வீடுகட்டுதல்

தன்னுடைய பேர் இராசி வலமாகில் மனைகோலுதல் நன்மை தரும் .

இடமாகில் ஆகாது . வீட்டின் நடுப்பாகத்தில் வாசல் அமைத்தால் ,

அந்த வீட்டை விட்டு அவனை விரட்டி விடும் .

வலப்புறம் ஐந்தும் , இடப்புறம் நாலு பங்கும் . இதன் நடுவில் வாசல் அமைத்தல் சுகந்தரும் .

வாசலுக்கெதிரே தூண்கள், கால்கள் , கம்பங்கள் இருத்தல் கூடாது .

வீட்டின் கதவு தானே வலிய சாத்திக்கொள்ளுமாயின் வீடு பாழாகும் .

கதவை எங்கே நிறுத்துகின்றோமோ அங்கேயே கதவு நிற்கவேண்டும் .

அப்படி சாத்துதல் நன்று . வெகுவாழ்வு தரும் .

 

மனைக்கு அங்கங்கள் இருக்கவேண்டிய இடம்

வீட்டிற்குக் கிழக்கில் அடுக்களையும் ( சமையல் கட்டு ) , பொக்கிஷமும் ,

தென்கிழக்கில் பசுக்கொட்டகையும் , தெற்கில் குப்பைக்குழியும் ,

தென்மேற்கில் தோப்பும் , மேற்கில் எருமைக்கொட்டிலும் ,

வடமேற்கில் நெல்குதிரும் , வடக்கில் உள்வீடும் ,

வடகிழக்கில் கிணறும் அமைத்துக் குடியிருந்தால் வாழ்வு வு செழிக்கும் .

வீட்டிற்கு ஆகாத மரங்கள்

 • எருக்கு ,
 • அகத்தி ,
 • பனை ,
 • முருங்கை ,
 • ஆமணக்கு ,
 • நாவல் ,
 • பருத்தி ,
 • முள்மரங்கள் ,
 • நெல்லி ,
 • கலியாணமுருங்கை ,
 • உதியன்.

ஆகிய மரங்கள் வீட்டிற்கு முன்னால் இருப்பின் வீட்டில் மூதேவி அடைவாள் .

வினைகள் வந்து வாட்டும் . செல்வம் போகும் . மரணம் நேரிடும் .

தமிழ் வல்லோர்கள் இதனை நிசம் என்று கூறினர் .

வீட்டில் இருக்கக்கூடாத மரங்கள் :

ஒப்புமை :

வெண்பா “ பருத்தி யிலுப்பை பனையெட்டி நாவல்

எருக்குப் புளிமாவோ டெட்டும் – பெருக்கமுடன்

இல்லிருந் தக்கால மிந்திரனே யானாலும்

செல்லப்போய் நிற்பாள் திரு .

 1. பருத்தி ,
 2. இலுப்பை ,
 3. பனை ,
 4. எட்டி ,
 5. நாவல் ,
 6. எருக்கு ,
 7. புளி ,
 8. மா

ஆகிய இந்த எட்டு மரங்களும் வீட்டில் இருந்தால் , அவன் இந்திரனேயானாலும் ,

இலக்குமி விலகிப்போவாள் என்றவாறு : – என்று சில்பசாத்திரம் கூறுகின்றது .

நீங்கள் அறிந்த ஆன்மீக கருத்துகளை கீழே பதிவிடவும்

Please complete the required fields.
Please select your image(s) to upload.

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *