சித்த மருத்துவ குறிப்புகள்

பெரும்பாடுக்கு.
அத்திப்பட்டை ஒரு பங்கு கடுக்காய்ப்பூ கால் பங்கு கூட்டி பசும்பால் விட்டரைத்து காலை மாலை புசித்து வந்தால், ரத்தக்கடுப்பு- சீதக்கடுப்பு- மேகம் பெண்கள் பெரும்பாடு இவை தீரும்.

நீரில்ரத்தம் வருவதற்கு.
அத்திப்பட்டையை கிஷாயம் வைத்து இருவேளையும் சாப்பிட்டால் மூத்திரத் தோடு இரத்தம் வருகிறவியாதி நிவர்த்தியாகும்.

வெட்பம்தணிய
அகத்திப் பூவில் ஒருபலம் எடுத்து இரண்டு பலம் பசும் நெய்யிற் பே ட்டு கால்விராகனிடை குங்குமப்பூ விழைத்துக் காச்சி இரக்கி அந்தி சந்தி இருவேளையும் கொள்ள, புகையினாலும் அனலினாலும் உண்டாகிய வெட்ப பித்தம தணியும்.

தேக தடிப்புக்கு
அம்மான்பச்சரிசியை புன்னைக்காயளவு அறைத்து, பசும்பாலிலாவது ளிப்புத்தயிருடனாவது கலந்து காலையில் சாப்பிட்டால், தேககாந்தல் – மேகத்த ப்பு-மலக்கட்டு இவைகள் தீரும்.

விந்து கட்ட
அமுக்கனாங் கிழங்கை வஸ்திரகாயம் செய்து கால்படி பசும்பாலுக்கு அறைபலம் கிழங்கு போட்டுக் காச்சி சக்கரை யிட்டு குடிக்கவும். இப்படி இரு வேளையும் உட்கொண்டு வந்தால், விந்தூ கட்டும் தேகம் புஷ்டியாகும் – அழகு கொடுக்கும் – தேகத்திலுள்ள சூலை – கரப்பான் -கபம் – வெட்பம் — துர்நீர் யாவும் தீரும்.

நாவரட்சிக்கு.
அக்கிராகாரத்தைப் பொடிசெய்து பாலில் போட்டுக்காச்சி உட்கொண்டு தோல், நாவரட்சி-தாகம்-ஜன்னி-தோஷம்- வாந்தி-கபம் இவைகள் நிவர்த்தி
கும்.

குத்தல்குடைச்சலுக்கு.
அரத்தை – சுக்கு – திப்பிலி – வகைக்கு கால்பலம் இவையிடித்து கிஷாயம் வைத்து எட்டொன்றாகக்காய்ச்சி யிரக்கும்போது நொச்சிலியிலை ஒரு பிடிவளை க்கி துட்டிடைசாருபிழிந்து வடிக்கட்டிகொடுக்கவும் இப்படி காலை மாலை இரு வேளையும் 3-நாள் கொடுக்க கைகால்குத்தல் குடைச்சல் சுரம் இதுகள் தீரும்.

பால்உண்டாக

ஆலம் விழுதும் ஆலம்விரையும் சமன்கொண்டு பாலில் காச்சியுண்டால் பாலில்லாதபெண்களுக்குப் பால் உண்டாகும் முகத்தேஜசு உண்டாகும்.

நீர்உடைக்க.
ஆதண்டமயிலையை ஆவின்மோருவிட்டு அறைத்து வராவைத்துப பு ந்து வேளைக்கு அரிக்கால்படிசாறுகொடுக்க நீர்க்கட்டை உடைக்கும்.

இரத்தயிருமலுக்கு.
ஆடாதோடையிலையும் அதுவேயிலையும் இடித்து பிட்டவியல்செய் துபிழிந்தசாறு உழக்கு இதில் கோஷ்டம் திப்பிலி சாம்பிரானிவகைக்கு அறை விடாகனிடை வெதுப்பியடித்து தூள்செய்துக்கலாதுக் கொடுக்க இரத்தயிரு மல் மல் தீரும்.

முளை மூலக்கடுப்புக்கு.
ஆவாரங்கொழுந்தை சட்டியிலிட்டு விளக்கெண்ணை தெளித்து வரு த்துசீலையில் வைத்து ஒத்தடங்கொடுத்தால் முளை மூலத்தின் முனை கருகும் அதனுடைய கடுப்பும் ஊரலும் தணியும்.

அருகு நாபிரெணத்திற்கு.
அருகு என்னும் வெள்ளறுகின் வேரைக் கொண்டு வந்து பசும் தயிர் விட்டு அறைத்து புன்னைக் காயளவு எடுத்து அரிக்கால்படி பசும் தயிரில் கலை க்கி அதிகாலையில் சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும், 3-நாள்சாப் பிட மனிதனுக்கு ஆதாரமாகியநாபியில் எழுந்த சூட்டையும்வெட்டையும் ரிண தத்தையும் தணித்து, வெள்ளை முதலிய ஒழுக்குகளை நீவர்த்தியாக்கும்.

உள் மூலத்திற்கு,
ஆவாரங்கொழுந்து பேட்டை அருரை அருகள்வேர் இவை க ைதி பில்டலாத்தி சமட்டபெல்ட் திருநடிபிரமாணம் பசும் செய்யில் குழைந் சொப்பில் இப்படிமண்டலம் தின் உள்மூலம் கரைந் துப்போகும்

18- எலிகடிக்கும் சாந்தி.
ஆதளைசமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலைக்கிக் கொடுத்து வந் தால் பதினெட்டுயெலிவிஷமும் நிவர்த்தியாகும் (பார்வதிபரணியம் என்னும் விஷவயித்தியசிந்தாமணியில்) சகலவித சர்ப்பங்களுக்கும் நட்டுவாக்காலி தேள் வண்டு நாய் பூனை எலிமுதலிய எல்லாவிஷத்திற்கும் அந்தந்த விஷக்கடியின் அடையாளத்துடன் மருந்துகளும் மந்திரங்களும் சொல்லியிருக்கின்றது யாவ ரும் எளிதில் தெரிந்துக்கொள்ளலாம்.

நேத்திரமரைப்புக்கு.
ஆதண்டம்யிலை ஒருகுத்துயெடுத்து கால்படிநல்லெண்ணையில் இட் வேப்பிலைபோல் பொரியும்படி காச்சிவடித்து தலைமுழிகிவந்தால் நேத்திர லுண்டானபித்த மரைப்பு பித்தநீர் இவைகள் தீரும்.

மேகவாய்வுக்கு.
ஆடுதிண்ணாப்பாளை பத்துபங்கு மிளகு ஒருபங்கும் கூட்டி அறைத்து
மாத்திரை செய்து இருவேளையும் தின்னுவந்தால் மேகவாய்வுகள் நிவர்த்தியாகும்.

 

சகலவியாதிக்கு அடுத்தது.
ஆதண்டம்காய் வற்றலிட்டு உண்டியுடன் உபயோகித்துவந்தால் s பித்தரோகங்களைக் கண்டிக்கும் சகலபத்தியத்திற்கும் உபயோகிக்கலாம்.

மஞ்சள் காமாலைக்கு
அதிமதுரம் – சங்கம்வேர்ப்பட்டை – ஓர்நிரையாய் எடுத்து, எலுமிச்சம் ழச்சார் விட்டு மூன்றுநாள் அறைத்து, தேத்தாங்கொட்டையளவு மாத்திரை செய்து, முலைப்பாலிலாவது, பசும்பாலிலாவது மூன்றுநாள் கொடுக்க, மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும்.

சந்தி ஜன்னிக்கு
ஆடாதோடை, சிறுவழுதலை, தூதுவளை, நன்னாரிவேர், சித்தாமுட் சுக்கு, பற்பாடகம், கோரைக்கிழங்கு,சந்தனம்,இலுப்பைப்பூ வகைக்குப்பன் அறையெடுத்து இரண்டுபடி ஜெலத்திலிட்டு அரிக்கால்படியாய்காச்சி கொ துவர உடம்பு வெதுப்பு தலைவலி அடிக்கடி யெழுந்திருப்பது கண்சிவப்புபுரி மயக்கம் மூதலியஜன்னிதீரும்.

இளைத்த உடம்புக்கு.
அயக்கம்பியை சிவக்கக்காச்சி பசும்மோரில் தோய்த்து சாதத்திற்கும் வேண்டியபோது தாகத்திற்கும் உபயோகித்து வந்தால் பழய சுரம் தாகம் சகல கழிச்சல் பழயபேதி இவைகள் நிவர்த்தியாகும்.

கபாலவலிக்கு.
ஆடுதிண்ணாப்பாளைசாறு வ-படி நல்லெண்ணை அறைப்படிகலந்து விற குபதமாய்க்காய்ச்சி வாரத்திற்கிருமுறை தலைமுழுகிவந்தால் மண்டைக்குத் பீனிசம் சிரயாரந்தீரும்.

 

மேகசுரத்திற்கு.
அருகு சமூலம் கொண்டுவந்து, ஒருபிடியெடுத்து அத்துடன் 21-மிளகு சேர்த்து இடித்து அறைப்படி ஜெலத்தி லிட்டு அறையாழாக்காக சுண்டும் படி கியாழமிட்டு காலையில் சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும் 10-நாள் சாப்பிட மேகசுரம்-உள்ளனல்உடம்புசூடு யாவும் தீரும்.

மருந்தை முரிப்பதற்கு.
அருகன் வேரு ஒருபங்கும் – மிளகுஐந்து பக்கும் எடுத்து, மிளகை ஒன்றிரண்டாயிடித்துகியாழம்வைத்துயிறக்கி இதில் பனங்கற்கண்டு – மாதளம்பூ- கூகைநீரு இவைகள் கொஞ்ச கொஞ்சம் எடுத்து நெய்விட்டு அறைத்து – முன் கியாழத்துடன் கலந்து சாப்பிடவும். இப்படி 3-நாள் கொடுத்தால், எவ்விதமரு சந்து சாப்பிட்டாவது, உடம்பில் அனல்மீறி கடுப்பு பேதி – உதிர பேதியுண்டா னால் இவைகளை நிவர்த்தியாகும்.

ஆண்குறி கெட்டிப்படுவதற்கு.
அபினி – அக்கிராகாரம் மருதோன்றி விறை இதுகள் சமனிடை
எடு து தேன்விட்டரைத்து ஆண்குரியின்மேல் பைத்து போடுவதுபோல் தடவி வரவேண்டியது. இப்படி-15-நாள் தடவினால் ஆண்குரி பெருத்தும் நீண்டும் சன்றாய் கெட்டிப்படும்.

அஸ்திவெட்டை டக்கு
அருகன் வேரை பசும்பாலில் அறைத்து மண்டலக் கணக்காக இருவே ளையும் சாப்பிட்டுவந்தால் சகலவிஷமும்தீரும், அஸ்திவெட்டை-மூலவெட்டை- நீர்க்கடுப்பு இதுகள்யாவும் தீரும். தேகத்திலுள்ள நரம்புகள்யாவும் நன்றாயிருகி பலப்படும். விஷவயித்தியம் முழுமையும் (பார்வதீபரணியத்தில்) பார்த்துக்கொள்க .

பல்லுநோயிக்கு
அபினி-குண்டுமணியளவு எடுத்து, அத்துடன் துட்டிடை கற்பூரம் பூ டி இரண்டையும் நன்றாய் ரேகித்து, ஈரு வீக்கம்-அல்லது நோய் கண்டிருக் பல்லின்மீது பில்லையாய் வைத்திருந்து காலையில் துப்பிடவும். இப்படி ரண்டுநாள் செய்ய சௌக்கியமாகும்.

வெள்ளைக்கு.
அருகன் செடிசமூலமும் மிளகும் சமயிடையெடுத்து வெண்ணைபோல் அறைத்து முழுக் கொட்டைப் பாக்களவு சாப்பிடவும் இப்படி காலைமாலை இரு வேளையும் 5 – அல்லது 10 – நாள் சாம்பிடவும்.(பத்தியம் சுட்டபுளி வருத்த வுப்பு) வெள்ளையென்னும் சித்தினிரோகம் தீரும்

 

சாதரணயிருமலுக்கு.
ஆனைத்திப்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட யிருமல் மீளை கபம் வாய்வு இதுகள் தீரும் ஜீரணசக்தியுண்டாகும்.

தாது புஷ்டிக்கு
அமுக்கனாங்கிழங்சூ-நீர்முள்ளி வித்து – குருந்தொட்டிவேர் சமநிடை எடுத் த்து, பசும் வெண்ணையில் குழைத்துச் சாப்பிடவும். இப்படி இருவேளையும் 20 – நாள் சாப்பிட தாதுவிருத்தி யுண்டாகும்.

மூலமுளைவெளிவர.
ஆகாசத்தாமரையிலையை உலத்திப்பிடித்து வடிகட்டின தூளும் கருங் குருவையரிசிமாவும் ஒன்றாய்க்கலந்து பிட்டவியல் செய்தெடுத்து நல்லெண்ணை விட்டுப்பிசைந்து உள்ளுக்குக்கொடுத்துவிட்டு மாதுளங்கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில்வைத்துக் கட்டினால் முளை விழுந்துவிடும்.

விஷசுரத்திற்கு.
ஆடாதோடையீர்க்கு நிலவேம்புயீர்க்கு சீந்தில்தண்டு பேய்ப்புடல்பேய் பீர்க்கன்வேறு வெட்பாலையரிசி வகைக்குப் பலம் கால் – இரண்டுபடி தண்ணி வைத்து ஆழாக்குகிஷாயமாகயிரக்கிக்கொடுக்கவும் விஷம்யேருவதுபோல் ஜிலு ஜிலென்று யேருகிரவிஷசுரம்தணியும்.

குளிர்சுரத்திற்கு.

ஆடாதோடை தூதுவளை பற்பாடகம் பங்கம் பாளை சிறுவழுதலைசுக்கு சந்தனம் நன்னாரி வகைக்கு கால் – பலம்யெடுத்துடித்து 2-படி தண்ணீர்விட்டு கால்படியாக வற்றக்காச்சியிருத்து கொடுக்க குளிர் சுரம் நிவர்த்தியாகும் (பார்’ வதிபரணியமென்னும் சாஸ்திரத்தில்) சொல்லியிருக்கும் சர்வசுர மாத்திரை கொடுத்து இந்தகிஷாயம் கொடுத்தால் அருபத்தினாலு சுரத்தில் எந்தசுர மானா லும் உடனே தீரும்.

கருவழலை – தண்ணிப்பாம்பு முதலிய
சில்லரை விஷத்திற்கு.
ஆடுதீண்டாப்பாளைவேறு கவுதும்பை வேறு வெள்ளெருக்குவேறு மருக் காறைவேறு இவைகள் சமநிடையெடுத்து அறைத்து உடம்பில் பூசி முருக்கித் துவட்டினால் மேற்படிவிஷங்கள் தீரும்.

தேகம் தணிவதற்கு.
அருகன் கிழங்கு சூரனித்து சமயிடை வெள்ளைச்சக்கறை கலந்து மண் டலக்கணக்காய் இருவேளையும்புசித்துவந்தால் முத்தோஷமும் நீங்கும். தேகம் மேனியுண்டாகும்.

அறையாப்புகட்டிக்கு.
ஆடுதிண்ணாப்பாளை சமூலம் வசம்பு இரண்டும்சமநிடை யெடுத்து நன் றாயிடித்து கட்டியின்மேல் பில்லையாகவைத்து அந்த அளவுக்கு பானையோட் டைவட்டமாக நருக்கி அதின்மேலேவைத்து கட்டிவைக்கவும் இப்படி மூணு கட்டுகட்ட அறையாப்புக்கட்டிகரையும்.

காமாலைசோகைபாண்டுவுக்கு.
ஆவின்பால் ஆவின்தயிர் ஆவின்கோமியம் ஆவின்சாணிப்பால்வகைக்கு ஆழாக்கு இதற்குசமநிடை நல்லெண்ணைக்கலந்து தயிலபதமாய்காச்சி ஸ்நானம் செய்துவந்தால் காமாலை சோகைபாண்டு இதுகள் நிவர்த்தியாகும்.

இரத்தகாசத்திற்கு.
ஆலம்விரை அத்திவிரைநிலைப்பனைக்கிழங்கு நாவல்பட்டை அரசம்விலா முருங்கைபூ தூதளம்பூ இவைகளையிடித்து சூரணித்து அதிகாலையில் திருகடி சூரணம் யெடுத்துதேனிலாவது நெய்யிலாவது குழைத்துச் சாப்பிட்டு வரவும் இரத்தகாசம்திரும்.

நீரிழிவுக்கு சாக்தி,
ஆவாரந்ளு கல்மரம் கொன்தைப் பட்டை மிளகு இவை சமன் கொண்டுயெட்டுக்கொன்ருள்ஷொயமிட்கோர்சிக்குடிக்க நிரழிவுசாந்தியாகும்

இரத்தபிரமியம்.
ஆவாரையரிசி பலம் 1 -நற்சீரகம் சந்தனம் சக்கரை வகைக்கு கள க-இவைகளை எலுமிச்சம்பழச்சார் விட்டரைத்துக் கலைக்கி மூன்று வே கொடுக்க கைகால் அசதி உடல் ஊஷ்ணம் ரத்தபிரமியம் தீரும்.

இரத்தபிரமியம்
ஆவாரைவேரின்பட்டை விஷ்ணுகாந்தி வகைக்கு ஒரு யெலுமிச் காய் பிரமாணம் அறைத்து பசும்பாலில் கலைக்கி மூன்றுநாள் கொடுக்க ஏ பிரமியம் தீரும்.

மூக்கில்ரத்தம் வருவதற்கு.
ஆடாதோடையிலைச்சாறும் தேனும் சாரிடைகலந்த ஒருபலம் யெ துக்கொடுக்கவும் இப்படிமூன்றநாள் கொடுக்கவும் போலும் மூக்கினா இரத்தம்வருவது நீவாத்தியாகும்.

இரத்தக்கக்கலுக்கு.
ஆலம்விரையும் அரசம்விரையும் பாலில் அரைத்துக் கலக்கி உண்டுவந் கால் இரத்தம் கக்கல் நிவர்த்தியாகும்.

நரம்புக்குத்தலுக்கு.
ஆளிவிரையைபாலில்கொள்ள வீக்கம் வாந்தி வலி வாயுவு நரம்புகுத் அழலை ஒக்காளம் இவை நிவர்த்தியாகும்.

சிலந்திவீக்கத்திற்கு.
ஆளிவிரையை முலைப்பால்விட்டரைத்து வெண்ணையில் மத்தித்துசில வீக்கம் இதுகளில் தடவ வற்றிப்போகும்.

ஆண்குரியெரிவுக்கு.
ஆவாரைப்பஞ்சாங்கத்தை பசும்பாலில் ஒருமண்டலம் கொள்ள நீரிழிவு ரமேகம் ஆண்குரியெரிவு இவைநீங்கும்.

கற்றாழை நாற்றத்திற்கு.
ஆவாரைப்பஞ்சாங்கச்சூரணம் மூன்றுபங்கும் கோரைக்கிழங்கு கிச்சி
லிக்கிழங்குசூரணம் ஒருபங்கும் கூட்டி தினந்தோரும் உடம்பிற்கு தேய்த்து குளித்துவந்தால் கற்றாழை நாற்றம் தீரும்.

பிரமேகத்திற்கு
ஆனைநெருஞ்சி சமூலத்தையிடித்து தயிர்விட்டரைத்து தயிரிற்கலைக்கி அதிகாலையுண்டுவந்தால் பிரமேகம்வெள்ளை தீரும்.

சுவாசகாச தத்திற்கு.
ஆடுதிண்ணாப் பாளையிலையை உலர்த்திபொடியாகக்கத்தரித்து புகலையில் வைத்து சுருட்டுசுத்தி புகைப்பிடித்தால் சுவாசகாசம் நிவர்த்தியாகும்.

ரிலர்த்திபித்தத்திற்கு,
அகத்திக்கீரை இரண்டுபிடி எலுமிச்சம்யிலைபத்துபிடி தனியாபலம் 2 இருவகையிலையும்பிடித்து தனியாவும் கலந்து மூன்றுபடிஜெலம்வைத்து அரை ப்படிகிஷாயமாக யிரைக்கி ஆறுபாகமாக்கி மூன்றுநாள் யிருவேளையும் கொடுத் கவும் சகலபித்தமும் நிவர்த்தியாகும்.

மயிற்வேண்டாதஇடத்திற்கு.
அரிதாரம் இரண்டுபங்கு சுண்ணாம்பு ஒருபங்கு இவ்விரண்டும் சேர்த்து தண்ணீர்விட்டறைத்து மயிர்வேண்டாதயிடத்தில் சந்தணம்பூசுவதுபோல் நன் றாய்தடவி சற்றுநேரம் பொறுத்து கழுவிப்போடவும் உதிர்ந்துவிடும்.

வயற்றில் இரந்த பிள்ளை கீழேவிழ.
அதிமதுரம் தேவதாரம் வகைக்குப்பலம் 1-வென்னீர்விட்டரைத்துக் கலைக்கி இரண்டுவேளை உன்ளுக்குக்கொடுக்க பிள்ளைகீழேவிழும்.

பேதிக்கு.
அதிமதுரம் 32-விராகநிடையும் திராட்சி உப்பு 8-விராக நிடையும் இரண்டும் இடித்து கிஷாயம்வைத்து வடித்துக்கொடுக்கபேதியாகும்.

கெற்பவதிகளுக்கு உதிரங்கண்டால் சாந்தி.
அதிமதுரம் 1-சீரகம்-1-இடைகளாக எடுத்து இடித்து முக்காற்பலம் றையில் எடுத்து, கால்படி ஜெலத்திலிட்டு அரிக்கால்படி கியாழமாக யிறக்கி லையில் கொடுக்கவும். இப்படி-3-நாள் கொடுக்க நிவர்த்தியாகும்.

சவித்தியத்திற்கு
அரிசித்திப்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து, கம்மாரு வெற்றி ச்சாறும் தேனும் கலந்து திருகடி சூரணம் குழைத்து சாப்பிட, சயித்தியம்
கோழை-சுரம்- இதுகள் தீரும்.

வலிப்புகளுக்கு
அவுரியிலை-வசம்பு-உள்ளி-இம்மூன்றும் சமனிடை எடுத்து சிதைத்து, நாசியில் நசியம் செய்தால், ஜன்னி – புரயிசுவு-வலி-கழுத்துவலி இதுகள் தீகும்

விஷமேராதிருக்கநசியம்
அவுரியிலை-லும்பையிலை-வசம்பு-மிளகு- ஜள்ளி-பெருங்காயம்-இதுகள் சரியிடை யெடுத்து, சிறுநீர் விட்டுயிடித்து, மூக்கிலும் கொஞ்சம் தடவி முக ரச்செய்து காதிலும் விட்டால் எந்த விஷமானாலும் சிரசுக்கு ஏராது. மருந்து கொடுக்குமளவும் தாங்கும்.

தேக அனலுக்கு
அதிமதுரம் அறைபலம் எடுத்து வென்னீர்விட்டறைத்துக் கொடுக்க வும். இப்படி அந்தி சந்தி இரண்டு நாள் கொடுக்க. தேகம் எவ்வளவு அனலா யிருந்தாலும் தணியும்.

சூட்டு இருமலுக்கு.
அதிமதுரம்-கடுக்காய்-மிளகு மூன்றும் சமநிடை எடுத்து இளம் வரு ப்பாய் வறுத்து சூரணம் செய்து, ஒருவேளைக்கு துட்டிடை சூரணம் எடுத்து தேனில் குழைத்துக் கொடுக்க சூட்டிருமல் நிவர்த்தியாகும்,

காசஸமூர்ச்சைக்கு
அரிசித்திப்பிலியை ஆர்க்கப்பொடிரெய்து, கால்பலம் சூரணத்தை கா ல்படி பசும்பாலில் போட்டுக் காச்சிக் குடிக்க,காசம்-வாயுவு-மூர்ச்சை – ஜன்னி – சாந்தியாகும்.

ஈளை இருமலுக்கு
அரத்தையைப் பொடித்து பாலில் உபயோகித்து வந்தால், ஈளை மல் -நீர்தோஷம்- வாயுவு பீனிசம் இவைகள் நிவர்த்தியாகும்.

ரசம் கட்ட
அம்மான் பச்சரிசியை அறைத்து குகைசெய்து, சூதகத்தை கிறமப்படி த்திசெய்து உருக்கினால் கட்டிவிடும்.

சீதம் விழுவதற்கு
அழிஞ்சிவேர் பட்டையை காயவைத்திடித்து, அதை வென்னீரில் அ றைத்துக் கொடுத்தால் சீதம் விழுவது நின்து விடும்,

சிலேத்து ஜன்னிக்ரு
அழிஞ்சி வேர் – சித்திரமூலவேர்-செவியம்-பேராமுட்டி முருங்கைப் கட்டை- பூசினிவேர்- வகைக்கு-வ-பலம் எடுத்து படிதண்ணியில் போட்டு எட் க்கொன்றாய் காச்சி வடித்து கொடுக்கவும். அதிக வேர்வை- வெருப்பு-மயக் ம் – நாக்கு வழுவழுப்புமலஜெலம் வெளுப்பு முதலிய சேத்துமஜன்னி தீரும்.

ரிணங்களுக்கு
அண்ணெரிஞ்சான் பூண்டு சமூலமும், அழிஞ்சிவிரையும் கார்கோலரிசி துகளை குழித்தயிலமிறக்கி ரிணங்களுக்குத் தடவ உலர்ந்துவிடும்.

கரப்பான்வியாதிக்கு
அப்பைக் கோவைக் கிழங்கை கொட்டைப்பாக்களவு எடுத்து பசும்பா லில் அறைத்துக் கொடுக்க, முலைக்குத்து-கடிவிஷம்-கரப்பான் வியாதிகள் தீரு புளிப்பும் கரப்பான் பதார்த்தங்களும் நீக்கி பத்தியயிருக்கவேண்டியது.

அஸ்தி சூட்டுக்கு
அப்பைக்கிழங்கு-4-பங்கும், சுக்கு திப்பிலி-மிளகு-சீரகம் – சோம்பு-அதி மதுரம்-பெருங்கிழங்கு இவைகளசேர்ந்த சூரணம் ஒருபங்கும்கூட்டி சரியிடைச் சக்கரைக் கலந்து பிரதிதினம் துட்டிடை கொடுத்து வந்தால், அஸ்திசூடு- அழற் றுகணம்- இரத்தகணம் கணச்சூடு – சுழிகணம் – மகாகணம் இவை தீரும்.

வங்கம் நீற்ற
அலரிச் செடியின் சமூலத்தை கத்தையாகக் கட்டிக்கொண்டு வங்கத் தை கிறமப்படி சுத்தி செய்து, இரும்புக் கடாயில் உறுக்கி (மேற்படி) கத்தை யினால் வருத்துக்கொண்டு (அதாவது) கடைந்துக்கொண்டிருந்தால் வங்கம் பஸ் பமாகும்.

உடம்புயெரிவுக்கு
அகத்திவேர் ஒருபங்கு, மிளகு கால்பங்கு, அதிமதுரம் கால்பங்கு, இவை இடித்து கிஷாயமிட்டு இருவேளையும்புசித்து வந்தால், ஆண்குரி-எறிவு-பெண் குரி எறிவு-ஐம்பொரி எறிவு கைகால் எறிவு இதுகள் தீரும்.

பித்தமயக்கத்திற்கு
அகத்திக் கீரையை யாவரேனும் வாரத்திற் குஇருமுறை சமைத்து உண்டியோடு உபயோகித்து வந்தால், பித்தம்-பித்தாதிக்கம்-பித்தமயக்கம் இவை அணுவேனும் அணுகாது.

மேகவெள்ளைக்கு
அருநெல்லிக்காய் என்னும் சிறுநெல்லிக்காய் சாறும், பச்சை திராட்சி சாறும்-வெள்ளை வெங்காயச்சாறு மூன்றும் சமயிடை கலந்து, படிகாரபஸ்பம் இரண்டு சிட்டிக்கை கலந்து, சக்கரை மூன்று சிட்டிக்கைப் போட்டுக் க்லைக்கி சாப்பிடவும். ஊஷ்ணவெள்ளை மேகவெள்ளை தீரும்.

வாந்திநிருத்த
அருநெல்லி வேரும், துத்திப்பூவு-அதிமதுரம் இவைகிஷாயம்வைத்து கொஞ்சம் தேன் விட்டுக் கொடுக்க வாந்தி கட்டும்.

பித்தசாந்தி
அறுநெல்லியை வடகம் செய்து வைத்திகுந்து, துசையல் முதலியகார சாரத்துடன் உபயோகித்து வந்தால், பித்தசாந்தியும் தேகக்குளிர்ச்சியும் நேத் திரப்பிரகாசமும் உண்டாகும்.

வாந்திநிற்க
அரு நெல்லிக்காய் வற்றலும், சீரகமும் நெல்பொரியும், திப்பிலியும் கூட்டிகியாழமிட்டு கொஞ்சம் சக்கரையிட்டுக் கொடுக்க வாந்திநிவர்த்தியாகும்.

காமாலைக்கு.
அருநெல்லி யிலையை ஒரு புன்னைக்காயளவு அரைத்து, கால்படி புளி த்த மோருடன் கலந்துக் கொடுக்கவும். இப்படி மூன்று நாள் காலையில் கொடு க்க காமாலை தீரும். வெள்ளாட்டுப்பால் விட்டு சாதம் தின்னவேண்டும் – உப்பு கூடாது.

தினவுநிற்க
அம்மான் பச்சரிசி என்னும் மூலிகையும் கொஞ்சம் வகம்பு, இந்துப்பும் கூட்டி அறைத்து உடம்பிற்றேய்த்து குளித்தால், தினவு-தடிப்பு உடனே மாரி விடும்.

வெள்ளைக்கு.
அத்திப்பட்டை மாம்பட்டை நாகப்பட்டை சமயிடை யெடுத்து புளிப்
புத் தயிரில் ஒருநாள் ஊரியபிரகு இடித்து சாறுபிழிந்து அதி காலையில் சாப்பி டவும், இப்படி இருவேளையும் சாப்பிட்டால் ஒட்டமாய் ஓடுகிற வெள்ளை தீரும்

பைத்துபோட

அத்திப்பட்டையை சூரணம் செய்து நல்லெண்ணைவிட்டறைத்து பிளவை முதலிய வைகளுக்குப் பைத்து போட்டால் குணப்படும்.

மூத்திர எரிவுக்கு.
அத்திவிரையை பாலில் காச்சி சாப்பிட்டுவந்தால் மூத்திர யெரிவு நீர்க டுப்பு எலும்புருக்கி சதையுருக்கி இவ்வித ரோகம் தீரும். ரத்த காசம் பித்த
கோசமும் நிவர்த்தியாகும்.

கெற்பந்தரிக்க.
அரசம் விரையை பாலில் காச்சி யுண்டுவந்தால் நீர்கடுப்பு மேகசிலுமி
ஷம் தீரும். இதை மண்டக்கணக்காக பெண்கள் சாப்பிட்டுவந்தால் கெர்ப்பந்த இக்கும். கெர்ப்பந்தரிக்க அனுபோகமான எண்ணைமுறை (பார்வதீ பரணீயத் தில்) சொல்லியிருக்கிறது.

மேக சூட்டுக்கு.
அரசம் கொழுந்தை பாலில் அறைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு முதலியவை தணியும். தைரியமுண்டாகும்.

பெரும்பாடுக்கு
அரசமரத்தின் சமூலமாவது பட்டையாவது கொண்டுவந்து உலர்த்தி அரிசி இரண்டு பங்கும் ஷை பட்டை தூள் ஒருபங்கும் எடுத்து இடித்து மாவா க்கி களிகிளரி தின்றுவந்தால் பெண்களுக்குண்டாகும் பெரும்பாடு வியாதி தீரும்.

ரசமருந்தை முரிக்க.
அகத்திக் கீரையும் மிதிபாவைப் பிஞ்சும் சமனாயெடுத்து இடித்து எட்
டுக்கொருபங்காய் கிஷாயம் வைத்து கொடுத்து வந்தால் (ரசமருந்தினால்) உண் டான கெடுதிகளும் முக்கு வியாதியும் தீரும்.

வாய்புண்ணுக்கு.
அகத்திக் கொழுந்தை சூரியஉதயமாகுமுன் ஒருபிடியெடுத்து மென்று தின்று வந்தால் வாய்ணம் வாய்புண்ணு யாவும் தீரும் சூடுதனியும்.

சூட்டுக்குதைலம்.
அகத்திக் கீரைசாரும் நல்லெண்ணையும் சமனாய்க்கூட்டி அடுப்பிலேற்றி வெந்தியத்தை பாலில் அறைத்துப்போட்டு தயிலபதமாய் காச்சியிரக்கி தலைமு ழுகிவந்தால் சகலசூடும் தணியும் தேகம் குளிர்ச்சியுண்டாகும்.மலச்சிக்கலுக்கு.
அத்திக்காயை பாகப்படி சமைத்து உண்டியுடன் உபயோகப்படுத்து தால், திரேக அனல் – சரீரவெட்பம் மலச்சிக்கல் இவைதீரும்.

மேக ஒழுக்குக்கு.
அத்திக்கள்ளு மண்டலக் கணக்காய் ஒரேமுறையாக விடாமல் அருந்தி னவர்களுக்கு மேக ஒழுக்கு அதிகமயக்கம் சூடு இவைதணியும் கண்பிரகாசிக்கும்.

வாய்ரிணத்திற்கு
அத்தி மரத்தின்பாலை அதிகாலையிலும் மாலையிலும் மூன்று நாள் அருந் தினால் வாய்ரிணம் வாய்ப்புண் இவைகள் நிவத்தியாகும்.

சீதபேதிக்கு
அத்திக்காயை யிடித்து அரைப்படி ஜெலம் வைத்து அரையாழாக்காக. ஷாயம் வடித்து அரை விராகநிடை மிளகு பொடித்துப் போட்டுக் கொடுக்க வும், இப்படி இருவேளை கொடுக்க சீதபேதி தீரும்.

பித்தஒக்காளத்திற்கு,
அத்திப்பட்டை ஒருபிடி அருநெல்லிக்காய்ஒருபிடி வாழைப்பழம் 4-இதி களை யிடித்து ரசம் பிழிந்து அதில் சீனி கற்கண்டு பொடி கொஞ்சம் போட்டுக் கொடுக்க பித்த ஒக்காளம் உடனே தீரும்.

பிரமியத்திற்கு,
அத்திப்பிஞ்சியை தேங்காய்ப் பால்விட்டிடித்து சாறுபிழிந்து வெள்ளை குங்கிலியத்தூள் ஒரு விராகநிடை போட்டு ஒரு வேளைக்கு அரிக்கால்படிவீதம் கொடுத்துவர பிரமியம் அதாவது வெள்ளை தீரும்.

சீழ்பிரமியத்திற்கு.
அத்திப் பட்டை ஆவாரம் பட்டை நாவல் பட்டை இதுகள் சமநிடை யெடுத்து சூரணித்து தேனில் குழைத்து இருவேளையும் 5 – 10 நாள் தின்று வர சீழ்பிரமியம் தீரும்.

வயற்றுக்கடுப்புக்கு.
அத்திப்பிஞ்சு-மாதுளம் பிஞ்சு-வில்வப்பத்திரி-இதுகள் சமனிடை எடு த்து அறைத்து, கெச்சைக்காயளவு எடுத்து (பார்வதி பரணியம்) என்னும் சாஸ் திரத்தில் சொல்லியிருக்கும். (பிராண சஞ்சீவி மாத்திரையில்) பூன்று மாத்திரை பொடிசெய்து வைத்துக்கொடுக்க ஒரேவேளையில் வயர்கடுப்பு நிவர்த்தியாகும்.