‘மறம்‌ கந்து ஆக நல்லமர்‌ வீழ்ந்த “நீள்கழல்‌ மறவர்‌ செல்வுழிச்‌ செல்க!” என 1௦ வாள்போழ்ந்து அடக்கலும்‌ உய்ந்தனர்‌ மாதோ; வரிஞிமிறு ஆர்க்கும்‌ வாய்புகு கடாஅத்து அண்ணல்‌ யானை அடுகளத்‌ தொழிய, அருஞ்சமம்‌ ததைய நூறி, நீ உ பெருந்தகை விழுப்புண்‌ பட்ட மாறே. ல பெருந்தகையோனே! போரிலே நீ விழுமிய புண்பட்டு விட்டாய்‌. நின்னை எதிர்த்தோர்‌ நின்னால்‌ போரிலே வீழ்ந்து தம்‌ இழிதகவு பிழைத்துப்‌ பெருமையுற்றனர்‌. வண்டு மொய்க்கும்‌ மதநீர்‌ உடைய போர்யானைகளையும்‌ சிதற வெட்டி வீழ்த்தும்‌ வலிமை உடையவனே! இனி, முரசும்‌ முழங்கச்‌ சென்று, நின்னை எவர்தாம்‌ போரில்‌ வெல்லப்‌ போகின்றனர்‌? நின்னை எதிர்ப்பார்தாம்‌ எவரும்‌

இலரே!

சொற்பொருள்‌: 4. ஓடல்‌ மரீஇய – போதலிலே மருவிய. 8: பசும்புல்‌ – பசுமையான தருப்பைப்‌ புல்‌. 9. கந்து ஆக – பற்றுக்‌ கோடாக. 11. வாள்‌ போழ்ந்து அடக்கலும்‌ உய்ந்தனர்‌ – வாளோச்சி

புலியூர்க்‌ கேசிகன்‌ 113

அடக்கும்‌ இழிதகவும்‌ பிழைத்தார்கள்‌. 12. ஞிமிறு – தேனீ. 14. ததைய – சிதைய. 15. விழுப்புண்‌ – முகத்தினும்‌ மார்பினும்‌ பட்ட புண்‌.

94. சிறுபிள்ளை பெருங்களிறு!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: வாகை. துறை : அரச வாகை.

‘((இனியை பெரும எமக்கே; நின்‌ ஒன்னாதோர்க்கு இன்னாய்‌ பெரும்‌ என, அரசனது ‘கொடை வென்றியையும்‌ போர்‌ வென்றியையும்‌ கூறுவது செய்யுள்‌. பாடாண்‌ திணைத்‌ துறைகளுள்‌ ஒன்றான இயன்மொழித்‌ துறைக்கு இளம்பூரணர்‌ எடுத்துக்‌ காட்டினர்‌ (தொல்‌. புறத்‌. சூ. 29.)

ஊர்க்குறு மாக்கள்‌ வெண்கோடு கழாஅலின்‌,

நீர்த்துறை படியும்‌ பெருங்களிறு போல

இனியை, பெரும, எமக்கே; மற்றதன்‌

துன்னருங்‌ கடாஅம்‌ போல

இன்னாய்‌, பெரும, நின்‌ ஒன்னா தோர்க்கே! 5

நீர்த்துறையின்‌ கண்ணே யானையைக்‌ காணாய்‌! சிறு பிள்ளைகள்‌ அதன்‌ வெண்கோட்டைக்‌ கழுவுகின்றனர்‌. அப்‌ பெருங்‌ களிறு அவருக்கு எளியதாய்‌ இனியதாய்‌ விளங்குகின்றது. அவ்வாறே, பகைவர்‌ நெருங்குதற்கு அரிய வலிமையுடையாய்‌ எனினும்‌, நீ எமக்கு இனிதாகவே விளங்குகின்றனை, பெருமானே!

சொற்பொருள்‌: 1. குறுமாக்கள்‌ – சிறுபிள்ளைகள்‌;

மனவுணர்வு நிரம்பாமையின்‌, இளஞ்சிறுவர்களைக்‌. “குறு

மாக்கள்‌” என்றார்‌. கழாஅலின்‌ – கழுவுதல்‌ காரணமாக: கழுவப்‌ படுதலால்‌ எனினும்‌ அமையும்‌!

95. புதியதும்‌ உடைந்ததும்‌! பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை:பாடாண்‌. துறை: வாண்‌ மங்கலம்‌.

[(அதியமானுடைய படைக்கலச்‌ சிறப்பைப்‌ புகழ்ந்து கூறினர்‌; அதனால்‌ வாள்‌ மங்கலம்‌ ஆயிற்று. வகைத்‌ திணைத்‌ துறைகளுள்‌, “பெரும்பகை தாங்கும்‌ வேல்‌’ என்பதற்கு இளம்பூரணர்‌ எடுத்துக்‌ காட்டினர்‌ (தொல்‌. புறத்‌. சூ. 17 உரை.)]

இவ்வே, பீலி அணிந்து, மாலைகுட்டிக்‌

கண்திரள்‌ நோன்காழ்‌ திருத்தி, நெய்‌ அணிந்து,

கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே,

பகைவர்க்‌ குத்திக்‌, கோடுநுதி சிதைந்து,

கொல்துறைக்‌ குற்றில மாதோ, என்றும்‌ 5

11 _ புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

உண்‌ டாயின்‌ பதம்‌ கொடுத்து,

இல்‌ லாயின்‌ உடன்‌ உண்ணும்‌

இல்லோர்‌ ஒக்கல்‌ தலைவன்‌, ப

அண்ணல்எம்‌ கோமான்‌, வைந்‌ நுதி வேலே.

இவைதாம்‌ பீலி அணிந்து, மாலை சூட்டி, அழகுடன்‌ நெய்‌ பூசப்பட்டுக்‌, காவலையுடைய நின்‌ அரண்மனையிலே அழகிதாக உள்ளன. உண்டானால்‌ உணவளித்தும்‌, இல்லையானால்‌ உள்ளதைப்‌ பகிர்ந்தளித்தும்‌ மகிழும்‌ வறியோர்‌ தலைவனாகிய எம்‌ வேந்தன்‌ அஞ்சியின்‌ வேல்களோ, பகைவரைக்‌ குத்துதலால்‌ நுனி முரிந்தனவாகக்‌, கொல்லன்‌ உலைக்களத்திலே யன்றோ சிதைவுற்றுக்‌ கிடக்கின்றன!

சொற்பொருள்‌: 1. இவ்வே – இவைதாம்‌. 2. கண்திரள்‌ – உடலிடம்‌ திரண்ட. காழ்‌ – காம்பு. அவ்வே – அவைதாம்‌. 5. கொல்துறை – கொல்லனது பணிக்களரியாகிய இடம்‌. 5. பதம்‌ – உணவு. “சிதைந்து கொல்துறை குற்றில’ என்பது பழித்தது போலப்‌ புகழ்ந்து கூறப்பட்டது. 96. அவன்‌ செல்லும்‌ ஊர்‌!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ மகன்‌ பொகுட்டெழினி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி. (அரசனது இன்பச்சிறப்பும்‌, வென்றிச்‌ சிறப்பும்‌ கூறினர்‌. இவற்றால்‌, அவனது இயல்பு கூறிப்‌ பாராட்டுதலால்‌ இயன்‌ , மொழி ஆயிற்று.) அலர்பூந்‌ தும்பை அம்பகட்டு மார்பின்‌, திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு இரண்டு எழுந்‌ தனவால்‌, பகையே; ஒன்றே, பூப்போல்‌ உண்கண்‌ பசந்து, தோள்‌ நுணுகி, நோக்கிய மகளிர்ப்‌ பிணித்தன்று; ஒன்றே 5 “விழவு இன்று ஆயினும்‌, படுபதம்‌ பிழையாது, மைஊன்‌ மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்‌ கைமான்‌ கொள்ளுமோ?” என, உறையுள்‌ முனியும்‌, அவன்‌ செல்லும்‌ ஊரே.

இளையோனாகிய இவன்‌, எம்‌ இறைவன்‌ அஞ்சியின்‌ மகன்‌. இவனுக்கு இரண்டு பகைகள்‌ உள. ஒன்று, இவனைக்‌ கண்டு காதல்‌ கொண்ட கன்னியர்‌, தம்‌ நெஞ்சம்‌ வருந்தத்‌ துயர்‌ மிகுந்தாராவது; _ மற்றொன்று, விழாநாள்‌ இன்றேனும்‌, ஆட்டுக்‌ கறியுடன்‌ உண்டு மகிழ்ந்த சுற்றத்தோடு, நீர்த்‌ துறையிலே போர்யானைகள்‌ வந்து

லியூக்‌ கேசிகன்‌ ன உ 115 நீரினை உண்ணுமோவென அஞ்சி, அவன்‌ செல்லும்‌ ஊரினர்‌, தம்‌ ஊரையே வெறுத்துக்‌ கைவிட்டுச்‌ செல்வது.

சொற்பொருள்‌: 2. என்னை – அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. : 5. மகளிர்ப்‌ பிணித்தன்று – மகளிரை நெஞ்சு பிணித்ததனால்‌ அவர்‌ துனிகூர்தலினால்‌ உளதாயது. 9. அவன்‌ செல்லும்‌ ஊர்‌ – அவன்‌ எடுத்துவிட்டுச்‌ சென்றிருக்கும்‌ ஊர்‌. 7. மொசித்த – தின்ற..’ 8. கைம்மான்‌ என்பது, எதுகை நோக்கித்‌ திரிந்தது; ஓகாரம்‌, அசைநிலை.

97. த்தம்‌ உரிமை!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி.

(போர்மற மாண்பாகிய அரசனது இயல்பைக்‌ கூறி வாழ்த்துதலால்‌ இயன்மொழி ஆயிற்று.)

போர்க்கு உரைஇப்‌ புகன்று கழித்த வாள்‌,

உடன்றவர்‌ காப்புடை மதில்‌ அழித்தலின்‌,

ஊனுற மூழ்கி, உருவிழந்‌ தனவே;

வேலே, குறும்படைந்த அரண்‌ கடந்தவர்‌ அ

.. நறுங்‌ கள்ளின்‌ நாடு நைத்தலின்‌, 5

சுரை தழீஇய இருங்‌ காழொடு

மடை கலங்கி நிலைதிரிந்‌ தனவே;

களிறே, எழூஉத்‌ தாங்கிய கதவம்‌ மலைத்து அவா

குழூஉக்‌ களிற்றுக்‌ குறும்பு உடைத்தலின்‌,

பரூஉப்‌ பிணிய தொடிகழிந்‌ தனவே; ்‌ 10

மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்‌

பொலம்‌ பைந்தார்‌ கெடப்‌ பரிதலின்‌, ‘

களன்‌ உழந்து அசைஇய மறுக்குளம்‌ பினவே;

அவன்‌ தானும்‌, நிலம்‌ திரைக்கும்‌ கடல்‌ தானைப்‌

பொலந்‌ தும்பைக்‌ கழல்‌ பாண்டில்‌ ப டத

கணை பொருத துளைத்தோ லன்னே;

ஆயிடை, உடன்றோர்‌ உய்தல்‌ யாவது? “தடந்தாள்‌,

பிணிக்‌ கதிர்‌, நெல்லின்‌ செம்மல்‌ மூதூர்‌ ப நுமக்குஉரித்து ஆகல்‌ வேண்டின்‌, சென்றவற்கு

இறுக்கல்‌ வேண்டும்‌ திறையே; மறுப்பின்‌, 20

– ஓல்வான்‌ அல்லன்‌, வெல்போ ரான்‌’ எனச்‌ சொல்லவும்‌, தேறீர்‌ ஆயின்‌, மெல்லியல்‌,

116 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ கழற்கனி வகுத்த துணைச்சில்‌ ஓதிக்‌, குறுந்தொடி மகளிர்‌ தோள்விடல்‌ இறும்பூது அன்று; அஃது அறிந்துஆ டுமினே. 25

வாள்களோ, பகைவரை வெட்டி வீழ்த்திக்‌ கதுவாய்‌ ஓடிய வடிவு இழந்தன. வேல்களோ, பகைவர்‌ நாடழித்த அற்றலால்‌ காம்பின்‌ ஆணி கலங்க நிலைகெட்டன. களிறுகளோ, பகைவர்‌: அரணை மோதி அழித்தலால்‌ கிம்புரிகள்‌ கழன்றனவாயின. குதிரைகளோ, போர்க்களத்துப்‌ பகைவர்‌. உருவழிய மிதித்தும்‌ ஓடியும்‌ சென்றதால்‌ குருதிக்கறை படிந்த குளம்புகளை . உடையவாயின. அவனோ, கடல்போன்ற படையுடன்‌ போரிட்டு, அம்புபட்டுத்‌ துளைத்த மார்பகம்‌ உடையவனாயினான்‌. அவன்‌ சினந்தால்‌ எதிர்நிற்பார்‌’ யார்‌? நுங்களூர்‌ நுங்கட்கே’ வேண்டுமெனிற்‌, போய்த்‌ திறை செலுத்திப்‌ பணிவீராக. யாம்‌ சொல்லியும்‌ அவ்வாறு செய்யீராயின்‌, நும்‌ மனைவியர்‌ நும்மை இழத்தல்‌ உறுதியாம்‌. இதனை நன்கு ஆய்ந்து, அதன்‌ பின்னரே அவனுடன்‌ போர்‌ செய்ய முயல்வீராக!

சொற்பொருள்‌: 3. உருவு இழந்தன – கதுவாய்போய்‌ வடிவு இழந்தன; கதுவாய்‌ போதல்‌ – வடுமிகல்‌. 5. கள்ளின்‌ – மதுவை யுண்ட. 6. சுரை தழீஇய – மூட்டுவாயொடு பொருந்திய. 7. காழொடு – காம்புடனே. 8. மடை – அணி. 9. குறும்பு – அரண்‌. 10. தொடி – கிம்புரி; யானையின்‌ கோட்டிற்‌ செறிக்கப்படும்‌ பூண்‌. 12. தார்‌ – மார்பு; அகு பெயர்‌. பரிதலின்‌ – ஓடுதலால்‌. 13. அசைஇய; – வருந்திய. மறுக்குளம்பின – குருதியான்‌ மாறுபட்ட குளம்புடைய வாயின. 14. நிலம்‌ திரைக்கும்‌ – நிலவகலத்தைத்‌ தன்னுள்ளே அடக்கும்‌. 15. பாண்டில்‌ – கிண்ணி வடிவான்‌. 16. தோலன்‌ – பரிசையை உடையவன்‌. பிணிக்கதிர்‌ நெல்லின்‌ – ஒன்றோ டொன்று தெற்றிக்‌ கிடக்கின்ற கதிரினை யுடையதாகிய நெல்லினையுடைய. 20. இறுக்கல்‌ – கொடுத்தல்‌. 23. கழல்‌ கனிவகுத்த – கழற்‌ கனியால்‌ கூறுபடுத்துச்‌ சுருட்டப்பட்ட. ஓதி – பனிச்சை. 25. அடுமின்‌ – போர்‌ செய்ம்மின்‌.

98. வளநாடு கெடுவதோ!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ ‘ நெடுமான்‌ அஞ்சி. திணை: வாகை. துறை: அரச வாகை. திணை:

வஞ்சியும்‌, துறை: கொற்றவள்ளையுமாம்‌.. . (அரசனின்‌ இயல்பின்‌ மிகுதியைக்‌ கூறினமையின்‌ அரச

வாகையும்‌, பகைவர்‌ நாட்டின்‌ அழிவைக்‌ கூறினமையின்‌, கொற்றவள்ளையும்‌ ஆயிற்று.) .

புலியூர்க்‌ கேசிகன்‌ – 117

முனைத்‌ தெவ்வர்‌ முரண்‌ அவியப்‌ ‘

பொரக்‌ குறுகிய நுதி மருப்பின்‌ நின்‌

இனக்‌ களிறு செலக்‌ கண்டவர்‌

மதிற்‌ கதவம்‌ எழுச்‌ செல்லவும்‌;

பிணன்‌ அழுங்கக்‌ களன்‌ உழக்கிச்‌ ஆ 5 . செலவு அசைஇய மறுக்‌ குளம்பின்‌ நின்‌

. இன நன்மாச்‌ செலக்‌ கண்டவர்‌

கவை முள்ளின்‌ புழை யடைப்பவும்‌;

மார்புறச்‌ சேர்ந்து ஓல்காத்‌

தோல்‌ செறிப்பின்‌ நின்வேல்‌ கண்டவர்‌ 1௦

தோல்‌ ,கழியொடு பிடி செறிப்பவும்‌;

வாள்‌ வாய்த்த வடுப்பரந்த நின்‌ _ மற மைந்தர்‌ மைந்து கண்டவர்‌

புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்‌;

நீயே, ஐயவி புகைப்பவும்‌ தாங்காது, ஒய்யென, 15

உறுமுறை மரபின்‌ புறம்நின்று உய்க்கும்‌

சுற்றத்து அனையை; ஆகலின்‌, போற்றார்‌

இரங்க விளிவது கொல்லோ, வரம்பு அணைந்து

இறங்குகதிர்‌ அலம்வரு கழனிப்‌

பெரும்புனல்‌ படப்பை, அவர்‌ அகன்றலை நாடே! 20

நின்‌ யானைகள்‌ போகக்கண்ட பகைவர்‌ தம்‌ அரணுக்குக்‌ கதவும்‌ கணைய மரமும்‌ புதிது செய்ய முயல்வர்‌. நின்‌ குதிரைகள்‌ போகக்‌ கண்டால்‌, காட்டு வாயில்களை வேலமுள்ளால்‌ அடைப்பர்‌. பகைவர்மீது நீ எறிந்த வேல்‌ ஊடுருவிச்‌ செல்லக்‌ கண்டவர்‌, தம்‌ வாளை உறையினின்றும்‌ எடுக்கவும்‌ அஞ்சுவர்‌. நின்‌ வீரரின்‌ திறங்கண்டவர்‌, தம்‌ அம்பையும்‌ மறைத்துக்‌ கொள்வர்‌. இவ்வாறு, பகைவர்‌ அஞ்சும்‌ வலியுடையன நின்‌ படைகள்‌! நீயோ, வெண்சிறு கடுகைப்‌ புகைத்தாலும்‌ உயிரைக்‌ கவர்ந்து செல்லும்‌ எமனை ஒப்பவன்‌. போரிலோ, அக்‌ கூற்றுவன்‌ போலப்‌ பகைவர்தம்‌ – உயிரைப்‌ போக்குபவன்‌. அதனால்‌, நீர்வளமும்‌ விளைபொருள்‌ மிகுதியும்‌ உடைய பகைவர்‌ நாடுகள்‌ எல்லாம்‌ நின்னைப்‌ பகைப்பின்‌ கெடும்‌. ப

சொற்பொருள்‌: 3. செல்லவும்‌ – புதியனவாக இடுதற்குப்‌ பழையன போக்கவும்‌. 5. பிணன்‌ அழுங்க – பட்டோரது பிணம்‌ உருவழிய. 6. அசைஇய – வருந்திய. 8. கவைமுள்‌ – கவைத்த வேலமுள்‌. 10. செறிப்புஇல்‌ – உறையின்‌ கண்‌ செறித்தல்‌ இல்லாத. 11. தோல்கழி – கிடுகுக்‌ காம்பு. பிடி – கைந்நீட்டு; கைப்பிடியாகிய . காம்பு. 14. ஒடுக்கவும்‌ – தூணியகத்து அடக்கிக்‌ கொள்ளவும்‌.

118 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 15. ஐயவி புகைப்பவும்‌ – விழுப்புண்‌ பட்டவரை வீட்டில்போட்டு வெண்சிறு கடுகைக்‌ கூற்று வந்து தீண்டி உயிர்‌ போக்காதபடி புகைப்பர்‌; இதனைக்‌ குறித்தது இது. ஒய்யென – விரைய. 11. உய்க்கும்‌ – உயிரைக்‌ கொண்டு போகும்‌. .புனற்படப்பை – நீர்ப்பக்கத்தையுடைய. கொல்‌, ஓ; அசை நிலைகள்‌.

99. எய்தியும்‌ அமையாய்‌!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: வாகை. துறை: அரசவாகை.

(“நின்‌ ஆற்றல்‌ தோற்றிய அன்றும்‌ பாடுநர்க்கு அரியை, திகிரி : யேந்திய தோளை இன்றும்‌ பரணன்‌ பாடினன்்‌கொல்‌’ என, அரசனது இயல்பின்‌ மிகுதியைக்‌ கூறினமையின்‌ அரச வாகை ஆயிற்று.)

அமரர்ப்‌ பேணியும்‌, ஆவுதி அருத்தியும்‌,

அரும்பெறல்‌ மரபின்‌ கரும்பு இவண்‌ தந்தும்‌,

நீர்‌அக இருக்கை ஆழி சூட்டிய

தொன்னிலை மரபின்நின்‌ முன்னோர்‌ போல, :

ஈ.கைஅம்‌ கழற்கால்‌ இரும்பனம்‌’ புடையல்‌, 5

பூவார்‌ காவின்‌, புனிற்றுப்‌ புலால்‌ நெடுவேல்‌,

எழுபொறி நாட்டத்து எழாஅத்‌ தாயம்‌ –

வழுவின்று எய்தியும்‌ அமையாய்‌, செருவேட்டு,

இமிழ்குரல்‌ முரசின்‌ எழுவரொடு முரணிச்‌

சென்று, அமர்‌ கடந்து, நின்‌ ஆற்றல்‌ தோற்றிய 10

அன்றும்‌, பாடுநர்க்கு அரியை; இன்றும்‌ ப

பாணன்‌ பாடினன்‌ மற்கொல்‌, மற்று நீ

முரண்மிகு கோவலூர்‌ நூறி, நின்‌

அரண்‌அடு திகிரி ஏந்திய தோளே!

நின்‌ முன்னோரைப்‌ போல வீரக்கழல்‌ புனைந்த காலும்‌, பனம்‌ பூவாலாகிய தாரும்‌, பூங்காவும்‌, புதிய ஈரப்‌ புலாலுடைய நெடிய வேலும்‌, வழிபாடும்‌, யாகமும்‌, கரும்பை இவ்வுலகிற்குக்‌ , கொணர்ந்த செவ்வியும்‌, ஏழிலாஞ்சனை நாடுதலை உடைய அரசுரிமையும்‌ பெற்றும்‌ நீ அமைந்திராய்‌. ஏழரசரோடும்‌ பகைத்துப்‌ போர்மேற்‌ சென்றாய்‌, போரில்‌ வென்றும்‌ சிறந்தாய்‌/ எனினும்‌, பாடுவார்க்கு அரியனாகவே விளங்கினாய்‌. இன்றும்‌, நீ கோவலூரை அழித்த வெற்றியைப்‌ பரணர்‌ தம்‌ பெருந்திறனாற்‌ பாடினர்‌ அன்றோ! பெருமானே, நீ வாழ்க!

புலியூர்க்‌ கேசிகன்‌ 119

சொற்பொருள்‌: அழிசூட்டிய – சக்கரத்தை நடாத்திய:” 6. புனிற்றுப்‌ புலால்‌ – நாடோறும்‌ புதிய ஈரம்‌ புலராத புலாலை யுடைய. 7..பூவார்கா – வானோர்‌, இவன்‌ முன்னோர்க்கு வரம்‌ கொடுத்தற்கு வந்திருந்ததொரு கா. 7. எழுபொறி – ஏழிலாஞ்சனை.. எழா அத்‌ தாயம்‌ – ஒரு நாளும்‌ நீங்காத அரச உரிமை. றுக்‌ ஐயம்‌, மன்‌: அசைநிலைகள்‌.

100. சினமும்‌ சேயும்‌! பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌

நெடுமான்‌ அஞ்சி. திணை: வாகை. துறை : அரச வாகை. குறிப்பு: அதியமான்‌ தவமகன்‌ பிறந்தானைக்‌ கண்டானை, அவர்‌ பாடியது.

(இதுவும்‌ தலைவனது இயல்பைக்‌ கூறினமையின்‌ அரச வாகை ஆயிற்று. “செறுவர்‌ நோக்கிய கண்‌, தன்‌ சிறுவ்னை நோக்கியும்‌ சிவப்பானாவே” என்று, அதியனின்‌ பகைவரை அடுகின்ற இயல்பைக்‌ கூறுவது காண்க)

கையது வேலே; காலன புனைகழல்‌;

மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்‌:

வட்கர்‌ போகிய வளரிளம்‌ போந்தை

உச்சிக்‌ கொண்ட ஊசி வெண்தோட்டு,

வெட்சி மாமலர்‌, வேங்கையொடு விரைஇச்‌; 5

சுரி இரும்‌ பித்தை பொலியச்‌ சூடி, _ வரிவயம்‌ பொருத வயக்களிறு போல, இன்னும்‌ மாறாது சினனே; அன்னோ! உய்ந்தனர்‌ அல்லர்‌, இவன்‌ உடற்றி யோரே; செறுவர்‌ நோக்கிய கண்‌, தன்‌ ப 10

சிறுவனை நோக்கியுஞ்‌, சிவப்பு ஆனாவே!

கையிலே வேல்‌, காலிலே வீரக்கழல்‌; உ உடலில்‌ வேர்ப்பு; கழுத்திலே பசும்புண்‌;இவற்றுடன்‌, பனம்பூமாலையும்‌ வெட்சி மலரும்‌ வேங்கைப்பூவும்‌ சூடியவனே! புலியுடன்‌ சண்டையிட்ட யானை; சண்டை தீர்ந்துஞ்‌ சினம்‌ அடங்காததுபோல, வந்து, சிவந்த கண்ணுடனேயே நிற்கின்றாயே! ஐயோ! நின்னைச்‌ சினப்பித்‌ தவர்கள்‌ எவரும்‌ பிழைத்திராரே! இப்‌ புதல்வனைப்‌ பார்க்கும்‌ போதுகூட நின்‌ கண்ணின்‌ சினம்‌ நின்னிடத்தே நின்றும்‌ மாறவில்லையே!

சொற்பொருள்‌: பகம்புண்‌ – ஈரம்‌ புலராத பசியபுண்‌. 3. வட்கர்‌ – பகைவர்‌; வட்கார்‌ என்பது வட்கர்‌ எனக்‌ குறுகி நின்றது. போந்தை – பனம்பூ. 6. சுரி – சுருண்ட. இரும்பித்தை – கரிய மயிர்‌. 7. வரி வயம்‌ – வரிகளையுடைய புலி. 9. உடற்றியோர்‌ – பகைத்தோர்‌.

120 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 101. பலநாளும்‌ தலைநாளும்‌! ப பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: பாடாண்‌. துறை : பரிசில்கடா நிலை.

(“பரிசில்‌ தாழ்ப்பினும்‌ தருதல்‌ தப்பாது” என்று உரைத்து,

அதனைத்‌ தருமாறு குறிப்பாக மவண்டும்‌ பரிசில்‌ கடாநிலை

, ஆயிற்று.)

ஒருநாள்‌ செல்லலம்‌; இருநாள்‌ செல்லலம்‌;

பன்னாள்‌ பயின்று’, பலரொடு செல்லினும்‌

தலைநாள்‌ போன்ற விருப்பினன்‌” மாதோ;

அணிபூண்‌ யானை இயல்தேர்‌? அஞ்சி

அதியமான்‌; பரிசில்‌ பெறூஉங்‌ காலம்‌ 5

நீட்டினும்‌, நீட்டா தாயினும்‌, யானைதன்‌* கோட்டிடை வைத்த கவளம்‌ போலக்‌ -கையகத்‌ தது அது; பொய்யா காதே! அருந்தே மாந்த நெஞ்சம்‌! வருந்த வேண்டா; வாழ்க, அவன்‌ தாளே! 20

1. அடுத்துப்‌ புறத்திரட்டு 2. அன்னபேணலன்‌ ட 55 8. இழையணி யானை இயல்தேர்‌ அஞ்சி :

4, களிறுதான்‌ ்‌

39

ஒருநாள்‌ இருநாள்‌ . அல்ல; பல . நாட்கள்‌ மீளமீளச்‌ சென்றாலும்‌, முதல்‌ நாளினைப்‌ போலவே விருப்பமுடன்‌ உதவும்‌ பண்பினன்‌; யானையும்‌ தேரும்‌ உடையவன்‌! யானைக்‌ கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம்‌, அதனை விட்டு ஒரு நாளும்‌ தவறாததுபோல, அவன்‌ தரும்‌ பரிசில்‌ நம்‌ கையிலேயே உள்ளது; அது தப்பாதது! நெஞ்சே! நீ வருந்தாதே! சா அவன்‌ தாள்கள்‌!

சொற்பொருள்‌: 3. தலைநாள்‌ போன்ற – முதலிற்‌ சென்ற : நாளிற்‌ போன்ற. 8. கையகத்தது – நமது கையகத்தது. 9. அருந்த ஏமாந்த – உண்ண ஆசைப்பட்ட. நெஞ்சம்‌: விளி. 10. வருந்த வேண்டா – நீ பரிசிற்கு வருந்த வேண்டா. அருந்த என்பது, அருந்தெனக்‌ கடை குறைக்கப்பட்டது; அருந்தென முன்னிலை ஏவலாக்கி யுரைப்பினும்‌ அமையும்‌. “அதியமான்‌ விருப்பினன்‌” என முன்னே கூட்டுக.

புலியூர்க்‌ கேசிகன்‌ டட 121 102. சேம அச்சு!

்‌ பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சியின்‌ மகன்‌ சரத கடத்‌ திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி.

(“அச்சு முறிந்த விடத்துச்‌ சேமவச்சு உதவினாற்‌ போல, நீ காக்கின்ற நாட்டிற்கு ஓர்‌ இடையூறு உற்றால்‌, அது நீக்கிக்‌ காத்தற்கு உரியை” என்று அறிவுறுத்துகின்றார்‌.)

‘எருதே இளைய; நுகம்‌ உண ராவே;

சகடம்‌ பண்டம்‌ பெரிதுபெய்‌ தன்றே;

அவல்‌ இழியினும்‌, மிசை ஏறினும்‌,

அவணது அறியுநர்‌ யார்‌?” என, உமணர்‌

. கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, 5

இசை விளங்கு கவிகை நெடியோய்‌! திங்கள்‌ . நாள்நிறை மதியத்து அனையை; இருள்‌

யாவண தோ, நின்‌ நிழல்வாழ்‌ வோர்க்கே!

“எருதுகள்‌ இளையன; நுகம்‌ பூண்டதையும்‌ மதியாது மூரிப்புடன்‌ வண்டியை இழுத்துச்‌ செல்வன; வண்டி’யோ. – பெரும்பாரம்‌ ஏற்றப்பட்டுள்ளது; அதனால்‌, “வழியில்‌ மேடு பள்ளங்களில்‌ யாதோமோ: எனச்‌, சேமவச்சும்‌ தம்‌ வண்டி£யிற்‌ கட்டிச்‌ செல்பவர்‌ உப்பு வணிகர்‌. அவ்‌ வச்சுப்‌ போன்று, பிறர்‌ வாழ்வு கவிழ்ந்து போகாமல்‌ தாங்கிக்‌ காத்து உதவுபவன்‌ நீ. நின்னைச்‌ சேர்ந்தவர்பால்‌ துன்பஇருள்‌ நேர்ந்தால்‌, அதனைப்‌ போக்கும்‌ வள்ளன்மையால்‌ உலகிருளைப்‌ போக்கும்‌ நிலவுபோல்‌

விளங்குபவனும்‌ நீ!

சொற்பொருள்‌: 1. நுகம்‌; உணரா – நுகம்பூண்டலை அறியா.

3. அவல்‌ – பள்ளம்‌. மிசை ஏறினும்‌ – மேட்டி லே ஏறினும்‌. 4. அவணது அறியுநர்‌ – அவ்விடத்து வரும்‌ இடையூறு அறிவார்‌. உமணர்‌ – உப்பு வாணிகர்‌. 5. கீழ்‌ மரத்து யாத்த – &ழ்மரத்தின்‌ கண்ணே அடுத்துக்‌ கட்டப்பட்ட. சேமஅச்சு – எதிர்பாரா வகையிலே அச்சு முறியின்‌ . அதற்குப்‌ பிரதியாக உதவும்‌ மற்றோர்‌ அச்சு. 6. கவிகை – இடக்‌

கவிந்த கை. திங்கள்‌ – திங்களாகிய. 8. யாவணது – எவ்விடத்தி

103. புரத்தல்‌ வல்லன்‌!

பாடியவர்‌: ஒளவையார்‌. ப்பட போகன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. திணை: பாடாண்‌. துறை: விறலியாற்றுப்படை.

122 புறநானூறு – மூலமு ம்‌ உரையும்‌

(“விறலி! செல்வை யாயின்‌, சேணோன்‌ அல்லன்‌; புரத்தல்‌

வல்லன்‌” என ஆற்றுப்படுத்தலின்‌, விறலியாற்றுப்‌ படை ஆயிற்று.)

ஒருதலைப்‌ பதலை தூங்க, ஒருதலைத்‌

தூம்புஅகச்‌ சிறுமுழாத்‌ தூங்கத்‌ தூக்கிக்‌, “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர்‌ யார்‌?’ எனச்‌;

சுரன்முதல்‌ இருந்த சில்வளை விறலி! செல்வை யாயின்‌, சேணோன்‌ அல்லன்‌; : 5

முனைசுட வெழுந்த மங்குல்‌ மாப்புகை

மலைகுூழ்‌ மஞ்சின்‌, மழகளிறு அணியும்‌

பகைப்புலத்‌ தோனே, பல்வேல்‌ அஞ்சி;

பொழுது இடைப்‌ படாஅப்‌ புலரா மண்டை

மெழுகுமெல்‌ அடையிற்‌ கொழுநிணம்‌ பெருப்ப, 10

வறத்தற்‌ காலை யாயினும்‌, புரத்தல்‌ வல்லன்‌; வாழ்க, அவன்‌ தாளே!

காவின்‌ ஒருபுறத்தே பதலை என்னும்‌ கருவி தங்கல்‌ மற்றொரு புறத்தே சிறிய முழா தூங்குகிறது. இவற்றைச்‌ சுமந்தவாறே, “எமக்கு இடுவார்‌ யாருமிலராயினர்‌, யாரே எமக்கு உதவ வல்லார்‌’ எனச்‌ சுரத்திடையே வந்திருந்து வருந்தும்‌ விறலியே! அதியனோ நெடுந்தொலைவில்‌ இல்லை. பகைவர்‌ தேயத்துத்தான்‌ போயுள்ளான்‌. வெற்றியுடன்‌ விரைவில்‌ திரும்பிவிடுவான்‌. உலகமே வறுமையுற்று வாடினாலும்‌, பாதுகாத்து நிற்கவல்லவன்‌ அவன்‌. அவன்பால்‌ நீ தாராளமாகச்‌ செல்லலாம்‌. நாடே வறட்சியுற்றுப்‌ போன காலமாயினும்‌, அவன்‌ தவறாது நினக்குக்‌ கறியும்‌ சோறும்‌ என்றும்‌ உதவுவான்‌. அவன்‌ தாள்‌ வாழ்க!

சொற்பொருள்‌: 1. பதலை – ஒருதலை முகமூுடையதொரு தோற்கருவி. 2. தூம்பு – துளை. அகச்‌ சிறுமுழா – அகத்தேயுடைய சிறிய முழாவை. தூங்கத்‌ தூக்கி – தூங்கும்‌ பரிசு தூக்கித்‌. தூங்குதல்‌ – தொங்குதல்‌. 4. சுரன்முதல்‌ – வழியிடத்தே. 6. முனைசுட – முனைப்புலத்தைச்‌ சுடுதலான்‌. மங்குல்‌.- இருட்சியையுடைய கரிய புகை. 7. மஞ்சின்‌ – முகில்போல. 9. புலரா மண்டை – உண்ணவும்‌ தின்னவும்‌ படுதலான்‌ ஈரம்‌ புலராத கலம்‌. 10. மெழுகு மெல்லடையின்‌ – மெழுகானியன்ற மெல்லிய அடைபோல. 11. வறத்தற்காலை – உலகம்‌ வறுமை யடைதலையுடைய காலத்து; அலத்தற்காலை எனவும்‌ பாடம்‌.

104. யானையும்‌ முதலையும்‌!

பாடியவர்‌: ஒளவையார்‌. பாடப்பட்டோன்‌: அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சி. வாகை: பாடாண்‌. துறை: அரசவாகை.

புலியூர்க்‌ கேசிகன்‌ : ரிகிற்திது (மறவர்களை நோக்கிக்‌ கூறியதுபோலத்‌ தலைவனது வென்றி கூறியதனால்‌, அரசவாகை ஆயிற்று.)

போற்றுமின்‌, மறவீர்‌! சாற்றுதும்‌, நும்மை; –

ஊர்க்குறு மாக்கள்‌ ஆடக்‌ கலங்கும்‌

தாள்படு சின்னீர்‌ களிறு அட்டு வீழ்க்கும்‌

ஈர்ப்புடைக்‌ கராஅத்து அன்ன என்ஐ

நுண்பல்‌ கருமம்‌ நினையாது, . 5 “இளையன்‌! என்று இகழின்‌, பெறல்‌ அரிது, ஆடே.

ஊர்ச்சிறுவர்‌ நீர்‌ ஆடினும்‌ கலங்கும்‌ கரண்டையளவே நீருடையதான சிற்றோடையாயினும்‌, அதனுள்‌ வரும்‌ யானையையும்‌ முதலை கொன்று வீழ்த்திவிடும்‌. அதுபோல, எம்‌ இறைவனின்‌ உண்மை வலுவையும்‌, நுண்ணிய ஆற்றலையும்‌ அறியாது, “இளையன்‌’ என்று இகழ்ச்சியாக எவரேனும்‌ கூறியவராக அவன்‌ நாட்டினுள்‌ வந்து நுழைந்தால்‌. அவர்‌ எத்துணை ரர தரார்‌ அவனை வெல்லல்‌ அரிது என உணர்வாராக:!

சொற்பொருள்‌: 2. குறுமாக்கள்‌ – இளம்‌ புதல்வர்கள்‌. 3. தாள்படு சின்னீர்‌ – ‘காலளவான மிகக்‌ குறைந்த நீர்‌. 4. ஈர்ப்பு உடை – இழுத்தலை யுடைய. கராஅத்‌ தன்ன – முதலையை ஓக்கும்‌. என்‌ஐ – எம்‌ இறைவனது. 6. இகழின்‌ – மதியாதிருப்பின்‌. ஆடு – வென்றி. . 105. தேனாறும்‌ கானாறும்‌!’

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: வேள்‌ பாரி. திணை: பாடாண்‌. துறை : விறலியாற்றுப்படை.

(“சேயிழை!. பாரி வேள்பாற்‌ பாடினை செலினே…… பெறுகுவை’। என சனக விறலியாற்றுப்படை ஆயிற்று.)

சேயிழை பெறுகுவை, வாள்நுதல்‌ விறலி!

தடவுவாய்க்‌ கலித்த மாஇதழ்க்‌ குவளை

வண்டுபடு புதுமலர்த்‌ தண்சிதர்‌ கலாவப்‌

பெய்யினும்‌, பெய்யா தாயினும்‌, அருவி

கொள்ளுழு வியன்புலத்து உழைகால்‌ ஆக, 5

– மால்புஉடை நெடுவரைக்‌ கோடுதோறு இழிதரும்‌ நீரினும்‌ இனிய சாயல்‌

பாரி வேள்பால்‌ பாடினை செலினே.

124 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌

விறலியே! சுனையிலே மலர்ந்த நீலமலரின்‌ தேன்‌, மழை பெய்யாத காலத்திலும்‌ அருவியாக வழிந்து, கொள்ளிற்கு உழுத . நிலத்தினூடே பாய்காலாக ஒடும்‌. அதனினும்‌, மலைச்‌ சிகரங்கள்‌ ்‌. தோறும்‌ வழியும்‌ அருவி நீரினும்‌, மிகவும்‌ இனிய பண்பினன்‌ எம்‌ வேள்‌ பாரி. அவனைப்‌ பாடிச்‌ சென்றால்‌, சிவந்த பல சிறந்த ‘ அணிகலன்களைப்‌ பரிசாக நீ பெறுவாய்‌.

சொற்பொருள்‌: 1. சேயிழை – சிவந்த அணி. 2. தடவுவாய்‌ – பெரிய இடத்தையுடைய சுனையின்கண்‌. கலித்த – தழைத்த. மாஇதழ்‌ – கரிய இதழையுடைய. 3. தண்சிதர்‌ கலாவ – குளிர்ந்த துளி கலக்க. 6. மால்‌உடை – கண்ணேணியை உடைய; கண்ணேணி ்‌ யாவது கணுக்களிலேயே அடிவைத்து ஏறிச்‌ செல்லும்படியாக அமைந்துள்ள மூங்கிலேணி. ப

106. தெய்வமும்‌ பாரியும்‌!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: வேள்‌ பாரி. திணை:

பாடாண்‌. துறை : இயன்மொழி. … (பாரி கைவண்மை செயலைக்‌ கடப்பாடாக உடையவன்‌”

என, அவனது இயல்பு கூறலின்‌ இயன்மொழி ஆயிற்று.)

நல்லவும்‌ தீயவும்‌ அல்ல குவி இணர்ப்‌

புல்லிலை எருக்கம்‌ ஆயினும்‌, உடையவை

கடவுள்‌ பேணேம்‌ என்னா; ஆங்கு

மடவர்‌ மெல்லியர்‌ செல்லினும்‌, _-

கடவன்‌, பாரி கை வண்மையே. _ ப த

நல்லதாயினும்‌ தீயதாயினும்‌ அல்லாத, குவிந்த பூங்கொத்தும்‌ புல்லிய இலையும்‌ உடைய எருக்கம்‌ பூவாயினும்‌, ஒருவன்‌ உள்ளன்புடன்‌ சூட்டினால்‌ அதனைத்‌ தெய்வங்கள்‌ விரும்பி ஏற்குமேயன்றி, “யாம்‌ அவற்றை விரும்பேம்‌’ என்று கூறா. அதுபோல, அறிவில்லாதாரும்‌, புல்லிய குணத்தாரும்‌ தாமறிந்தவரை பாடிப்‌ புகழ்ந்து சென்றாலும்‌, பாரி, அவர்க்கும்‌ உவந்து வழங்குவதே.தனது கடமை எனக்‌ கருதும்‌ பெருவண்மை உடையவனாவான்‌.

சொற்பொருள்‌: 1. குவிஇணர்‌ – குவிந்த பூங்கொத்து. பேணேம்‌ – விரும்பேம்‌. உடையவை – ஒருவன்‌ உடையவற்றை. 4. மடவர்‌ – யாதும்‌ அறிவில்லாதாரும்‌; மெல்லியர்‌ – புல்லிய குணங்களை உடையாரும்‌. 3. கைவண்மை கடவன்‌ – கையால்‌ வள்ளன்மை செய்தலைக்‌ கடப்பாடாக உடையவன்‌,

புலியூர்க்‌ கேசிகன்‌ 125 107. மாரியும்‌ பாரியும்‌!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: வேள்‌ பாரி, திணை: பாடாண்‌. துறை : இயன்மொழி.

(“பாரி மாரியைப்‌ போலக்‌ கைம்மாறு கருதாது ஈகின்றவன்‌” பபபல இயன்மொழி ஆயிற்று.)

“பாரி பாரி’ என்றுபல ஏத்தி,

ஒருவர்ப்‌ புகழ்வர்‌, செந்நாப்‌ புலவர்‌

பாரி ஒருவனும்‌ அல்லன்‌:

மாரியும்‌ உண்டு, ஈண்டு உலகுபுரப்‌ பதுவே.

செந்நாப்‌ புலவர்‌ எல்லோரும்‌, “பாரி பாரி’ என்று அவனையே புகழ்கின்றார்களே? வழங்குவது பாரி ஒருவன்‌ அல்லனே? உலகம்‌ காப்பதற்கு இங்கு மாரியும்‌ உள்ள தன்றோ? (பாரியை இகழ்ந்த து போலப்‌ புகழ்ந்தது. பயல்‌ பரிந்த வழக்கம்‌. இது” என்பர்‌ பேராசிரியர்‌.)

108. பறம்பும்‌ பாரியும்‌!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: வேள்‌ பாரி. திணை: பாடாண்‌. துறை: இயன்மொழி.

(“பரிசிலர்‌ இரப்பின்‌, வாரேன்‌ என்னான்‌, அவர்‌ வரை யன்னே”’ எனப்‌, ரட்‌ இயல்பை உரைத்தலால்‌ இயன்மொழி ஆயிற்று.) ப

குறத்தி மாட்டிய வறற்கடைக்‌ சென்னி

…. ஆரம்‌ ஆதலின்‌, அம்புகை அயலது சாரல்‌ வேங்கைப்‌ பூஞ்சினைத்‌ தவழும்‌ . பறம்பு பாடினார்‌ அதுவே! அறம்பூண்டு, பாரியும்‌, பரிசிலர்‌ இரப்பின்‌, ம்‌

“வாரேன்‌’ என்னான்‌, அவர்‌ வரை யன்னே.

குறத்தி அடுப்பில்‌ மாட்டி எரித்த கடைக்கொள்ளி சந்தன மரமாதலின்‌, அதனின்று கமழும்‌ நறும்புகை வேங்கைப்‌ பூங்கொம்பினூடும்‌ சென்று பரவி நிற்கும்‌. அத்தகைய மலைச்சாரலினை உடைய பறம்பினைப்‌ பாடுவார்க்கெல்லாம்‌ பங்கிட்டுக்‌ கொடுத்த பேரருளாளன்‌ பாரி. பரிசிலர்‌ இரந்தால்‌, “வாரேன்‌” என்றுகூடச்‌ சொல்லாது, அப்போதே அவர்‌ உடைமையாகி விடுபவன்‌ அவன்‌.

சொற்பொருள்‌: 1. மாட்டிய – மடுத்து எரிக்கப்பட்ட 2. ஆரம்‌ – சந்தனம்‌.

126 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌: 109. மூவேந்தர்முன்‌ கபிலா!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: வேள்‌ பாரி. திணை: நொச்சி. துறை: மகண்‌ மறுத்தல்‌. (“தாளிற்‌ கொள்ளலிர்‌,; வாளிற்‌ றாரலன்‌’ எனப்‌ பகை “வேந்தரது கருத்துக்கு எதிராகத்‌ தம்‌ மகளைத்‌ தர மறுத்துச்‌ சொல்லுதலால்‌, “மகண்‌ மறுத்தல்‌” ஆயிற்று. உழிஞைத்‌ திணைத்‌ : துறைகளுள்‌ ஒன்றாகிய, “அகத்தோன்‌ செல்வம்‌’ என்பதற்கு இளம்பூரணர்‌ எடுத்துக்காட்டுவர்‌.) அளிதோ தானே, பாரியது பறம்பே! நளிகொள்‌ முரசின்‌ மூவிரும்‌ முற்றினும்‌, உழவர்‌ உழாதன நான்குபயன்‌ உடைத்தே; – ஒன்றே, சிறியிலை வெதிரின்‌ நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப்‌ பலவின்‌ பழம்‌ஊழ்க்‌ கும்மே; 5 மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்‌ கிழங்கு வீழ்க்கும்மே, நான்கே, அணிநிற ஓரி பாய்தலின்‌, மீது அழிந்து, திணி நெடுங்‌ குன்றம்‌ தேன்சொரி யும்மே; : வான்கண்‌ அற்று, அவன்‌ மலையே; வானத்து மீன்கண்‌ அற்று, அதன்‌ சுனையே; ஆங்கு, 1௦

மரந்தொறும்‌ பிணித்த களிற்றினிர்‌ ஆயினும்‌,

புலந்தொறும்‌ பரப்பிய தேரினிர்‌ ஆயினும்‌,

தாளின்‌ கொள்ளலிர்‌; வாளின்‌ தாரலன்‌;

யான்‌அறி குவென்‌; அது கொள்ளும்‌ ஆறே –

சுகிர்புரி நரம்பின்‌ சீறியாழ்‌ பண்ணி, 15

விரையொலி கூந்தல்‌ விறலியர்‌ பின்வர,

ஆடினிர்‌ பாடினிர்‌ செலினே,

நாடும்‌ குன்றும்‌ ஒருங்குஈ யும்மே.

மூங்கில்‌ நெல்லும்‌, பலாப்பழமும்‌, வள்ளிக்‌ கிழங்கும்‌, தேனும்‌ ஆகிய நான்கு விளைவுகள்‌ உழவின்றியே கிடைப்பது பறம்பு நாடு. வானளாவிய உயரமும்‌, அகலமும்‌ உடையது அது..மலையின்‌ சுனைகள்‌ வான்மீன்‌ போன்று எண்ணற்று விளங்கும்‌. அகவே, மரத்துக்கு ஒரு யானை வீதம்‌ நீவிர்‌ கட்டியிருந்தீராயினும்‌, இருக்கும்‌ இடமெங்கும்‌ தேரால்‌ நிறைத்திருந்தீராயினும்‌, பாரியை வெல்லல்‌ நும்மால்‌ இயலாது. பாரியின்‌ பறம்பு பகைவர்க்கு எளிதன்று. முரசு விளங்கும்‌ நீவிர்‌ மூவரும்‌ கூடினும்‌ அவனை வென்றிகொள்ளலும்‌ அகாது. வாளால்‌ அவனை வெல்லலே இயலாது. அவன்‌ நாட்டை அடைவது எவ்வாறெனில்‌, பாடிப்‌ பரிசில்‌ பெறும்‌ பரிசிலர்‌ போல, யாழிசையுடன்‌ விறலியர்‌ சூழ

புலியூக்‌ கேசிகன்‌ ப 127

அடியும்‌ பாடியும்‌ நீர்‌ சென்றீரானால்‌, அவன்‌ நாட்டையும்‌ மலையையும்‌ ஒருசேர நுமக்குப்‌ பரிசிலாக வழங்கி ப, அதுவே சிறந்த வழி.

சொற்பொருள்‌: 7: அளிது – இரங்கத்தக்கது. 2. ன்‌ பெருமை.

. 4 வெதிரின்‌ – மூங்கிலினது. 5. ஊழ்க்கும்‌ – பழுத்து மணம்‌ நாறும்‌. 7. ,..

* ஓரி பாய்தலின்‌ – ஓரிபாய்தலான்‌; ஓரி என்பது, தேன்‌ முதிர்ந்தாற்‌ ்‌ பரக்கும்‌ நீலநிறம்‌, முசுக்கலை எனினும்‌ அமையும்‌; முசுக்கலை – ஆண்‌ குரங்கு மீது அழிந்து – அதன்மேற்பவர்‌ அழிந்து; பவர்‌ – கொடி. 9. வான்௧கண்‌ அற்று அகல நீள உயரத்தால்‌ வானிடத்தை யொக்கும்‌. 13. தாளில்‌ கொள்ளலிர்‌ – உங்கள்‌ முயற்சியால்‌ கொள்ள மாட்டீர்‌. வாளில்‌ – நுமது வாள்வலியால்‌. தாரலன்‌ – அவன்‌ தாரான்‌. 15. சுகிர்புரி – வடித்து முறுக்கப்பட்ட. 18. ஒருங்கு ஈயும்மே – கூடத்‌ தருகுவன்‌.

110. யாமும்‌ பாரியும்‌ உளமே!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: வேள்‌ பாரி. திணை: நொச்சி. துறை: மகள்‌ மறுத்தல்‌. சிறப்பு: “மூவிருங்கூடி” என்றது, மூவேந்தரும்‌ ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்‌.

(பாரி மகளிரை மணம்‌ செய்துதர மறுத்து, அதனால்‌ மூற்றியிருந்த மூவேந்தரையும்‌ அறிவு கொளுத்துவாராகப்‌ பாடிய செய்யுள்‌ இது. “யாமும்‌, பாரியும்‌ உளமே; குன்றும்‌ உண்டு; ஆயின்‌ மகளிர்‌ இல்லை’ என்றதாகக்‌ கொள்ளுக.)

கடந்து அடு தானை மூவிரும்‌ கூடி

உடன்றனிர்‌ ஆயினும்‌, பறம்பு கெளற்கு அரிதே.

முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;

முந்நூறு ஊரும்‌ பரிசிலர்‌ பெற்றனர்‌,

யாமும்‌ பாரியும்‌ உளமே; 5 குன்றும்‌ உண்டு; நீர்‌ பாடினிர்‌ செலினே,

வஞ்சனையாலல்லாது எதிர்த்தே நின்று பகைவரைக்‌ கொல்லும்‌ பெரும்படை உடையவர்தாம்‌ நீவிர்‌ மூவரும்‌. எனினும்‌, பறம்பினை வென்று கைப்பற்ற நும்மாலும்‌ இயலாது. முந்நூறு ஊர்கள்‌ உடைய இந்‌ நாட்டின்‌ ஒவ்வொருவரும்‌ பரிசிலர்‌ பெற்றுச்‌ சென்று விட்டனர்‌. நீவிரும்‌ பாடி வந்தால்‌ யாமும்‌ பாரியும்‌ உள்ளோம்‌; அவனுடைய மலையும்‌ இருக்கிறது. (தம்மையும்‌ பாரியின்‌ செல்வமாகக்‌ கூறும்‌ புலவர்‌ உள்ளத்தினை வியந்து போற்றுக.)

128 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 111. விறலிக்கு எளிது!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: வேள்‌ பாரி. திணை: நொச்சி. துறை: மகள்‌ மறுத்தல்‌. சிறப்பு : பாரியின்‌ மறமேம்பாடும்‌, கொடை மடமும்‌ கூறுதல்‌.

(மகள்‌ தர மறுத்துப்‌, “பாடிக்‌ கணைமகள்‌ போல இரந்துவரின்‌ குன்றைப்‌ பெறுவீர்‌’ என்றனர்‌. “அப்போதும்‌ மகளிரைப்‌ பெற மாட்டீர்‌” என்பதும்‌ ஆம்‌.)

அளிதோ தானே, பேரிருங்‌ குன்றே! வேலின்‌ வேறல்‌ வேந்தர்க்கோ அரிதே; நீலத்து, இணை மலர்‌ புரையும்‌ உண்கண்‌ கிணைமகட்கு எளிதால்‌, பாடினள்‌ வரினே.

பெரிய கரிய குன்றமான இப்‌ பறம்பு வெல்வதற்கு எளிதோ? அதனை வேலால்‌ வெல்லுதல்‌ வேந்தர்க்கும்‌ ஒருபோதும்‌ இயலாது. அனால்‌ விறலிக்கோ, அவள்‌ கிுணையுடன்‌ பாடினவளாக வந்தால்‌, அடைவதற்கு மிகவும்‌ எளிது!

“சொற்பொருள்‌: 1. அளிது – இரங்கத்தக்கது. 2. வேறல்‌ – வெல்லுதல்‌, 3. புரையும்‌ – ஓக்கும்‌. 4. வாயாக இர்‌ கணையை யுடைய விறலிக்கு.

112. உடையேம்‌ இலமே!

பாடியவர்‌: பாரி மகளிர்‌. திணை: பொதுவியல்‌. துறை : கையறு நிலை.

(“மலையையும்‌ இழந்தேம்‌; தந்தையையும்‌ இழந்தேம்‌’ எனத்‌ தம்‌ நிலைக்குப்‌ பெரிதும்‌ கலங்கிக்‌ கூறிய பாட்டு இது:)

அற்றைத்‌ திங்கள்‌ அவ்வெண்‌ நிலவில்‌,

எந்தையும்‌ உடையேம்‌, எம்‌ குன்றும்‌ பிறர்‌ கொளார்‌;

இற்றைத்‌ திங்கள்‌ இவ்‌ வெண்‌ நிலவில்‌,

வென்று எறி முரசின்‌ வேந்தர்‌ எம்‌

குன்றும்‌ கொண்டார்‌; யாம்‌ எந்தையும்‌ இலமே! 5

அந்த மாதத்தில்‌, இந்த வெண்ணிலவு இப்படியே எரிக்கும்‌ வேளையில்‌, எம்‌ தந்தையை உடையவராயும்‌ இருந்தோம்‌; எம்‌ குன்றினையும்‌ பிறர்‌ கைக்கொள்ளவில்லை. இந்தத்‌ திங்களில்‌, இவ்‌ வெண்ணிலவில்‌, வென்றெறி முரசின்‌ வேந்தர்கள்‌ எம்‌ குன்றையும்‌ கவர்ந்து கொண்டனர்‌; யாமோ எம்‌ தந்‌ைத இல்லாதவராகவும்‌

ஆயினேம்‌!

புலியூர்க்‌ கேசிகன்‌ ப 129 (பாரி ஒருவனை மூவேந்தரும்‌ முற்றியிருந்தும்‌, வஞ்சித்துக்‌ கொன்றமையின்‌, வென்றெறி முரசின்‌ வேந்த” ரென்ற து ஈண்டு இகழ்ச்சிக்குக்‌-குறிப்பு என்று கொள்க.) 113. பறம்பு கண்டு புலம்பல்‌!

பாடியவர்‌: கபிலர்‌. பாடப்பட்டோன்‌: பொதுவியல்‌. துறை: கையறுநிலை. சிறப்பு: நட்புக்‌ கெழுமிய புலவரின்‌ உள்ளம்‌.

(“பாரியின்‌ சாவிற்கு நொந்தும்‌, அவன்‌ மகளிரைக்‌ காக்கும்‌ பொறுப்பை எண்ணியும்‌ கலங்கிக்‌ கூறிய செய்யுள்‌ இது. “பாரி மகளிரைப்‌ பார்ப்பார்ப்‌ படுக்கக்‌ கொண்டு போவான்‌ பறம்பு

விடுத்தபோது பாடியது எனவும்‌ கூறுவர்‌.)

மட்டுவாய்‌ திறப்பவும்‌, மை விடை வீழ்ப்பவும்‌, ப .; அட்டு ஆன்று ஆனாக்‌ கொழுந்‌ துவை ஊன்‌ சோறும்‌ பெட்டாங்கு ஈயும்‌ பெருவளம்‌ பழுனி, நட்டனை மன்னோ, முன்னே; இனியே, பாரி மாய்ந்தெனக்‌, கலங்கிக்‌ கையற்று. 5

நீர்‌ வார்‌ கண்ணேம்‌ தொழுது நிற்‌ பழிச்சிச்‌

சேறும்‌; வாழியோ பெரும்பெயர்ப்‌ பறம்பே!

கோல்‌-திரள்‌ முன்கைக்‌ குறுந்தொடி மகளிர்‌ _ நாறுஇருங்‌ கூந்தற்‌ கிழவரைப்‌ படர்ந்தே.

பறம்பே! முன்னர்‌ இருந்த நின்‌ வளம்‌ எத்தகையது? நின்னை நாடிவரும்‌ இரவலர்க்கு, மதுவைத்‌ தருவார்‌ சிலர்‌; ஆட்டுக்‌ கிடாவை வெட்டிச்‌ சமைத்து ஊனும்‌ சோறும்‌ வேண்டி வேண்டி அளிப்பார்‌ சிலர்‌. அத்தகைய வளத்துடன்‌ முன்னர்‌ நீ எமக்கு நட்புடைமையாக விளங்கினையன்றோ? ஐயகோ! இன்றோ, பாரி வீழ்ந்தனன்‌! அவன்‌ மக்களை மணக்க உரிய கணவரைத்‌ தேடி நான்‌ எங்கோ செல்லுகின்றேன்‌. பெருமைபெற்ற பறம்பே! கலங்கிச்‌ செயல்‌ இழந்தவனாகக்‌ கண்ணீர்‌ சோர உன்னைத்‌ தொழுது வாழ்த்திச்‌ செல்லுகின்றேன்‌. ப

சொற்பொருள்‌: 1. மட்டு- மது இருந்த சாடியை. 3, பெட்டாங்கு – விரும்பிய பரிசே. பழுனி – முதிர்ந்து 4, நட்டனைமன்‌ – எம்மோடு நட்புச்‌ செய்தாய்‌. இனி – இப்பொழுது. 6. நிற்பழிச்சிச்‌ சேறும்‌ – நின்னை வாழ்த்திச்‌ செல்லுதும்‌. 7. பெயர்‌ – புகழ்‌. 9. நாறு இருங்‌ கூந்தல்‌ கிழவரைப்‌ படர்ந்து – மணம்‌ கமழும்‌ கரிய கூந்தலை யுடையவரான இவரைத்‌ இண்டுதற்கு உரியவரை நினைத்து.

130 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ 114. உயர்ந்தோன்‌ மலை!

பாடியவர்‌: கபிலர்‌. திணை: பொதுவியல்‌. துறை: கையறு நிலை.சிறப்பு: மன்னனை இழந்ததால்‌ மலையும்‌ வளமிழந்தது என்பது. (இச்‌ செய்யுளும்‌ கபிலர்‌ பாரி மகளிரது நிலைக்கு வருந்திப்‌ பறம்பைக்‌ கடந்து செல்லும்போது பாடியதே ஆகும்‌. “தோர்‌ வழங்கும்‌’ என்னாமல்‌, “தேர்வீசும்‌’ எனக்‌ கூறும்‌ சொற்களுள்‌ உட்பொருளாக விளங்கும்‌ பெருந்தகைமையை நினைந்து போற்றுக.) ப

ஈண்டு நின்‌ றோர்க்கும்‌ தோன்றும்‌, சிறு வரை

சென்று நின்‌ றோர்க்கும்‌ தோன்றும்‌, மன்ற;

களிறு மென்று இட்ட கவளம்‌ போல,

நறவுப்‌ பிழிந்‌ திட்ட கோதுடைச்‌ சிதறல்‌

வார்‌ அசும்பு ஒழுகு முன்றில்‌, ப ப 5 தேர்‌ வீசு இருக்கை, நெடியோன்‌ குன்றே.

மதுப்‌.பிழிவார்‌ எறிந்த கோதுகளிலிருந்து மதுச்சிதறும்‌, அவ்வாறு சிதறிய மது சேறாக நாற்புறமும்‌ ஒழுகும்‌ வளமிக்க மலையே! அருகே நிற்பார்க்கும்‌ நீ தோன்றுவாய்‌; சிறு தொலைவு சென்று நிற்பார்க்கும்‌ நீ தோன்றுவாய்‌, எல்லாம்‌, தேர்‌ வழங்கிச்‌ சிறந்தவனான உயர்ந்தோன்‌ பாரி நின்பால்‌ தங்கி இருந்த அந்தச்‌ சிறப்பினாலே அன்றோ?

சொற்பொருள்‌: 1. சிறுவரை சென்று – சிறிது எல்லை போய்‌. 2.மன்ற – நிச்சயமாக. 3. மென்று இட்ட – மென்று போடப்பட்ட கவளம்‌ போல – கவளத்தினது கோதுபோல. 4. சிதறல்‌ – சிதறியவற்றினின்றும்‌. 5. வார்‌ அசும்பு ஒழுகும்‌ – வார்ந்த மதுச்சேறு ஒழுகும்‌ முற்றத்தையுடைய. 6. நெடியோன்‌ – உயர்ந்தோனுடைய/ என்றது பாரியை. ப

115. அந்தோ பெரும நீயே!

பாடியவர்‌: கபிலர்‌. திணை: பொதுவியல்‌, துறை : கையறு . நிலை. சிறப்பு: பறம்பின்‌ வளமை. |

[பறம்பை விட்டுப்‌ போவார்‌, அதன்‌ செழுமையை எண்ணியும்‌, அதுதான்‌ பிறர்க்கு உரித்தாகிய கொடுமையைக்‌ கருதியும்‌. இப்படிப்‌ புலம்புகின்றனர்‌] _ தி

ஒரு சார்‌ அருவி ஆர்ப்ப, ஒரு சார்‌ பாணர்‌ மண்டை நிறையப்‌ பெய்ம்மார்‌,

புலியூர்க்‌ கேசிகன்‌ _ ட வாக்க உக்க தேக்கள்‌ தேறல்‌ கல்‌அலைத்து ஒழுகும்‌ மன்னே! பல்‌ வேல்‌, அண்ணல்‌ யானை, வேந்தர்க்கு இன்னான்‌ ஆகிய இனியோன்‌ குன்றே!

. ஓரு பக்கத்திலே அருவில்‌ ஒலியோடு வழியும்‌; மற்றொரு பக்கத்திலே பாணர்‌ ஏந்திய கலங்கள்‌ மதுவால்‌ நிரம்பி வழியும்‌; வடிக்கச்‌ சிந்தின தேறல்‌ கல்லையும்‌ உருட்டி ஓடிவரும்‌; எல்லாம்‌, பறம்பில்‌ அந்நாள்‌ நிகழக்‌ கண்டேன்‌. வேற்படையும்‌ யானைப்‌ படையும்‌ உடைய வேந்தர்க்கு இன்னானாய்‌, எமக்கு இனியோனான, அந்தப்‌ புகழ்மிக்க பாரியின்‌ பெருமலையே! . அந்தோ! நீ என்‌ கண்பார்வையினின்றும்‌ இப்போது நீ கழிந்து போகின்றனையே!

சொற்பொருள்‌: 2. பெய்ம்மார்‌ – வார்க்க வேண்டி) வார்க்க – வடிக்க (வடிகட்ட). 3. உக்க – சிந்திய. தேக்கள்‌ தேறல்‌ – இனிய கள்ளாகிய தேறல்‌. 4. கல்‌ அலைத்து – கல்லை உருட்டி. மன்‌ – அது கழிந்தது. 6. இன்னான்‌ ஆகிய – கொடியோன்‌ ஆகிய. இனியோன்‌ – இனியனாகிய பாரியது.

116. குதிரையும்‌ உப்புவண்டியும்‌!। பாடியவர்‌: கபிலர்‌. திணை: பொதுவியல்‌. துறை: கையறு நிலை. | ன்‌ ப (“நோகோ யானே; . தேய்கமா காலை’ என்னுஞ்‌ சொற்களால்‌, கபிலர்‌ கொண்ட வேதனை மிகுதி விளங்கும்‌.

“வலம்படு தானை வேந்தர்‌ பாரியது அருமை அறியார்‌’ என்பதும்‌ சிந்திக்க.)

தீநீர்ப்‌ பெருங்‌ குண்டு சுனைப்‌ பூத்த குவளைக்‌

கூம்பவிழ்‌ முழுநெறி புரள்வரும்‌ அல்குல்‌,

ஏந்தெழில்‌ மழைக்கண்‌, இன்நகை, மகளிர்‌

புன்மூசு கவலைய முள்முடை வேலிப்‌, |

பஞ்சி முன்றில்‌, சிற்றில்‌ ஆங்கண்‌, 5

பீரை நாறிய சுரை இவர்‌ மருங்கின்‌

ஈத்திலைக்‌ குப்பை ஏறி உமணர்‌

உப்பு ஓய்‌ ஒழுகை எண்ணுப மாதோ;

நோகோ யானே! தேய்கமா காலை!

பயில்பூஞ்‌ சோலை மயில்‌ எழுந்து ஆலவும்‌, 1௦

பயில்‌ இருஞ்‌ சிலம்பிற்‌ கலைபாய்ந்து உகளவும்‌,

கலையுங்‌ கொள்ளா வாகப்‌, பலவும்‌

132 புறநானூறு – மூலமும்‌ உரையும்‌ காலம்‌ அன்றியும்‌ மரம்‌ பயம்‌ பகரும்‌ யாணர்‌ அறாஅ வியன்மலை அற்றே அண்ணல்‌ நெடுவரை ஏறித்‌, தந்தை 15 பெரிய நறவின்‌, கூர்‌ வேற்‌ பாரியது அருமை அறியார்‌ போர்‌எதிர்ந்து வந்த வலம்‌ படுதானை வேந்தர்‌

.. பொலம்‌ படைக்‌ கலிமா எண்ணு வோரே,

மயிலினம்‌ சோலையிலே ஆட, குரங்கினம்‌ மலை முகடுகளிலே தாவி விளையாட, அக்‌ குரங்கினம்‌ அனைத்தும்‌ கூடித்‌ தின்று தராத கனிவகைகள்‌ கணக்கற்று அவ்‌ வளமலையில்‌ எங்கும்‌ விளங்கின. உயர்ந்த அதன்‌ கோடேறி நின்று, தம்‌ தந்தையினை வெல்ல வகை அறியாதவராய்ப்‌ போரேற்று வந்த மன்னரின்‌ குதிரைகளை, முன்னர்‌ வேடிக்கையாக எண்ணுபவர்‌ இவர்‌! இன்றோ, வேலி சூழ்ந்த சிற்றில்‌ முற்றத்திலே, ஈத்திலைக்‌ குப்பையேறி நின்று, உப்பு வண்டிகளை எண்ணுகின்றனர்‌! அந்‌ நிலையை எண்ணி எண்ணி வருந்துவேன்‌ யான்‌! என்‌ ஆயுள்‌ இப்போதே கெடுவதாக!

சொற்பொருள்‌: 1. தீநீர்‌ – இனிய நீர்‌. குவளை – செங்கமுநீர்‌. . கூம்பு – மூகை. முழு நெறி – புறவிதழ்‌ ஒடிந்த முழுப்பூ, புரள்வரும்‌ – தழையுடை அசையும்‌. 4. கவலை – கவர்த்த வழி. 5. பஞ்சு முன்றில்‌ – பஞ்சு பரந்த முற்றம்‌; என்றது, அக்கால மகளிர்‌’ பருத்தியிற் கொண்ட பஞ்சினை நூலாக நூற்றலால்‌ எஞ்சிய பஞ்சு சிதறிக்‌ கிடக்கின்ற முன்றில்‌ என்றதாம்‌. 6 பீரை நாறிய – பீர்க்கு முளைத்த. சுரை இவர்‌ – சுரைக்கொடி படர்ந்த. ஈத்திலைக்‌ குப்பையேறி என்றதனால்‌, ஈந்தின்‌ மிகுதியும்‌ பெறப்படும்‌. 8. உப்பு ஓய்‌ ஒழுகை – உப்புச்‌ செலுத்தும்‌ சகடத்தை; சகடம்‌ – வண்டி. 9. காலை தேய்கமா * எனது வாழ்நாள்‌ கெடுவதாக. மா : வியங்கோல்‌ அசை. 11. கலை – முசுக்கலை. 17. அருமை – பெ றுதற்கு அருமையை. 18. பொலம்படை – பொன்னாற்‌ செய்யப்பட்ட கலம்‌ முதலியவற்றை உடைய. கலிமா – மனம்‌ செருக்கிய குதிரை,

117. தந்‌ைத நாடு!

பாடியவர்‌: கபிலர்‌. திணை: பொதுவியல்‌. துறை: கையறு. நிலை. ப

(பாரி மகளிர்க்கு உரித்தாயிருந்த நாட்டது வளமையை உரைத்து, அதனை இழந்து நிற்கும்‌&nb